அப்பாவின் சொத்தில் மகளுக்கு பங்கு கொடுக்க தேவை இல்லை என்று ஏன் நம் முன்னோர்கள் கூறினார்கள் தெரியுமா ?
பெண்களை விட்டுவிட்டு அண்ணன்-தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக்கொள்வார்கள்... அதன் பிறகு.. அவர்கள் பங்காளிகள் மட்டுமே.. இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும்.. அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்துகொள்வதோடு சரி.. மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும்.. பின் வசூலிக்கப்படும்.. சமயங்களில் வட்டியுடன்...
ஆனால் பெண்களுக்கு சொத்தில் எதுவும் கொடுப்பது இல்லை... மாறாக திருமணத்திற்கு சீர்வரிசை சிறப்பாக செய்வார்கள்.. நகை- நட்டு -பாத்திரம்- பண்டம்- வாகனம்- ரொக்கம் என இந்த பட்டியல் நீளும்... பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக இருக்கும்...
அதோடு விடுவது இல்லை... சீமந்தம், பிள்ளை பேறு.. பெயர் சூட்டுதல் தொடங்கி... அந்த பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும்... அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்...
எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்கு வந்திருக்கும் பெண்ணிற்கு..
இதை எந்த ஆணும் கணக்கு பண்ணி பார்த்து "இல்லை இல்லை... நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்கு கொடுத்து விட்டேன்.. இனிமேல் செய்ய முடியாது " என்று சொல்வதில்லை... இவன் கடன வாங்கியோ.. தமக்கு கிடைத்த சொத்தை விற்றோ கூட தங்கையின்-அக்காவின் நலனிற்காக அவர்களது தேவையை பூர்த்தி செய்வான்...
நியாயமாக வரதட்சணைக்கு எதிராக போராட வேண்டியவன் ஆண் தான்... தந்தையின் சொத்தை பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தை கொடுத்துவிட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம்.. கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம்.. அப்படியே இருந்தாலும் அதை கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக்கொள்வோம்.. என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம்... ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை...
வேறு வீட்டில் வாழப்போகும் பெண்ணுக்கு கடைசி வரை பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழிதான் சீர் செனத்தி எல்லாம்... அப்படி பாகமாய் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டுவிட்டால் அந்த பெண் ஆதரவற்று போவாள்... இவனும்.. எனக்கு தெரியாது என்று ஒதுங்கி விடுவான்... அதற்கு வழி கொடுக்காமல் அந்த உறவை பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களை பாகமாய் பிரித்து கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டுவிட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பை பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தார்கள்...
பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று அரசு அறிவாளியாய் யோசித்து கொண்டுவந்த சட்டம் அந்த உறவை முறிக்கும் முட்டாள்தனம் என்பது உணராத பெண்கள் தான் சொத்தில் பங்கு எங்கள் உரிமை என்று போராட கிளம்புகிறார்கள்... ( எங்கோ ஒரு சில சகோதரன் ஒன்றும் செய்யாமல் ஏமாற்றிவிட்டான் என்பதற்காக வழக்கு தொடுப்பவர்களை சொல்லவில்லை...)
நீயும் அவன் கூட தான பொறந்த... உனக்கு மட்டும் சொத்துல உரிமை இல்லையான்னு உசுப்பி விடுற உறவுகளும் - போராளிகளோ கடைசி வரை கூட வர மாட்டாங்க.. உங்களுக்கு ஒண்ணுன்னா சகோதரன் தான் துடிப்பான்.. ஏன்னா அவன் தான் சக உதிரன்
படித்ததில் பிடித்தது.
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.