மௌனராகம் ஒரு சிறந்ததொரு காதல் திரைப்படம்
மௌன ராகம் இந்த படத்துடைய பேரே இந்த படத்துடைய ஒட்டுமொத்த கதையையும் சொல்லும். உள்ளுக்குள்ள காதல் இருக்கும் அந்த காதல வெளியே செல்ல முடியாம நேர்ல நம்ம நேசிச்சவங்க கிட்ட சொல்ல முடியாம ரெண்டு பேரும் இருக்கக்கூடிய அந்த ஒரு விஷயம் உள்ளுக்குள்ளே பாடக்கூடிய ராகம் அதுதான் மௌன ராகம் எப்படி ரைமிங்க சொன்னானா ...
இந்த படத்துடைய கதையை பத்தி சொல்றேன் கேளுங்க. குறும்புத்தனம் பண்ணிட்டு இருக்க கூடிய ஹீரோயின் இவர்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம். சொல்லிட்டு அப்பா அம்மா பிளான் போடுவாங்க. இந்த விஷயத்தை பொண்ணு கிட்டயும் சொல்லுவாங்க. நம்ம ஹீரோயின் நம்ம வீட்ல இருந்தா தானே மாப்பிள்ளை பார்க்க வருவாங்க நம்ம லேட்டா வந்திரலாம்னு சொல்லிட்டு ஊர் எல்லாம் சுத்திட்டு பொறுமையா வீட்டுக்கு வருவாங்க .
நைட்டு ஆயிடும் ஆனா மாப்பிள்ளை ஈவினிங் வர வெயிட் பண்ணுவாரு. பொண்ணு பார்த்தே ஆகணும் அப்படின்னு சொல்லிட்டு எவ்வளவு நேரம் ஆனாலும் பரவால்ல சொல்லிட்டு வெயிட் பண்ணிட்டு இருப்பாரு .வந்து பார்த்தா நம்ம ஹீரோயினுக்கு ஒரே சாக்கு என்னடா இவன் நம்ம லேட்டா வந்த எல்லாரும் போய்டுவாங்கனு சொல்லிட்டு பார்த்தா என்னடா இவ்வளவு நேரம் உக்காந்துட்டு இருக்காங்க.
அப்படின்னு சொல்லிட்டு கடுப்பிலேயே போறாங்க . அம்மாவோ திட்டி மேக்கப் போட்டு கூட்டிட்டு வந்து உட்கார வைத்து பேச வைக்கிறாங்க.
பொண்ணு எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு நம்ம ஹீரோ கிட்ட நேரடியா சொல்ல.
நம்ம ஹீரோவும் நான் உங்களை விரும்புகிறேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு உங்க விருப்பத்துக்காக நான் வெயிட் பண்றேன். அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிடுறாரு. நம்ம ஹீரோயின் குடும்பத்தில சண்டை போடுறாங்க .
எனக்கு இப்ப கல்யாணம் வேணாம். எனக்கு பிடிக்கல அப்படின்னு சொல்ல இதைவிட நல்ல இடம் கிடைக்காதுமா தயவு செஞ்சு கல்யாணம் பண்ணிக்க அப்படி சொல்லிட்டு அப்பாவும் அம்மாவும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டு கோச்சிட்டு போயிடறாங்க.
இந்த நேரம் பார்த்து மன உளைச்சலான அப்பாவுக்கு நெஞ்சு வலி ஏற்படுது. ஒட்டுமொத்த குடும்பமே துடிதுடித்து போயிடறாங்க. இதை பார்த்த ஹீரோயின் அவங்களும் மனம் உடைந்து போயிறாங்க.
ஹீரோயின் உடைய அம்மாவோ ஹீரோயின் கிட்ட வந்து எனக்கு தாலிபிச்சை கொடு அப்படின்னு சொல்லிட்டு கேட்க. அந்த இடத்துல மனம் இறங்கி போய் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறாங்க. ஒரு வழியா கல்யாணமும் ஆகுது. ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் டெல்லிக்கு வந்துடுறாங்க.
இங்க வந்தா முதல் இரவு நடக்க இருக்கு .அந்த நேரத்துல நம்ம ஹீரோ ஆசை ஆசையா நம்ம ஹீரோயின் பக்கம் போக நம்ம ஹீரோயின் என் பக்கம் வராதீங்க . நீங்க தொட்ட கம்பளிபூச்சி ஊறுற மாதிரி இருக்கு.எனக்கு விருப்பமில்லை அப்படின்னு சொல்லிட்டு ஒதுங்கிடறாங்க. நம்ம ஹீரோவும் அத வந்து புரிஞ்சுகிட்டு சரி ஓகே அப்படின்னு சொல்லிட்டு ஒதுங்கி படுத்துக்கிறாரு. தனியா படுக்கையும் அரேஞ்ச் பண்ணி கொடுத்திடுவார்.
அடுத்த நாள் நம்ம ஹீரோ ஆஃபீஸ் போறாரு .அங்க போனா எல்லாரும் என்னடா கல்யாணம் ஆகி பத்து நாள் கூட ஆகல அதுக்குள்ளே வந்துட்ட அப்படின்னு சொல்லிட்டு எல்லாரும் திட்டிட்டு இருக்க.
அப்ப மேனேஜர் சொல்லுவாரு பொண்டாட்டி வெளியே கூட்டிட்டு போடா ஆசைப்பட்டதை வாங்கி கொடுடா .அப்படின்னு சொல்ல இவரும் வீட்டுக்கு வந்துட்டு பொண்டாட்டி கிட்ட கேப்பாரு வா வெளியில் போகலாம் உனக்கு என்ன வேணுமோ வாங்கி தரேன். அப்படின்னு சொல்லிட்டு வெளிய கூட்டிட்டு போய் வாங்கி தர கேக்கும்போது எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஹீரோயின் சொல்லுவாங்க. ஹீரோவோட மனசு சுக்கு நூறா உடைந்து போய்டும்.
நம்ம ஹீரோவும் ஒரு முடிவுக்கு வந்துருவாரு. உங்களுக்கு டைவர்ஸ் தானே வேணும் சரி ஓகே வாங்க வக்கீல் கிட்ட போலாம்னு கூட்டிட்டு போயி டைவரசுக்கு அப்ளை பண்றாரு .
அந்த இடத்துல வக்கீல் கல்யாணம் ஏழு நாளில் எதுக்கு இந்த முடிவு நம்ம சட்டப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. ஒரு வருஷம் நான்தான் டைவர்ஸ் பண்ணிக்க முடியும். அதனால ரெண்டு பேரும் கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க அப்படின்னு வக்கீல் சொல்வாங்க
அதுவும் இல்லாம நம்ம ஹீரோயினை தனியாக கூப்பிட்டு இங்க பாருமா எனக்கு ஹஸ்பண்ட் இல்ல. என் ஹஸ்பண்டும் இதே மாதிரி என்னை விட்டுப் போயிட்டாரு. கணவன் இல்லாத வாழ்க்கை அது நரகம் மாதிரி இருக்கும் தயவு செஞ்சு புரிஞ்சிக்குமா அப்படின்னு சொல்லிட்டு அட்வைஸும் பண்ணி அனுப்புங்க.
நம்ம ஹீரோ உள்ளுக்குள்ளே காதல் சோகப் பாடலை பாடிட்டே வருவாரு. "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ "அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே,
ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிக்க அந்தப் பெண் அந்த ஆணை விரும்பவில்லை என்றால் இந்த பாடல் நெஞ்சில் மிகப்பெரிய ஒரு வலியை ஏற்படுத்தும் யார் யாரெல்லாம் ஒருதலையா லவ் பண்ணாங்களோ அவங்களுக்கு எல்லாத்துக்குமே இந்த பாடல் ஒரு வலியை ஏற்படுத்தும்
வீட்டுக்கு வராங்க நம்ம ஹீரோயின் திவ்யாவோ நம்ம ஹீரோவான சந்திரகுமார் கிட்ட ஒரு சில விஷயத்தை சொல்றாங்க. என்னால உங்க கூட சிரிச்சு பேசி வாழ முடியாது. ஏன்னா என்னோட உள்ளுக்குள்ள அவ்வளவு வலி இருக்கு அப்படின்னு சொல்லிட்டு தன்னுடைய கடந்த கால நினைவுகள சொல்றாங்க.
நம்ம ஹீரோயின் கல்லூரி பருவத்தில் படிச்சிட்டு இருக்கும்போது அந்த இடத்தில் ஒரு ரவுடி பையன் ஒருத்தன் இருப்பான். அவன் தான் நம்ம மனோகர். இவன் பண்ற அடாவடித்தனத்தை பார்த்து நம்ம ஹீரோயின் அவ மேல போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்துடுவாங்க. கேஸ் கொடுத்த பிறகு தான் தெரியும் நம்ம ஹீரோ ரொம்பவே நல்லவர்னு .
தெரியாம நம்ம வழக்கு கொடுத்தோமே மாட்டி விட்டுட்டோமே மனோகர . அப்படின்னு சொல்லிட்டு போயி கேஸ் எல்லாம் வாபஸ் வாங்கிட்டு வெளியே கொண்டு வந்துருவாங்க.
நம்ம மனோகர் திவ்யாவை பார்த்த முதல் நொடியிலேயே கண்ணு சிமிட்டி ஒரு கண்ணு அடிச்சிடுவாரு. அப்பவே ஒரு மாதிரி நம்ம திவ்யா மயங்கிடுவாங்க. இருந்தாலும் வெளிப்படையா சொல்ல மாட்டாங்க. நம்ம மனோகர் விடாம துரத்தி தொரத்தி பேசிட்டே இருப்பார்.
ஒரு கட்டத்துல நம்ம மனோகர் பண்ற இந்த குறும்புதனத்தை நம்ம ஹீரோயின் ரசிப்பாங்க. ஒரு கட்டத்துல உள்ளுக்குள்ள இருக்கிற காதல் வெளியில் வந்துவிடும். அவங்களும் வெளிப்படையா சொல்லவும் ஆரம்பிச்சிடுவாங்க. இந்த மாதிரியான பழைய படங்களை பார்த்து தான் நம்ம பசங்க இப்போ எல்லாம் லவ் பண்றாங்களே என்னவோ
மோதல் தொடங்கி தான் காதல் வரும் அப்படின்னு சொல்லி அவன்னவன் ஆளாளுக்கு சொல்றதெல்லாம் காரணம் இந்த மாதிரி படங்களால தான் அப்படின்னு நான் நினைக்கிறேன்
இப்படி இருக்கும்போது நம்ம ஹீரோ மனோகரன் திவ்யாவை கல்யாணம் பண்ணிக்கலாம் .அப்படின்னு சொல்லிட்டு கூப்பிட அவங்க மறுக்க இருந்தாலும் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லி ஏதோ விதத்தில் மன மாற்றம் பண்ணிடுவாரு.
நம்ம ஹீரோயின் கல்யாணம் பண்ணிக்க ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வெயிட் பண்ண. நம்ம ஹீரோவை போலீஸ் கைது பண்ணிட்டு போயிருவாங்க. அந்த தப்பு நடக்கும்போது நம்ம ஹீரோயின் கூட தான் நம்ம ஹீரோ இருந்திருப்பாரு. இருந்தாலும் போலீஸ் நம்ப மாட்டாங்க ஏத்துக்க மாட்டாங்க வாடா இத்தனை நாள் நீ எவ்வளவு பிராடு தானே பண்ணிட்டு இன்னைக்கு நல்லவன்னு சொன்னா நம்புவோமா.
அப்படின்னு சொல்லிட்டு ஹீரோவை புடிச்சு வண்டியில உட்கார வைத்து கூட்டிட்டு போய்டுவாங்க.
#ak
போற வழியில நம்ம ஹீரோயின் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இருக்க.
நம்ம ஹீரோ ஏமாத்திட்டு வேகமா ஓடி வருவாரு. ஓடி வந்து ரெஜிஸ்டர் ஆபீஸ் படிக்கட்டு ஏறும் அந்த நேரத்துல போலீஸ் அவரை பிடிக்க முயற்சி பண்ணும் போது எதர்ச்சியா கை தடுமாறி போலீஸ் இவரை சுட்டுடுவாங்க. அந்த இடத்துல நம்ம ஹீரோ மனோகர் இறந்து போயிட்டாரு. அந்த இடத்துல மனச விட்டவங்க தான் நம்ம ஹீரோயின் அதுக்கப்புறம் யாரையும் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ளனும் அப்படின்ற அந்த எண்ணம் அவர்களுக்கு வந்ததே இல்லை.
இந்த கதையைக் கேட்ட உடனே நம்ம சந்திரகுமார் ஓகே உங்க விருப்பத்திற்கு நான் தடையா இருக்க விரும்பல உங்க விருப்பபடி நீங்க இருங்க .நான் உங்களை தொல்லை பண்ணல அப்படின்னு சொல்லிட்டு நம்ம சந்திரகுமாரோ கொஞ்சம் ஒதுங்கி இருப்பார்.
ஆனா ஒரு கட்டத்துல நம்ம ஹீரோயின் நம்ம ஹீரோ சந்திரகுமார் கிட்ட நெருங்கி நெருங்கி பேச ஹீரோவும் கொஞ்சம் நல்லா பேசுற மாதிரி தான் இருக்கும்.
ஒரு கட்டத்துல நம்மளுக்கு ஏதோ கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆயிடுச்சு பா இரண்டு பேரும் சேர்ந்துட்டாங்கப்பா. அப்படின்னு நாம நினைச்சாலுமே உள்ளுக்குள்ள அந்த எண்ணத்தோடு இருப்பாங்க.
அதலயு நம்ம சந்திரகுமாரு வார்த்தைக்கு வார்த்தை நீங்க இருக்கிற வரைக்கும் பரவால்ல .நீங்க இல்லன்னா நான் தனியாத்தான் இருக்கணும்.
ஒரு வருஷத்துக்கு அப்புறமா எனக்கு நீங்க இல்லையென்று அந்த உணர்வு ஏற்படும் தயவு செஞ்சு எனக்கு டீ போடாதீங்க நான் கஷ்டப்பட்டு நான் தனியாவே இருந்துக்கிறேன். அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஹீரோ ஹீரோயின் முகத்தில் அடிக்கிற மாதிரியே ஒரு சில வார்த்தைகளை அப்பப்ப சொல்லிட்டே இருப்பாரு.
நிலாவே வா செல்லாதே வா என்னாலும் உன் பொன் வானம் தான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அழைத்தேனே. ஹீரோ உடைய மனசுக்குள்ள காதல் இருக்கும் .இவங்களுக்கு பிடிக்கல அப்படி என்றப்ப நம்ம எப்படி இவங்கள தொல்லை பண்றது .
இவங்க எதிர்பார்க்கிறது டைவர்ஸ் வெளிப்படையா கேட்டுட்டாங்க .இப்ப இவங்க சிரிச்சு சிரிச்சு பேசினா மட்டும் அது உண்மையாயிடுமா அவளிடம் கேட்ட வார்த்தைகள் சொன்ன வார்த்தைகள் எல்லாமே நெஞ்சுக்குள்ள இருக்கு . அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஹீரோ உள்ளுக்குள்ளே சோகங்களை வைத்துக்கொண்டு இருப்பாரு.
அந்த காதல் கதையை கேட்பதற்கு முன்னாடியாச்சும் நம்ம ஹீரோ சேர்ந்து வாழணும் அப்படின்னு சொல்லிட்டு இருந்தாரு .ஆனா அந்த காதல் கதையை கேட்ட பிறகு இவங்க மனசுக்குள்ள இருக்கக்கூடிய அந்த வலியோட நம்ம எதுக்கு சேரனும் நம்ம ஒதுங்கி போவோம் .
அவங்களாட்சி நிம்மதியா இருக்கட்டும் அப்படின்னு நம்ம ஹீரோ தனிமையிலே இருக்க முயற்சி பண்ணுவாரு.
ஆபீஸ்ல நடந்த பிரச்சனையில ஒரு கேங்கு நம்ம ஹீரோவ க**யால் குத்திடுவாங்க. நம்ம ஹீரோயின் ஹீரோவை ஹாஸ்பிடல் கொண்டு போயி கதறி கதறி அழுவாங்க. என்னுடைய கணவனை தயவு செய்து காப்பாத்துங்க அப்படின்னு சொல்லிட்டு தாலியை நீட்டிக்காட்டும் போது இந்த அளவுக்கு இந்த பொண்ணு மனசு மாறிட்டாங்க பரவாயில்லையே அப்படின்ற மாதிரி தான் நமக்கு தோணும்.
நம்ம ஹீரோயின் ஹீரோ மனசை கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிட்டு ஒண்ணு சேற முயற்சி பண்ண இது ஏதேதோ பண்ணுவாங்க.
சாப்பாடு செய்வாங்க. சீக்கிரம் வர சொல்லுவாங்க. அவரு வரமாட்டாரு. இன்னொரு நாள் வெளிய கூட்டிட்டு போக சொல்லுவாங்க .நம்ம ஹீரோவும் வெளிய கூட்டிட்டு போவாரு ரைட்டு அவ்ளோதாண்டா இனிமேலுக்கு பிரச்சனை இல்லடா அப்படின்னு சொல்லிட்டு நம்ம எல்லாருமே நினைச்சா. போற வரைக்கும் போயிட்டு நல்லா ஊரெல்லாம் சுத்தி பார்த்துட்டு வந்த பிறகு திரும்பவும் நம்ம ஹீரோ சோகமா பேச ஆரம்பிச்சிருவாரு.
என்ன இருந்தாலும் ஒரு வருஷம் தான் அப்படின்னு சொல்லிட்டு ஒரு மாதிரி ஹீரோயின் மனது புண்படும்படியே நம்மாளு பேசிட்டே இருப்பார்.
ஒரு கட்டத்துல பேச்சு வார்த்தை கொஞ்சம் முத்திடும் நான் எதுக்கு இந்த வீட்ல இருக்கணும். நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்ல நான் இப்பவே உனக்கு டிக்கெட் போட்டு தர கிளம்பு.
அப்டினு ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணி விட்டுருவாரு. அடுத்த நாள் நம்ம ஹீரோயின் ட்ரெயின் ஏறி போக பேக் பண்ணிட்டு கிளம்பிடுவாங்க.
ரயில்வே ஸ்டேஷன் வாசல்ல நம்ம ஹீரோயின் நிக்க அந்த இடத்துல நம்ம ஹீரோ வந்து நிப்பாரு. அந்த இடத்துல நம்ம ஹீரோ ஒரு டைவர்ஸ் பத்திரத்தை எடுத்து கைல நீட்டி டைவர்ஸ் காண அப்ரூவல் கிடைச்சிடுச்சு.
இத்தோட நீங்க போறீங்க எல்லாத்தையும் முடிச்சிட்டு போங்க. அப்படின்னு சொல்லிட்டு டைவஸ் பத்திரத்தை கையில கொடுக்க. அந்த இடத்துல நம்ம ஹீரோ உள்ளுக்குள்ள எனக்கு போக விருப்பம் இல்லைன்னு நீ சொல்லு அப்படின்னு நினைக்க நம்ம ஹீரோயின் தயவு செஞ்சு இங்க இரு அப்படின்னு சொல்லு அப்படின்னு இவங்க நினைக்க
ரெண்டு பேரும் சொல்லவே மாட்டீங்களா கண்ணுல தான் பேசுவீங்களா அப்படின்னு சொல்லிட்டு நம்மளுக்கு தோணும்.
நம்ம ஹீரோயின் டைவர்ஸ் பத்திரத்தை வாங்கி இப்போ சொல்லலனா எப்பவுமே சொல்ல முடியாது அப்படின்னு சொல்லிட்டு அந்த டைவர்ஸ் பாத்திரத்தை கண்ணு முன்னாடி கிழிச்சு போட்டு எனக்கு உங்கள புடிச்சிருக்கு எனக்கு இந்த டைவர்ஸ் வேண்டா. உங்களுக்கு பிடிக்கலல்ல நான் போறேன் அப்படின்னு சொல்லிட்டு ட்ரெயின் ஏறி போயிடுவாங்க.
நம்ம ஹீரோ தல தெருச்சி ஓடுவார். இவ்வளவு நாள் நம்ம காத்திருந்தது இதுக்காக தான் இன்னைக்கு நம்ம பொண்டாட்டி நம்மளை தேடி வந்துட்டா
நம்ம பொண்டாட்டியை ஒரு வார்த்தை சொல்லிட்டா இன்னைக்கு ஒன்னு சேரவில்லை என்றால் எப்பவுமே ஒன்று சேர முடியாது. உட்றா வண்டிய அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஹீரோ கிருட்டு கிருட்டு கிருட்டு ஓடிப்போய் ட்ரெயின்ல ஏறி நம்ம ஹீரோயினை கட்டிப்பிடித்து முத்தா கொடுத்து காம்ப்ரமைஸ் ஆயிருவாங்க.
ரெண்டு பேரும் சந்தோசமா ரயில விட்டு இறங்கி வெளியே வருவாங்க. பார்க்கவே சந்தோசமா இருக்கும்.
மௌன ராகம் உள்ளுக்குள்ள ஆயிரம் சுகங்கள் இருக்கலாம் ஆனால் திருமண வாழ்க்கை என வந்த பிறகு அனைத்தையும் மறந்துட்டு பொது வாழ்க்கையை தொடங்குவதற்கு தான் ஒரு நல்ல ஒரு முடிவாய் இருக்கும்.
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.