Patta FMB EC A-Register Services
Check Patta Chitta Details of Land
Check FMB of Land
Check A Register of Land Records
Download Patta Chitta Details of Land
Download FMB of Land
Download A Register of Land Records
![]() |
| Patta FMB EC A-Register Services |
பட்டா
பட்டா என்பது , ஒரு நிலம் இன்னார் பெயரில் தான் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறையால் அளிக்கப்படும் ஒரு சான்று.
பட்டா என்பது நில உரிமை ஆவணம், அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், விரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்த்தீரம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும்.
அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்.
பட்டா வகைகள் (எட்டு வகையான பட்டாக்கள் உள்ளது)
யூ.டி.ஆர் பட்டா ( UDR –Updating Data Registry )
மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைப்படுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து ( வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒழுங்குபடுத்தும் வேலையை போல் ) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யூ.டி.ஆர் பட்டா ( Updating Data Register ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.
அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம், தற்பொழுது இவை எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது.
இன்னும் பலர், பட்டாவில் தந்தை பெயர் பிழை, தன் பெயர் பிழை, சர்வே எண் பிழை, அளவு பிழை என்று அதனை திருத்துவதற்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் நிறை இளம் தலைமுறையின் தான் பூட்டன், தாத்தா, பங்காளி, அப்பா பெயரில் இருக்கும் பட்டவை மாற்றாமல் நிலுவையில் வைத்து இருக்கிறார்கள்.
இவர்கள் பட்டாவை கிராம கணக்கரிடம் கொண்டு சென்றால் தான் பல நிதர்சனங்கள் பிரியும்.
நத்தம் நிலவரி திட்டம்
யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள்ளைக்காரன் காலத்தில்லேயே வகைபடுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு தான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்.
தோராய பட்டா என்பது நந்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது.
நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில் (பிழைகள், தவறுகள், இருக்கலாம் ) அதில் எதாவது சிக்கல்கள், பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்கு கால அவகாசம் கொடுத்தும் கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா.
முழுமையான விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம் நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும். அதாவது கல்யாண பெண் மேக்கப்க்கு முன் மேக்கப்புக்கு பின் என்பதில் இருக்கும் வித்தியாசம்தான் தோராய பட்டாவுக்கும் தூய பட்டாவுக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலும் இரண்டு பட்டாவும் மேனுவலாகவே இருக்கும். பட்டா ஆவணத்தில் பின்புறம் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் வரையபட்டு இருக்கும்.
ஒரு சிலர் தோராய பட்டா வாங்கியதும் பட்டா வங்கிவிட்டாடோம் என்ற சந்தோஷத்தில் இருந்து விடுவார்கள். அதில் அளவுபிழைகள் இருக்கிறதா என நிலத்தை அளந்து ஒப்புமைபடுத்தி சரி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நத்தம் நிலத்தில் இதுவரை எவ்வளவு இடம் நீ அனுபவிக்கிறாய் என ஆவணபடுத்தபடவில்லை, தோராய பட்டா வழங்கும் போது நீங்கள் அனுபவிக்கும் இடம் ஆவண படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
தூய பட்டா :
நத்தம் நிலத்திற்கு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண்டாம். வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரிவிதிப்புக்குள் கொண்டுவரவும், சாலை, குளம், பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல் படுத்தப்படும்போது பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது.
எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும் இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர். தூய பட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்.
ஏ.டி கண்டிசன் பட்டா
ஏ.டி கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டு மனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பார்.
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி, பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்.
அப்படி ஒப்படை செய்யும் போது, கொடுக்கும் பட்டா ஏ.டி கண்டிசன் பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்.
முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்ககூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக விருந்தால் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்.
நில ஒப்படை பட்டா ( டி-கார்டு கண்டிசன் பட்டா )
வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும். முன்னாள் ராணுவ வீரர்கள், பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள், நலிவுற்றவர்கள், திருநங்கைகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும். அதனை நில ஒப்படை பட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். இதனை டி-கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.
டி.எஸ்.எல்.ஆர் பட்டா
டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம். இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளின் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்களை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கப்படும் ஆவணகளில் இருந்து பொது மக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள். இந்த TSLREXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும்.
கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்க்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்க்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒர்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது, அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும்.
ஆனால் கிராம பகுதி சர்வேகளில் ஏக்கருக்கும் 5 சென்ட் கூடுதலாக குறைவாக இருக்கலாம். அதனால் அதிக துல்லியமும், எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யப்படுகிறது.
தூசி பட்டா
கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “C” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கப்படுகிறது.
அரசு நிலத்தின்மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள்,கனிதரும் மரங்கள்) மரங்கள் அனுபவிக்க பராமரித்து கொள்ள, மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்.
கூட்டு பட்டா
தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூட்டுபட்டா, கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, FMB-சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது, உதாரணமாக ஒரு பெரிய கேக்கை (யார் யாருக்கு எத்தனை துண்டு, எந்த பக்கம் என்று சொல்லாமல்) நான்கு மகன்களிடம் கொடுத்து நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் தான்.
நிலத்தில் நான்கு பேரோ, மூன்று பேரோ, இரண்டு பேரோ, அல்லது பல பேரோ ஒவ்வொரு மூலையில் நின்று அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் பட்டாவில் இருக்கும் ஆனால் சர்வே எண் உட்பிரிவு, அளவு பிரிவு, FMB உட்பிரிவு, செய்யப்பட்டு இருக்காது, பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டாவை விட தனிப்பட்டா சிறந்தது.
தனி பட்டா
தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும். மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப்டிவிசன் செய்யப்பட்டு இருக்கும்.பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம்.
புலன் எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப் பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, FMB சப்டிவிசன், ஆகியவற்றில் 100% தெளிவாக இருக்கும்.
யூ.டி.ஆர் பட்டா,நத்தம் நிலவரி திட்டம் – தோராய பட்டா & தூய பட்டா, ஏ.டி கண்டிசன் பட்டா, நில ஒப்படை பட்டா, டி.எஸ்.எல்.ஆர் பட்டா, தூசி பட்டா, ஆகிய 6 பட்டாவும் யாருக்கு எத்தன்மையில் வழங்கப்படுகிறது என பிரிக்கப்பட்டு இருக்கிறது. தனிபட்டா, கூட்டு பட்டா என்பது பட்டா ஆவணத்தின் தன்மையை பொருத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன?
சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது.
1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன. இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது. இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன. இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பட்டா :
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா :
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல் :
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம் :
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம் :
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம் :
கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார் :
பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம் :
நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து :
பிரிவு.
இலாகா :
துறை.
கிரயம் :
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று :
ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண் :
நில அளவை எண்.
இறங்குரிமை :
வாரிசுரிமை.
தாய்பத்திரம் :
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல் :
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியம் :
நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு :
நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி :
வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம் :
அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம் :
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை :
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
நிலவரைபடம் FMB (Field Measurement Book) பற்றி தெளிவான விளக்கங்கள்
நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB (Field Measurement Book) பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை!!
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது!
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..
சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :
1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.
2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).
3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.
4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.
5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.
6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.
7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.
நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
****************************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்
ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.
நில அளவீடுகள்
***********************
1 சென்ட் – 40.47 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடி
1 ஏக்கர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்டர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்கர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்கர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்
ஏக்கர்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ
செண்ட்
1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ
ஹெக்டேர்
1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ
ஏர்ஸ்
1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை
10 கோண் = 1 நுண்ணணு
10 நுண்ணணு = 1 அணு
8 அணு = 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் = 1 துசும்பு
8 துசும்பு = 1 மயிர்நுனி
8 மயிர்நுனி = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 சிறு கடுகு
8 சிறு கடுகு = 1 எள்
8 எள் = 1 நெல்
8 நெல் = 1 விரல்
12 விரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 பாகம்
6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
4 காதம் = 1 யோசனை
வழியளவை
8 தோரை(நெல்) = 1 விரல்
12 விரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
4 குரோசம் = 1 யோசனை
71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)
நிலவளவை குழிக்கணக்கு வருமாறு
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
கன்வெர்ஷன்
1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்
1 ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்
நில அளவை
100 ச.மீ - 1 ஏர்ஸ்
100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்
1 ச.மீ - 10 .764 ச அடி
2400 ச.அடி - 1 மனை
24 மனை - 1 காணி
1 காணி - 1 .32 ஏக்கர்
144 ச.அங்குலம் - 1 சதுர அடி
435 . 6 சதுர அடி - 1 சென்ட்
1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்
100 சென்ட் - 1 ஏக்கர்
1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்
2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்
1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)
100 சென்ட் = 4840 சதுர குழிகள்
1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
1 ஏக்கர் = 43560 சதுர அடி
இணையதாளத்தில் பட்டா/சிட்டா விபர சான்றினை எப்படி தரவிறக்கம் செய்வது?
தமிழ்நாடு அரசு நிலா விவர இணையதாளத்தில் பட்டா/சிட்டா விபர சான்றினை எப்படி தரவிறக்கம் செய்வது ஏப்படி என்பது பற்றிய வழிமுறை விளக்கங்கள்.
தமிழ்நாடு அரசு நிலா விவர இணையதாளத்தின் முகப்பு பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் இந்த வழிமுறையெய் பின்பற்றவும்,
"முகப்பு பக்கம் > பட்டா/சிட்டா விவரம் பார்வையிட"
இப்போது தோன்றும் பக்கத்தில் கீழ்கண்ட தேர்வுகளை பூர்த்திசெய்யவும் .
1) மாவட்டம் *
2) வட்டம் *
3) கிராமம் *
4) பட்டா /சிட்டா விவரங்களை பார்வையிட:*
5) அங்கீகார மதிப்பை உள்ளிடவும் *
6) சமர்ப்பி
மேற்கண்ட அணைத்து தேர்வுகளையும் சரியாக உள்ளீடு செய்த பின்னர் "சமர்ப்பி" பொத்தானை சொடுக்கவும்..
இப்பொழுது உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான சிட்டா தோன்றும்.
சிட்டா சான்றினை சரி பார்த்தபின்னர் அதன் கீழ் உள்ள "Print" பொத்தானை அழுத்தவும்.
இப்பொழுது சிட்டவை PDF தரவாக சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.
இணையதளத்தில் நிலப் பதிவேடு - அ-பதிவேடு (A.Register) விபர சான்றினை எப்படி தரவிறக்கம் செய்வது ஏப்படி?
தமிழ்நாடு அரசு நிலா விவர இணையதளத்தில் நிலப் பதிவேடு - அ-பதிவேடு (A.Register) விபர சான்றினை எப்படி தரவிறக்கம் செய்வது ஏப்படி என்பது பற்றிய வழிமுறை விளக்கங்கள்.
தமிழ்நாடு அரசு நிலா விவர இணையதாளத்தின் முகப்பு பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் இந்த வழிமுறையெய் பின்பற்றவும்,
"முகப்பு பக்கம் > அ-பதிவேடு விவரங்களை பார்வையிட"
இப்போது தோன்றும் பக்கத்தில் கீழ்கண்ட தேர்வுகளை பூர்த்திசெய்யவும் .
1) மாவட்டம் *
2) வட்டம் *
3) கிராமம் *
4) புல எண் *
5) உட்பிரிவு எண்
6) அங்கீகார மதிப்பை உள்ளிடவும் *
7) சமர்ப்பி
மேற்கண்ட அணைத்து தேர்வுகளையும் சரியாக உள்ளீடு செய்த பின்னர் "சமர்ப்பி" பொத்தானை சொடுக்கவும்..
இப்பொழுது உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான அ-பதிவேடு தோன்றும்.
தமிழ்நாடு அரசு நிலா விவர இணையதாளத்தில் நகர நில அளவைப் பதிவேடு விபர சான்றினை எப்படி தரவிறக்கம் செய்வது ஏப்படி என்பது பற்றிய வழிமுறை விளக்கங்கள்.
தமிழ்நாடு அரசு நிலா விவர இணையதாளத்தின் முகப்பு பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் இந்த வழிமுறையெய் பின்பற்றவும்,
"முகப்பு பக்கம் > நகர நில அளவைப் பதிவேடு "
இப்போது தோன்றும் பக்கத்தில் கீழ்கண்ட தேர்வுகளை பூர்த்திசெய்யவும் .
1) மாவட்டம் *
2) வட்டம் *
3) நகரம் *
4) வார்டு *
5) பிளாக்*
6) புல எண் *
7) உட்பிரிவு எண்
8) அங்கீகார மதிப்பை உள்ளிடவும் *
9) சமர்ப்பி
மேற்கண்ட அணைத்து தேர்வுகளையும் சரியாக உள்ளீடு செய்த பின்னர் "சமர்ப்பி" பொத்தானை சொடுக்கவும்..
இப்பொழுது உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான சிட்டா தோன்றும்.
சிட்டா சான்றினை சரி பார்த்தபின்னர் அதன் கீழ் உள்ள "Print" பொத்தானை அழுத்தவும்.
இப்பொழுது சிட்டவை PDF தரவாக சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.
நம் நிலத்தின் வில்லங்க சான்று EC எப்படி கைபேசியில் பெறுவது!
வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அதன் முந்தைய உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா என தெரிந்துகொள்ளவும் வில்லங்க சான்று பெறுவது வழக்கம்.
இன்று எல்லா வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணையம் வழியாக எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்க முடிகிறது. அந்த வரிசையில் EC (என்கம்ப்ரன்ஸ் சர்டிபிகேட்-Encumbrance Certificate) எனப்படும் வில்லங்கச் சான்றிதழைகூட எளிதாக ஆன்லைனில் பெறலாம். முன்புபோல் வில்லங்கச் சான்றிதழ் கேட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாட்கணக்கில் நடையாய் நடக்கவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் நம் மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு குறைவுதான். அமர்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் வில்லங்கச் சான்றிதழை பெறலாம்.
நாம் இப்பொழுது நம் கைபேசியில் எப்படி நான் நிலத்தின் வில்லங்க சான்று தரவிறக்கம் செய்து பார்ப்பது என்பது பற்றிய முழு விளக்கங்களையும் பார்ப்போம்!
- முதலில் தமிழ்நாடு அரசு பதிவுத்துறை சேவை இணையப் பக்கத்திற்கு செல்லவும்!! https://tnreginet.gov.in/portal/index.jspLegal
- இப்பொழுது தோன்றும் திரையின் முகப்பு பக்கத்தில் இந்த வழிமுறையெய் பின்பற்றவும்,.
- "முகப்பு பக்கம் >மின்னணு சேவைகள் > வில்லங்கச் சான்று > வில்லங்கச் சான்று விவரம் பார்வையிடுதல்"
- இப்போது தோன்றும் "வில்லங்கச் சான்றுக்கான தேடுதல்" பக்கம் மூன்று தெர்வுகளை கொண்டது. 1) வில்லங்கச் சான்று 2) ஆவணம் வாரியாக 3) Plot Flat Wise
- இப்போது வில்லங்கச் சான்று தேர்வை பயன்படுத்தி புல எண் & உட்பிரிவு எண் ( Survey No / Subdivision No.) மூலம் வில்லங்க சான்று பார்ப்பதை பார்ப்போம். .
- கீழ் புறம் இருக்கும் "தரவு கிடைக்கும் காலத்திற்கு இங்கே சொடுக்கவும்" என்ற தேர்வை தேர்வு செய்து வில்லங்க சான்று தரவுகள் கிடைக்கும் காலங்களை காண முடியும்.Geographic Reference
- வில்லங்கச் சான்று என்ற தேர்வை தேர்வு சாய்தவுடன் தோன்றும் பக்கத்தில் உங்களது (1) மண்டலம்* (2) மாவட்டம்* (3) சார்பதிவாளர் அலுவலகம் * தேர்வு செய்யவும். அதன் பின்னர் வில்லங்கம் தேவைப்படும் (4) ஆரம்ப நாள்*(5) முடிவு நாள்* தேர்வு செய்யவும். பிறகு புல விவரங்களான (6) கிராமம்* (7) புல எண்* (8) உட்பிரிவு எண்(தேவைப்பட்டால்) உள்ளிட்டு (9) "சேர்க்க" பொத்தானை அழுத்தவும்.Finance
- "சேர்க்க" பொத்தானை அழுத்தியதும் நீங்கள் உள்ளிட்ட தரவுகள் கீழே தோன்றும். நீங்கள் அதை சரி பார்த்த பின்னர் அதன் கீழே "காண்பிக்கப்படும் குறியீட்டை"(10) சரியாக உள்ளிட்டு அதன் பின்னர் "தேடுக"(11) பொத்தானை அழுத்தவும்.
- இப்பொழுது உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு வில்லங்கச்சான்று தரவிறக்கம் செய்ய அதற்கான பக்கம் திறக்கும். திறக்கும் அந்த பக்கத்தில் "திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய" என்ற வாக்கியதை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது உங்களுக்கு தேவையான வில்லங்கச்சான்று உங்கள் கைபேசியில் தரவிறக்கம்(Download) ஆகும்.
தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தின் முழு கிராம வரைபடம் (Village Map) எப்படி ஆன்லைனில் தரவிறக்கம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்..
- கீழ்கண்ட இணைய பக்கத்தை திறக்கவும் TN Land Survey
- தோன்றும் பக்கத்தில் மாவட்டம் தாலுக்கா மற்றும் கிராமம் இவைகளை சரியாக தேர்ந்தெடுக்கவும் .. தேந்தெடுத்த பின்பு 'Submit' பொத்தானை கிளிக் செய்யவும்..
- இப்பொழுது நீங்கள் உள்ளீடு செய்த கிராமத்திற்கான விளக்கம் தோன்றும். அதனை தேர்வு செய்து கீழ்புறம் இருக்கும் 'Next' பொத்தானை கிளிக் செய்யவும்..
- இப்பொழுது தோன்றும் பக்கத்தில் உங்களது Email முகவரி, உங்களது Mobile Number, அடையாள வகை மற்றும் என் மற்றும் இதர விளக்கங்களை உள்ளீடு செய்யவும். இறுதியாக Captcha சரியாக உள்ளீடு செய்து 'Submit' கிளிக் செய்யவும்..
- இப்பொழுது உங்களுக்கான கிராமத்தின் வரைபடம் 'Preview' பக்கம் இருக்கும், இதில் உங்களுக்கான வரைபடத்தை சரி பார்த்து கொள்ளலாம். மேலும் இந்த வரைபடத்தை தரவிறக்கம் செய்ய நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தி வரைபடத்தை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் 'Pay' பொத்தானை சொடுக்கவும்.
- இப்பொழுது உங்களுக்கு விருப்பமான ஆன்லைன் கட்டண சேவையை தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்தவும்.
- கட்டணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடித்தவுடன் அதற்க்கான பக்கம் தோன்றும், அதில் 'Next' பொத்தானை சொடுக்கவும்.
- இப்பொழுது தோன்றும் பக்கத்தில் காணப்படும் 'Click to Download' பொத்தானை சொடுக்கி நீங்கள் உங்களுக்கான கிராம வரைபடத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- மேலும் எந்த வரைபடம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கும்.
Ultimate Guides on Earn Money Online:
1001 Ways to Make Money Online at Home Free Fast Updated
1001 Ways to Make Money Online at Home Free Fast Updated

No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.