25 வருடம் முன்பு நடந்த
உண்மை சம்பவம்....
ஒருமுறை பில்கேட்ஸ்,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்
முதன்மை செயலதிகாரியாக
இருந்த நேரம் ஐரோப்பிய
மைக்ரோசாப்டின் கிளைக்கு
தலைமை அதிகாரியை நியமிக்க
ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள்.
கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர்
வரையில் வந்திருந்தார்கள்.
ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள்....
கருப்பு கோட், நீல சட்டை
புள்ளி போட்ட டையுடன்
எல்லாவற்றையும் கவனித்தபடி
ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார்,
நல்லதம்பி என்பவர் ......
உள்ளே நுழைந்த பில்கேட்ஸ்
5000 பேர்களை பார்த்ததும்
கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்...
வந்திருந்த அனைவருக்கும்
வணக்கம் வைத்தார்.....
நன்றியும்தெரிவித்தார்....
நேர்காணலை சிக்கீரம் முடிக்கணும்
சிம்பிளா வைக்கணும்ன்னு
முடிவு பண்ணினார்.....
முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி
ஒரு கேள்வி கேட்க நினைத்தார்....
எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள்..
அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம்
ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”
2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.
நம்ம நல்லதம்பிக்கும்
ஜாவான்னா என்னானே தெரியாதுதான் இருந்தும் வெளியே போகலை
“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே
இருந்து விட்டார்.
அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”
இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.
நம்ம நல்லதம்பியோ நாமதான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதேடா சரி என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம்...
சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”
இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு
பில் கேட்ஸ் கேட்டார்...
மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள்
காற்று வாங்கியது.
”அதையெல்லாம் படிக்க
நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார் நல்லதம்பி
ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே?
கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள்
தெரிந்திருக்கும் என்று பார்ப்போம்
என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம்
செர்போ -க்ரோட் மொழி தெரியும்?”
செர்போ-க்ரோட், உலகில் அரிதாக
பேசப்படும் மொழி. இப்ப, அரங்கில்
இரண்டே பேர் இருந்தார்கள்.
அதில் ஒருவர் யாரென்று
உங்களுக்கு தெரியும்
அது, “எவ்வளவோ பண்ணிட்டோம்
இதை பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம நல்லதம்பி
ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை
சுற்றி உட்கார்ந்தார்கள்.
இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.
டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…
“ஏன்ப்பா, இப்படி பார்க்குற?
சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” – மனசுக்குள் நல்லதம்பி
”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான்
இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட்
மொழியில் மைக்ரோசாப்ட்
நிறுவனத்தை பற்றி,
அதன் தொழில்நுட்ப திறன்
பற்றி விவாதம் செய்யுங்க
என்று பில்கேட்ஸ் சொல்ல......
நல்லதம்பி அமைதியாக,
பக்கத்தில் இருந்த
இன்னொருத்தனை பார்த்தார்
சின்ன வயசுக்காரன்.
நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான்
மூளைக்காரன் போல.....
நல்லதம்பி ஆரம்பித்தார்.
மெதுவாக, தம்பிக்கு எந்த ஊரு
கேட்டது தமிழில்.....
அதுக்கு இன்னொருவர் சொன்னது
சேலம் மாவட்டம் கஞ்சமலைக்கு
பக்கம் கல்பாரப்பட்டி கிராமம்
அண்ணே நீங்க எந்த ஊருண்ணே
நான் தஞ்சாவூர் தம்பி
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.