கடி ஜோக்: யானை மற்றும் எலி


லைட்டா ஒரு கடி.

ஒரு யானையும் எலியும் ஃபிரெண்ட்ஸ். அவை இரண்டும் ஒரு ஸ்விம்பூலில் குறித்துக் கொண்டு இருந்தது. திடீரென்று குளித்து கொண்டிருந்த எலி, யானையிடம், ஸ்விம்பூலில் இருந்து வெளியில் வரச் சொல்லி கட்டாய படுத்தியது.

யானை குளித்து கொண்டிருந்ததால் உடனே வரவில்லை. எலி மீண்டும், மீண்டும் தொந்தரவு செய்ய வேறு வழியில்லாமல் கோபத்துடன் வெளியில் வந்து, ஏன் என்னை அவசரமாக தண்ணீரில் இருந்து வரச் சொன்னாய் என்று கேட்டது.

அதற்கு எலி, அந்த யானையை சுற்றி வந்து பார்த்து விட்டு, சரி நீ குளிக்க போகலாம் என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னது. அதனால் கோபம் கொண்ட யானை, உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய் !? நான் பாட்டுக்கு ஜாலியாக குளித்துக் கொண்டு தானே இருந்தேன்.

என்னை தொந்தரவு செய்து வெளியில் வரச் சொல்லி விட்டு இப்பொழுது, அலட்டிக் கொள்ளாமல் போ என்று சொல்கிறாரோ காரணத்தை கூட சொல்லாமல். நீ உடனே என்னை தண்ணீரை விட்டு வரச் சொன்ன காரணத்தை சொல்லவில்லை என்றால், உன்னை நான் காலால் மிதித்தே கொன்று விடுவேன் என்றது.

அதற்கு எலி அலட்டிக் கொள்ளாமல் சொன்னது, " அது ஒன்றும் இல்லை. என்னுடைய ஜட்டியை காணவில்லை. ஒரு வேலை நீ அதை போட்டுக் கொண்டு குளித்து இருக்கிறாயோ என்ற சந்தேகம் எனக்கு. அதனால் தான் உன்னை தண்ணீரில் இருந்து வெளியில் வரச் சொன்னேன் " என்றது.

இதைக் கேட்ட யானை என்ன செய்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *