மூன்று டாக்டர்கள் தங்கள் வழக்கமான காலை நடை பயணம் முடித்து விட்டு அங்கு இருந்த ஒரு டீ கடையில் நின்று கொண்டு இருந்தனர் !
அப்பொழுது சற்று தொலைவில் ஒருவர் காலை கொஞ்சம் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டு இருக்க !
அவரை பார்த்த எலும்பு ஸ்பெஷல் டாக்டர் அநேகமாக இவருக்கு முட்டியில் பிரச்னை இருக்கு ! இவருக்கு முட்டியில் சர்ஜரி செய்ய வேண்டும் என்று சொன்னார் !
இரண்டாவது டாக்டர் சொன்னார் இல்லை அவருக்கு நரம்பு பிரச்னை இருக்கு ! அவருக்கு முழு நரம்பு பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார் !
மூன்றாம் டாக்டா சொன்னார் இல்லை அவருக்கு ஸ்பைனல் கார்டில் பிரச்னை இருக்கு ! அவரது தண்டு வடத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என்று ! இப்படி ஆளாளுக்கு அவர்கள் கருத்தை சொல்லி கொண்டு இருக்கும்போது அந்த நபர் டாக்டர்கள் நின்று கொண்டு இருந்த டீ கடைக்கு வந்து ! அந்த டீ கடைக்காரரிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார் !
ஐயா ! இங்கு செருப்பு தைப்பவர்கள் யாராவது அருகில் இருக்கிறார்களா ? இருந்தால் சொல்லுங்கள் என் செருப்பின் வார் அறுந்து விட்டது என்று சொல்ல !
இப்பொழுது மூன்று டாக்டர்களும் ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டு இருந்தனர்.
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.