ஆணின் எந்த அழகை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்?


ஒரு ஆணின் எந்த அழகை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்?

மீசையை முருக்கி வேட்டியை மடித்துக் கட்டினால் ஒரு ஆணழகு வருமே அதை விரும்புவார்கள்.

விரும்பியப் பெண் கடந்து செல்லும்போது தலைக்குனிந்தவாறு, பின் அவள் அவனை கடந்தப்பின் திருட்டுத் தனமாகப் பார்ப்பது ஒர் அழகு.

‘அவள் திமிரு பிடித்தவள், ஆனாலும் எனக்கு சொந்தமானவள்’ எனக் கூறும் ஆணின் துணிச்சலும் அழகு.

தன்னை வளர்த்தெடுத்த தாயையும், தன்னை நம்பி வந்த மனைவியையும், தன்னால் பிறந்த பெண் குழந்தையையும் உயிர் போல பாதுகாக்கும் அனைத்து ஆண்களிடமும் அந்த குணம் அழகு.

அம்மாவை மனைவியிடமோ அல்லது மனைவியை அம்மாவிடமோ விட்டுக் கொடுக்காது இருப்பது ஓர் அழகு.

குடும்பச் சுமையைத் தலைக்கு மேல் சுமக்கும் அந்த மன தைரியம் அழகு.

குழந்தையைக் கொஞ்சும் விதம் அழகு.

மனைவியைக் குழந்தைப் போல பார்ப்பதும் அழகு.

மொத்தத்தில் ஆண்கள் மற்றும் ஆண்களின் குணங்கள் அழகுதான் , இரசிப்பதற்கு ஓராயிரம் கண்கள் தேவை

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *