Patta Transfer Services


Patta Transfer Services


Not Involving Sub Division - Patta Transfer

Involving Sub Division - Rural Patta Transfer

Involving Sub Division - Natham Patta Transfer

Clubbing - Patta Transfer

Premutation of Layouts

Other Services

Check Status of Patta Transfer

Download Order Copy of Patta Transfer Application

Get Acknowledgement for Patta Transfer Application


Patta Transfer Services
Patta Transfer Services

தந்தை அல்லது தாய் இறந்துவிட்டால் வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி?


1) தந்தை (அ) தாய் இறந்து விட்டால் அவர்களில்  பெயரில் உள்ள பட்டவை வாரிசு சான்று வைத்து வாரிசுகள் பெயரில் கூட்டு பட்டாவாக மாற்றி கொள்ளலாம்.

2) தந்தை (அ) தாய் இறந்து விட்டால் அவர்களில் பெயரில் உள்ள பட்டாவை வைத்து பாகபிரிவினை செய்வதன் மூலம் வாரிசுகள் தனி தனியாக அவர் அவர்களின் பெயரில் பட்டா மாற்றி கொள்ளலாம்.


1) தந்தை (அ) தாய் இறந்து விட்டால் அவர்களில்  பெயரில் உள்ள பட்டவை வாரிசு சான்று வைத்து வாரிசுகள் பெயரில் கூட்டு பட்டாவாக மாற்றி கொள்ளலாம்.உதாரணமாக : தந்தை இறந்து விட்டார் என்று எடுத்து கொள்வோம். இப்போது அவர் பெயரில் உள்ள சொத்துகளை பட்டா மாற்றம் செய்ய, என்ன என்ன ஆவணம் தேவை? எங்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும்? யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்?தேவையான ஆவணம் : தந்தை பெயரில் உள்ள பட்டா , தந்தையின் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று. தந்தையின் தாய் இறந்துவிட்டால் அவரின் இறப்பு சான்று.வாரிசு சான்று : தந்தை இறந்ததால் – வாரிசு சான்றில்தந்தை இறந்ததாக காட்டி வாரிசுகளின் பெயர்களை சேர்த்து  வாங்கவேண்டும். 

எங்கு பட்டா மற்றும் செய்ய வேண்டும் : உங்கள் அருகில் உள்ள அரசு இ சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பம் செய்யுங்கள். செலவு ரூபாய் 60.

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் : Non-Involving Subdivision கீழ் விண்ணப்பிக்க வேண்டும். ஆதாவது கிராம நிர்வாக அலுவலருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

புதிய பட்டா : வாரிசு சான்றில் உள்ள நபர்களின் பெயரிகளில் வழங்கப்படும்.

2) தந்தை (அ) தாய் இறந்து விட்டால் அவர்களில்  பெயரில் உள்ள பட்டாவை வைத்து பாகபிரிவினை செய்வதன் மூலம் வாரிசுகள் தனி தனியாக அவர் அவர்களின் பெயரில் பட்டா மாற்றி கொள்ளலாம்.

உதாரணமாக : தந்தை இறந்து விட்டார் என்று எடுத்து கொள்வோம். இப்போது அவர் பெயரில் உள்ள சொத்துகளை வாரிசுகள் பெயரில் தனி தனியாக பட்டா மாற்றம் செய்ய, என்ன என்ன ஆவணம் தேவை? எங்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும்? யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்?

தேவையான ஆவணம் : பாகபிரிவினை பத்திரம் , தந்தை பெயரில் உள்ள பட்டா , தந்தையின் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று. தந்தையின் தாய் இறந்துவிட்டால் அவரின் இறப்பு சான்று.

வாரிசு சான்று : தந்தை இறந்ததால் – வாரிசு சான்றில் தந்தை இறந்ததாக காட்டி வாரிசுகளின் பெயர்களை சேர்த்து வாங்கவேண்டும்.


பகபிரிவு பத்திரத்தின் போது எந்தந்த வாரிசுக்கு எந்தந்த நிலம், எவ்வளவு நிலம், அதன் எல்லை விவரங்கள் அதைத்தும் அட்டவைனை செய்திருக்க வேண்டும்.

எங்கு பட்டா மற்றும் செய்ய வேண்டும் : உங்கள் அருகில் உள்ள அரசு இ சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பம் செய்யுங்கள். செலவு ரூபாய் 60.

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் : உங்களுக்கு ஒரு புலன் எண்ணில் உள்ள மொத்த நிலம் சென்றோடைகிறது எனில் அதை கிராம நிர்வாக அலுவலருக்கும், ஒரு புலன் எண்ணில் பாதி அல்லது குறிப்பிட அளவு மட்டும் வந்தால் அதை நில அளைவயருக்கு விண்ணபிக்க வேண்டும்.

பாகபிரிவினை பத்திரத்தை கொண்டு வாரிசுகள் தனி தனியாக பட்டா அவர் அவர் பெயரில் விண்ணபித்து  அவர்கனில் பெயரில் பட்டா வங்கிக்கொள்ளலாம். 

தந்தை மற்றும் தாய் இருவருமே இருந்து இறந்தால் எப்படி பட்டா மாற்றுவது?

தந்தை மற்றும் தாய் இருவரும் இறந்து விட்டால் அவர்களில் இறப்பு சான்று , வாரிசு சான்று , மற்றும் தந்தை அல்லது தாய் பெயரில் உள்ள பட்டா வைத்து  வாரிசுகள் தங்கள் பெயரில் நேரடியாய்க பட்டா மாற்றி  கொள்ளலாம் அல்லது பாகபிரிவினை பத்திரமாக பதிவு செய்து பத்திரத்தை வைத்து தனி தனியாக பட்டா மாற்றி கொள்ளலாம்.

 நீங்கள் இ சேவையில் விண்ணப்பித்த பிறகு, உங்களுக்கு ஒப்புகைசீட்டு அளிக்கப்படும்.
நீங்கள் அந்த ஒப்புகைசீட்டு, இறப்பு சான்று, வாரிசு சான்று, பட்டா, வில்லங்கச்சான்று மற்றும் மனு ஒன்று எழுதி சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகரிடம் அளிக்கவேண்டும். 
உங்கள் மனு மற்றும் நகல்களை கிராம நிர்வாக அலுவலருக்கு நேரில் சென்று அளிப்பதை விட பதிவு அஞ்சல் மற்றும் AD கார்டுடன்  அனுப்புவது சிறந்தது .
அவர் அந்த மனுவை பரிசிலனை செய்து தங்களுக்கு புதிய பட்டா வழங்குவர்.
மனு அளிக்கும் போது குறிப்பில் அரசாணை(நிலை) எண் : 73 நாள் : 11.06.2018-டின் படி என்று குறிப்பிடவும். இந்த அரசாணை மனுவை எப்படி கையாளுவது என்பதை குறிப்பிடுகிறது.
மனு அளிக்கப்பட்டதர்க்கான ஒப்புகைசீட்டை கேட்டு வாங்கிவைத்து கொள்ளவும். அப்போதுதான் மனு அளிக்கப்பட்டதாக நீதிமன்றம் ஏற்கும்.
மனு எழுதி அதை கிராம நிர்வாக அலுவலரிடம் அளிபதர்க்கு முன் ஒரு நகல் எடுத்து வைத்து கொள்ளவும்.
இந்த இரண்டு முறையில் எது சிறந்தது
முதல் முறையை பயன்படுத்தி பட்டா மாற்றம் செய்வதால் குறைந்த செலவு ஆகும் . கூட்டு பட்டாவாக வழங்கப்படும், அதனால் நீங்கள் ஏதேனும் நிலத்தின் மேல் கடனோ அல்லது விவசாயகடனோ வாங்கினால் அது உங்களுக்கு அலைச்சலையும் ஏற்படுத்தும். அதுமட்டும் இன்றி வாரிசுகள் பெயரில் பட்டா மாறியபிறகு நிலத்தை விற்க நினைத்தால் வாரிசுகள் அனைவரும் கையொப்பம் இடவேண்டும். 
இரண்டாவது முறையை பயன்படுத்தி பட்டா மாற்றம் செய்வதால் சிறிய தொகை செலவு செய்யவேண்டி இருக்கும். அதுவும் பத்திரம் வாங்குவதற்கும் , பத்திரத்தை பதிவு செய்வதற்கும் ஆகும் செலவுதான்.நான் உங்களுக்கு இந்த இரண்டாவுது முறையை தான் சிபாரிசு செய்வேன் . ஏன் என்றால் வாரிசுகள் பெயரில் தனி தனி பத்திரம் வழங்கப்படும். அவர்கள் இப்போது கடன் பெறவிரும்புகிரார்களோ அப்போது அவர்கள் எளிமையாக பெற்று கொள்ளலாம். அவர் அவர் நிலத்தை எலிமையாக மற்றவர்களுக்கு விற்கலாம், . தனி தனி பட்டாவாக பெற்று கொள்ளலாம் . 


பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் நகல் எப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது?

சொத்து சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் நகல் எப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது என்பது பற்றி பார்ப்போம்.

வாசிப்புப் பட்டியலில் சேர்க்கவும்

சொத்து சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் நகல் எப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது என்பது பற்றி பார்ப்போம். 

இதற்கு பதிவு துறையின் இணைய பக்கத்திற்கு செல்லவேண்டும். https://tnreginet.gov.in/portal/index.jsp

பதிவு துறையில் ஏற்கனவே பயனர் பதிவு செய்திருக்க வேண்டும்.

பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் சரியாக உள்ளீடு செய்த பின் உள் நுழை பொத்தானை கிளிக் செய்து உள்நுழையவும்.

உள்நுழைந்த பின்னர் "முகப்பு பக்கம் >மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க" இந்த முறைப்படி கிளிக் செய்யவும்.

 தோன்றும் திரையில் உங்களுக்கு தேவையான ஆவண வகைப்பாடு, ஆவண எண், சார்பதிவாளர் அலுவலகம், ஆண்டு, புத்தக எண் இவைகளை உள்ளீடு செய்து காண்பிக்கப்படும் குறியீட்யினை உள்ளீடு செய்யவும்.

இதற்கு முன் "தரவு கிடைக்கும் காலத்திற்கு இங்கே சொடுக்கவும்" என்ற லிங்கை கிளிக் செய்து தரவுகள் கெடுக்கும் வருடத்தை உறுதி படுத்திக்கொள்ளவும்.

அதன் பின்னர் தேடுக பொத்தானை சொடுக்கவும். 

இப்போது ஆவண விவரங்கள் தோன்றும் அதனை சரிபார்த்தபின்னர் "இணையவழி விண்ணப்பிக்க" பொத்தானை சொடுக்கவும். 

இப்போது உங்களுடைய பெயர் மற்றும் கைபேசி எண் உள்ளீடு செய்து சேமிக்க மற்றும் அடுத்த பக்கம் செல்க பொத்தானை சொடுக்கவும். 

இப்போது சரி பொத்தானை சொடுக்கவும்.

அடுத்த பக்கத்தில் விண்ணப்ப எண் உருவாக்கப்பட்டு அதற்க்கான கட்டண விவரங்கள் காமிக்கப்படும். அதனை சரி பார்த்தபின் செலுத்துக பொத்தானை சொடுக்கவும். 

அடுத்த பக்கத்தில் உங்களது முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளீடு செய்து சமர்ப்பிக்க பொத்தானை சொடுக்கவும். 

தற்போது செலுத்துக பொத்தானை சொடுக்கவும்.

இப்போது தோன்றும் திரையில் பணம் செலுத்துவதற்க்கான option தேர்வு செய்து சமர்ப்பிக்க பொத்தானை சொடுக்கவும். 

இப்போது தோன்றும் திரையில் பணம் ஆம்  பொத்தானை சொடுக்கவும்.

இப்போது தோன்றும் திரையில் செக் டிக் செய்த பின் சமர்ப்பிக்க பொத்தானை சொடுக்கவும்.

இப்போது தோன்றும் திரையில் பணம் செலுத்துவதற்காண தேர்வினை தேர்வு செய்து பணம் செலுத்தவும். 

பணம் செலுத்துவதற்க்கான பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தபின்னர் ஒப்புகை சீட்டு பதிவிறக்க தேரை தோன்றும்.

இப்பொழுது திருத்த இயலாத நிலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்க என்ற பொத்தானை கிளிக் செய்து ஒப்புகை சீட்டினை தரவிறக்கம் செய்து கொள்ளவும் 

ஒப்புகை சீட்டினை தரவிறக்கம் செய்த பின்பு தாங்கள் விண்ணப்பித்த சொத்து பத்திரம் நகல் விண்ணப்பம் ஏற்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள் நுழைந்த பின்பு முகப்பு பக்கத்தில் மின்னணு சேவைகள் சான்றளிக்கப்பட்ட நகல் கோரிக்கை பட்டியல் என்ற வழிமுறையில் சென்று தங்களது விண்ணப்பத்தை பார்த்துக் கொள்ளலாம் விண்ணப்பங்கள் பூர்த்தி அடைந்ததும் அதற்கான தரவிறக்க அதில் காணப்பெறும் அந்த லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் உங்களது நகல் பத்திரத்தை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த லிங்க் வருவதற்கு ஒரு சில நாட்கள் ஆகும் அதுவரை காத்திருக்க வேண்டும்.



Ultimate Guides on Earn Money Online:
1001 Ways to Make Money Online at Home Free Fast Updated

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *