பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்?
அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?
நல்லா கேள்வி..
என்ன இல்லை அவளிடம்? கேட்குறேன்.
இறைவன் மிச்சமே வைக்காமல் படைத்த அழகிய படைப்பு.
அவளுக்கென்று தனி வாசம் இருக்கு..., கண்டிப்பா இருக்கு....,
கேட்டு பாருங்க. திருமணம் ஆனவர்களிடம்... வர்ணிப்பார்கள்...
அவள் கூந்தலில் ஒரு வாசம்,
நெற்றியில் ஒரு வாசம்,
மூக்கில் ஒரு வாசம்,
உதட்டோரம் ஒரு வாசம்,
அந்த கழுத்தில் ஒரு வாசம் என்று அங்கங்கே புதைந்து கிடக்கும் பல வாசங்கள்....
அவளிடம்....
சும்மா ஒன்னும் சொல்லல..,
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்ததுனு...
சந்தேகம்னா கேட்டு பாருங்கள் ஒரு தலையா காதல் செய்ற நம்ம பசங்ககிட்ட....
அவளை பார்த்தால்,
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதுனு சொல்லுவான்.
ஏண்டா அப்படினு கேளுங்க...
விளக்கம் சொல்ல தெரியாது. திரு திருனு திருவிழா கூட்டத்துல காணாம போன புள்ளையாட்டம் முழிப்பான்...
வாழவே விருப்பம் இல்லாத அவன் மேல் ஒரு முறை அவள் பார்வை பட்டால் போதும்..,
அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்னு பாட ஆரம்பிச்சிடுவான்.
அவ்வளவு இருக்குங்க.
அவளிடம்...,
அவளிடம் மட்டும்....,
அவள் ஒரு நூலகம்னு சொன்னா ரொம்ப சின்னதாகிடும்...
கடல்னு சொன்னா கூட...,
கடலில் கூட கரையேறி விடலாம். ஆனால் ஒரு முறை, அவள் அன்பிற்குள், அவள் அரவணைப்பிற்குள், அவளின் கரிசனைக்குள் சிக்கிக்கொண்டால், கரையேறவே ஆசை படாது மனது.
அங்கேயே சிக்கி தவிக்கும்.
மனுசனை கிறுக்காக்கும்.
பையன பாடா படுத்தும்.
ஆனால் எல்லாவற்றையும் விட அவள் மேல் இப்படி கிரங்கி நிற்பதற்கு மிக முக்கிய காரணம்.
இது தான்…
அதன் காரணி... இதுவே தான்...
தாய்ப்பால் தான்.
அங்கே இருந்து தான் ஆரம்பிச்சிது அவள் மேல் உள்ள தேடல்...
நம்ம முதல் உணவே அவளின் ரத்தம் தானே?
அவளின் உதிரத்தால் தானே நம் உயிர்?
அது தான் காரணி. வேற ஒன்னும் இல்லை.
அவள் உதிரத்தில் தோன்றி, மார்பில் பால் குடித்து, மடியில் தவழ்ந்து....,
அவளுடனே பின்னி பிணைந்ததால் தானோ என்னவோ,
அவளைப் போலவே இருக்கும் இவளைப் பார்த்ததும், அதே தேடல் இவள் பின்னாலும் அவனை தூக்கி செல்கிறது.
மீண்டும் அதே மடியில் ஒரு அரவணைப்பும், அவள் நெஞ்சுக்குழியில் தலை சாய்க்க ஒரு இடமும் வேண்டும் அவனுக்கு.
அந்த தேடல் தான்,
தொரத்தி தொரத்தி நிற்க வைக்குது, கிரங்க வைக்குது, மயங்க வைக்குது....
மனுசனை கொஞ்ச பாடா படுத்துது?
வளர்ந்துட்டடானு சொல்லி நாலு அடி தள்ளியே வச்சி பார்க்குது உலகம். ஆனால் அவன் என்றும் வளர்வதே இல்லை. இப்பவும் அவனுக்கு அந்த அரவணைப்பு வேணும்.
இனி அம்மாவிடம் போய் நிற்க முடியாது.
அப்ப யாரிடம் தான் போவான்? அந்த அரவணைப்பிற்காக? அவன் தேவையே அது தானே. அது மட்டும் தானே.
உலகத்தையே ஜெயிச்சிட்டு வாடானு சொன்னா ஜெயிச்சிட்டு வந்துடுவான். ஆனால் உள்ளுக்குள்ள அவன் மனசு யாரிடமோ தோற்க ஆசை படுகிறது.
வெற்றி தோல்வி இல்லாத ஒரு சண்டை போடனும்னு ஏங்குது.
இந்த தருதலதணத்தை தட்டி கேட்க ஒருத்தி வர மாட்டாளா என்று ஆசை படுறான். ஆனால் வளர்ந்த புள்ளைய என்ன திட்டுறதுனு அம்மா விட்டுவிடுகிறாள்.
என்னை கேட்டால், அவள் தன் அழகை வைத்து இவனை இப்படி கிரங்க வைப்பதில்லை. இவனா வேணும்னே இவளுக்குள் சிக்கி தவிக்கனும்னு ஆசைப்பட்டு தானாவே வந்து சிக்கிக் கொள்கிறான். அவனுக்கு அவள் ஒரு போதை.
ஆண் மட்டும் ஒரு பெண்ணிடம் சிக்கி தவிப்பது இல்லை.
பெண்ணும் ஒரு ஆணிடம் தான் சிக்கி தவிக்கிறாள்.
என்ன ஒன்னு, இவ்வளவு வெளிப்படையாக காண்பித்துக் கொள்வது இல்லை.
என்ன தான் இன்பம் இந்த பெண்களிடத்தில் என்ற கேள்விக்கு......,
பதில், அவளின் மார்பு என்று நினைத்தால் ஐ எம் சாரி,
அது இல்லை…
அவளின் அரவணைப்பு தான்.....
அதே தான்….
மனதின் தேவை தான் முதல் காரணி, உடல் தேவை எல்லாம் ரெண்டாவது தான்.
மனைவியிடம் மயங்கி நிற்கும் அவன் தாசியிடம் மயங்கி நிற்பதில்லை....
காரணம்...., அரவணைப்பும் இவள் கொடுக்கும் நம்பிக்கையும் அவளிடம் கிடைப்பதில்லை.
அவனுக்கு தேவை எல்லா சூழ்நிலையிலும் தன்னை நம்பி, துணை நிற்கும் ஒருத்தி. தன்னை முற்றிலும் நம்பும் ஒருத்தியிடம் அவன் மயங்கியே தான் நிற்பான் என்பது நியதி..,
அந்த நம்பிக்கையையும், அரவணைப்பையும் உங்கள் துணைக்கு பரிசளித்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்....
அவளிடம் மயங்கி நிற்பது ஒன்றும் அசிங்கமான செயல் இல்லை..
உண்மையில் அது தான் அழகு!!!
அங்கே தான் கொட்டிக் கிடக்கின்றது வாழ்வின் மொத்தமும்....
மொத்தத்தில், அவள் ஒரு…,
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.