ஆணவம் அறிவை அழிக்கும் அகம்பாவம் நம்மையே அழிக்கும்


“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றான் என்று பொருள்.

அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது. நிறைகுடங்களுக்கு அது வருவதில்லை.

வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி, முட்டாள்த்தனமான தைரியம் தோன்றி,  ‘எல்லாம் நாமே’ என்ற எண்ணம் பிறந்து, தடுமாறி ஒரு செயலை செய்யத் தொடங்கியதும், ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, ஆணவக்காரனைக் கூனிக் குறுகச் செய்கின்றன.

ஆணவத்தின் மூலம் வெற்றியோ, லாபமோ கிடைப்பதில்லை; அடி தான் பலமாக விழுகிறது.

தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;

தான் அமைச்சராகி விட்ட போதையில் மக்களை அலட்சியப்படுத்தும் அரசியல்வாதிகள்,

தான் சொன்ன ஏதோ ஒன்றைப் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக தினமும் எதையாவது உளறிக் கொண்டு இருக்கும் தலைவர்கள்;

இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப் போய் விடுகின்றார்கள்...

‘எதற்கும் தான் காரணமல்ல; என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.

‘மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், பொதுஇடங்களில் அவமானப்படாமல் தப்பியது இல்லை."

ஆணவத்தால் அழிந்து போன அரசியல் தலைவர்கள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு.

ஆனால் அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு...

ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயல் காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பி விடுகிறது.

ஆம்.,நண்பர்களே...

'நம்மிடம் ஏதும் இல்லை' என்பது ஞானம்.

'நம்மைத் தவிர ஏதும் இல்லை' என்பது ஆணவம்.

ஞானம் , பணிந்து பணிந்து வெற்றி பெறுகிறது.

ஆனால் ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது...

ஆணவம் அறிவை அழிக்கும்.!

அகம்பாவம் நம்மையே அழிக்கும்...!

Ultimate Guides on Earn Money Online:
1001 Ways to Make Money Online at Home Free Fast Updated

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *