pizza வை ஏன் முக்கோண வடிவத்துல கட் பண்ணி தர்றாங்க?


ராத்திரி மணி 10 காலைல கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த ரெண்டு பேருக்கும் முதலிரவு ஆரம்பிக்க போற நேரம்.

மாப்பிள்ளை ஏகப்பட்ட
டிகிரி, PG லாம் படிச்சவரு.

பொண்ணு MBA மட்டும்தான்.

இந்த வித்தியாசம் மணமகளுக்கு
ஒருவித தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி இருந்தது.

அது அவ முகத்துல கவலையா
பிரதிபலிச்சது.

இதை எப்படி சமாளிக்கிறதுன்னு
யோசிச்சா.

இதை கவனிச்ச
அவ பிரண்டு என்னடி பிரச்சினைன்னு கேக்க போக, இவளும் சொல்ல, டக்குன்னு அந்த பிரண்டு மணமகள் காதுல எதோ ஐடியா சொல்ல,
மணமகள் முகத்துல
ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய,
பால் சொம்பொட ரூமுக்குள்ள வந்தா.

பல கனவுகளோட காத்திருந்த மணமகன் ஈன்னு இளிச்சிக்கிட்டே
அவகிட்ட வந்தான்.

அவனை தடுத்து நிறுத்திய
மணமகள், " ஏங்க நீங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சவரு. நான் வெறும் MBA தான்"னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே, மாப்பிள்ளை பொறுமை இழந்து, அதுக்கென்ன இப்போ? வா...கட்டிலுக்கு போகலாம்னு அவளை கட்டி அணைச்சு இழுக்க
அவ கிட்ட போனான்.

இருங்க...இருங்க..நான் ஒரே ஒரு கேள்வி கேப்பென். அதுக்கு கரெக்ட்டா பதில் சொல்லிட்டா தாம்பத்யத்தில் தொபுக்கடீர்னு குதிக்கலாம்னு சொன்னா.

வேற வழி இல்லாம சரி. சீக்கிரம் கேளுன்னு மாப்பிள்ளை சொன்னான்.

Pizza ரவுண்டு shape ல இருக்கு. அதோட box சதுரமா இருக்கு. ஆனா, pizza வை முக்கோண வடிவத்துல கட் பண்ணி தர்றாங்க. ஏன் இப்படி பண்றாங்க?

கரெக்ட்டா answer பண்ணுங்க.

அப்புறம்தான் மத்ததுலாம்னு இந்த மாதிரி ஸ்டையிலா pose குடுத்துக்கிட்டே
அவ சொன்னா.

அன்னைக்கு காணாம போன மாப்பிள்ளைதான். இன்னும் தேடிக்கிட்டு இருக்காங்க!

உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *