இது என்னோட பர்த் இதோ டிக்கெட்டை பாருங்க


ஸ்டேஷனில் ரயிலுக்குள் ஏறி என்னோட லோயெர் பர்த்தை   தேடினேன். வண்டி உள்ள வெளிச்சம் பத்தலை . ஒரு வழியா தட்டுத்  தடுமாறி கண்டுபிடிச்சு உக்காந்தா அங்கே ஒரு வடக்கர் .
" நீங்க அப்பரா "?
" இல்ல லோயர் "
"இது என்னோட பர்த் - இதோ டிக்கெட்டை பாருங்க "
அவருடைய டிக்கெட்டையும் காட்டினார் . அதே பர்த் நம்பர் .
என்னை வண்டிய விட்டு எறங்கச் சொன்னாரு . நான் மறுத்தேன் .
TTR வரட்டும் பேசிக்கலாம்ன்னு சொன்னேன்.
அதுக்குள்ள என்னை ஹிந்தி கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பிச்சுட்டாரு.
எனக்கு ஹிந்தி தெரியாததாலே அவற்றை இங்கே குறிப்பிட முடையல .
வண்டி கிளம்பிருச்சு. 
நான் 20 நிமிஷம் பொறுமையா இருந்தேன்.
அவரு திட்டிகிட்டே இருந்தாரு .
நான் அவர்கிட்ட போய்  " சார் பர்த் நம்பர்  கோச் எல்லாம் சரிதான். ஆனா நீங்க போகவேண்டிய கொல்கத்தா வண்டி எதிர் platformil இருந்து  புறப்பட்டுப் ,போய் அரை மணி ஆச்சு " என்றேன்பொறுமையா.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *