Showing posts with label General Articles. Show all posts
Showing posts with label General Articles. Show all posts

ஆராதனை பாடல் வரிகள்


அகிலம் ஆள்பவா அன்பின் நாயகா அனைத்தும் ஆக்கும் அறிவே

ஆதாரமாய் ஆத்ம ஜோதியாய் ஆன அறிவின் நிறைவே

தடுமாறும் பொழுதில் தாங்கிடும் நேசமாய்

தாயாகி நின்றாயே ஒருகணமும் உனை மறவேன்

1. ஊரறியாமல் உலகறியாமல் நான் வலி சுமந்த நாட்களில்

நானறியாமலே என் நண்பனாகினாய் சுமைகள் தாங்கினாய் - 2

பூவாக என்னை மலரவும் வைத்தாய் புன்னகையும் தந்தாய்

நீங்காது எந்தன் நிழல்போல் நீயும்

நிதமும் அருகில் இருந்தாய் என் செல்வமே

2. நிலவில் கருமைபோல் நிறைவும் குறைகளும்

என் வாழ்வு காணும் காட்சிகள்

தேடுவேன் வந்து நீ என்னை ஆட்கொண்டு முழுமையாக்கிடு - 2

துயருறும் மானுடம் ஆறுதல் பெறவே அர்ப்பணிப்பேன் என்னை

ஆதாரமாகும் அருளால் என்னைக் காத்து நிதமும் நடத்து என் செல்வமே


அடைக்கலம் தருகின்ற நாயகனே

அருள்மழை பொழிகின்ற தூயவனே

அடைக்கலம் எனக்கு நீயல்லவோ

அன்புக்கு நீயொரு தாயல்லவோ - 2

1. தெய்வீக நீதியின் கதிரவனே

தீமைகள் போக்கும் காவலனே - 2

ஏழையின் கண்களை பாராயோ

என்னென்ன கவலைகள் தீராயோ

2. அருள் ஒளி உண்டு உன் விழியினிலே

ஆறுதல் உண்டு உன் மொழியினிலே - 2

பெருந்துயர் காப்பதுன் கரமல்லவோ

பிறந்தே நான் வாழ்வதுன் வரமல்லவோ

3. அணையாத விளக்கு எரிவதனால்

அன்பரின் உள்ளம் தெரிவதனால் - 2

இறைவனே உனது துணை என்று

இதயத்தில் நினைத்தேன் நான் இன்று


அடைக்கலமான ஆண்டவரே

அனைத்திலிருந்து காப்பவரே

உமக்கே நான் சொந்தம் - 2

1. இரவும் பகலும் உன் நினைவே

ஒளிர்ந்திடும் வாழ்வில் உன் நிழலே - 2

நெருக்கடி வேளையில் இருகரம் விரித்து

அருள்மழை பொழிவாய் வெண்ணிலவே என் வெண்ணிலவே

2. பகையும் பாவமும் ஒழிந்திடவே

நீதியும் நேர்மையும் நிலைத்திடவே - 2

வார்த்தைகள் வளமாய் ஓங்கிடவே

அருகினில் தவழ்வாய் வெண்ணிலவே என் வெண்ணிலவே


அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் - 2

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்து - 2

வெறும் தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றினார் அதிசயம் - 2

2. செங்கடலை இரண்டாகப் பிரித்திட்டார் அதிசயம் - 2

புயல்காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் - 2

3. பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - 2

ஏழை என் மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம் - 2

4. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - 2

ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் - 2


அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே

ஒருவார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே

ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றோம் - 2

2. தாவீதின் திருமகனே தயை கூர்ந்து இரங்குமய்யா

கடைக்கண்ணால் எமைப்பாருமே கருணைக்கடல் இயேசுவே ஆராதனை...

3. மெய் தொடுவாய் இயேசுவே நோய் களைவேன் இயேசுவே

ஆசீரளிப்பாய் இயேசுவே மீட்பு பெறுவேன் இயேசுவே ஆராதனை...

4. மார்போடு அணைத்துக் கொண்டு மன்னித்து வாழ்வு தரும்

பேரன்பே உன் பாதத்தில் என் முத்தம் பெற்றுக்கொள்ளும் ஆராதனை...


அருளே உன்னருகில் வாழவேண்டும்

அகிலம் அறநெறியில் வளர வேண்டும் - 2

நின் பாதம் சரணடைந்து நான் வேண்டும் வரங்களெல்லாம் - 2

வறுமை இல்லாத உலகம் ஒன்றும்

வெறுமை உணராத வாழ்க்கை ஒன்றும்

அழிவுகள் இல்லாத எதிர்காலமும்

ஆயுதப் போர் இல்லா புதுபூமியும் - இறைவா

கங்கா நதிபோல் அன்பின் வெள்ளம்

கரைபுரண்டோடிடும் காலமும் மலராதோ

கனவுகள் மெய்ப்படும் காட்சிகள் கனியாதோ

1. தூயமதி நின்று தீயநெறி நீக்கும் ஞானஒளியும் வேண்டும்

எனக்காக நான் ஆசை கொள்பவை எல்லோருக்கும் வேண்டும் - 2

கனிவா கண்மணியே கனவுகள் மெய்ப்படுமோ இறைவா...

2. உயிரில் கலந்துருகி உறவின் கவிதையென உயரும் எனது பாடல்

என்ன நேரினும் உன்னை மறவாது வாழும் இன்பம் வேண்டும் - 2

இருள்வந்து சூழ்ந்திடினும் உன் கரம் என்னை வழிநடத்தும் இறைவா...


அன்பின் தேவ நற்கருணையிலே

அழியாப் புகழோடு வாழ்பவரே

அன்புப் பாதையில் வழி நடந்தே

அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்

தற்பரன் நீரே எமை மீட்டீர்

பொற்புடன் அப்ப இரச குணத்தில்

எப்பொழுதும் வாழ் இறைவனானீர்

எத்தனை வழிகளில் உமதன்பை

எண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்

கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்

நற்கருணை விசுவாசமதில்

நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்

இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்

யாவரும் வாழத் தயைபுரிவீர்


அன்புருவாய் எம் நடுவில் ஆசையுடன் வந்துதித்து

பொன்னொளியில் வீற்றிருக்கும் பூபதியே நமஸ்காரம்

1. பரலோக உன்னதத்தில் பாக்கியமாய் வாழ்பவர் நீர்

நரலோக வாசிகளுள் நலமேது தேடி வந்தீர்

2. நித்திய பிதாவினண்டை பாக்கியமாய் நீர் வீற்றிருக்க

சுத்தமில்லா பூவுலகை சுதந்திரமாய் கொண்டதேனோ

3. விண்ணுலக தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே

மண்ணுலக வாசிகளுள் வந்ததென்ன வானரசே


அன்பே உயிரே ஆராதனை

அளித்தோம் உமக்கே ஆராதனை - 2

1. உலகம் முடியும் நாள் வரையில்

உமக்கே என்றும் ஆராதனை

தலைவா எங்கள் உள்ளங்களில்

தந்தோம் என்றும் ஆராதனை - 2

2. விண்ணில் மின்னும் தாரகைகள்

விடுக்கும் என்றும் ஆராதனை

கண்ணில் ஆடும் கண்மணிகள்

சொல்லும் என்றும் ஆராதனை - 2

3. அழைப்பை ஏற்று ஆலயத்தில்

தங்கிட வந்தாய் ஆராதனை

உழைப்பை ஏற்று உள்ள மெல்லாம்

உவந்தே செலுத்தும் ஆராதனை - 2


அன்பே இயேசுவே என்னுள்ளம் வாருமே - 2

அன்பே இயேசு தெய்வமே என் உள்ளம் வாருமே - 2

அருள்பார்வை ஒன்றே போதுமே எந்தன் வாழ்வு வளம் பெறுமே

1. மண்மீது பகை வளர்க்க வேர்கள் தான் விரும்புமோ

மனிதரை வெறுத்துவிட்டு உன் வழி நடப்பதோ - 2

உன்னிலே நானும் வாழ்ந்திட வேண்டும்

உறவின் ராகங்கள் இசைத்திட வேண்டும் - 2

என்றும் மண்ணில் உந்தன் அன்பில் நிலைத்திட வேண்டும்

எந்தன் உள்ளம் நீயே வந்து உறைந்திட வேண்டும்

2. வாதங்கள் பேதங்களால் வளர்ந்திடும் சுயநலம்

வன்முறை பேரிடரால் வாடிடும் மானிடம் - 2

அனைத்துயர் காக்கும் அருள்மழையே வா

அகத்தினில் அமைதியும் ஆற்றலும் நீ தா - 2

இருளினைப் போக்கும் ஒளியென வாழ்வேன்

இறைவனின் திருவுளம் நடந்திட உழைப்பேன்


ஆண்டவரே அன்பான தேவனே உமக்கே ஆராதனை - 2

ஆராதனை ஆராதனை எங்கள் இயேசு ராஜா உமக்கே - 2

1. கல்வாரி நாயகனே உமக்கே ஆராதனை

கண்மணி போல் காப்பவரே உமக்கே ஆராதனை

காலங்களைக் கடந்து வாழ்பவரே

கண்ணை மூடிக் கரம் குவித்து ஆராதனை ஆராதனை...

2. அடைக்கலம் தருபவரே உமக்கே ஆராதனை

அருள்மழை பொழிபவரே உமக்கே ஆராதனை

ஆயிரமாய் அற்புதம் செய்பவரே

சிரம் தாழ்த்தி தாள் பணிந்து ஆராதனை ஆராதனை...

3. இனிமை தரும் இனிய நேசரே உமக்கே ஆராதனை

எங்களின் இதய தெய்வமே உமக்கே ஆராதனை

உயிரின் உயிராய் இருப்பவரே

புத்தம் புது கீதங்களால் ஆராதனை ஆராதனை...


ஆண்டவரே என்னில் நீர் எழுந்திட தகுதி எனக்கில்லை

என்மீது இரங்கி ஒரு வார்த்தை பேசும்

நலம் பெறுவேன் நான் குணம் பெறுவேன் - 2

1. ஆண்டவரே உம்மைப் பிரிந்து எங்கு சென்றிடுவேன் - 2

உயிருள்ள வார்த்தைகள் உம்மில் உள்ளது

உமக்காக வாழுவேன் உமக்கே நான் சொந்தம் - 2

2. போகும் போதும் வரும் போதும் பாதுகாக்கின்றீர் - 2

எனக்கொன்றும் பயமில்லை துணையாய் இருக்கின்றீர்

நீதியின் கருத்தினால் என்னைத் தாங்கிடுவீர் - 2


ஆண்டவரே பேசும் அடியவன் நான் கேட்கின்றேன் - உன்

அடியவன் கேட்கின்றேன் - 2 பேசும் - 4

1. வாழ்வினில் வரும் துன்பச் சூழ்நிலையில் - உன்

வார்த்தை வழிகாட்ட வேண்டும் - 2

தாழ்வினில் நான் மூழ்கித் தவிக்கின்ற போது - 2 - என்

நிறைவாழ்வே நீ தேற்ற வேண்டும் - உன்

அருள் ஒன்றே நான் தேட வேண்டும் - அது

என் வாழ்வை வளமாக்க வேண்டும் பேசும்...

2. வாழ்ந்திடும் மாந்தர்கள் உறவினிலே - உன்

வார்த்தை விளக்காக வேண்டும் - 2

நாளும் நடக்கின்ற செயல்களிலே - 2 - உன்

கரம் ஒன்றே நான் காண வேண்டும் - என்

இதயத்தில் நீ பேச வேண்டும் - உன்

இறைவார்த்தை வாழ்வாக்க வேண்டும் பேசும்...


ஆராதனை ஆராதனை எம் பாலனே ஆராதனை

ஆராதனை ஆராதனை எம் மீட்பரே ஆராதனை

1. வானமும் பூமியும் படைத்தவா ஆராதனை

வார்த்தையால் எம்மை நிரப்பவா ஆராதனை - 2

வல்லமை எம்மில் சேர்ப்பவா ஆராதனை

வளமும் நலமும் தருபவா ஆராதனை

2. அமைதியில் என்றும் வாழ்பவா ஆராதனை

அருளை தினமும் பொழிபவா ஆராதனை - 2

ஆற்றலாய் எம்மில் இருப்பவா ஆராதனை

ஆனந்த துதியில் மகிழ்பவா ஆராதனை

3. தூய ஆவியைத் தந்தவா ஆராதனை

தூய நல் மனதில் திகழ்பவா ஆராதனை

துன்பத்தின் சூழலில் அணைப்பவா ஆராதனை

துணையாய் என்றும் இருப்பவா ஆராதனை


ஆராதனை ஆயிரம் துதிகள்

ஸ்தோத்திரம் நமஸ்காரம் நற்கருணை நாதர்க்கே

1. தாயைப் போல் தேற்றிட மண்ணகம் வந்தவா - 2

தந்தையைப் போல் இரங்கிட கரங்கள் விரித்தவா - 2

2. உலகத்தின் பாவங்களை போக்க வந்தவா - 2

சாபங்களை பாவங்களை சுமந்து தீர்த்தவா - 2


ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் - 2

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்

நல்லவரே உம்மை ஆராதிப்பேன் - 2

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்

பணிந்து குனிந்து ஆராதிப்பேன் - 2

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் - 2

4. காண்பவரை நான் ஆராதிப்பேன்

காப்பவரை நான் ஆராதிப்பேன் - 2

5. புத்தாடை அணிந்து ஆராதிப்பேன்

குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் - 2


ஆன்மா பாடும் ஆனந்த கீதமிது

அன்பே உன்னில் மூழங்கிடும் நேரமிது - 2

என் இறைவனே உன்னில் மகிழ்வேன்

என் எழிலரசே உன்னில் வாழ்வேன் - 2

1. தளர்கையில் சாய்ந்திட தோள்கொடுப்பாய் - என்

தனிமையில் நண்பனாய் துணை கொடுப்பாய் - 2

உனை நான் மறந்து வாழ்வதில்லை - 2 என்

உறவே உன்னைப் பிரிவதில்லை - 3

2. இதயத்தின் ஆழத்தில் உனை வைத்தேன் - என்

உயிரே உன்னில் எனை வைத்தேன் - 2

வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் - 2 என்

ஜீவனே உன்னில் வாழ்ந்திடுவேன் - 3


ஆனந்த அனுபவமே இறைவா ஆனந்த அனுபவமே

உன் படைப்பினில் தாராளம் உண்டு

என் வாழ்வினில் ஏராளம் உண்டு

ஆனந்த அனுபவமே இறைவா ஆனந்த அனுபவமே - 2

1. உறவினில் உள்ளம் மகிழ்கிறதே ஆனந்த அனுபவமே

என்னுள்ளம் உனக்காய் நெகிழ்கிறதே ஆனந்த அனுபவமே

என்னை மறந்து உந்தன் புகழ்பாடுதே ஆனந்த அனுபவமே

நெஞ்சம் உருகி இன்று உனதாகுதே ஆனந்த அனுபவமே

உன்னைப் பார்ப்பதும் உன்னுடன் இருப்பதும்

உன்னில் வாழ்வதும் உனக்காய் இறப்பதும் ஆனந்த அனுபவமே

2. உழைப்பினில் உன்னைக் காண்பதுவே ஆனந்த அனுபவமே

உண்மைக்கு சாட்சியம் பகர்வதுவே ஆனந்த அனுபவமே

ஏழையின் துன்பம் உணர்வதுவே ஆனந்த அனுபவமே

ஏன் என்று கேள்விகள் கேட்பதுவே ஆனந்த அனுபவமே

மனிதம் வளர்ப்பதும் மகிழ்வைக் கொடுப்பதும்

விழிநீர் துடைப்பதும் விலங்குகள் உடைப்பதும் ஆனந்த அனுபவமே


இதய மலரின் இதழ்கள் திறந்தேன் உதயமே வருக

உலகம் வாழ எனை நான் வழங்க இதயமே எழுக - 2

தேவனே இறைவனே இதயமே எழுக - 2

1. உன்னைப் பிரிந்து உலகில் என்னால் வாழ முடியுமா

அன்பை மறந்து அமைதி என்னால் காண முடியுமா - 2

இதய கோவிலில் பலி நீர் நடத்த

இனிய விருந்தில் எனை நான் மறக்க - 2

கொஞ்ச நேரம் எனது நெஞ்சில் தஞ்சமாகும் இயேசுவே - 4

2. எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றி காத்து இருக்கின்றேன்

மன்னன் உந்தன் கால்கள் ஓசை கேட்கத் துடிக்கின்றேன் - 2

மழலை மனமும் கவிதை புனைய

மலரும் நினைவுன் அருளில் நனைய - 2

நிலவைப் போலென் இதயவானில் பயணம் தொடர்வாய் இயேசுவே - 4


இதற்காகவா நான் உயிர் சுமந்து அலைந்தேன்

இதற்காகவே இதற்காகவே

இந்நாளுக்கா நான் நிதம் காத்து இருந்தேன்

இந்நாளுக்கே இந்நாளுக்கே

உடலாக நீ வருவாய் உணவாக உனைத் தருவாய்

நிலையான சொந்தம் நீ நிறைவாழ்வு தருவாய்

1. உலகாளும் செல்வங்கள் பல கோடி வந்தாலும்

உன்னோடு நான் காணும் சுகமாகுமோ

எனைத் தேற்றும் சொந்தங்கள் உறவாகி தந்தாலும்

எனக்காக உயிர் ஈந்த அன்பாகுமோ

மனதின் வாசலில் மலர்களைத் தூவி

மன்னவன் நீ வர மகிழ்வினை சுவைத்தேன் - 2

மாறாதவா என் மருந்தாக வா மனசெல்லாம் நீயாகி

எனை ஆள வா எனை ஆள வா நீ எனை ஆள வா

2. உள்ளத்தின் பூக்காடு நீயானாய் இந்நாளில்

உயிர்வாழும் பொழுதெல்லாம் மணமாகுவேன்

தனித்தீவாய் இருந்தாலும் சுகம் காண்பேன் எந்நாளும்

இனிக்கின்ற நினைவாக நீ ஆனதால்

வேரில் விழுந்த வெளிச்சம் நீ வெளிச்சம் காட்டும் முகவரி நீ - 2

வாழ்வானவா என் வழியானவா விழியோர இமையாகி

எனை மூட வா எனை மூட வா நீ எனை மூட வா


இயேசு இயேசு என்று அழைத்து

பேசு பேசு உன் கதையை - 2 - உந்தன்

குரலைக் கேட்டு உன்னை மீட்டு

வானகம் சேர்க்கும் தேவனவர்

1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்

சுடராய் அணையா ஒளியாய் - 2

வந்தார் மாபரன் இயேசு - உயிர்

தந்துனை மீட்டார் இயேசு கல்வாரி சிகரமதில் - 2

2. பாவிகள் நம்மை மீட்கவே உலகில்

ஆதவனாய் ஒளிர்ந்தெழுந்தார் - 2

போதனைகள் பல தந்து - நம்மை

வேதனையில் வெற்றி பெறச் செய்தார் - கல்வாரி...


லாலலாலலா ல லாலலாலலா லாலலாலலா லலாலா

இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசதான்

நான் எப்போதும் ஒங்க கூட இருக்க ஆசதான் - 2

1. ஒங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசதான் - 2 நான்

ஒங்களோட சொந்தமாக மாற ஆசதான் - 2

2. ஒங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசதான் - 2 நான்

ஒங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசதான் - 2

3. ஒங்க அன்பில் நானும் தெனம் வாழ ஆசதான் - நான்

ஒங்களோட செல்லமாக மாற ஆசதான் - 2


இயேசுவே உந்தன் வார்த்தை எனக்கு வாழ்வு

இயேசுவே உந்தன் பார்வை எனக்கு விளக்கு

நீயே எந்தன் வாழ்வின் நிறைவாகும்

இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே

நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே

தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே

இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே

1. தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே

பகைமையும் சுயநலங்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே - 2

நீதியும் நேர்மையும் பொங்கி நிறைந்திடுதே

இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே

2. நன்மையில் இனி நிலை பெறும் என் சொல்லும் செயல்களுமே

நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலை வருமே - 2

மிஞ்சிடும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுமே

இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே


இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது

சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது - 2

1. கடலினைச் சென்று சேராமல் நதிகள் அடங்காது

உடலென்னும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது

ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது

உன்னைக் கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது

இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது - 2

2. உயிர்தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது

தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது

கரங்களைப் பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது

சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது

இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது - 2


இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன்

உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் - 2

1. பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும்

பெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும்

உதயம் தேடும் மலரைப் போலவே

உயிரின் உயிரே உன்னைத் தேடினேன்

நிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை

நம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா

வார்த்தை ஒன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே

2. தேடும் உலக செல்வம் நிறைந்தாலும்

பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும்

அலைகள் ஓயாக் கடலைப் போலவே

அன்பே உனது அருளை வேண்டினேன்

தாயில்லாக் குழந்தை போலவே

தவிக்கின்றேன் ஏக்கம் போக்குமே

முழுமுதல் இறைவனே மூவொரு வேந்தனே

காலம் கடந்த தேவனே உன் கருணை ஒன்றே போதுமே


இறையவனே உன்னை நான் காண வந்தேனே - 2

என்னவனே என்னை நான் உன்னிடம் தந்தேன் - 2

நீயே எனக்கு எல்லாம் நீயே எனக்கு எல்லாம் - 2

1. தனிமைக் குளிரும் நிலவாகும் நீ என்னோடு இருப்பதால்

தடுக்கும் கல்லும் தடமாகும் நீ எனக்காய் நடப்பதால் - 2

காரிருள் ஒளிரும் சுடராகும் நீ என் முகம் பார்ப்பதால்

கசக்கும் உறவும் கரும்பாகும் நீ என் கரம் பிடிப்பதால்

2. வீசும் புயலும் பூவாகும் நீ என் மனம் நிறைவதால்

சுமையும் இனிய சுகமாகும் நீ எனக்காய் சுமப்பதால் - 2

பாவ வாழ்வும் பணியாகும் நீ என் கறை துடைப்பதால்

எல்லாம் இன்றே இனிதாகும் நீயும் நானும் இணைவதால்


இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல்

தாவி மேவி வருகின்றேன்

என் நிலை நான் சொல்கின்றேன் உன் குழந்தை நானல்லவா

என்னை நோக்கி ஓடிவந்து என்னைக் காப்பாயோ - 2

1. அன்பைத் தேடும் போது என் தந்தை நீயல்லவா

அமுதம் நாடும் போது என் அன்னை நீயல்லவா - 2

ஒரு குறையும் இன்றிக் காத்தாய்

நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்

உன்னை ஒதுக்கியே வாழ்ந்த நானும் - இனி

என்ன கைம்மாறு செய்வேன் - 2

2. மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவன் நீதானய்யா

மனதில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானய்யா - 2

உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து

ஒருநாளும் பிரியாமல் வளர்ந்து

உந்தன் மடியிலே தவழ்ந்து நானும் - இனி

அப்பா தந்தாய் என்று அழைப்பேன் - 2


இறைவா என்னோடு பேசிட வா - என்

இதயம் மகிழ்ந்திட வா - 2

உனக்காய் நான் என்றும் காத்திருப்பேன் - 2

உனைப்பாடி மகிழ்ந்திருப்பேன்

1. கரங்களில் என்னைப் பொறித்தாய்

கண்ணின் மணியாய் காத்தாய்

மகனாய் மகளாய் ஏற்றாய்

மனதினில் அமைதியைத் தந்தாய்

என்னில் வந்த சொந்தமாய் நின்றாய்

உன்னில் என்னை இணைத்திட வந்தாய்

வருவாய் வருவாய் வருவாய் வரம் தருவாய்

2. விழியினில் நிலவாய் வந்தாய்

மார்பினில் சுடராய் நின்றாய்

உறவாய் எனை நீ அணைத்தாய்

உயிராய் எனை நீ இணைத்தாய்

விண்ணில் என்னை இணைத்திட வந்தாய்

மண்ணில் பல விந்தைகளைப் புரிந்தாய் வருவாய்...


உயிரின் ஒளியே உறவொன்று தருவாய்

வாழ்வின் வழியே உளம் நின்று பொழிவாய்

உந்தன் திருவுளம் என்னிலே உயிர்த்தெழும்

உனதன்பில் வளர்ந்திடும் நின்பதம் உயர்ந்திடும் - 2

தலைவா உந்தன் திருமுன் சிலிர்த்து நின்றிடும் மனமும்

உந்தன் வழியினில் மலரும் மகிழ்ந்து தொடர்ந்திடும் பயணம்

தலைவா உந்தன் திருமுன் திருமுன்

சிலிர்த்து நின்றிடும் மனமும் மனமும்

உந்தன் வழியினில் மலரும் மலரும்

மகிழ்ந்து தொடர்ந்திடும் பயணம் பயணம்

உணர்வுகள் நிலைபெறும் உறவுகள் உரம்பெறும்

உந்தன் மலரடி சரணம் சரணம்

1. உன்னெழில் தரிசனம் என்னகம் மலர்ந்திடும் பரம்பொருளே

ஆதவன் தழுவிடும் குளிர்கொன்றை மலராய்

வாடிடும் இதயத்தில் வசந்தமாய் வந்தாய் வளர்பிறையே

மேற்றிசை மெல்லிய இளந்தென்றல் காற்றாய்

ஆத்துமம் உறையும் ஈகையின் முதல்வா - 2

இதம் நிதம் வரைந்தாய் இசையாகி நிறைந்தாய்

2. தாகங்கள் தவிப்புகள் உலர்த்திடும் உன்னருள் வானமுதே

சூரியன் சுகித்திடும் வெண்பனித்துளியாய்

உன் பணிபுரிவதில் என் மனம் நிறைந்திடும் தேன்சுனையே

புவியினில் புரிந்திடும் வான்மழை முகிலாய்

இயற்கையில் இயங்கிடும் ஈசனே இறைவா - 2

இறைவிதை பொலிந்தாய் திருச்சபை மலர்ந்தாய்


உயிரே நான் உன்னோடு உறவாட வேண்டும்

உள்ளத்தில் நீ வந்து உரையாட வேண்டும்

உலகினில் என் சொந்தம் நீயாக வேண்டும் - 2

1. ஆறாதத் துயர் தீர்க்கும் அருமருந்தே

அழியாத வானகத் திருவிருந்தே - 2

வழியாக வா என் வாழ்வினிலே உயிராக வா என் உடலினிலே

ஒவ்வொரு பொழுதும் உந்தன் நினைவில்

உள்ளம் மகிழ்ந்திடுமே

ஒரு பொழுதேனும்உன்னை மறந்தால்

உயிரும் பிரிந்திடுமே

2. நீதியின் சுடராய் ஒளிர்பவனே

நிறைவாழ்வை எமக்குத் தருபவனே - 2

ஒளியாக வா என் பாதையிலே வளமாக வா என் வாழ்வினிலே

நீதியின் இறைவா நேர்மையின் தலைவா உள்ளம் வாருமே

வான்மழை போல வானக வாழ்வின் நிறைவைத் தாருமே


உள்ளக் கமலம் உனதாய் மாற என்னிடம் வாராய்

உவப்புடன் உமதருளை நாளும் தாராய் - 2

1. சுமை சுமந்து சோர்ந்திருப்போர் வாரீர் என்றீரே

சுமை இனிது நுகம் எளிது என்றும் சொன்னீரே - 2

கவலையினால் வாடுகையில் எங்கே செல்வோம் யாம் - 2

இளைப்பாற்றி கொடுப்பவரும் நீரே அன்றோ

2. உலகினுக்கு ஒளியாக வந்தாய் நீயே

வாழ்வினுக்கு வழிநானே என்றாய் நீயே - 2

உள்ளத்தினது இருளினிலே வாடும் நாங்கள் - 2

உமதருளில் நிலைத்திருக்கும் மாண்பை தாராய்


உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்

உலகாளும் தேவன் நெறிவாழும் இதயம் தெய்வம் தரிசனம்

மறைவழியில் வளரும் இல்லங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம்

நிறையோடு மலரும் உலகங்கள் உயிர்த்தால் தெய்வம் தரிசனம்

தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2

2. அன்பாகி அன்பில் நிலையாகும் நெஞ்சில் தெய்வம் தரிசனம்

மெய்யாகி பொய்மை பழிநீக்கும் நெறியில் தெய்வம் தரிசனம்

ஒளியாகி உலகில் இருள் போக்கும் பணியில் தெய்வம் தரிசனம்

தணலாகி நீதி நெருப்பாகும் செயலில் தெய்வம் தரிசனம்

தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2

3. மதம் யாவும் மனித இனபேதம் ஒழித்தால் தெய்வம் தரிசனம்

சமதர்மம் ஓங்க ஓயாது உழைத்தால் தெய்வம் தரிசனம்

உரிமைகள் காக்க உயிர்த் தியாகம் செய்தால் தெய்வம் தரிசனம்

இறையரசின் கனவு நனவாகி விடிந்தால் தெய்வம் தரிசனம்

தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2


உன் கரம் பற்றி வழி நடப்பேன் நீ காட்டும் பாதையிலே

தெரியாத பாதை முடியாத போதும்

பலம் தரும் உன் துணையே

1. நிலையான வாழ்வு நிறைவான மகிழ்வு

தொலைதூர வழி தாண்டியே

பல காலமாகும் தலைவா உன் பாதம்

மகிழ்வோடு சரணாகவே - 2

தொலை தூர கனவில் மனம் தேற்றும் நிறைவு

ஒரு போதும் நான் வேண்டிலேன்

அடியடியாய் படிப்படியாய் தொடர்ந்தாலே பேரின்பமே - 2

2. இருள் சூழ்ந்த போதும் இடர் வந்த போதும்

சிறிதேனும் பயமில்லையே

தடுமாறினாலும் தடம் மாறினாலும்

பலவீனம் எனக்கில்லையே - 2

என் காதில் கேட்கும் உன் பாத ஓசை என்னோடு நடமாடுமே

களைப்பினிலும் சலிப்பினிலும் கலங்காது முன்னேறுவேன் - 2


உன் பாதம் சரணாகின்றேன் உனில் வாழும் நினைவாகின்றேன்

உனைப் பிரியா உறவாகின்றேன்

உனைச் சேரும் உயிராகின்றேன்

1. இமையாக எனை நீ காத்தாய் இருள் போகும் வாழ்வு மகிழ்வாகும் - 2

இறவாதது உன் இரக்கந்தான்

நிஜமானது உன் பேரன்புதான் இயேசய்யா இயேசய்யா

கருவிலேக் காத்திடும் உன் அன்புக்கரம் கண்டு

களிப்புடன் வாழ்ந்திட கடவுளே சரணம்

2. கடல் தேடும் நதி நானாக நிலம் தேடும் மழை நீயாக - 2

உடன் வாழ்வது உன் அன்புதான்

உயிர் ஈவதும் உன் பண்புதான் இயேசய்யா இயேசய்யா

கடலினில் நதியினில் நிலத்தினில் மழையினில்

தேடலின் இறைவனே நானுனைக் கண்டிட


உன்னைப் பாடாத நாளெல்லாம் வீணே

உன்னைத் தேடாத வாழ்வெல்லாம் வீணே

கைகளிலே பேரெழுதி நாளெல்லாம் வாசித்தாய்

கண்களிலே ஊரெழுதி வாழ்வெல்லாம் நேசித்தாய்

போதாது வார்த்தைகள் உனது அன்பைப் பாடவே

போதாது வாழ்நாட்களுன் புகழ் பாடவே

1. பாவத்தில் வாழ்ந்தாலும் பாசத்தைப் பொழிகின்றாய்

ஆபத்தில் வீழ்ந்தாலும் அன்புக்குள் நனைக்கின்றாய் - 2

தாயுன்னை நான் பிரிந்து ஓடியோடி ஒளிகின்றேன்

ஆடென்னைத் தோள் சுமக்கத் தேடித் தேடி அலைகின்றாய்

முள்ளில் நான் மலர்ந்தாலும் உன் பீடம் ரோஜாப்பூ

சேற்றில் நான் வளர்ந்தாலும் உன் பாதம் தாமரைப்பூ

வாடாப்பூ நீ என்பேன் என் இயேசுவே - உன்னைத்

தேடாப்பூ நான் என்பேன் என் இயேசுவே

2. பாதத்தில் அமர்கின்றேன் பரிவன்பை உணர்கின்றேன்

நேசத்தில் என் கதையை மௌனத்தில் மொழிகின்றேன் - 2

உறவெல்லாம் போலிகள் என்று ஒவ்வொரு நொடியும் யோசித்தேன்

உலகெல்லாம் வேலிகள் என்று உன்னிடம் வந்து யாசித்தேன்

கதை கேட்டு அருள்கின்றாய் விதை போட்ட வித்தகனே

கரம் நீட்டி அணைக்கின்றாய் உயிர் தந்த உத்தமனே

நீயின்றி நானில்லை என் இயேசுவே - உன்

நினைவின்றி வாழ்வில்லை என் இயேசுவே


உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் - என்

உள்ளத்தில் உறைந்திட வா

உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் - என்

உயிரினில் கலந்திட வா

வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே - 2

1. உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா

வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா - 2

நீதியும் நேர்மையும் மறைந்தாலும்

உரிமையை மனிதம் இழந்தாலும் - 2

உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா

2. பிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா

அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா - 2

வாள்களும் போர்களும் அழித்தாலும்

வாழ்வினை வாழ்வே எரித்தாலும் - 2

வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா


உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன்

உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்

உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன்

இறைவா இறைவா அமைதி காண்கிறேன்

நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்

1. என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்

எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் - 2

என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைத்தேன் - 2

இனி இமயமெனத் தடைவரினும் எளிதாய் கடப்பேன்

எளிதாய் கடப்பேன் நான் எளிதாய் கடப்பேன்

2. இருளின் சக்தி எந்தன் வாழ்வைப் பணியச் சொல்லுதே

இறைவா உன் நினைவு என்னைத் துணியச் சொல்லுதே

உன் சொல்லின் உறுதியினால் பயணம் செல்லுவேன் - 2

உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்

என்றும் வாழுவேன் நான் என்றும் வாழுவேன்


உன்னோடு உறவாடும் நேரம் என் பாடல் அரங்கேற்றம் ஆகும்

எந்நாளும் என் வாழ்வில் நீ செய்த நன்மை

நாள்தோறும் நான் பாடும் கீதம்

1. பல கோடிப் பாடல்கள் நான் பாடவேண்டும்

மனவீணை உனை வாழ்த்த வேண்டும்

ஒளிவீசும் தீபங்கள் நீயாக வேண்டும்

இமையோரம் நின்றாள வேண்டும்

இதழோர ராகம் உன் ஜீவ கானம்

அருள் தேடும் நெஞ்சம் உன் பாத தஞ்சம்

மனமே மனமே இறையோடு பேசு

2. கல்வாரி வாக்குகள் வாழ்வாக வேண்டும்

வாழ்வே உன் கவியாக வேண்டும்

அலைமோதும் எண்ணங்கள் நீயாக வேண்டும்

வினை தீர்க்கும் மருந்தாக வேண்டும்

மணியோசை நாதம் நான் கேட்ட காலம்

வான் தந்த வேதம் தேனாகும் கோலம்

உயிரே உயிரே இறையோடு பேசு


எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா

என்றென்றும் பாடிப் பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா - 2

கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா - 2

இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா

1. என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னைக் கூவி அழைப்பேன்

இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா

தாய்மடி சேரும் சேய்போல ஓடிவருவேன் - 2

எனையன்பு செய்யும் நல்ல தெய்வம் நீதான்

எனையென்றும் காக்கும் வல்ல தெய்வம் நீதான் - 2

நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீதான்

நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்

நான் தேடும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான்

2. என் நிலை பாதை மாறும் வேளை வாசல் தேடிவருவேன்

இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா

தாகம் கொண்ட மான் போல ஓடிவருவேன் - 2

என் வழித்துணையாய் ஆன தெய்வம் நீதான்

எனையென்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீதான் - 2

நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீதான்

நான் பேசும் மொழியில் அகர னகரம் நீதான்

நான் வேண்டும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான்


எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் தேவா பதில் தாருமே - 2

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே

உம்மை நான் நாடிவந்தேன் - 2

1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே

தடை யாவும் அகற்றிடுமே

தயைவேண்டி உம் பாதம் வந்தேன் - 2

2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே

கர்த்தாவே உம் வார்த்தையைக்

கேட்டிடக் காத்திருப்பேனே - 2


என் ஆன்மாவின் ஆனந்தமே

உன் சேயாய் என் தாயாய் நான் வாழுவேன்

ஆன்மாவின் ஆனந்தமே அழியாத பேரின்பமே

உன் சேயாய் நானும் என் தாயாய் நீயும்

வாழ்ந்தாலே தெய்வீகமே - 2

1. நெஞ்சினிலே நிதம் வைத்தீர் சிந்தையிலே உருப்பதித்தீர்

உன் அன்பில் எனை மறந்தேனே - 2

ஆறாத காயங்களில் தீராத துன்பங்களில்

உம் வார்த்தையால் குணம் தந்தீரே

என்னுயிர் நண்பன் விழியினிலே - 2

கண்மணி நான் கலங்கிடுவேனா(னோ) - 2

2. உன் தோளில் எனைச் சுமந்து உன் அன்பில் நிதம் நனைத்து

கலங்காதே என மொழிந்தீரே ஆ... - 2

நலனின்றிப் போய்விடினும் நம்பிக்கை சாய்ந்திடினும்

என்னருகில் நீர் இருப்பீரே

என்னுயிர் நண்பன் விழியினிலே - 2

எதுவரினும் துணிந்திருப்பேனே - 2


என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா

உன் உறவை எண்ணியே

உள்ளம் ஏங்குதே உயிரே எழுந்து வா - 2

1. அணைத்துக் காக்கும் தாயின் அன்பும் ஒருநாள் அழியலாம்

அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம் - 2

ஆனால் இயேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ - 2

என் இனிய அன்பே எழுந்து வா

2. வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் உலகில் பல உண்டு

தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு - 2

ஆனால் இயேசுவே நல் நண்பன் நீரன்றோ - 2

என் இனிய நண்பா எழுந்து வா

3. பொய்மை மலிந்து மெய்மை மெலியும் நிலையைக் காண்கிறேன்

தீமை நிறைந்த உலகில் இன்று அழிந்து மடிகிறேன் - 2

எந்தன் தெய்வமே உன் அன்பால் ஆள வா - 2

என் உள்ளம் நிறைந்து வாழ வா


என் இயேசு என்னில் வா என்னோடு பேச வா - 2

1. உறவின்றி வாழ்கின்றேன் உன் துணை ஒன்றை நாடினேன் - 2

புயலாகத் துயர் எழுகையிலே - 2

என் வாழ்வில் சுகம் காணும் தென்றலாய் தினந்தோறும் வா

2. சுகமின்றி வாழ்கிறேன் உன் அகம் ஒன்றை நாடினேன் - 2

இதழாக மனம் விரிகையிலே - 2

என் வாழ்வில் சுவையூறும் தேனாக தினந்தோறும் வா


என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்

என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் - 2

1. நீரே திராட்சைக் கொடி நாங்கள் அதன் கிளைகள்

உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது - 2

2. ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும்

என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான் - 2


என் உள்ளம் கவியொன்று பாடும் - உந்தன்

அன்பொன்றே அது என்றும் நாடும் - 2

இன்பங்கள் நதியான வெள்ளம்

இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்

ஆனந்த கவிபாடித் துள்ளும் - 2

1. உன்னோடு ஒன்றாகும் நேரம்

உலகங்கள் சிறிதாகிப் போகும் - 2

நான் என்பதெல்லாமே மாறும்

பிறர் சேவை உனதாக ஆகும்

எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் - 2

அன்போன்றே ஆதாரமாகும்

விண் இன்று மண் மீது தோன்றும்

2. பிறர் காணும் இன்பங்கள் எங்கள்

இதயத்தை இசை மீட்டிச் செல்லும் - 2

வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்

உறவென்னில் உயிர் வாழத்தானே

என் சாயல் அன்று உன் சாயல் இன்று - 2

உன் முன்னே யாம் எல்லாம் ஒன்று

என்றாகும் நன்னாளும் தோன்றும்


என் உள்ளமே நீ ஏது சொல்லுவாய்

நம் ஆண்டவர் நம்மில் வரும்போது - 2

1. பாவி என்னுள்ளம் உன்னில்லமாக்குவாய்

பாவத்தினால் வந்த சாபம் போக்குவாய்

தாவி வருவாய் என் தாகம் நீக்குவாய்

காவலாய் என்னில் என்றும் நீ வாழுவாய்

வாழ்வரசே வந்தென்னை ஆளுவாய்

2. வானிலிருந்து என் ஆன்ம அமுதமாய்

வாழ்வும் என் வாழ்வினிலே ஒளியுமாய்

கானிலே அன்று என் இன்ப மன்னாவாய்

தானமாய் எல்லாம் எமக்கே தந்தவா

எல்லை உண்டோ உந்தனின் அன்பிற்கே

3. எண்ணங்கள் யாவும் நீயாக வேண்டுமே

எண்ணில்லா நன்மை எனக்கு செய்ததால்

விண்ணில் வாழும் என் ராஜ ராஜனே

பண்ணாக உன் நாமம் போற்றிப் பாடுவேன்

நன்றி சொல்வேன் என் நேச இயேசுவே


என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே

இறைவா என் உள்ளம் வருவாய்

என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே

தலைவா நீ உன்னைத் தருவாய்

என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே

இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்

1. என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்

நீதானே நீதானே இறைவா

என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்

தருவாயே தருவாயே தலைவா

வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே

வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2

வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

2. எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை

அறிவேனே அறிவேனே இறைவா

உனைப் போல நானும் பிறரன்பில் வளர

அருள்வாயே அருள்வாயே தலைவா

மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே

ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2

நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்


என் தெய்வம் என்னில் வா என்னோடு உறவாட வா

என்னில்லம் உன்னில்லம் ஆக்கிட வா என்னை நீ ஆள வா

1. அகத்தின் இருளை அகற்றும் அருளைப்

பொழிவாய் நின் வரவால் - 2

நெஞ்சார உன்னை எந்நாளும் போற்றும் - 2

நல் உள்ளம் அருள வா

என் தெய்வமே மகிமை மன்னவா - 2

2. வேந்தனும் ஆயனும் ஆன என் தேவனே

மாந்தரைக் காத்திட வா - 2

உம்மோடு என்றும் ஒன்றிக்கும் வரையும் - 2

என் உள்ளம் எழுந்து வா - என்...


என் தேவனே உன் அடியேன் யான்

அமைதியில்லா இவ்வுலகில் - உன்

அமைதியின் தூய கருவியாக

என்றும் வாழ்ந்திட வரம் அருள்வாய்

1. எங்கே பகைமை நிறைந்துள்ளதோ

அங்கே அன்பை விதைத்திடவும்

எங்கே கயமை நிறைந்துள்ளதோ

அங்கே மன்னிப்பை அளித்திடவும்

எங்கே அய்யம் நிறைந்துள்ளதோ

அங்கே நம்பிக்கை ஊட்டிடவும்

இறைவா அருள்வாய் இறைவா அருள்வாய்

2. எங்கே சோகம் நிறைந்துள்ளதோ

அங்கே புத்துயிர் அளித்திடவும்

எங்கே இடரும் இருள் உள்ளதோ

அங்கே ஒளியை வழங்கிடவும்

எங்கே கவலை மிகுந்துள்ளதோ

அங்கே மகிழ்ச்சி அளித்திடவும்

இறைவா அருள்வாய் இறைவா அருள்வாய்


என் மனம் பாடும் பாடலிது தேவா

என்னுள்ளே தீரா தாகமிது நாதா

நீ தரும் நேசம் நினைவினில் வாழும் - 2

நிலையில்லா பனி போல் என் சோகம் மாறும்

1. நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்

நிம்மதி நீ கொணர்ந்தாய் - 2

கனவெல்லாம் கானல் நீரோ - நான்

கண்ணீரில் வாழும் மீனோ - 2

உன் திருவடியே என் மனம் சரணம்

உளமதிலே நீ உன்னொளி தரணும்

2. வழி மீது வழி வைத்து ஒளி தேடினேன்

இருளினில் நான் விழுந்தேன் - 2

நான் என்ன வாடும் பூவோ - இல்லை

உன் பாதம் சூடும் பூவோ - 2

என் மனம் நீ வா நிம்மதியைத் தா

என் முகம் தனிலே புன்னகையைத் தா


என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

எல்லாமும் நீயாக வேண்டும் - எந்தன்

எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது

தாயாக நீ மாறவேண்டும்

அன்புத் தாயாக நீ மாற வேண்டும்

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது

பாதங்கள் நீயாக வேண்டும் - எந்தன் - 2

பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது

ஓடங்கள் நீயாக வேண்டும் - வரும் - 2

2. போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும் போது

பாலங்கள் நீயாக வேண்டும் - இணைப் - 2

தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்

பாடங்கள் நீயாக வேண்டும் - மறைப் - 2

3. காலங்கள் தோறும் என் நெஞ்ச வீட்டில்

தீபங்கள் நீயாக வேண்டும் - சுடர் - 2

தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது

மேகங்கள் நீயாக வேண்டும் - மழை - 2


என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானய்யா

எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா - 2

1. சூரியன் இல்லையென்றால் நிலவின் கதி என்ன

எல்லாமுமே எனக்கு நீ இனியும் குறை என்ன

கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே

காலை நேரத் தென்றலாக கனிவோடு என்னில் வாருமே

2. மலருக்கு மணமாக பயிருக்கு மழையாக

எனக்குள்ளே உயிராக இருக்கும் வல்லவரே

நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை

எனக்குத் துணை நீயாய் இருக்க என்னைச் சூழ்ந்து அன்பே வாரும்


என்னில் நீ வருவதற்காய் உனைத் தேடி வருகின்றேன்

உன் சாயல் நானாகவே என் வாசல் வா தெய்வமே - 2

உனையன்றி வழியில்லை உனையன்றி ஒளியில்லை

உன் சாயல் நானாகவே என் வாசல் வா தெய்வமே

1. இதயவாசல் திறக்கின்றேன் இரு கரத்தைக் குவிக்கின்றேன் - 2

உயிரின் மூலமே உறவின் பாலமே

அன்பின் முழுமையே அனைத்தின் முதன்மையே - 2

ஆதவன் பூமியில் வெளிச்சமாவது போல்

அன்பனே என்னில் நீ வெளிச்சமாகிட

2. உன்னில் வாழத் துடிக்கின்றேன் உன் அன்பை நினைக்கின்றேன் - 2

என்னின் தொடக்கமே அன்பின் அர்த்தமே

ஆதி அந்தமே எனது சொந்தமே - 2

அழுதிடும் மழலைக்கும் அணைக்கும் தாயைப் போலுன்

சிறகினில் நான் தங்கி இளைப்பாறிட


என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் - 2

1. கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

கரையாத அவரன்பு குறையாது - 2

கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2

2. துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

துணையாளன் இருக்கின்றார் திகையாதே - 2

தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2

3. உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

உலகாளும் மன்னவன் உனக்குண்டு - 2

என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் - 2


என்னை சுமப்பதனால் இறைவா - உன்

சிறகுகள் உதிர்வதில்லை

அள்ளி அணைப்பதனால் இறைவா - உன்

அன்பு குறைவதில்லை - 2

ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்

வானம் கிழிவதில்லை - 2

ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும்

நதிகள் அழுவதில்லை - 2

1. கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்

குழந்தை சுமையில்லை

கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு

இமைகள் சுமையில்லை - 2

மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்

பனித்துளி சுமையில்லை - 2

வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்

மழைத்துளி சுமையில்லை - 2

2. அகழும் மனிதரைத் தாங்கும் பூமிக்கு

முட்கள் சுமையில்லை

இகழும் மனிதரில் இரங்கும் மனதிற்கு

சிலுவைகள் சுமையில்லை - 2

உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்

நானொரு சுமையில்லை - 2

உயிரை ஈயுமுன் சிறகின் நிழலிலென்

இதயம் சுமையில்லை - 2


என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்

உனக்கென்ன கைம்மாறு நான் செய்வேன் - 2

காற்றும் நீயே கடலும் நீயே கருணை நீயே கனிவும் நீயே

அன்பெனும் சங்கமத்தின் நன்றி காணிக்கை

எந்தன் அன்பு காணிக்கை எந்தன் நன்றி காணிக்கை

1. உள்ளங்கள் என்றென்றும் உம்மையே சேரும்

உறவுகள் விட்டுச் சென்றால் பாதை மாறும் - 2

கனவுகளாலே வாழ்வு இல்லை

உன்னை அல்லால் ஒரு தெய்வம் இல்லை - 2

வாழும் எந்நாளும் இனி உன்னோடு வாழ்வேன் - 2

2. நெஞ்சங்கள் என்றென்றும் நேர்மையைத் தேடும்

நினைவுகள் விட்டுச் சென்றால் பாவம் சேரும் - 2

நினைவுகளாலே வாழ்வு இல்லை

உன்னை அல்லால் ஒரு நிறைவும் இல்லை - 2

வாழும் எந்நாளும் இனி நிறைவோடு வாழ்வேன் - 2


என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே

ஆசயாய் இருக்குதய்யா - 2

1. ஒன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் - 2

எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் - 2

2. நான் திரும்புற தெசயெல்லாம் ஒன் உருவம் தெரிய வேணும் - 2

திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் - 2

3. ஒன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் - 2

கலங்குற என் கண்ண ஒன் கரமே தொடைக்க வேணும் - 2


என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்

என் தெய்வமே - 2 நீயின்றி நானில்லையே

உன் நினைவின்றி வாழ்வில்லையே

1. இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ

உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ

தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்

தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய்

2. உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ

மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ

என் பாதையில் முன் போக வா

கண் போலவே எனைக் காக்க வா

ஆதரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே


என்னோடு நீ பேசவா என் நெஞ்ச நாயகனே

புதிய பூமி புலரவே தலைவனே வழியாய் வா

1. இதயம் திறந்து இமைகள் மூடி

உனக்காய் தானே காத்திருந்தேன் - 2

அமுதம் பருகும் ஆசை கொண்டு

வார்த்தைக்காகத் தவமிருந்தேன்

நம்பிக்கை ஜோதியே எழுந்து வா

என் ஆத்ம தாகம் போக்க வா

மனிதன் வாழ மன்னா பொழிந்த மன்னவனே விரைந்து வா

வா வா என்னில் வா என்னுயிராய் நீயாக வா

2. மழையின் மேகம் நல்லோர் தீயோர்

வேற்றுமையோடு பொழிவதில்லை - 2

உந்தன் அன்பை நானும் காண

சிலுவைத் தியாகம் செய்தவரே

இருளில் வாழ்ந்திடும் மாந்தர்கள்

ஒளியைக் காண எழுந்து வா மனிதன்...


ஒப்பற்ற என் செல்வமே ஓ எந்தன் இயேசு நாதா

உம்மை நான் அறிந்து உறவாட

உள்ளதெல்லாம் இழந்தேன் நான் - 2

1. உம்மை நான் ஆதாயமாக்கவும் உம்மோடு ஒன்றாகவும்

எல்லாமே குப்பை என - 2 எந்நாளும் கருதுவேன்

2. என் விருப்பம் எல்லாமே இயேசுவே நீர் தானன்றோ

உம் திரு ஆவி பெற - 2 உன் பாடுகள் ஏற்பேன்

3. கடந்ததை மறந்தேன் கண் முன்னால் என் இயேசுதான் - 2

தொடர்ந்து ஓடுவேன் - 2 தொல்லைகள் என்ன செய்யும்


ஒரு கணம் உனது திருவடி அமர்ந்து

இரு வழி மூடினேன் இறைவா

ஒருமுறை உனது திருமுக தரிசனம்

உள்மனம் தேடினேன் இறைவா

நிலவினை எடுத்து என் மனவானில்

இருளினை துடைத்திடு இறைவா

அருள் மழை பொழிந்து அகமான அழுக்கை

கழுவிட அமைதியே இறைவா

இறைவா இறைவா இறைவா இறைவா - 2

1. உதயம் விதையே பூவாகும் - அன்பில்

சிதையும் மனிதமே உயிர்ப்பாகும்

தோழமை என்பது கிழக்காகும் - அதில்

தொழுகைகள் ஒளியதன் தொகுப்பாகும்

நானே எனக்கொரு தவமாகும் - தினம்

வீழ்வதும் எழுவதும் இயல்பாகும்

நன்மைகள் செய்வதில் நதியாக - நான்

அன்புக்காய் எரிவதில் திரியாக

இதுவே இனி என் ஜெபமாகும் - உன்

திருவுளம் கனிந்தால் சுகமாகும் - 2

2. இடர்களில் விழுந்த இருவிழிகள் - தினம்

பெருநதி ஆகும் ஒருவேளை

தியாகத்தில் உதிரும் குருதிகள் யாவும்

விருதுகள் ஆகும் ஒருநாளில்

கண்களை மூடிடும் வேளையிலே - நான்

களிப்பது தேவனின் சோலையிலே

காலடி அமர்ந்திடும் ஒருகணமே - நான்

தாய்மடி அமர்ந்திடும் புதுசுகமே

பூவாய் உதிர்ந்திடும் நிலவாழ்வு - உன்

பூவடி விழுந்தால் நிறைவாழ்வு - 2


ஒரு கணமும் எனைப் பிரியாமல் என்னோடு தங்கும் ஆண்டவரே

உம்மை நான் பிரிந்து சென்றாலும்

என்னோடு தங்கும் ஆண்டவரே - 2

என்னோடு தங்கும் - 3 ஆண்டவரே - 2

1. நீர் இல்லை என்றால் வாழ்வினில் எழுச்சி இல்லை

எனை நீர் பிரிந்தால் இருளினில் வாடுகின்றேன் - 2

பொழுது சாய்கின்றது இந்த நாளும் முடிகின்றது - 2

வழியிலே சோர்ந்து விழுந்திடாமல் எனது ஆற்றலைப் புதுப்பித்திட

2. என்னில் நீர் இருந்தால் வலிமை பிறக்கின்றது

உமது அருளால் துன்பங்கள் மறைகின்றது - 2

உம் தெய்வீக ஆறுதலால் என்னை பலப்படுத்தும் - 2

என் முழு உள்ளத்தினால் உம்மையே நான் தினம் நேசித்திட


ஒருநாளும் அழியாத உறவென்னிலே

உருவாகும் அருளேசு வரவென்னிலே - 2

பிரிவில்லை அன்பில் துயரில்லை நெஞ்சில்

எனையாளும் அவனன்பு இனி நாளுமே

1. நட்பென்னும் வானங்கள் இருள்மூடும் போதிலே

உறவென்னும் கீதங்கள் உருமாறும் போதிலே - 2

உன் அருளன்பு எனைத் தாங்குமே

அன்பென்னும் தீபங்கள் அணைகின்ற நேரங்கள்

ஒளியாக எழுந்து உயிரோடு கலந்து

ஒருநாளும் அழியாத உறவொன்று தா

2. இனி என்னில் வாழ்வதோ நானல்ல நீ இயேசுவே

இரவென்ன பகலென்னவோ இதயத்துள் நீ பேசவே - 2

இனி எந்நாளும் பயமில்லையே

முடிவில்லா வாழ்வுக்கு முதலாகும் இயேசுவே

ஊரெங்கும் செல்வேன் உன் நாமம் சொல்வேன்

உன்னன்பில் நிலையாகும் வரமொன்று தா


ஒருபோதும் உனைப் பிரியா

நிலையான உறவொன்று வேண்டும்

என் உடல் கூட எரிந்தாலும்

உன் நாமம் நான் சொல்ல வேண்டும்

நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே - 2

நீங்காத நிழலாக வா இறைவா

1. உன் கையில் என்னை நீ பொறித்தாய்

பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய் - 2

ஏன் என்னை நீ தெரிந்தாய்

என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்

உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன்

தாய் உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்

உன்னோடு நான் வாழுவேன்

2. நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்

நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் - 2

என்னுள்ளே வாழும் தெய்வம்

என்னை நீ ஆளும் தெய்வம்

என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்

என் பாதை முன்னே நீதானே சென்றாய்

உன்னோடு நான் வாழுவேன்


ஓ தேவ சற்பிரசாதமே ஓ தயையின் ஊற்றே

மா தேவே எம்மில் என்றும் நீர் வாசஞ் செய்யலானீர்

ஓ இயேசு கிறிஸ்துவே நமோ ஓ ஸ்நேக தேவனே

நீசர்களாம் எம்மேல் வைத்த நேசம் என் சொல்வோம் யாம் - 2

2. விண்ணோர் விருந்தே நீரெங்கள் வெம்பவம் நோக்காமல்

மண்மீதெங்ஙான்றும் அன்பினால் வாசஞ் செய்யலானீர் ஓ...

1. தற்பரனாம் உம்மைப் பெற தைரியம் யாம் கொள்ள

அப்பத்தினில் மறைந்தெம்மை அன்போடழைக்கின்றீர் ஓ...


கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா

கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா

கருணை உன் வடிவல்லவா

வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும்

கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும்

எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா

1. வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார்

மனதீபம் நீ என்று அறியாமலே

அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார்

அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே - 2

தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன்

உணராத நிலை மாற்றுவாயோ

உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன்

ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன்

மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்

2. செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால்

புவிமீது இசைஞானம் இழிவாகுமே

சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப்

புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே - 2

உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை

உண்டாக்கி அருள் வீசுவாயோ

தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன்

இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன்

நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்


கவிதை பாடும் நேரம் உன்னைப் புகழ்ந்து பாடும் இதயம்

வானம்பாடி போலே - உன்னை

பாடிப் பாடி மகிழ்வேன் நான்

1. உந்தன் கண்ணின் ஒளியே எந்தன் இதய வீணை பாடும் - 2

மலரின் மணமும் போலே - எந்தன்

ஜீவன் பாடும் ராகம் இதுவே

2. அன்பும் பண்பும் நீயே நல் இன்ப இறையும் நீயே - 2

அருளின் வடிவம் நீயே - உனை

நாளும் பாட வரங்கள் தா


கலங்காதே கலங்காதே நான் உன் கடவுள்

அஞ்சாதே அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கின்றேன்

நீ என் அடியவனே நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன் - 2

1. காற்றும் புயலும் குன்றும் நதியும் ஓர் நாள் மறைந்தாலும்

தேற்றும் எந்தன் வார்த்தை உன்னில்

இனி என்றும் மறையாதது - 2

காக்கும் தெய்வம் கரத்தில் உன் ஆத்மா ஒருநாளும் அழியாதது

2. ஏழ்மை வறுமை துன்பம் துயரம் தினம் உன்னை வதைத்தாலும்

கேட்கும் வரத்தை வாரி வழங்கும் வள்ளல் நாமன்றோ - 2

காக்கும் தெய்வம் கரத்தில் உன் ஆத்மா ஒருநாளும் அழியாதது


காக்கின்ற தேவன் உன்னோடுதான்

கலங்காதே திகையாதே என் மனமே - நீ - 2

1. துன்பத்தில் துணையாக உன்னோடுதான் - உன்

துயரினில் ஆறுதலாய் உன்னோடுதான் - 2

விழி காக்கும் இமையாக உன்னோடுதான் - 2 - நல்

வழிகாட்டும் ஒளியாக உன்னோடுதான் - 2

2. சோர்வினில் திடம் தர உன்னோடுதான் - உன்

நோயினில் சுகம் தர உன்னோடுதான் - 2

சோதனை வேளையில் உன்னோடுதான் - 2 - உன்

வேதனை தாங்கிட உன்னோடுதான - 2


சிறகை இழந்த பறவை பாடும் பாடல் கேட்கிறதா - உன்

உறவைத் தேடி உருகும் விழியின் தேடல் புரிகிறதா - 2

இறைவனே என் இறைவனே என் இதயக் கோயில் எழுந்து வா

வாசல் திறந்தேன் வாசல் திறந்தேன் உதயதீபம் ஏற்ற வா

1. உன்னைப் பிரிந்து வாடும் நாட்கள் யுகமாய் மாறிவிடும் - நான்

உந்தன் நினைவில் வாழும் நிமிடம் சுகமாய் ஆகிவிடும்

கண்ணை மூடி உன்னை நினைத்தால் கவலை மாறிவிடும் - 2

உன் கரங்கள் தழுவி நடக்கும் போது களைப்பு ஆறிவிடும்

கண்ணின் மணி போல் காக்கும் தேவா

அருகில் இருந்திடுவாய் - நான்

காலந்தோறும் உனது நிழலில் - வாழும் வரமருள்வாய் - 3

2. கடலைத் தேடி பாயும் நதியாய் உன்னைத் தேடிவந்தேன் - நீ

ஒளியைத் தேடி சாயும் மலராய் என்னைத் தேடிவந்தாய்

தாயைப் பிரிந்த சேயைப் போல தனித்து வாடிநின்றேன் - 2

நீ தாவி அணைத்து அன்பில் நனைத்து நண்பன் ஆகின்றாய்

சோர்ந்து வாடும் பொழுதில் எல்லாம் சொந்தம் தந்திடுவாய்

நான் சாய்ந்து கொள்ள ஏழை எனக்கு தோள்களாகிடுவாய் - 3


சின்ன இதயம் திறந்துள்ளேன் என்னோடு பேச வா

உன் மொழி கேட்க வந்தேன் என்னோடு பேச வா - 2

1. என் உள்ளத்தில் கறையுண்டு குறைகள் பல உண்டு

உன் மொழியில் நிறையுண்டு இதய சுகமுண்டு - 2

இறைவனே நீரே எந்தன் நம்பிக்கை

என் வாழ்விலே என்றும் நீர் துணை

2. என் உள்ளத்தில் சுமையுண்டு விழிநீர் சோகமுண்டு

உன் வரவில் சுவையுண்டு இனிய வாழ்வுண்டு - 2 - இறைவனே...


தந்தையும் தாயுமான நல்லவரே இறைவா

பிள்ளைகள் கூடிவந்தோம்

எந்த இனம் என்ன குலம் என்று யாமறியோம் தந்தாய்

பிள்ளைகளாகி நின்றோம்

இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்

எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும் - 2

எங்களுக்கு தீமை செய்தோர்களை மன்னிக்கும் மனம் வளர்த்தோம்

அன்புடன் அரவணைத்தோம்

அனுதின உணவை எங்களுக்கு என்றும் உறுதி செய்தருளும்

வறுமை நீங்கச் செய்யும் இங்கு வாரும்...

உன்னதத்தில் உம் மகிமை ஆள்வது போல்

இங்கும் எங்குமே எங்கிலும் உம்மரசே

எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக

வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்

நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்

வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்

பிள்ளைகள் கூடி வந்தோம் தந்தையும் தாயுமான...

மனிதம் உயர்வு பெறும் உமது அரசு வரும்


தரிசனம் தரவேண்டும் இயேசய்யா - என் மேல்

கரிசனம் உள்ளவர் நீரே அய்யா - 2

பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்

தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும் - 2

ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்

காலம் காலமாக என்னைக் காக்கும் திருக்குமரா

1. நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்

வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே - 2

கப கக ரி ரிக ரிஸ ஸா பத பதஸ பதஸ கா

ரிக ரிரி ஸா தத தத பா கரி பக தப ஸத ரிஸ கரி ஸத கா

காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே - 2

தேனின் சுவையோடு ஆ... இயேசய்யா - 2

கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான - லயமுடனே - 2

2. வானும் விண்மீனும் உலகோடுதான்

யாவும் உன் சாயல் தெளிவாகுதே - 2 ஆ...

பாரில் எமக்காக தேவ சுதனாக - 2

நாத கனிவோடு ஆ... இயேசய்யா - 2

தாமே நாடினீரே பாப நேச தேவ பாலன் தயவுடனே - 2


திருக்கரத்தால் தாங்கி என்னை

திருச்சித்தம் போல் நடத்திடுமே

குயவன் கையில் களிமண் நான்

அனுதினமும் வனைந்திடுமே - 2

1. உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே

காரிருளில் நடக்கையிலே தீபமாக வழிநடத்தும் - 2

2. ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

ஆத்ம நண்பன் இயேசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம் - 2


துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான் - நம்

இறைமகன் எனக்கினி தோழனே தோழனே

1. தீதானவை வழியானது என் பாவங்களும் மிகையானது - 2

என் பாவக் கறையை நீர் நீக்கி என் வாழ்வில் இன்பம் தந்தீரே

கண்பாரும் இனிமேல் துணையாக வாரும் என்னைத் தந்தேன் நானே

2. தேவாவியே துணையானது என் கோபங்களும் கரைந்தோடுது - 2

என்சோகக் குரலை நீர் கேட்டு பாவநோயின் துன்பம் தீர்த்தீரே

எந்நாளும் விலகி தனிவாழும் போதும் உந்தன் பிள்ளையானேன்


தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் ராகம் கோடி

நீயே என் வாழ்வின் தெய்வம் நீயின்றி வேறேது சொந்தம்

தங்கும் எந்தன் உள்ளம் பொங்கும் அன்பின் வெள்ளம்

1. வானில் உலவும் நிலவும் இங்கு தேய்ந்து போகலாம்

தேனில் கலந்த மலரும் இங்கு காய்ந்து வீழலாம் - 2

உயிரில் கலந்த உணவும் இங்கு உடைந்து போகலாம்

விழியில் விழுந்த நினைவும் இங்கு வழிகள் மாறலாம் - 2

காலம் தேயலாம் உன் கருணை மாறுமோ

வாசம் போகலாம் உன் பாசம் தீருமோ இயேசுவே

2. சாய்ந்து கொள்ளத் தோள்கள் தினம் தந்த தெய்வமே

சோர்ந்து போகும் கால்கள் பலம் தந்த செல்வமே - 2

முள்ளில் விழுந்து தொழுதேன் நீ உறவில் தேடினாய்

அள்ளி அன்னையாய் எடுத்தாய் உன் சிறகில் மூடினாய் - 2

நதிகள் காயலாம் உன் நட்பு காயுமோ

நண்பர் பிரியலாம் உன் அன்பு மாறுமோ இயேசுவே


தேவகுமாரா கேட்கிறதா என் தியானகீதம் கேட்கிறதா

இமைகள் திறந்து உந்தன் கண்கள் எனை மட்டும் பார்க்கிறதா - 2

1. உன்னைக் காண விழி கொடுத்தாய்

உன்னைப் பாட மொழி கொடுத்தாய்

பயணம் போக வழி கொடுத்தாய்

பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்

உன்னை நினைத்து உருகி விட்டேன்

என்னை உனக்கே கொடுத்து விட்டேன் - 2

உனக்கே என்னைக் கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளம் வருகிறது கர்த்தர் பாதம் தொடுகிறது

என்னைப் போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உன்னை...


நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில்

கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன்

இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே

உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே

இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

1. சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம்

இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் - 2

கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும்

மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால்

வானத்துப் பறவையைப் பார் விதைப்பதில்லை அறுப்பதில்லை

வயல்வெளி மலர்களைப் பார் உழைப்பதில்லை நூற்பதில்லை

இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே - 2 ஆ...

2. வருத்தும் சுமைகளெல்லாம் சுமந்திடக் காத்திருப்பான்

வாழ்வு தரும் வார்த்தைகளால் ஆறுதல் அளித்திடுவான் - 2

நல்லவர்க்கும் தீயவர்க்கும் அருள்மழை பொழிந்திடுவான்

வாழ்வின் வைகறையில் விடியலாய் எழுந்திடுவான்

வயல்வெளி மலர்களைப் போல் வாடிவிடும் வாழ்க்கை இது

நன்னெறி வாழ்க்கை ஒன்றே கூடிவரும் செல்வமது

இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே - 2 ஆ...


நின்னருள் நாடி நான் வந்தேன் இறைவா

எந்நாளும் துணையாக கனிவோடு வர வேண்டும் - 2

1. வாழ்வும் நீ ஒளிதரும் தீபம் நீ ஜீவன் நீ கருணையின் தேவன் நீ - 2

தேவ தேவன் மானுவேலன் இராஜராஜன் இயேசுநாதர்

பாவி என்னை மீட்க வந்த அருள்மொழியே

பரம்பொருளே இறைமகனே

2. துன்பம் துயர் யாவும் உந்தன் அருளாலே

என்னை ஒருநாளும் கொஞ்சமும் அணுகாதே - 2

சோதனை வந்தாலும் - 2 ஆ... தாங்கிடும் உள்ளமே

அன்புடன் தேவனே வேண்டுமுன் தயவாலே தேவதேவன்....

3. சிலுவையில் இறைவா நீர் தந்த உயிராலே

புதிய மறுவாழ்வும் இனிதாய் அடைந்தேனே - 2

கிருபையின் இயேசுவே அருகினில் வரவேண்டும்

ஏழை என் வாழ்வில் தேவை உன் கருணை தேவதேவன்...


நீயாகவே இயேசுவே

உன் நினைவாகவே நான் வாழ்கிறேன்

நீயாக நான் மாற வரம் தாருமே

நீயின்றியே நானில்லையே

உன் நினைவாக நான் வாழ அருள் தாருமே

உன்னாலே நான் நிறைவாகுவேன்

இறைவா இறைவா நீயாகவே

இதயம் வாழும் உன் நினைவாகவே - 2

1. என் வாழ்வு மாந்தர்க்குப் பணியாகவே

உன்னாலே நான் உருவாகின்றேன்

நிதம் என்னை உலகிற்கு உப்பாக்கவே

உன்னாலே நான் வாழ்வாகின்றேன்

என் மனம் என்றும் உன்னில் இணையும்

என் உடல் என்றும் உன்னில் உறையும் - 2

நிதம் என்னைக் காக்கும் தேவன் நீயே இறைவா...

2. என் உள்ளம் நல்லோர்க்கு ஒளியாகவே

உன்னாலே நான் மெழுகாகின்றேன்

பணிவாழ்வு உலகோர்க்கு உரித்தாகவே

உன்னாலே நான் அழைக்கப்பட்டேன்

என் செயல் என்றும் உன்னைத் தொடரும்

என் உயிர் என்றும் உன்னில் உறையும் - 2

உருவாக்கி எனைக் காக்கும் இறைவன் நீயே நீயாக...


நீ உறவாடும் நேரமே என் உளமெங்கும் வசந்தமே

நீ எனதாகும் பொழுதில் - உன்

எண்ணங்கள் எனை மாற்றுமே உன்னருள் போதுமே

1. தனிமையில் கூட தனி சுகமே - என்

தலைவன் உமது உடனிருப்பால் - 2

சுமைகள் கூட சுகம் தருமே - உன்

இமைகள் என்னை அரவணைத்தால்

படைப்பினில் ஒளிர்வது உன் முகமே - இது

பரமனே உந்தன் அதிசயமே

2. இடர்கள் கூட இனிக்கின்றதே - என்

இனியவன் என்னில் இயங்குவதால் - 2

தடைகளில் மனம் மகிழ்கின்றதே - என்

தாயாய் உன் கரம் தேற்றுவதால்

நினைவிலும் நீங்காத உன் முகமே - இது

நேசமே உந்தன் அதிசயமே


நீயாக நான் மாறவேண்டும்

உனைப் போல உறவாட வேண்டும்

என் இயேசுவே உன் அன்பினிலே எந்நாளுமே நான் வாழணும்

உனில் நானும் உயிர் வாழ வேண்டும் - 2

1. ஏழை நானும் நீயின்றி வாழ்ந்தால் வாழ்வின் பொருளேது - 2

கணநேரம் உனை நானும் மறந்திடும் போது

கவலைகள் சூழ்கின்றது

ஏங்கும் என் இதயம் எழுந்தே நீ வாராய்

உயிரோடு கலந்திடுவாய் - 2

2. என்றும் உந்தன் அன்பொன்று போதும் எனக்கினி வாழ்வினிலே - 2

ஏழை என் நினைவினில் எழுந்திடும் எண்ணம்

எல்லாமும் நீயாகவே

சொல்லொன்று போதும் உன் சொல்லொன்று போதும்

என் ஆன்மா குணமடையும் - 2


நீயில்லாத வாழ்வே எனக்குள் வெறுமையிலும் வெறுமை - உன்

நினைவில்லாத பொழுதும் எனக்குள் தனிமையிலும் தனிமை

இறைவா தனிமையிலும் தனிமை

1. பனித்துளி பொழிந்தும் மழைத்துளி விழுந்தும்

நனையாத நிலமாகிறேன்

நிலவொளி விழுந்தும் கதிரொளி எழுந்தும்

முடிவில்லா இருளாகிறேன் - 2

அருட்கடலே உன் அருள்மழை படவேண்டும்

அறக்கடலே உன் ஒளியினைத் தொடவேண்டும்

காரிருள் சாய்ந்தோடிடும் எனில் கார்மழை பாய்ந்தோடிடும்

முடிவாகும் வெறுமை விடிவாகும் தனிமை - 2 இறைவா - 2

2. உயிரினில் கலந்தும் உறவினில் விரிந்தும் எரியாத திரியாகிறேன்

பாதைகள் தெரிந்தும் பயணங்கள் அறிந்தும்

புரியாத புதிராகிறேன் - 2

துயில்கொளவே உன் தோள்களில் தலைசாய்ப்பேன்

அழுதிடவே உன் மார்பினில் முகம் தேய்ப்பேன்

தாய்மடி நீயாகிறாய் எனைத் தாங்கிடும் நிலமாகிறாய்

சுகமாகும் இதயம் இதமாகும் உதயம் - 2 இறைவா - 2


நீலவானின் நிலவுப் போல் இனிமை தரும் தேவா

இதயத்தைத் திறந்தேன் நான் அன்பே நீ வருவாயா

வைகறை வசந்தமே என் வாழ்வின் உதயம் நீயாக வா

1. ஆலயம் நுழைந்ததும் அழுகை வருகுது

உன் அன்பின் நினைவினில் நெஞ்சம் மகிழுது

இரவிலும் பகலிலும் உனையே நினைக்கின்றேன்

இன்னிசை கீதத்தால் நிதமும் துதிக்கின்றேன்

என்னில் இனிமேல் வாழ்வது நானல்ல நீ இயேசுவே

அன்பாக வா அருளாக வா இதய வேந்தே வா

2. கேட்பதைக் கொடுத்திடும் இரக்கம் மிகுந்தவர்

நான் செல்லும் வழியெல்லாம் துணையாய் வருபவர்

உமக்காக வாழ்ந்திட உலகை மறந்தேனே

துன்பங்கள் துயரங்கள் ஏற்று மகிழ்ந்தேனே

எனக்கெல்லாம் நீ இயேசுவே நீயில்லையேல் நானில்லையே

உயிராக வா உறவாக வா என்னோடு வாழ வா


படைப்பின் இறைவன் பீடத்தில் இருக்கின்றார்

உணவின் உருவில் இதயத்தில் வருகின்றார் - 2

1. உள்ளம் என்றொரு கோவில் - அதில்

உயிராய் இருப்பான் இறைவன் - 2

அப்பம் என்றொரு உருவில் - அவன்

உணவாய் இருப்பான் உலகில்

2. இதயம் கொடுத்தவன் இறைவன் - மண்

இன்பம் நிறைப்பது இல்லை - 2

ஒளியைச் சிந்தி அருள்வாய் - பாவ

இருளில் வருவது இல்லை

3. தலைவன் என்றொரு உறவு - அவன்

பலியில் வந்ததின் நிறைவு - 2

இதயத் தாமரை கதவு - தினம்

திறந்தால் வருவது உணவு


பாரும் தேவனே ஒரு நிமிடம்

கேளும் நாதனே என் கானமே - 2

உன் உறவையே நான் தேடினேன்

உன் வருகைக்காய் தினம் வாடினேன்

1. உன் பார்வை எனக்கென்றும் சூர்யோதயம்

என் ஆசை மலர்விழிகள் அதில் விரியும்

உன் நினைவு எனக்கென்றும் சந்திரோதயம்

என் வாழ்வு அதில் மூழ்கி கவிபாடும்

நான் தேடினேன் உன் வாக்கையே

உன் இல்லமே என் சொந்தமே - 3

2. பாதங்கள் பயணத்தில் தடுமாறுதே

பாவங்கள் குறை தீர்த்து எனைத் தாங்குமே

பயணங்கள் வழிமாறி இருளானதே

சலனங்கள் தீர்த்தெந்தன் வழியாகுமே

நான் பார்க்கிறேன் ஒளிதீபமே

நான் போகிறேன் வழிகாட்டுவீர் - 3


பேசும் தெய்வமே பேசாத கல்லோ மரமோ அல்ல

பேசும் தெய்வமே என் தெய்வம் பேசும் தெய்வமே

1. நேற்றும் இன்றும் மாறாதவர் என்றும் வாழ்கிறவர் - 2

மாறாதவர் வாழ்கிறவர் மாறாதவர் என்றும் வாழ்கிறவர்

அவர்தான் இயேசு என் தெய்வம்

2. இதுதான் வழி என்று குரல் கொடுப்பார் கூடவே நடந்திடுவார் - 2

குரல் கொடுப்பார் நடந்திடுவார்

குரல் கொடுப்பார் என்னோடு நடந்திடுவார் அவர்தான்...


பொன்மாலை (காலை) நேரம் பூந்தென்றல் காற்றில்

என் ஜீவராகம் கரைந்தோடுதே

என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்

என் துன்பமேகம் கலைந்தோடுதே

உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்

உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்

1. நீ இல்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் - உன்

நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் தான் - 2

காலந்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே

சுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே

என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமே

என் தெய்வமே அருகில் நீ வர வேண்டுமே

காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே ஆ... ம்...

2. ஒருகணம் என் அருகினில் நீ அமரும் போது ஒரு யுகம்

உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புதுயுகம் - 2

முள்ளில் பூக்கும் ரோஜா என்னை அள்ளிப் பறிப்பதேன்

சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்வதேன்

என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை

என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை

அன்பின் இறையே இந்த இதயம் உன் அன்பைப் பாடுதே ஆ... ம்...


மகத்துவம் நான் கண்டேன் என் இறையவனே

உன் மகத்துவம் நான் கண்டேன் - நீர்

மனிதனில் காட்டிய அளவில்லா அன்பினில்

மகத்துவம் நான் கண்டேன் - 2

1. உம் புகழ் சாற்றிடும் படைப்பினிலே மகத்துவம்...

படைப்பினில் விந்தையாம் கோள்களிலே மகத்துவம்...

கோள்களில் சிறந்தது இப்புவியினில் மகத்துவம்...

புவியினுள் ஓடுகின்ற நீரினில் மகத்துவம்...

மனிதனில் நீர் தந்த சாயலில்

மனிதனுள் நீர் வாழும் நிலையில் மகத்துவம்...

2. விண் இன்று மண்ணகம் வந்ததிலே மகத்துவம்...

மரியாவின் உதரத்தில் வந்ததிலே மகத்துவம்...

மரணத்தை வென்ற உம் உயிர்ப்பிலே மகத்துவம்...

வெண்ணிற அப்பத்தின் வடிவிலே மகத்துவம்...


மகிமையின் ராஜனே மகத்துவ தேவனே

உலகத்தை மீட்டோனே உமக்கே ஆராதனை - 2

1. இறையே எம் அரசே இயேசு பெருமானே

எங்கள் குலகுருவே உமக்கே ஆராதனை

2. சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி

வானகம் திறந்தோனே உமக்கே ஆராதனை

3. ஜெயம் பேரிகை முழங்க ஜெகதலத்தோர் களிக்க

சிருஷ்டிகளெல்லாம் மகிழ உமக்கே ஆராதனை


மழலை இதயம் நாடி வருவோர் எனை விழைவீரோ

இசைக் குழலின் ஒளியில் மயங்குவோரே பேச வருவீரோ - 2

மானைப் போல தவித்து நிற்கும் இதயம் பாரீரோ - 2

தேனைப் போல அருள் சுரந்து தேற்ற வாரீரோ

1. குழந்தை போல பேச எனக்கு இதயம் இல்லையே

மழலை சொல்லும் நாட்களாக மறந்து போனதே - 2

இளமைப் பொலிவில் இதயம் தானும் இறுகிப் போனதோ

வளமை சேர்க்கும் உனை மறந்து மயங்கிப் போனேனே

2. பாவி என்னை பார்த்துப் பார்த்து பரிதவிக்கின்றீர்

மேவி மேவி அழைத்து அழைத்து அன்பு செய்கின்றீர் - 2

தவழ்ந்து தவழ்ந்து தேடி தேவா உன்னை அடைந்துள்ளேன்

மகிழ்ந்து என்னை ஏற்றுப் பாவப் பொறுத்தல் அளிப்பீரோ


வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே

நதிமீது அலைந்தாடும் அகல் போலவே

கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே

அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி

துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி

எனைத் தாங்கும் என் தெய்வமே

என் நிழலாக எழும் தெய்வமே

1. எந்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன்

உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் - 2

நீரின்றியே மண்ணில் வளமில்லையே

நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே

எனை தாங்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே

நிலமெங்கும் ஒளிர்ந்தாலும் விழி மூடி பயன் ஏது

துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகை ஏது

பலனாக கை மீது வா இங்கு புலனாகும் இறையாக வா

2. என் பாதை முடிவாகும் உன் தாளிலே

என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே - 2

உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ

உன் பார்வைகள் என் வழியாகுமோ

இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர் வீச எனை ஏற்றவா

ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே

விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன் தானே

நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன் காண வா


ராஜாதி ராஜனே தேவாதி தேவனே

விண்ணோர் வணங்கிடும் விமல ராஜனே

1. வானின்று இறங்கிய உணவு நானென்றீர்

ஆவலாய் உண்பவர் ஆன்ம வாழ்வைக் கண்டிடுவீர் - 2

தேவாதி தேவனே ராஜாதி ராஜனே

போற்றித் துதித்துப் பாடிடுவோம் - 2

2. அன்பினால் உம்மையே உணவாகத் தந்தீர்

அன்புடன் உலகினில் வாழ்வும் வழியும் காட்டினீர் - 2 தேவாதி...

3. என்னில் நீ நிலைத்தாலே வாழ்வு உண்டென்றீர்

உம்மில் நான் நிலைக்கவே விரைந்து எம்மில் வந்திடுவீர் - 2 தேவாதி...


தூய ஆவியானவர் பாடல் வரிகள்


அப்பா பிதாவே அன்பான தேவா

அருமை இரட்சகரே ஆவியானவரே - 2

1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்

என் நேசர் தேடி வந்தீர் - 2

நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து

நிழலாய் மாறி விட்டீர் - நன்றி உமக்கு நன்றி - 2

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்

தயவாய் நினைவு கூர்ந்தீர் - 2

கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து

கரம் பற்றி நடத்துகிறீர் - நன்றி உமக்கு நன்றி - 2

3. உலையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே - 2

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி

கழுவி அணைத்தீரே - நன்றி உமக்கு நன்றி - 2


ஆட்கொள்ள வந்திடுவாய் - தூய

ஆவியே எழுந்தருள்வாய்

ஆவலுடன் நான் காத்திருந்தேன் - 2 என்

ஆசைகள் மலர்ந்திட விரைந்திடுவாய்

1. அக்கினிப் பிழம்பாய் கனன்றெழுந்து

தீமையை எரித்திட வந்திடுவாய்

இடியாய் மீண்டும் உருவெடுத்து

அடிமை வாழ்வினை அழித்திடுவாய்

இருளாய் உலகம் தவிக்கின்றதே - உன்

வரவால் விடியலும் தந்திட வா

வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை - 2

2. புயலாய் சீறி சுழன்றெழுந்து

தாழ்வினை போக்கிட வந்திடுவாய்

அலையாய் தொடர்ந்து வந்திங்கு

மனிதம் மலர்ந்திட செய்திடுவாய்

மலையாய் துன்பம் எழுந்தாலும் - உன்

வரவால் யாவும் நொறுங்கிடுமே

வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை - 2


ஆவியான தேவனே அசைவாடுமே - 2

அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே - 2

வாரும் ஆவியே தூய ஆவியே

வாரும் ஆவியே தூய ஆவியே - 2

1. தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே - உம்

திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா - 2

2. ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே - என்

சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா - 2

3. தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே - என்

துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா - 2

746. ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே - 2

1. உலையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே - 2

பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே - 2

2. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே - 2

ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே - 2

3. ஆவியின் வரங்களினால் எம்மையும் நிப்பிடுமே - 2

எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே - 2


ஆவியானவரே என்னை நிரப்பிடுமே - 2

அல்லேலூயா - 8

1. உண்மையின் ஆவி உயிருள்ள ஆவி

நீதியின் ஆவி நேர்மையின் ஆவி - 2

2. ஞானத்தின் ஆவி நேசத்தின் ஆவி

ஒளியின் ஆவி ஒற்றுமையின் ஆவி - 2

3. சாந்தத்தின் ஆவி சத்தியத்தின் ஆவி

வல்லமையின் ஆவி மீட்பின் ஆவி - 2


ஆவியிலே புதுமை அடைவோம் - அருள்

ஆழியிலே மூழ்கிக் களிப்போம்

இயேசுவுக்கு சான்று பகர்வோம் - அவர்

சாட்சிகளாய் வாழ்வை அமைப்போம் - 2

1. அன்பு என்னும் ஆடையணிவோம் - நல்ல

ஆனந்த அமைதி அடைவோம்

ஆதி சபை வாழ்க்கையினை ஆண்டவரின் ஆவியிலே

வீதியெங்கும் கண்டு களிப்போம் - நாம் - 2

2. வேதனையாம் அலைகள் ஓங்கலாம் - பெரும்

சோதனையாம் புயலும் வீசலாம்

இறைவன் நம்மைக் காக்கின்றார் இன்பமுற அழைக்கின்றார்

நிறைவாழ்வு இன்று அடைவோம் - நாம் - 2

3. பிரிவினையாம் நோய்கள் தீரும் - இனி

குறுகிய நம் பார்வை மாறும்

இறையரசின் கொடைகளையும் புனித அருங்குறிகளையும்

இல்லங்கள் கண்டு மகிழும் - நம் - 2


ஆவியை தா தூய ஆவியைத் தா

இயேசுவை உந்தன் ஆவியைத் தா - 2

1. தந்தையென் றழைத்திட ஆவியைத் தா

நிந்தையை அகற்றிட ஆவியைத் தா

உள்ளம் உருகிட ஆவியைத் தா

கள்ளம் அகன்றிட ஆவியைத் தா

2. ஞானம் நிறைந்திட ஆவியைத் தா

கானம் எழுப்பிட ஆவியைத் தா

பலமொழி பேசிட ஆவியைத் தா

பக்தியில் வளர்ந்திட ஆவியைத் தா

3. இறைவாக்குரைத்திட ஆவியைத் தா

இறையில் மகிழ்ந்திட ஆவியைத் தா

சான்று பகர்ந்திட ஆவியைத் தா

சத்தியம் விளங்கிட ஆவியைத் தா

4. உறவை வளர்த்திட ஆவியைத் தா

உன் புகழ் ஒங்கிட ஆவியைத் தா

பேய்கள் ஒட்டிட ஆவியைத் தா

நோய்களைப் போக்கிட ஆவியைத் தா


ஆவியைத் தாரும் இயேசுவே - தூய

ஆவியைத் தாரும் இயேசுவே

1. புத்துயிர் பெற்று நான் வாழ

புதுப் படைப்பாய் நான் மாற

2. எந்தன் தாகத்தைக் தீர்க்க

உயிருள்ள நீர் என்னில் சுரக்க

3. பாவக் கறைகளைக் கழுவ

பாவத் தளைகளை அறுக்க

4. மனத்தின் கவலையைப் போக்க

மகிழ்ச்சியால் எம்மை நிரப்ப

5. சாத்தானின் சேனையை வெல்ல

உமது புகழை நான் சொல்ல


ஆற்றல் தந்திடும் தூய ஆவியே

ஆட்கொள்ளும் எமை இந்த வேளையிலே

உறவுக்காக சாட்சியாக

உலகில் வாழ ஊக்கம் தந்திடுவாய்

1. அன்பும் பண்பும் மிளிர்ந்திட

ஆக்க சக்தியைத் தந்திடு

துன்புறும் மக்கள் வாழ்விலே

துணையாய் இருக்க உதவிடு - 2

2. மனித வாழ்வை உயர்த்திட

மனதில் உறுதியை வளர்த்திடு

நியாயமான வழியில் செல்ல

ஞான ஒளியைத் தந்திடு - 2


ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல

ஆண்டவரின் ஆவியாலே ஆகுமா ஆகுமே - 2

1. மண்குடம் பொற்குடம் ஆகுமா ஆகுமே

குறைகுடம் நிறைகுடம் ஆகுமா ஆகுமே - 2

தண்ணீரும் திராட்சை இரசம் ஆகுமா ஆகுமே

திராட்சை இரசம் திரு இரத்தம் ஆகுமா ஆகுமே

2. செங்கடல் பாதையாய் ஆகுமா ஆகுமே

செத்தவர் உயிர்தெழல் ஆகுமா ஆகுமே - 2

சிங்கம் ஆடு நட்புறவு ஆகுமா ஆகுமே

சிறைவாழ்வு திருவாழ்வு ஆகுமா ஆகுமே

3. பாவிகள் மீட்பு பெறலாகுமா ஆகுமே

பாலைவனம் சோலைவனம் ஆகுமா ஆகுமே - 2

திருச்சபை ஓருடல் ஆகுமா ஆகுமே

திருச்சுதன் ஆவியால் ஆகுமே ஆகுமே


இருதயத்தில் வரம் தந்தாளும்

இஸ்பிரித்து சாந்தேகனே நாளும்

1. சருவ வுயிர்க்கும் தாயகமானவா - 2

சாட்சாதி சதா நித்யமானவா - 2

தானாய் நின்ற தற்சுயம் பானவா - 2

தருணம் வந்தருள் தந்திடுமென் தேவா - 2

2. திரித்துவத்தின் மூன்றாம் நாமதேயா - 2

சிஷ்டோர் மனம் பற்றிய தூயா - 2

சிநேகாக்கினி வீசும் நன்னேயா - 2

தேவகாருண்ய மேவு சகாயா - 2

3. மதிகுலத்தவர் துதி நிதம் செய்யும் - 2

வல்லோய் நிம்பை மாநகர் மீதுய்யும் - 2

மாந்தர் செழித் தோங்கத் தயை செய்யும் - 2

வரப்பிரசாதத்தின் மழை மிகப் பெய்யும் - 2


உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில்

ஊற்றவேண்டும் இந்த நாளிலே

உலகமெங்கும் சாட்சி நாங்களே - 2

1. பெந்தகோஸ்தே பெருவிழாவிலே

பெருமழை போல் ஆவி ஊற்றினீh - 2

துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை - 2

தாங்க வேண்டும் உந்தன் ஆவியால் - 2

2. ஆவியின் கொடைகள் வேண்டுமே

அயல்மொழியில் துதிக்க வேண்டுமே - 2

ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும் - 2

ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே - 2


எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமய்யா

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே - 2

1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்

எதற்காக ஜெபிக்க வேண்டும்

கற்றுத் தாரும் ஆவியானவரே - 2

வேதவசனம் புரிந்து கொண்டு

விளக்கங்களை அறிந்திட

வெளிச்சம் தாரும் ஆவியானவரே

2. கவலை கண்ணீர் மறக்கணும்

கர்த்தரையே நோக்கணும்

கற்றுத் தாரும் ஆவியானவரே - 2

செய்த நன்மை நினைக்கவும்

நன்றியோடு துதிக்கவும்

சொல்லித் தாரும் ஆவியானவரே


எல்லா வரமும் நிரம்பித் ததும்பும்

திவ்ய ஸ்பிரித்து சாந்துவே

அடியோர் உள்ளத்தில் எழுந்தே வருவீர்

இனிய சிநேக தேவனே - 2

1. உலக இருளை அகற்ற உமது பரலோக ஒளி தாருமே - 2

உம்மைக் கண்டு நன்மை பெற நாதனே அருள் புரிகுவாய்

2. நன்மை பயக்கும் ஞானக் கொடைகள்

யாவும் அளிப்பாய் பரமனே - 2

நல்வழியை நாங்கள் கண்டு நற்கதி பெறச் செய்குவாய்

3. ஞானம் புத்தி விமரிசையுடன் அறிவு திடம் பக்தியும் - 2

தெய்வப் பயமான வரங்கள் ஏழும் எமக்கு ஈவாயே


ஸஸ நிரித நிஸ ஸநி தப பப மா தா தா

ஸஸ நிரித நிஸ ரிஸ நித பபம தா தா

க பா மா கரி பாம கரி ஸா கபா மா கரி ஸா

ஒளியூட்டும் இறையாவியே - என்றும்

வழிகாட்டும் நிறையுண்மையே

வழியறியா பேதை எந்தன் துயர் நீக்கி துணைபுரிவாய்

1. அருளாகி பொருளாகி உயிர்களுக்குள் உயிராகி

வாழ்வோடு போராடும் நலிந்தவர்க்குத் திடமாகி - 2

இருளகற்றும் ஒளியாய் நீ வா

மனக்குறை போக்கும் மருந்தாக வா - 2

வற்றாத கார்மழையே காலத்தின் அறிகுறியே

என் வாழ்வின் கருப்பொருளே வா

2. நீர் மீது அசைவாடி வையகத்தைப் புதிதாக்கி

பாவமென்னும் நோய்நீக்கி புதுவாழ்வின் ஊற்றாகி - 2

புதுப்படைப்பாய் எனை மாற்ற வா - எங்கும்

இறையாட்சி நிறைவேற்ற வா - 2

தென்றலிலே பேசிடுவாய் திசை எட்டும் பரவிடுவாய்

எம் மூச்சாய் விளங்கிடவே வா


ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

உம்மை ஆராதனை செய்கின்றேன்

இறைவா ஆராதனை செய்கின்றேன் - 2

1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்

புது வலுவூட்டி என்னைத் தேற்றும்

என் கடமை என்னவென்று காட்டும்

அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்


கடவுள் ஆவியானவர்

ஆவியிலும் உண்மையிலும் அவரைத் தொழுவோம் - 2

ஆண்டவர்க்குப் புகழ் என்றும் பாடுவோம்

ஆர்ப்பரித்து ஆனந்தமாய் பாடுவோம் - 2

1. ஆவியான கடவுள் எங்கும் உள்ளார்

ஆலயத்தில் எழுவது நம்மில் வரவே - 2

ஆலயமாய் நம் உடலை மாற்றுவோம்

ஆண்டவரை எங்கும் சுமந்து செல்வோம் ஆண்டவர்க்கு...

2. உறுதி தரும் ஆவி நம்மில் மலரும்

தூய உள்ளம் நம்மில் உருவாகும் - 2

அருங்கொடைகள் யாவும் நம்மில் நிரம்பும்

ஆண்டவரின் சாட்சியாக வாழ்வோம் ஆண்டவர்க்கு...


தூய ஆவியே உந்தன் அருளை பொழிவாயே - 2

தூய ஆவியே உந்தன் ஆற்றல் தருவாயே - 2

1. அன்பின் சாட்சியாய் அமைதியின் தூதனாய் - 2

வாழ்ந்திட பணிபுரிந்திட - உம்

கனிகளால் எம்மை நிரப்புமய்யா - 2

உமது வல்லமையால் என்னை நிரப்பும் - 2

இறங்கி வாரும் இறங்கி வாரும் - 2

2. ஞானத்தில் வளரவும் துணிவில் திளைக்கவும் - 2

ஆற்றலே தூய ஆவியே - உம்

வரங்களால் எம்மை நிரப்புமய்யா - 2 - உமது....


தூய ஆவியே துணையாக வருவீர்

இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் - 2

1. மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர்

மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் - 2

2. மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர்

மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் - 2

3. தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர்

தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் - 2

4. பாவப் பிடிநின்று மீட்டிட வருவீh

பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் - 2

5. கல்மன இதயத்தைக் கரைத்திட வருவீர்

இதயத்தின் வெறுப்புகளை விலக்கிட வருவீர் - 2


தூய ஆவியே எழுந்தருள்வீர் வானினின் றுமது பேரொளியின்

அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர் எளியவர் தந்தாய் வந்தருள்வீர்

நன்கொடை வள்ளலே வந்தருள்வீர் இருதய ஒளியே வந்தருள்வீர் - 2

2. உன்னத ஆறுதல் ஆனவரே ஆன்ம இனிய விருந்தினரே

இனிய தன்மையை தருபவரே உழைப்பில் களைப்பை தீர்ப்பவரே

வெம்மை தணிக்கும் குளிர்நிழலே அழுகையில் ஆறுதல் ஆனவரே

3. உன்னத பேரின்ப ஒளியே உம்மை விசுவசிப்போருடைய

நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர் உமதருள் ஆற்றல் இல்லாமல்

உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை நல்லது அளவில் ஏதுமில்லை

4. மாசு கொண்டதைக் கழுவிடுவீர் வறட்சியுற்றதை நனைத்திடுவீர்

காயப்பட்டதை ஆற்றிடுவீர் வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்

குளிரானதைக் குளிர்போக்கிடுவீர் தவறிப்போனதை ஆண்டருள்வீர்

5. இறைவா உம்மை விசுவசித்து உம்மை நம்பும் அடியார்க்கு

கொடைகள் ஏழும் ஈந்திடுவீர் புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்

இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர் அழிவில்லா இன்பம் அருள்வீரே


தூய ஆவியே வருக மனத்துணிவும் ஒளியும் தருக

நேயத் தந்தையின் கொடையே எங்கள் நெஞ்சில் என்றும் உறைக

1. அன்பின் ஊற்றே வருக இறை அன்பை எம்முள் பொழிக - 2

துன்பம் யாவும் தாங்க உம் துணையை எமக்கு அருள்க

2. தேற்றும் சுடரே வருக தினம் தெளிவும் அறிவும் தருக - 2

போற்றும் மனமே தருக உம் புகழே நாவில் திகழ


தேவதூய ஆவியே தேவரீர் வாரும் என்னில்

பாவ தங்கள் மாறியார் மைந்தர் எங்கள் நேயனே

வாரும் தூய ஆவியே வல்லவன் ஆவியே - 2

2. தேவுலகில் நின்று நும் திவ்விய பிரகாசத்தில்

பேரொளி போல் காந்தியை தேவரீர் வரவிடும் வாரும்...

3. ஞானம் புத்தி விமரிசை அறிவு திடமும் பக்தியும்

தெய்வபயம் ஆகிய வரங்கள் எங்கள் தேவையே வாரும்...


தேற்றிடும் தூய ஆவியே ஆற்றலும் ஆக்கமும் உடையவரே

இறைவனின் சாட்சியாய் விளங்கிடவே

உன்னருள் கொடைகளை வழங்கிடுவீர்

வருக வருக தேற்றிடும் தூய ஆவியே - 2

1. மனத்தின் தீமைகளை மன்னிக்க எழுந்தருள்வீர் - 2

மனத்தின் கீறல்களை மாற்றிட எழுந்தருள்வீர் வருக...

2. கல்மன இதயத்தைக் கரைத்திட எழுந்தருள்வீர் - 2

உண்மையின் வழிநடக்க கொடைகளைப் பொழிந்திடுவீர் வருக...


வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா

இன்றே தேவை தேவா இப்போது தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை - 2

ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - 2

1. இறுதி நாளில் எல்லோர் மேலும் ஆவியை பொழிவேன் என்றீர் - 2

மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே - 2

2. பெந்தகோஸ்து நாளின் போது பெரிதான முழக்கத்தோடு - 2

வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் - 2


வாரீர் படைத்திடும் தூய ஆவி

மக்கள் தம் இதயங்களில் சேரீர்

நிரப்பும் அருட்பிர சாதத்தால்

நீவிர் வழங்கின இதயங்களில்

2. தேற்றரவாளன் என்பவரே

சீரிய இறைவனின் திருக்கொடையே

வற்றா ஊற்றே அக்கினியே

வளரன்பே ஞானப் பூசுதலே

3. தகைக் கொடை ஏழுக்குரியவரே

தந்தை வலக்கரத் திருவிரலே

சகப்பிதா வாக்கினைக் காப்பவரே

சர்வ சொல்வரம் நாவில் நிறைப்பவரே

4. ஐம்புலன் களுக்கொளி மூட்டிடுவீர்

அன்பினை இதயத்தின் பாய்ச்சிடுவீர்

தெம்பிலா உடற் கழிவில்லாத

சீர்மிகு வலிமையை ஏற்றிடுவீர்

5. துரிதமாய் எம்பகை வரைவிரட்டி

சுருக்கமாய் சமாதானம் அருள்வீரே

வரும்வினை களிலிருந் தகன்றிடவே

வழிநடத்தும் தலைமை வகித்தே

6. உம் வழியாகத் தந்தையையும்

ஓர் சுதன் அவரையும் அறிந்திடவே

தம்பிரான் இருவரின் திருஆவி

தாமென விசுவசித் திடஉதவும்

7. தந்தை இறைவனுக் கும்மகிமை

தாழ்விடத் துயிர்த்த சுதனுக்கும்

இந்தத் தேற்றர வாளனுக்கும்

என்றென்றும் மகிமை பெருகிடுக - ஆமென்


வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்

தேவா வல்லமை தர வேண்டும் - 2

யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்

அப்படியே இன்று நடக்கணுமே - 2

1. மறுபடியும் நான் பிறக்க வேண்டும்

மறுரூபமாக மாற வேண்டும் - 2 யோர்தான்...

2. வரங்கள் கனிகள் பொழியணுமே

வல்லமையோடு வாழணுமே - 2 யோர்தான்...

3. பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்

பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் - 2 யோர்தான்...

4. அற்புதம் அதிசயம் நடக்கணுமே

சாட்சிய வாழ்வு வாழணுமே - 2 யோர்தான்...

5. கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்

காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் - 2 யோர்தான்...


விண்ணகத் தந்தையின் விண்ணக கொடையாய்

விளங்கும் தூய ஆவியே எங்கள் எண்ணமும் செயலும்

உயர் அரும் கொடைகள் ஏழுடன் எம்முள் எழுந்தருள்வீர் - 2

1. அன்றொரு நாளில் அனற்பிழம்பாக

அப்போஸ்தலமே எழுந்தது போல - 2

இன்று எம் நெஞ்சில் வந்தருள்வீரே

இணையில்லா துணையைத் தந்தருள்வீர் - 2

2. பயமுடன் சோர்வும் பிணியும் நீங்க

பனிபோல் அருளை பரிவுடன் பொழிவீர் - 2

அயலவர்க்காக பணி பல ஆற்ற

ஆர்வமும் துணிவும் நல்கிடுவீர் - 2


பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும் - 2

மூவொரு தேவனே வாரும் அன்பின் மூலப்பரமே வாரும் - 2

தேவாதி தேவனே வாரும் எங்கள் திரித்துவ தெய்வமே வாரும் - 2

என்றும் எந்தன் நடுவினிலே வாரும் என்னிறை ஏந்தலே வாரும் - 2

2. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும் - 2

உன்னத தெய்வமே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும்

நித்திய ஜீவனே வாரும் நெஞ்சில் நீங்கிடா நேசனே வாரும் - 2

ஆதிபரமே வாரும் என்றும் ஆட்சி செலுத்திட வாரும் - 2

3. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும் - 2

உண்மையின் உருவே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும் - 2

சத்திய தெய்வமே வாரும் அன்பின் சரித்திர நாயகா வாரும் - 2

எல்லாம் வல்ல திரித்துவமே வாரும் எங்கும் நிறைந்தவா வாரும் - 2

4. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும் - 2

ஆக்கமே ஊக்கமே வாரும் நெஞ்சின் ஆவலே ஏவலே வாரும் - 2

ஈசனே நேசனே வாரும் என்றும் ஈடில்லா இறைவனே வாரும் - 2

எத்திசையும் வாழ் இறையருளே இன்று எங்கள் நடுவிலே வாரும் - 2 


தியான பாடல் வரிகள்


அடைக்கலப் பாறையான இயேசுவே

அரணும் கோட்டையும் ஆன இயேசுவே

நீரே எனது வலிமை நீரே எனது பெருமை

நீரே எனது வாழ்வு இயேசய்யா - 2

1. தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே - 2

பிறப்பிலும் வாழ்விலும் நீயே எனக்கு

ஆதாரம் நீயல்லவோ - எந்தன் - 2

2. போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் - 2

உயரமான இடத்திலே என்னை நிறுத்தி

மாண்புறச் செய்கின்றீரே - என்னை - 2


அன்பான தந்தாய் - 2 அடியேனின் ஆராதனை - 2

1. உமது பெயர் உலகெங்கும் வியப்பானது - 2

உம் மகிமை வான்மேலே ஒளிர்கின்றது - 2

சிறுவரின் வாயும் உம்மை புகழ்ந்தேற்றச் செய்தீர் - 2

சீறிடும் பகைவரை வீழ்த்தவே செய்தீரே ஆ...

2. விண்வெளியில் உம் படைப்பைக் காணும்போது - 2

மண்புழுவாம் மனிதன் நான் எம்மாத்திரம் - 2

வான்தூதரை விட தாழ்ந்தென்னைப் படைத்தீர் - 2

மாண்பாலே மனிதனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தீரே ஆ...


அன்பு நிறைந்த ஆயனாய் இறைவன் என்னை வழிநடத்த

என்றும் வாழ்வில் இன்பமே குறைகள் எனக்கு இல்லையே

1. பசும்புல் நிறைந்த பூமியில் பசியை ஆற்ற செய்கின்றார்

அமைதி நிறை நீர்நிலைகளுக்கு - 2 என்னை அழைத்துச் செல்கின்றார்

எனக்குப் புத்துயிர் அளிக்கின்றார்

2. எதிரிகள் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றார்

எனது தலையில் ஆவியின் - 2 நறுமணத் தைலம் பூசுகின்றார்

என் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குதம்மா


ஆண்டவர் என் ஆயன் எனக்கு குறையில்லை - 2

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கின்றார் ஆண்டவர் என் ஆயன்

அருவிக்குக் கூட்டிச் செல்கின்றார் ஆண்டவர் என் ஆயன்

எந்தன் களைப்பை ஆற்றுகின்றார் ஆண்டவர் என் ஆயன்

எனக்கு புத்துயிர் ஊட்டுகின்றார் ஆண்டவர் என் ஆயன்

2. நேரிய வழியில் எனை நடத்திச் செல்கின்றார் ஆண்டவர் என் ஆயன்

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் ஆண்டவர் என் ஆயன்

நடக்க நேர்ந்தாலும் பயமில்லை ஆண்டவர் என் ஆயன்

ஏனெனில் என்னோடு இருக்கின்றார் ஆண்டவர் என் ஆயன்


ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் - இனி

எனக்கு குறைகள் ஒன்றும் இல்லையே

தேவன் நிழலிலே நிதமும் நிம்மதி

தலைவன் பாதையில் செல்லும் என் வழி

ஆண்டவர் என் ஆயனாக இருப்பதால் ஆ....

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கிறார்

இனிய நீர்நிலைக்கு அழைத்துச் செல்கிறார் - 2

துணையாகி வழியாகி உடன் நடக்கிறார்

உயிராகி என்னைக் காக்கிறார் எல்லாம் எனக்கு ஆயன் அவரே

2. இருளின் பாதையில் நான் நடக்க நேரினும்

தீமைகள் எதற்குமே அச்சமில்லையே - 2

அவர் கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதல் - 2

அவரே என் அருகிருப்பதால் எல்லாம் எனக்கு ஆயன் அவரே


ஆண்டவர் எவ்வளவு நல்லவர் அவரை அணுகி வாருங்கள்

ஆண்டவர் எவ்வளவு இனியவர் அவரை சுவைத்துப் பாருங்கள்

1. பாவமெதுவும் செய்தவரல்லர் வாயில் வஞ்சகம் வந்ததில்லை

பழித்தவரை பழித்ததில்லை பாடுகளில் மிரட்டவில்லை

2. சிலுவைதனில் தம்முடலால் இயேசு நம் பாவங்களை சுமந்தாரே

அவருடைய காயங்களால் நாமெல்லாம் சுகமானோம்

3. ஆடுகள் போல் வழிதவறி அலைந்து திரிந்தோம் நாமெல்லாம் மீட்டுக் கொண்டார்

4. பாவிகள் நம்மை நேசிக்கின்றார் - நம்

பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கின்றார்

தந்தையாக அணைக்கின்றார் புதுவாழ்வு தருகின்றார்


ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

மாண்புயர் வான்மண்டலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

1. எக்காளத் தொனி முழங்க அவரை....

வீணையுடன் யாழ் இசைத்து அவரை....

2. முரசொலித்து நடனம் செய்து அவரை....

நரம்பிசைத்து குழல் ஊதி அவரை....

3. நாத மிகு தாளத்துடன் அவரை....

கைத்தாள ஒளி முழங்க அவரை....

4. உயிருள்ள தெல்லாமே அவரை....

ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரை....


ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாது

மதில்போல் சூழ்ந்திருப்பார் துன்பங்கள் நெருங்காது

கலங்காதே மனமே கலங்காதே மனமே

அன்பான தேவன் அரவணைப்பார் கலங்காதே மனமே

1. உன்னைக் காப்பவர் அயர்வதில்லை உன் கால் இடற விடுவதில்லை

உன்னைக் கைவிட்டுப் பிரிவதில்லை

உன்னோடு உயிராய் இணைந்திருப்பார் - 2

பகலின் வெயிலோ இரவின் நிலவோ தீமை செய்யாது அஞ்சாதே

புயலும் மழையும் புவியைச் சூழ்ந்தால் தீமை செய்யாது திகையாதே

கண்ணான தேவன் எந்நாளும் காப்பார்

கவலையோ கலக்கமோ இனி வேண்டாம்

2. வானத்துப் பறவையைக் காக்கின்றவர் வறுமையில் உன்னை விடுவாரோ

வயல்வெளி மலரை மகிழ்விப்பவர் நோயினில் விடுதலை தருவாரே - 2

உலகம் ஆயிரம் பேசினாலும் சோர்ந்து வீழ்ந்து போகாதே

தீங்கு செய்வோர் சூழ்ந்து கொண்டால் வாடி வதங்கிப் போகாதே

இஸ்ராயேல் இறைவன் மாறாத தேவன்

இன்றும் என்றும் உடனிருப்பார்


ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - 2

1. ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

அவர் புகழை நானும் பாடிடுவேன் - 2

என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் - 2

எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக - 2

2. ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி

ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் - 2

ஆண்டவர் எவ்வளவோ இனியவரே - 2 என்று

சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்

ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று


ஆண்டவரைப் பாடுவது நன்று உன்னதரைப் புகழ்வது நன்று

உமக்கு நன்றி உரைப்பது நன்று

உம்மை நினைந்து மகிழ்வது நன்று - 2

1. காலையிலே உம் பேரன்பையும் இரவினிலே வாக்குப் பிறழாமையும்

வீணையோடும் இசைக் கருவியோடும் எடுத்துரைப்பது நன்று

வியத்தகு உம் செயலால் என்னை மகிழ்விக்கின்றீர் - 2

வலிமை மிகும் உம் செயல்களை மகிழ்ந்து பாடிடுவேன்

2. தீமை செய்வோர் அனைவரையும் உம் கரத்தால் சிதறடித்தீர்

புது எண்ணெய் என் மீது நிதம் பொழிந்து வலிமை தந்தீர்

ஆண்டவர் இல்லத்திலே நடப்படும் மரங்களைப் போல்

செழித்திடுவேன் கனி தருவேன் பசுமையாய் என்றும் இருப்பேன்


ஆண்டவரைப் புகழ்வது நல்லது

அவர் பெயரைப் பாடுவது நல்லது நல்லது

ஆண்டவரைப் புகழ்வது நல்லது

1. ஆண்டவரைப் புகழ்வது நல்லது

உன்னதமானவரே உம் திருப்பெயருக்குப் புகழ்பாடுவது நல்லது

காலையில் உம் இரக்கத்தையும்

இரவெல்லாம் உம் பிரமாணிக்கத்தையும் எடுத்துரைப்பது நல்லது

2. பத்து நரம்பு வீணையிலும் சுரமண்டலத்திலும்

யாழிலும் பண் இசைத்து உம்மைப் புகழ்வது நல்லது

ஏனெனில் ஆண்டவரே உம் செயல்களால் எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறீர்

உம் திருக்கரப் படைப்புக்களைக் குறித்து நான் அக்களிக்கிறேன்


ஆண்டவரே இரக்கமாயிரும்

ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம் இரக்கமாயிரும் - 2

1. இறைவா உம் இரக்கத்திற்கேற்ப என் மீது இரக்கம் வையும்

உம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என் குற்றங்களைப் போக்கிவிடும்

நான் செய்த குற்றத்தை என்னிடமிருந்து

முற்றிலும் கழுவிப் போக்கிவிடும்

என் பாவத்தைக் கழுவி என்னைத் தூய்மைப்படுத்தும் - 2

2. தூயதோர் உள்ளத்தை இறைவா நீர் என்னைகத்தே உருவாக்கும்

உறுதி தரும் ஆவியை என்னுள் மலரச் செய்யும்

உம் திருமுன் இருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்

உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும்


ஆண்டவரே உம்மையே புகழ்ந்து பாடுவேன்

என் தேவனே உம்மையே புகழ்ந்து பாடுவேன்

மாசற்ற வழியில் நான் நடக்க

என்னுள்ளம் வாருமே - 2 - என் ஆண்டவரே

1. வாழ்நாட்கள் புகையெனவே மறைகின்றதே

என்னிதயம் புல்லைப் போல தீய்ந்து போகுதே - 2

என் உணவையும் நான் உண்ண மறந்தேன் - 2

என் மூச்சின் பேரொளியாக என் எலும்பின் சதையுமாக

என்னோடு நீயும் கலப்பாய் இனி - 2

2. பாலைவனப் பறவை போல அலைந்து திரிந்தேன்

பாழ்நிலத்தின் மானைப் போல கதறித் தவிக்கிறேன் - 2

நீர் எழுந்தருளி இரக்கம் காட்டுமே - 2

என்னிதய துடிப்பாக என் வழியில் ஒளியுமாக

என்னோடு நீயும் கலப்பாய் - இனி - 2 என் தேவனே....


என் இனிய இயேசுவே நீர் என்னில் இருப்பதனால்

நான் அஞ்சாமல் நடந்திடுவேன்

ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே

என்னைக் காக்கும் இனிய மேய்ப்பனே - 2

உன் அன்பைப் பாடுகிறேன் - 2

நிறைகள் நான் கண்டேன் குறைகள் இனியில்லையே

வசந்தம் நான் கண்டேன் வாழ்வில் பயமில்லையே

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்தீர்

வாழ்வில் வசந்தம் மலர்ந்திடக் கண்டேன்

அமைதியின் நீர்நிலை புத்துயிர் அளித்திட

என்னை அழைத்தீர் நீதியின் வழியினிலே

சாவின் இருளினிலே பள்ளத்தாக்கின் நடுவினிலே - 2

நான் என்றும் அஞ்சாமல் நடந்திடுவேன் - 2

நீர் என்னில் இருப்பதனால்

2. எதிரிகள் காண விருந்தொன்றைச் செய்தீர்

வளங்கள் வாழ்வில் நிறைந்திடக் கண்டேன்

தலையில் நறுமணத் தைலம் பூசினீர்

என் பாத்திரம் நிரம்பி வழியக் கண்டேன்

உந்தன் பேரன்பிலே அருளும் நலத்தினிலே - 2 நான் என்றும்...


ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே

உமக்கே நான் அன்பு செய்கின்றேன் - 2

அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்

அவரே என் கேடயம் வலிமையும் துணையும் - 2

1. என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க

என் அன்பு தேவன் அடைக்கலமானார் - 2

நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தார்

நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தார்

2. வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே

வலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே - 2

எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க

எந்நாளும் என் மீட்பர் புகழ்தனைப் பெறுக


ஆண்டவரே என் புகலிடம் ஆண்டவரே என் அடைக்கலம்

உன்னதமானவரே நீரே என் பாதுகாப்பு

1. என்னையே சார்ந்திருந்தால் உன்னை விடுவிப்பேன்

துன்ப வேளையிலே நான் உன்னை தப்புவிப்பேன்

2. தீமை உன்னை அணுகாது துன்பம் உன்னை நெருங்காது

செல்லும் இடமெல்லாம் தூதர்கள் காத்திடுவார்


ஆண்டவரே என் ஆண்டவரே நீர் என்னைக் கைவிடமாட்டீர்

துன்ப துயரங்கள் எனைத் தொடர்ந்தாலும்

துணைகள் இன்றியே நான் துவண்டாலும் நீர் என்னை கைவிடமாட்டீர்

ஆண்டவரே என் ஆண்டவரே நீர் என்னை கைவிடமாட்டீர் - 2

1. இன்னலுற்ற வேளையிலும் இதயம் உடைந்த பொழுதினில்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

இடையன் இல்லா ஆட்டைபோல் இலக்கின்றி அலைந்தாலும்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

இரக்கம் மறந்தும்மை நான் உதறிச் சென்றாலும்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

இறவா இறைவன் உன் இதயநிழலில் வாழுவேன்

இதமாய் உன் கரத்தை இறுகப் பற்றிக் கொள்ளுவேன் - 2

ஆண்டவரே ஆண்டவரே ஆண்டவரே என் ஆண்டவரே

2. தோல்வி தொடர்ந்த வேளையில் சோர்ந்து நொந்த பொழுதினில்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

உலகம் பழிக்கும் நேரத்தில் உறவும் இகழும் காலத்தில்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

உயிரை தந்த உம்மை நான் மறந்து போனாலும்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

குறையா உன் ஆற்றல் கண்டு வியந்து பாடுவேன்

நிறைவாய் உன் அன்பில் நிலைத்து என்றும் மகிழுவேன் - 2


ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும்

உம்மிடம் அடைக்கலம் நான் புகுந்தேன்

என் இதயம் அகமகிழும் களிகூரும்

என்றென்றும் கவலையின்றி இளைப்பாறும் - 2

1. நீரே என் ஆண்டவர் என்றுரைத்தேன்

உம்மையன்றி எனக்கு வேறு நன்மை இல்லை - 2

ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து - 2

அவர் தாமே எனது மீட்பின் கிண்ணம் - 2

2. மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்கு பங்கு கிடைத்தது

என் உரிமைப்பேறு எனக்கு நேர்த்தியாயிற்று - 2

அறிவுரைத்த ஆண்டவரை வாழ்த்திடுவேன் - 2

இரவில் கூட என்னிதயம் பாடிடுமே - 2


ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்

அமர்வதை எழுவதைத் தெரிந்திருந்தீர்

வாழ்க்கை முழுவதும் அறிந்தவர் நீர்

என் நினைவுகள் அனைத்தும் கடந்தவர் நீர் - 2

1. நான் நடப்பதும் படுப்பதும் செல்லும் வழிகளும் நீர்

அறிந்திருந்தென்னை சூழ்ந்திருந்தீர் - 2

வானகம் பறந்தாலும் நீர் இருப்பீர்

பாதாளம் பதுங்கினும் உம் கரம் இருக்கும் - 2

கடல்களின் கடையெல்லை விடியலின் அருள்வேளை இறைவா....

2. நான் இருளின் சிறகினில் மறைந்திட விரும்பினும் நீர்

இருளில் ஓளியாய்த் திகழ்கின்றீர் - 2

வாழ்வின் பயணத்தில் ஒளி தீபமே

இனிதே தொடர்கின்றீர் நீர் என்றுமே - 2 - கடல்களின்....


ஆண்டவரே எனது ஒளி ஆண்டவரே என் மீட்பு

யாருக்கு நான் அஞ்ச வேண்டும் யாருக்கு நான் நடுங்க வேண்டும்

1. ஆண்டவரிடம் நான் வேண்டுவதும் விரும்புவதும் ஒன்றே

ஆண்டவருடைய இல்லத்தில் நான்

வாழ்நாள் முழுவதும் குடியிருக்க வேண்டும்

2. ஆண்டவர் கரத்தைப் பிடித்துக் கொண்டேன்

அவரது அன்பில் மூழ்கிவிட்டேன்

பகைவரை மன்னித்து வாழ்ந்திடுவேன்

பரமனின் அரசில் அமர்ந்து மகிழ்ந்திடுவேன்


ஆண்டவரே தலைமுறை தலைமுறையாக

நீரே எங்களுக்குப் புகலிடம் - 2

1. மலைகள் தோன்று முன்பே பூமியும் உலகுமுண்டாகு முன்பே

ஊழி ஊழிக்காலமாக - 2 இறைவா நீர் இருக்கின்றீர்

2. வைகறை கனவினைப் போல வாடிட வளர்ந்திடும் பூண்டினைப் போல்

மூச்சுபோல் முடிந்து விட்டோம் - 2 இறைவா எங்களைக் காத்திடுவீர்

132. ஆண்டவரின் திருச்சந்திதியில் ஆனந்தமுடனே பாடுவீரே - 2

1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர் மங்கள கீதங்கள் முழங்கிடுவீர்

அவரே தேவன் என்றறிவீர் அவரே நம்மைப் படைத்தாரே

2. நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம் நாமே அவரது பெருமக்களாம்

துதிப் புகழோடு நுழைந்திடுவோம் தூய அவரது வாசல்களில்

3. தேவனின் திருப்பெயர் தோத்தரிப்பீர் தேவனின் நன்மைகள் சாற்றிடுவீர்

தேவனின் கிருபை உண்மையுமே தலைமுறை தலைமுறை நீடிக்குமே


ஆண்டவரை துதித்தே ஏத்துங்கள்

1. மண்ணில் இடம் பெறும் இறை ஆலயத்தில்

விண்ணில் நிலைகொள்ளும் இறைவனின் இல்லத்தில்

2. கண்டு வியக்கின்ற இறைவனின் செயல்களுக்காய்

எண்ணம் கடந்திட்ட இறைவனின் பெருமைக்காய்

3. எக்காளத் தொனியோடு

மத்தள நாதமும் முழங்கிடவே

4. யாழோடும் தீங்குழலோடும்

மெல்லிசைக் கருவிகள் மீட்டியே


ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்ஏனெனில் அவர் நல்லவர்

என்றென்றும் உள்ளது அவர் இரக்கம் - 2

1. என்றென்றும் உள்ளது அவரது இரக்கம் என்று

இஸ்ராயேல் இனத்தார் சாற்றுவார்களாக

என்றென்றும் உள்ளது அவரது இரக்கம் என்று

ஆண்டவர்க்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக

2. ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்

எவன் எனக்கு என்ன செய்ய முடியும்

எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்

என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுவார்

3. துன்ப வேளையில் நான் ஆண்டவரைக் கூவியழைத்தேன்

அவர் என் மன்றாட்டைக் கேட்டு எனக்கு விடுதலையளித்தார்

ஆண்டவர் என் வலிமையும் கேடயமுமாய் உள்ளார்

அவர் எனக்கு மீட்பரானார்

4. ஆண்டவரது வலக்கரம் என்னை நிலை நிறுத்தியது

ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது

இறந்தொழியேன் உயிர் வாழ்வேன்

ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன்

5. வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே மூலைக்கல் ஆயிற்று

ஆண்டவர் செயலிது நம் கண்ணுக்கு வியப்பாகும்

ஆண்டவர் குறித்த நாள் இதுவே

அக்களிப்போம் இன்று அகமகிழ்வோம்


ஆடும் திரைகடலே உன்னைஆடிட சொல்வது யார்

ஓடும் ஆறுகளே நீங்கள் ஓதும் பெயரது யார்

ஆழமும் அகலமுமே இல்லா ஆண்டவன் பெயராமே

அவர்தம் ஆற்றலும் பெரிதாமே

1. சுழலும் காற்றுகளே உங்கள் பேசும் மொழி யாதோ

ஆக்கவும் அழிக்கவுமே வல்ல ஆவியின் செயல்தாமே

அதுவும் ஆண்டவர் இயல்பாமே

2. ஆடும் பறவைகளே உங்கள் புகழின் நாயகர் யார்

கானக் குயிலினமே உங்கள் கானத் தலைவர் யார்

அன்பிலே இணைந்திடவே அழைக்கும் ஆண்டவன் குரலாவோம்

அவர்தம் அமைதியின் தூதராவோம்

3. இடிமின்னல் ஓசைகளே உங்கள் முழக்கத்தின் பொருள் என்ன

அதிர்ந்திடும் பூமிகளே நீங்கள் அறிவிக்கும் செய்தி என்ன

புதியதோர் வானகமும் புதிய பூமியும் வந்திடுமே

இறைவன் ஆட்சியும் மலர்ந்திடுமே


ஆவலுடன் நான் ஆண்டவர்க்காக காத்திருந்தேன்

அவரும் என்னை கனிவாக கண்ணோக்கினார் - 2

1. என் குரலுக்கு அவர் செவிகொடுத்தார்

எழுந்திட எனக்கவர் கைகொடுத்தார்

பாறையில் கால்களை ஊன்றச் செய்தார்

பாதையில் துணை வரும் காவலானார்

2. நாளும் இறைபுகழ் இசைத்திடவே நாவில் வைத்தார் புதுப்பாடல்

கண்டு கலங்கிய அனைவருமே கடவுளை நம்பி மகிழ்வுற்றார்

3. உம்மைத் தேடும் அனைவரையும் அன்பில் வேரூன்றி நிற்கச் செய்யும்

விடுதலை வழங்கும் துணை நீரே விரைவாய் இறைவா வருவீரே


இறைவா உம் இல்லத்தில் தங்கி வாழ்வோர் யார்

இறைவா உம் திருமலையில் குடியிருப்போர் யார் - 2

1. மாசற்ற வாழ்க்கை நடத்துபவன்

நீதி நியாயத்தில் நிலை நிற்பவன்

இதயத்தில் நேரியவை தியானிப்பவன் - 2

2. நாவால் எப்பழிச் சொல்லும் கூறாதவன்

அயலானுக்குத் தீமை செய்யாதவன்

பிறரைப் பழித்து உரைக்காதவன் - 2

3. தீயோரை இழிவாகக் கருதுபவன்

ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன்

தனக்குத் துன்பம் வந்தாலும் தந்த வாக்குறுதியை மீறாதவன் - 2


இறைவா என் இறைவா நீரே என் ஒளியும் மீட்பும்

யாரைக் கண்டும் பயப்படேன் - இனி - 2

1. தீயவர் என்னை எதிர்க்கையில் அவரே இடறிவிழுவார்

எனக்கெதிராய் என்ன நேர்ந்தாலும் என் உள்ளம் அஞ்சாது - 2

நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் - 2

யாரைக் கண்டும் பயப்படேன் - இனி - 2

2. துன்பம் வரும் நாளில் என்னைக் கூடாரத்தில் மறைப்பார்

எதிரிகள் நடுவில் என்னை பாதுகாப்பாய் வாழச் செய்வார் - 2

நான் வாழ்வோரின் நாட்டில் நலன்களைக் காண்பேன் - 2

யாரை கண்டும் பயப்படேன் - இனி - 2


இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார்

அவரைக் கொண்டு நான் வாழ

எவரைக் கண்டும் பயமில்லை - 2

1. வாழ்வில் இறைவன் துணையானார் வாழும் எனக்கு உயிரானார்

தீயோர் என்னை வதைத்தாலும் தீமை அணுக விடமாட்டார் - 2

2. தீயோர் படைபோல் சூழ்ந்தாலும் தீராப் பகையைக் கொண்டாலும்

தேவன் அவரைத் திடமாக தேடும் எனக்குக் குறையேது - 2

3. ஒன்றே இறைவா வேண்டுகிறேன் ஒன்றே அடியேன் தேடுகிறேன்

தேவன் உமது திருமுன்னே நாளும் வாழ அருள்வாயே - 2


இறைவனே என்னைக் காக்கின்றார்

இனியொரு குறையும் எனக்கு இல்லை

நிறைவழி நோக்கி நடத்திடுவார்

நிம்மதியோடு நான் வாழ்வேன் - 2

1. பகலின் வெம்மையில் பயமில்லை

இருளின் நிலவிலும் தீமையில்லை - 2

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்

உன் கால் இடற விடுவதில்லை

உன்னதர் என்றும் அயர்வதில்லை - 2

2. இன்றும் என்றும் காப்பவராம்

பயணத்தில் துணையும் அவர் கரமாம் - 2

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்

தீமையைக் கண்டு நான் அஞ்சேன்

நலமாய் நிதமும் நான் வாழ்வேன் - 2

3. உன்னதம் அமைதியில் மலரட்டுமே

உன் எழில் நீதியில் ஒளிரட்டுமே - 2

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்

நன்மைகள் எங்கும் நிலவட்டுமே

இறைவனின் நிழலில் வாழட்டுமே - 2


இயேசு எனக்கு அடைக்கலமும் பலமுமாயிருக்கிறார் - 2

1. கடவுள் நம் அடைக்கலமும் பலமுமாயிக்கிறார்

நெருக்கடி நேரத்தில் நமக்கு உறுதுணையென நன்கு காட்டியுள்ளார்

ஆகவே வையகமே புரண்டாலும் நாம் அசைய மாட்டோம்

மலைகள் கடல் நடுவிலே விழுந்தாலும் அச்சமில்லை

2. கடல் அலைகள் கொந்தளித்து எழுந்தாலும்

அவற்றில் கொந்தளிப்பால் மலைகள் தடுமாறினாலும்

வான்படைகளின் ஆண்டவர் நம்மோடிருக்கிறார்

யாக்கோபின் இறைவன் நமக்கு அரணாய் உள்ளார்


இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா

உம்மை நான் நம்பியுள்ளேன் - 2

1. தம் சிறகுகளால் உன்னை மூடிக் காப்பார்

அவருடைய இறக்கைகளுக்கடியில் நீ அடைக்கலம் புகுவாய்

தவறாத அவருடைய வார்த்தை உனக்கு

கேடயமும் கவசமும் போல் இருக்கும்

2. தீமை உன்னை அணுகாது துன்பம் உறைவிடத்தை நெருங்காது

ஏனெனில் நீ செல்லும் இடங்களில் எல்லாம்

உன்னைக் குறித்துக் கட்டளையிட்டார்

3. அவன் என்னையே சார்ந்திருப்பதால் அவனை விடுவிப்பேன்

என் பெயரை அறிந்ததால் அவனைக் காப்பாற்றுவேன்

என்னை நோக்கிக் கூப்பிடுவான் அவன் ஜெபத்தைக் கேட்பேன்

துன்ப வேளையில் அவனோடு இருப்பேன்

அவனைத் தப்புவித்துப் பெருமைப்படுத்துவேன் - 2


இஸ்ராயேலின் ஆண்டவரே உமது கரம் என்மீது

இருப்பதனால் தீமைகள் யாவும் அணுகாது காத்தருளும் ஆண்டவரே

1. பொன்னாலும் வெள்ளிநகையாலும் அன்று யாபேசை அலங்கரித்தீர்

தேனோடு மாவும் எண்ணெயும் கலந்து உணவாய் தினம் கொடுத்தீர் - 2

வேற்றினத்தார் நடுவினிலே அவரை உயர்த்தி வைத்தீர் - 2

2. மாந்தரின் நடுவில் சிறப்புடன் வாழ்ந்திட என்றும் துணைபுரிந்தீர்

யாபேசை போல் நானும் வாழ்ந்திட தினமும் தயைபுரிவீர்

வேதனை சோதனை அனைத்தையும் வென்று

வாழ்ந்திட அருள் புரிவீர் - 2


உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம்

உம்மை ஏத்துவோம் இறைவா - 2

1. இறைவனின் சந்நிதியில் இறைவனின் இல்லத்தில் - 2

இறைவனின் செயல்களுக்காய் இறைவனின் மாட்சிமைக்காய் - 2

2. எக்காளத் தொனியுடனே நம் இறைவனைப் போற்றுவோம்

மத்தளத்துடனே யாம் நம் இறைவனை ஏத்துவோம் - 2

3. யாழோடும் வீணையோடும் புல்லாங்குழலோடும் - 2

நம் இறைவனைப் போற்றுவோம்


உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா

உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் - 2

அன்பு தேவன் நீ அருகிருக்கையில்

ஆறுதலை அடைந்திடுவேனே உந்தன் அன்பையும் அறிந்திடுவேனே

1. அன்பு செய்த உள்ளங்கள் அகன்று போகலாம்

அழுகையும் கண்ணீரும் சொந்தமாகலாம்

நம்பிச் சென்ற மனிதர்கள் நகைத்து ஒதுக்கலாம்

தனிமையும் வெறுமையுமே என்றும் தொடரலாம்

இறைவா நீ என்னைக் கைவிடாய்

துணையாய் நீ என்னுள் உறைந்திடாய்

ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன்

2. உண்மை நெறியில் செல்வதால் உலகம் வெறுக்கலாம்

உரிமை காக்க உழைப்பதனால் உயிரை சிதைக்கலாம்

பொதுநலனை பேணுவதால் பெயரை இழக்கலாம்

வேதனையும் நெருக்கடியும் வாழ்வில் நிலைக்கலாம்

இறைவா நீ என்னைக் கைவிடாய்

துணையாய் நீ என்னுள் உறைந்திடாய் ஆறுதலாய்...


உலகெல்லாம் புது உயிர் பெறவே

உமது தூய ஆவியை அனுப்புவீர் - 2

1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாய்

ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர் - 2

ஆண்டவரே உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை - உம்

படைப்புகளால் உயர்ந்துள்ளது வையகம்

2. இறைவன் தம் மாட்சிமை விளங்குக

படைப்புகளை குறித்து அவர் மகிழுக மகிழுக - 2

ஆண்டவரே என் ஏழ்மைப் புகழுரை இனியதாய் ஆகுக

இறைவனில் நாம் நிறைவாக மகிழுக


உமது அருளையும் நீதியையும்

புகழ்ந்து பாடுவேன் ஆண்டவரே

உமக்கு கீதம் இசைத்திடுவேன் - 2

1. மாசற்ற வழியினிலே கருத்தாய் நடந்திடுவேன் - 2

தூய இதயத்துடன் உம் இல்லத்தில் வாழ்ந்திடுவேன் - 2

என்றும் நன்றி இதய நன்றி

எங்கள் இறைவா உமக்கு நன்றி - 2

2. நம்பிக்கைக்குரியவரை என்னோடு வாழச் செய்வேன் - 2

நேரிய மனத்தோர்க்குப் பணிவிடை புரிந்திடுவேன் - 2

என்றும் நன்றி இதய நன்றி

எங்கள் இறைவா உமக்கு நன்றி - 2


உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை

அரவணைத்திடு இறைவா - 2

அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்

தணலிலும் மனம் குளிரும் - 2 - உந்தன்

கண்களில் இமைபோல் எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா - 2

1. பாவங்கள் சுமையாய் இருந்தும் - உன்

மன்னிப்பில் பனிபோல் கரையும் - 2

கருணையின் மழையில் நனைந்தால் - உன்

ஆலயம் புனிதம் அருளும் - 2

2. வலையினில் விழுகின்ற பறவை - அன்று

இழந்தது அழகிய சிறகை - 2

வானதன் அருள்மழை பொழிந்தே - நீ

வளர்த்திடு அன்பதன் உறவை - 2


உன் தேவன் உன்னோடு இருக்கின்றார் அஞ்சாதே கலங்காதே

ஊரெல்லாம் உன்னை ஒதுக்கினாலும் உன் தேவன் விலகமாட்டார்

உன் துக்கங்கள் எல்லாம் மாறும் சந்தோஷம் வாழ்வில் கூடும்

துயரங்கள் எல்லாம் மறையும் நெஞ்சினில் நிம்மதி நிறையும்

1. பாலைநிலத்தில் மன்னாவைப் பொழிந்து

ஆண்டவர் உனக்கு நன்மை செய்வார்

அவரின் சமூகம் முன்பாக செல்லும் தீமைகள் உன்னை அணுகாது

இமயம் போல் சூழ்ந்திடும் துயரங்களை

பனிபோல் மறைந்திட செய்திடுவார்

உலகம் முடியும் வரை உயிருள்ள தேவன் உடனிருப்பார்

2. துணையாக வந்து தோள் மீது சுமந்து

தினந்தோறும் உன்னை பாதுகாப்பார்

காரிருள் சூழ்ந்து தடுமாறும் நேரம் கரிசனையோடு ஒளியாவார்

தனிமையில் தவிக்கும் போதினிலே நம்பிக்கையூட்டி நலம் தருவார்'

வாழ்விக்கும் நல்லாயனாய் வல்லமையோடு நடத்திடுவார்


உன் திருயாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு

என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்

இணைத்திட வேண்டும் இசையரசே

1. யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த

ஏழையின் இதயம் துயில் கலையும் - 2

யாழிசை கேட்டு தனை மறந்து - 2 - உந்தன்

ஏழிசையோடு இணைந்திடுமே - 2

2. விண்ணக சோலையில் மலரெனவே - திகழ்

எண்ணில்லா தாரகை உனக்குண்டு - 2

உன்னருள் பேரொளி நடுவினிலே - 2 - நான்

என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் - 2


உன்னத தேவனவர் - நம்மை

படைத்தவர் ஆள்பவர் ஆண்டவர் அவரே

1. காலையும் மாலையும் கடவுளின் மேன்மை பாடுதல் நல்லதுவே

கனிவுடன் பாடலில் வீணையும் யாழும் மீட்டிட பாடுதல் நல்லதுவே

2. ஆண்டவர் மாபெரும் செயல்கள் அனைத்தும் அறிவிலி அறிவதில்லை

பாவிகள் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும்

பாவங்கள் அவர்களை விடுவதில்லை

3. மகிழ்வுறும் செய்தியை என் மனம் குளிர இறைவன் எனக்களித்தார்

மாமரம் கேதுரு போலவே வளர்ந்து

நீதியில் வாழ்ந்திடச் செய்கின்றார்


என் ஆதாரம் நீயாகியே உன் பேரன்பில் எனைத் தேற்றுமே

கற்பாறை போல் துணையாகியே என் கரம் பற்றி வழிநடத்துமே

உனை நம்பியே உயிர் வாழ்கிறேன்

இறை உன்னில் சரணாகிறேன் - 2

1. துயரங்கள் சூழத் தளர்ந்திடும் வேளை

வருத்தங்கள் நீக்கி வலிமையைத் தந்தாய்

உடைந்திட்ட கலமாய் வதைபட்ட போதும்

உன் முக ஒளியால் ஆறுதல் ஈந்தாய்

எப்போதும் பேரச்சம் சூழ்ந்தாலுமே

என்றென்றும் நம்பிக்கை உன் மீதிலே

போற்றுவேன் நான் போற்றுவேன் போற்றியே தினம் வாழுவேன்

என் நினைவெல்லாம் அதுதானய்யா - 2

2. மலையெனப் பகைவர் எழுந்து வந்தாலும்

மறைப்பினும் வைத்துக் காத்திடுகின்றீர்

நேரிய மனத்தோர் நன்மைகள் அடைந்திட

காவலாய் இருப்பீர் கருணையில் அணைப்பீர்

இறுமாப்பில் நடப்போர்க்கு பதில் கொடுக்கின்றீர்

இறைவா உம் அடியோர்க்கு பலம் தருகின்றீர் போற்றுவேன்...


என் ஆற்றலின் ஆண்டவரை நான் எந்நாளும் போற்றிடுவேன் - நல்

அருள்மொழி கேட்க காலமெல்லாம் அவர் காலடி அமர்ந்திடுவேன் - 2

1. ஆண்டவர் எனது அரணாவார் அவரே எனக்கென்றும் துணையாவார் - 2

வலிமையும் வாழ்வும் வழங்கும் நல்தேவன்

என்னுடன் இருக்கின்றார் என்றும் இருக்கின்றார்

2. ஆண்டவர் எனது மீட்பராவார் அவரே எனக்கென்றும் ஒளியாவார் - 2

வாழ்வாய் வழியாய் விளங்கும் நல்தேவன்

சீர்வழி நடத்திடுவார் அவர் வழி தொடர்ந்திடுவேன்


என் ஆயன் என் நேச ஆண்டவர் இனி எனக்கெந்த குறையுமில்லை

மனம் களைத்திடும் போதவர் அருகிருந்து

என்னுள் புதுஉயிர் ஊட்டுகின்றார் - 2

1. அன்புள்ள அவரின் இல்லத்திலே

ஆயுள் முழுதும் வாழ்ந்திருப்பேன் - 2

2. தீமைகள் எதற்கும் அச்சம் இல்லை

ஆண்டவர் என்னோ டிருப்பதனால் - 2

3. நேரிய வழியில் என்னை நடத்தி - தம்

திருப்பெயரை மகிமை செய்தார் - 2

4. அருளும் கருணையும் என்னைத் தொடரும்

ஆறுதலாய் அவர் துணை இருக்கும் - 2


என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது

என் வாழ்விலே குறைகள் என்பது ஏது - 2

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே

எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2

என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம்

ஆகா என்றென்றும் இன்பமல்லவா - 2

2. என்னோடவர் நடந்திடும் போதினிலே

எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே - 2

எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி

ஆகா எங்கெங்கும் ஒளியல்லவா - 2

3. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்

எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால் - 2

என்னுள்ளமே ஆகா என் தேவனை

ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே - 2


என் விளக்கு சுடர் விட்டு எரியச் செய்கின்றீர்

என் வாழ்வை அகல்விளக்காய் இறைவா மாற்றினீர்

1. புனிதம் மிகுந்த இறைவன் பெயரை நாளும் புகழ்ந்து ஏத்துவேன்

புகழ்ச்சிப் பலியைப் பாக்களாலே நானும் இசைத்துப் பாடுவேன்

அரணும் மீட்பும் எனக்கு நீரே சரணமே உன் திருப்பாதமே

2. எனக்கு உமது துணையிருக்க எதிரிப் படையைத் தாக்குவேன்

எனக்கு உமது வலுவிருக்க எதிரிக் கோட்டையைக் தாண்டிடுவேன்

எனக்குக் கேடயம் நீரே இருக்க எதிரிக் கணையைத் தடுத்திடுவேன்

தாங்கும் வலிமை தாண்டும் வலிமை தடுக்கும் வலிமை நீர் தந்த வளமை

3. எனக்கு உமது அருள் கொடுத்து மானைப் போல ஓடச் செய்தீர்

எனக்கு உமது சக்தி அளிக்க வெண்கல வில்லினை வளைத்திடுவேன்

எனக்கு உமது அன்பைப் பொழிந்து

என் வாழ்வை விளக்காய் ஏற்றி வைத்தீர்

ஓடும் வலிமை ஒடுக்கும் வலிமை ஒளிரும் வலிமை நீர் தந்த வளமை


என்னுயிரே ஆண்டவரைப் போற்றிப் பாடிடு ஆ...

என்னுள்ளமே அவர் பெயரை ஏற்றிப் பாடிடு ஆ...

என் உயிருள்ள வரையில் நான் பாடுவேன்

எந்தக் காலமும் நேரமும் உன் புகழ் பாடியே என்றென்றும் மகிழ்வேன்

1. ஆண்டவர் நல்லவர் ஆ.... சினங் கொள்ளாதிருப்பவர் ஆ....

நம் பாவங்களுக்கேற்ப நடத்தமாட்டார்

நம் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார் - 2

தமக்கஞ்சுவோர்க்கு காட்டும் அன்பு உயர்ந்ததுவே

பதி மண்ணினின்று விண்ணுலகம் உயர்ந்ததுவே

அவர் தம் சொல் கேட்டு நடப்போர் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்

காற்றே கடலே நதியே அலையே இறைவன் புகழைப் பாடு

மலையே மலரே முகிலே மழையே தேவன் புகழைப் பாடு - 2

2. பொறுமையும் அன்பும் ஆ.... கொண்டவர் ஆண்டவர் ஆ....

அவர் நீதி நம் மீது இருக்கின்றதே

அவர் வாக்கு நம் வாழ்வில் நிலைக்கின்றதே - 2

அவர் ஒடுக்கப்பட்டோருக்கு வாழ்வளிப்பார்

தம் செயல்களை அனைவரும் காண வைத்தார்

அவர் தம் சொல் கேட்டு நடப்போர் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்


கண்ணின் மணிபோல கடவுள் காக்கையில் எனக்குக் குறையேது - 2

அரணும் கோட்டையும் ஆனவரே - 2

அன்பின் தேவனாய் இருப்பவரே

1. இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்

காலடிக்கும் அது விளக்காகும் - 2

வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே - 2

உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே - 2

2. எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்

எதுவும் என்னை அணுகாது - 2

செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க தூதரை அனுப்பிடுவார் - 2

கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் - 2


கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல்

இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை - 2

ஏங்கியே நாடி வருகின்றது

1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது - 2

இறைவா உன்னை என்று நான் காண்பேன் - 2

கண்ணீரே எந்தன் உணவானது

2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே - 2

அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க - 2

என் உள்ளம் பாகாய் வடிகின்றது


கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும்

உள்ளத்தாகம் உந்தன் மீது

கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும் - மான்கள்...

1. காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2

உயிரைத் தந்திடும் கருவினிலே

அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2

குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும்

கதையின் நாயகன் நான் இன்று

2. பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2

காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2

சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால்

அழகிய மணிமாலை நானாவேன்


கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே

அனுதின மேய்ச்சலுடன் அன்புடன் நடத்துகின்றார் - 2

1. அவர் என் ஆத்துமாவை ஞானத்தில் சேர்த்து

நீதியின் பாதைகளில் அவர் என்னை நடத்துகின்றார் - 2

2. மரணத்தின் பள்ளத்திலும் பயத்திலும் நடந்தாலும்

தேவன் நம்மோடிருப்பார் நன்மைகள் புரிந்திடுவார் - 2

3. எண்ணெயால் என் தலையை அன்புடன் அபிஷேகம் செய்து

திருச்சபை முன்பாக திருநிலைப்படுத்துகின்றார் - 2


இயேசு சரணம் இயேசு சரணம்.... - 5

காலையில் உன் வதனம் வந்தேன் என் அடைக்கலமே

தரிசனம் அருள்வாயே இயேசய்யா - 2

உலகில் வாழ் உயிர்க்கெல்லாம் ஊற்றாகி உருவாகி

தினம் தினம் எனைக் காக்கும் இயேசய்யா - 2

1. வேற்றிடம் வாழும் ஆயிரம் நாட்களினும்

உன் கோயில் முற்றம் தங்கும் ஒரு நாளே மேலானது இயேசய்யா

இயேசய்யா..... இயேசய்யா..... - 2

2. உள்ளமும் உடலும் உம்மைப் போற்றும்

மகிழ்வுடன் ஏங்கும் திருநாளே சுவையானது இயேசய்யா

இயேசய்யா..... இயேசய்யா...... - 2


சீயோனில் இறைவா உமக்குப் பாடல் இசைப்பது தகுதியே

அங்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் தகுதியே என்றும் தகுதியே

1. மண்ணுலகைத் தேடி வந்தீர் அதற்கு நிறைய மழை பொழிந்தீர்

ஆறுகள் நிரம்பச் செய்தீர் தானியங்கள் விளையச் செய்தீர் - 2

அடைசால்கள் எல்லாம் தண்ணீர் ஓடச் செய்தீர்

மண்ணைப் பரம்பிடித்து மழையில் மிருதுவாக்கினீர்

2. முளைத்து வரும் விதையை ஆசீர்வதித்துக் காக்கின்றீர்

ஆண்டு முழுவதையும் கருணையாலே நிரப்புகின்றீர் - 2

நீர் செல்லும் இடத்தில் செழுமை சிந்துதே

பாலை மேய்ச்சல் நிலம் கொழுமை கொண்டு விளங்குதே


தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு - 2

1. ஆண்டவரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்

எந்நாளும் நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்

உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும்

எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்

2. என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்

கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்

ஏனெனில் நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்

ஏனெனில் என் இறைவா நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கின்றேன்

3. ஆண்டவரே என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை

பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்

தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு

உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கின்றேன்

4. இறைவா நானும் வீணை கொண்டு உமது

சொல்லுறுதியைக் கொண்டாடுவேன்

இஸ்ராயேலின் பரிசுத்தரே உமக்கு யாழ் கொண்டு புகழ்பாடுவேன்

நான் உமக்குப் புகழ்பாடுகையில் என் நா அக்களிக்கும்

நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்


தூபம் போல் என் ஜெபம் உம்மை நோக்கி எழும்பாதோ

வானோக்கி எழும்பும் என் கரங்கள் பலியாகாதோ - 2

1. ஆண்டவரே உம்மை நோக்கிக் கூவுகின்றேன் அறியீரோ

எனக்குதவ விரைவீரே என் குரலைக் கேட்பீரே

2. நாவினுக்கு ஒரு காவல் ஏற்படுத்திக் கொடுப்பீரே

உதடுகளை விழிப்போடு காத்திடவே செய்வீரே

3. தீமையின்மேல் எனதுள்ளம் சேராமல் தடுப்பீரே

கொடுஞ் செயல்கள் அணுகாமல் நீர் என்னைக் காப்பீரே

4. ஏனென்றால் உம்மை நோக்கி இறைவா நான் வாழ்கின்றேன்

என் கண்கள் உம்மை நோக்க நான் அழிய விடுவீரோ


பாடுங்கள் ஆண்டவர்க்கு புதியதோர் பாடல் பாடுங்கள்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4

1. ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

மாண்புயர் வான் மண்டலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

2. எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

வீணையுடன் யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

3. முரசொலித்து நடனம் செய்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

நரம்பிசைத்து குழலூதி அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

4. நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

கைத்தாள ஒலி முழங்க அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

5. அவருடைய செயல்களுக்காய் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

அவருடைய மாட்சிமைக்காய் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்


பாருள்ளோர் எல்லோருமே பாடுவீர் பரமனை - 2

1. உவகை நிறைந்த உள்ளத்தினால்

உன்னத இறைவன் தாள் பணிவீர்

திவ்வியமாம் அவர் சந்நிதியில்

தீங்குரல் எழுப்பிப் பாடிடுவீர்

2. ஆண்டவர் அவரே நம் இறைவன்

அவரே நம்மைப் படைத்தாரே

நாம் அவர் மந்தையின் ஆடுகளாம்

நாம் என்றும் அவரின் பிள்ளைகளாம்

3. என்றென்றும் நல்லவர் ஆண்டவரே

என்றென்றும் வாழ்வது அவரன்பே

எந்நாளும் வாழ்ந்திட நல்லிரக்கம்

எப்போதும் கொண்டது அவர் வார்த்தை

4. தந்தைக்கும் மகனுக்கு ஆவிக்குமே

தணியாத புகழும் மகிமையுமே

எந்நாளும் பெருக வாழ்ந்திடுவீர்

இசையோடு பரவிப் போற்றிடுவீர்


நம்பினேன் ஆண்டவரை நம்பினேன்

அவர் எந்தன் கூக்குரலைக் கேட்டருளினார்

1. அழிவுதரும் குழியினின்று என்னைக் காத்திட்டார்

பாவத்தின் பிடியினின்று என்னை மீட்டிட்டார்

பாறையில் கால்களை ஊன்றச் செய்திட்டார்

பாசத்தோடு ஆண்டவர் என்னை நடத்திட்டார்

2. புதியதொரு புகழ்பாடல் நான் பாடுவேன்

புனித நல்ல இறைவனிலே நம்பிக்கை வைப்பேன்

வியப்புமிக்க செயல்கள் பல எனக்கு அருளினார்

விருப்பமுடன் அவர் புகழை நான் பாடுவேன்

3. உமதிரக்கம் உமதருள் என்றென்றுமே

உம்மைத் தேடுவோர் அருகினிலே அமைந்துள்ளதே

இதோ நான் வருகின்றேன் உமதண்டை - உம்

திருவுளம் நிறைவேற்றி மகிழ்ந்திருப்பேன்


நம்பினேன் ஆண்டவரே உம்மையே

சீயோன் மலை என்று நம்பினேன்

1. எருசலேம் நகருக்கு மலைகள் உண்டு

எதிர்வரும் பகைவர்கள் பலியாவார்

நல்லாரின் நாட்டில் பொல்லாங்கு மாறவும்

என்பார்ந்த ஆண்டவர் அரணாவார் - 2

2. நேரிய இதயம் நேர்கொண்ட பண்பை

சேர்த்திடும் போது சோர்வில்லை நமக்கு

கோணல் வழிநடப்போர் நிலைகுலைந்து போவார்

கானல் நீராய் கண்மறைந்து போவார்


இயேசுவே இயேசுவே நீ எந்தன் பாறை

என் அரணான இயேசுவே இயேசுவே இயேசுவே

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே

நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே

அணையாத தீபமே இயேசுவே இயேசுவே- 2

1. ஒளி கொண்டுதேடினால் இருள் நில்லுமோ

உன் துணையில் வாழ்கையில் துயர் வெல்லுமோ - 2

தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம்

ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது

போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே - 2

2. இரவுக்கும் எல்லை ஒர் விடியல் அன்றோ

முடிவாக வெல்வதும் நன்மையன்றோ - 2

தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் - 2

என்றென்றும் உன் ஆசி உண்டு - வரும்

நல்வாழ்வைக் கண்முன்னே கொண்டு இயேசுவே இயேசுவே - 2


நெஞ்சே இறைவனை நீ வாழ்த்து - 2

நெஞ்சம் நிறை படைப்புக்கள்

இறைவனின் தஞ்சம் கொண்டு வாழும் பெருமை எண்ணியே

1. அலைகடல் வான்முகில் மலையழகே

ஆண்டவன் புகழைப் பாடுங்களே

அலைந்திடும் மனதை நிலையாய் நிறுத்தி

மன்னவன் பெருமை கூறுங்களே

2. ஒளியைப் போர்வையாய் கூடாரமாய் - வான்

வெளியை விரித்து விளங்குகின்றீர் - 2

மேங்கள் நீர் வரும் தேரோ - ஓடும்

வெள்ளங்கள் உம் உறைவிடமோ - 2

உமது ஆவியை அனுப்பினால் உலகம் புத்துயிர் பெறுமே - 2


நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு

தஞ்சம் என்றும் அவரே என்று வாழ்த்திப் பாடிடு

வல்லவராம் இறைவன் வாழ்வில் நன்மை பல புரிந்தார்

எல்லையில்லாத இன்பப் பெருக்கில் இன்னிசைப் பாடிடு

1. நிலவழகும் மலையழகும் இறைவன் பெயரைப் பாடட்டும்

கடலழகும் கதிரழகும் கடவுள் அன்பைக் கூறட்டும்

கடலையே பிரித்துக் கடந்திட உதவினார்

கலகம் புரிந்தோரை கலங்கிடச் செய்தார்

நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு

2. அன்பழகும் அறிவழகும் அவர் தரும் ஆசியே

ஊற்றழகும் உயிரழகும் இறைவனின் மாட்சியே

வாழ்வெனும் பாதையில் வீழும் வேளையில்

தாங்கிடும் தாயாய் தனைத் தந்தார்

நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு


நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக வாழ்த்துவாயாக

1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக - என்

அகத்துள்ளதெல்லாம் அவரது திருப்பெயரை வாழ்த்துவதாக

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக

அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே

2. அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கின்றார்

உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்

உன் உயிரை அழிவினின்று மீட்கின்றார்

அருளையும்இரக்கத்தையும் உனக்கு முடியாகச் சூட்டுகின்றார்


நெஞ்சார ஆண்டவரை போற்றிப் புகழ்ந்திடுவேன்

நீதிமான்கள் அவையினிலே அவர் புகழ் பாடிடுவேன்

1. ஆண்டவர் செயல்கள் மகத்தானவை

இன்பம் அவற்றில் கொள்வோர் உய்த்துணர்வார்

மாண்புமிக்க அவர் தம் செயல் யாவும்

என்றும் அவர் தம் நீதி நிலைக்கும்

2. வியத்தகு செயல்கள் நினைவினிலே

என்றும் விளங்கிட அவரே செய்தார்

தயவுடன் அன்பும் உள்ளவரே - அவர்

தமக்கஞ்சும் மனிதர்க்கு உணவளித்தார்


நெஞ்சமே நீ விழித்தெழு - 2 வீணையே நீ விழித்தெழு - 2

யாழே நீயும் விழித்தெழு ஆண்டவரைப் பாடுவோம்

1. ஆண்டவரில் எனதான்மா அடைக்கலமாகும்

அவரது சிறகின் நிழலினிலே என்றுமே வாழும் - எனவே

2. வானமட்டும் உயர்ந்தது தான் அவரது நல்லிரக்கம்

மேகமட்டும் உயர்ந்தது தான் அவரது சொல்லுறுதி - எனவே


நெஞ்சே விழித்தெழு வீணையே விழித்தெழு

நீதியின் இறைவனை நாதத்தின் தலைவனை

புகழ்ந்து நான் இசைத்திட பொழுதுமே விடிந்திட

1. வான்வரை உயர்ந்தது வல்லமை நிறைந்தது இறைவனின் பேரிரக்கம்

மேகங்கள் வரையில் மேன்மையாய் நிற்கும் மேலவன் சொல்வன்மை

விண்ணகம் அவர் அரியணையே மண்ணகம் அவர் கால்மனையே - 2

2. விடுதலை தேடிடும் அடிமைகள் எவர்க்கும் வலக்கரம் நீட்டிடுவார்

எதிரிகள் வலையில் விழுந்து விடாமல் என்றுமே காத்திடுவார்

மனிதர் உதவி வீழ்ந்தாலே கடவுள் துணையில் வெல்வேனே - 2


மகிழ்ச்சியினால் பாடுவாய் ஏனெனில் ஆண்டவர் உன் நடுவிலே

மேன்மையோடு விளங்குகின்றார் - 2

1. ஆண்டவர் தாமே என் மீட்பரானார்

அவர் மேல் நம்பிக்கை வைக்கின்றேன்

ஆண்டவரே என் வலிமையானார் அவரையே நான் இன்று பாடிடுவேன்

ஏனெனில் ஆண்டவர் எனக்கு இன்றும் மீட்பராய் விளங்குகின்றார்

2. ஆண்டவரை என்றும் போற்றிடுங்கள்

அவர் பெயரை என்றும் புகழ்ந்திடுங்கள்

ஆண்டவர் அவர் என சாற்றிடுங்கள் அவருக்கு நன்றி கூறிடுங்கள்

ஏனெனில் வியத்தகு செயல்களையும் செய்துன்னை மீட்டவராம்


என் இறைவா என்னரசே

உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்

மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல்

இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே - 2 கலைமான்கள்

1. அடைக்கலான் குருவிக்கு வீடும் கிடைத்தது

தகைவிலான் குஞ்சுக்கு கூடும் கிடைத்தது - 2

ஆனால் இறைவா என்னரசே - 2

எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்தது

எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்துள்ளது

2. வறண்ட பாலைக்கு நீரும் கிடைக்கும்

ஏங்கும் நெஞ்சுக்கு வார்த்தையும் கிடைக்கும் - 2

ஆனால் இறைவா என்னுயிரே - 2

நீயின்றி எனக்கு வாழ்வெங்கு கிடைக்கும்

நீயின்றி எனக்கு வாழ்வு எங்கு கிடைக்கும்


மாநிலத்தோரே நீங்கள் அனைவரும்

மாண்புமிகு இறைவன் முன் ஆர்ப்பரியுங்கள் - அவர்

மாண்புகழை எங்கணுமே விளங்கச் செய்யுங்கள்

1. உம் செயல்கள் எத்தனையோ வியப்புக்குரியவை

உம் வல்லமை தனைக் கண்டு பகைவர் பணிகின்றார்

உம்மை வணங்கி மாநிலமே புகழ்ந்து பாடட்டும்

உமது பெயரின் புகழ் தனையே எங்கும் கூறட்டும்

2. மக்களெல்லாம் அவர் புகழை வாழ்த்திக் கூறுங்கள்

மகத்தான அவர் புகழை எடுத்துச் சொல்லுங்கள்

தக்க விதமே நம்மை வாழ வைக்கும் இறைவனவர்

தடுமாறவே விட்டதில்லை நமது கால்களை


மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தை எடுத்து

ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்

1. மிக மிகத் துன்புறுகிறேன் என்று சொன்ன போதும் கூட

நான் ஆண்டவரை நம்பினேன்

எந்த மனிதனும் நம்பிக்கைக் குரியவனல்ல

என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்

2. ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்

நான் என்ன கைம்மாறு செய்வேன்

மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையிலே எடுத்து

ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்


மூவுலகணிகளின் ஆண்டவரே

உமது உறைவிடம் எத்துணை இனிமையானது - 2

1. இறைவா உமது இல்லம் நாடி எனது ஆன்மா ஏங்குகின்றது - 2

இறைவனின் புகழை என் உள்ளமும் உடலும்

என்றுமே பாடி மகிழ்கின்றது

2. பறவை வாழக் கூடு உண்டு இறைவன் பீடம் எனக்கு உண்டு - 2

இறைவனின் வீட்டில் இன்னிசை பாடி

என்றுமே வாழ்வோர் பேறுபெற்றோர்

3. ஓராயிரம் நாள் வேறிடத்தில் வாழ்வதை நானும் விரும்பவில்லை - 2

ஒரு நாள் உமது ஆலயத்தில்

வாழ்வது அனைத்திலும் உயர்ந்ததன்றோ


யாக்கோபின் இறைவனைப் புகழ்ந்திடுங்கள்

நம் மீட்பின் கருவி அவர்

யாழினால் அவரது புகழ் பாடுங்கள் - எங்கும்

அவரின் பெயர் விளங்க - 2

1. நீதியும் நேர்மையும் என்றும் அவரது விருப்பமாமே

வானமும் வையமும் அவர் அருளால் நிறைந்துள்ளது

பூவுலகெல்லாமே குடிமாந்தர் அனைவருமே இறைவனின் கைவண்ணமே - 2

2. இயேசுவின் திருப்பெயர் என்றும் மகிழ்வு தருகின்றது

இறைவனின் இரக்கம் எங்கும் அரணாய் இருக்கின்றது.

அவரில் நம்பிக்கை கொள்வோர் யாவருமே வெற்றி பெறுகின்றனர் - 2


லாலாலலா லாலாலலா லாலால லாலாலா

நல்ல ஆயன் ஆண்டவர் நாளும் என்னை ஆள்பவர்

ஆடுகளை வாழ வைக்க உயிர் கொடுக்கும் ஆயராம்

தவறும் ஆட்டைத் தேடுவார் தோளில் சுமந்து பாடுவார் ஃ ஆடுவார் - 2

ஏது குறை எந்தன் வாழ்விலே ஓ ஏது பயம் எந்தன் நெஞ்சிலே - 2

பெயர் சொல்லி அழைக்கின்றவர் - என்னை

1. கடல் கடந்து செல்லும் போதும் தீ நடுவே நடக்கும் போதும்

கரம் பிடித்து வழிநடத்தும் ஆயன் நல்லவர்

இருள் நிறைந்த பாதையிலே இடறி விழும் பொழுதினிலே

திடமளித்து தோள் கொடுக்கும் ஆயன் வல்லவர்

எந்தன் மீட்பும் ஒளியுமாகி காக்கும் கோட்டை அரணுமாகி

மந்தைக்காக உயிர் கொடுப்பவர் - 2

நீர்நிலை அருகிலே நித்தமும் நடத்துவார்

நீதியின் வழியிலே அமைதியில் நடத்துவார்

கோலும் உமது நெடுங்கழியும் காலந்தோறும் காத்திடும்

தீமை கண்டு எதற்கும் அஞ்சிடேன்

ஆண்டவரே என் ஆயர் ஏது குறை எந்தன் வாழ்விலே - 2

2. பகல் வெளிச்சம் தாக்கிடாமல் இரவின் நிலா தீண்டிடாமல்

காத்துக் கொள்ளும் அன்பின் ஆயன் என்றும் வல்லவர்

நண்பர் கூட்டம் வெறுக்கும் போதும்

பகைவர் கூட்டம் சிரிக்கும் போதும்

அன்பர் இயேசு என்னை என்றும் நடத்திச் செல்லுவார்

என் தலையில் எண்ணைய் பூசி வாழ்வின் கிண்ணம் நிரம்பச் செய்து

எனது பெயரை நிலைநிறுத்துவார் - 2

காரிருள் சூழலாம் கதவுகள் மூடலாம்

பழிகளால் வாடலாம் விழிகளும் மூடலாம்

அந்த நேரம் வந்து என்னை சொந்தமாக்கி கொண்டிடும்

இந்த அன்பு என்றும் போதுமே- 2

ஆண்டவரின் இல்லத்திலே ஆயுளெல்லாம் வாழ்ந்திருப்பேன் - 2


வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள் - 2

நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்

மீட்பரைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்

அல்லேலூயா ஆமென் ஆகா அல்லேலூயா ஆமென் - 2

1. நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்

புகழ்ப்பாடலுடன் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம் - 2

ஏனெனில் ஆண்டவரே - 2 மாண்புமிகு இறைவன்

தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர் - 2 அல்லேலூயா....

2. தாள்பணிந்து அவரைத் தொழுதிடுவோம்

முழந்தாளிடுவோம் நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் - 2

அவரே நம் கடவுள் - 2 நாமோ அவர் மக்கள்

ஆடுகள் நம்மைக் காத்திடும் இறைவனவர் - 2 அல்லேலூயா...


வான் படைகளின் ஆண்டவரே

உமது இல்லம் எத்துணை அருமையாய் உள்ளது

1. என் ஆன்மா ஆண்டவருடைய ஆலய முற்றங்களை

விரும்பித் தேடி சோர்ந்து போகின்றது

என் உள்ளமும் உடலும்

உயிருள்ள இறைவனை நினைத்து களிகூர்கின்றன

2. அடைக்கலான் குருவிக்கு வீடும் தகைவிலான் குருவிக்குத்

தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கிடைத்தது

சேனைகளின் ஆண்டவரே என் அரசே என் இறைவா

உம் பீடங்களுள்ள இடத்திலே கிடைத்தது

3. உமது ஆலய முற்றங்களில் ஒரு நாள் இருப்பது

வேறிடத்தில்ஆயிரம் நாள் வாழ்வதைவிட உண்மையிலேயே மேலானது

பாவிகளின் கூடாரங்களில் தங்குவதை விட

என் இறைவனது இல்லத்தின் வாயிலில் நிற்பதே மேலானது


ஜீவனை விட உம் கிருபை மேலானது

என் ஜீவனை விட உம் கிருபை மேலானது

எங்கள் உயிரான இயேசுவே

பாலைவனம் சோலையாகும் பஞ்சமெல்லாம் நீங்கிப் போகும்

பரமன் இயேசு பார்வையினாலே

நெஞ்சமெல்லாம் இனிமையாகும்

நினைத்ததெல்லாம் நிறைவேறும் s

நம் இயேசு வார்த்தையினாலே - 2

நம் தேவன் நல்லவரே நம் தேவன் வல்லவரே

1. ஆண்டவரை மனதில் வைத்து

அனைத்தையும் நாம் செய்யும் போது

பாதைகளை அவர் செம்மையாக்குவார் - 2

அவரை நோக்கிப் பார்த்தவர்கள் அவமானம் அடைவதில்லை - 2

ஆயிரமாய் ஆசீர் பெறுவார் ஆனந்தம் அடைந்திடுவார்

2. திராட்சைச் செடியின் கிளை போல

இயேசுவோடு இணைந்திருப்போம்

பலன் தருவோம் நலன்கள் பெறுவோம் - 2

என்ன குறை இருந்தாலும் அவரோடு நாம் இருந்தால் - 2

எல்லாமே நிறைவாகுமே நம் வாழ்வெல்லாம் மகிழ்வாகுமே


Contact Form

Name

Email *

Message *