ஆண் பெண்ணை பிடித்து இருந்தால் எப்படி வெளிப்படுத்துவான்?


ஒரு ஆண் தான் உடன் பழகும் பெண்னிடம் அவளை பிடித்து இருந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவான்?

1 . வித்தியாசமான பெயர் வைத்து அழைப்பார் . நம் மை வேறு யாரும் அந்த பெயரால் அழைத்திருக்க மாட்டார்கள் . பல சமயங்களில் 'madam ' என்பார்கள், இது தமிழ் பசங்களுக்கு இருக்கும் common trait 

2 . தேனில் பால் கலந்த குரலில் பேசுவார்கள் . பிறரிடம் சாதாரணமாக பேசுவதை பார்த்தால் பயமாக இருக்கும் . நம்மிடம் பேசும்போது 300x மென்மையாக பேசுவாங்க.

3 . ஒரு பழச்சாறு கடையில் போய் பழச்சாறு வாங்கி முழுமையாக குடிக்க முடியல னு சொன்னா யோசிக்காமல் நம்ம எச்சில் ஜீஸை வாங்கி வாயில் ஊற்றி கொள்வார்கள் .

4 . எங்க போனாலும் நம்மல தான் கண் பார்க்கும் . திடீரென பார்த்தால் அப்படியே தடுமாறி சமாளித்து நம் அருகில் இருக்கும் தண்ணீ கேனை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து சமாளிப்பது/ நாம் பார்த்ததும் புருவம் உயர்த்தி 'என்ன' என்பதை போல் கேட்பாங்க.


5 . மாவட்ட வரைபடம் முழுவதும் மண்டையில் இருக்க , நமக்கு அழைத்து நமக்கு தெரிந்த நாலு தெருவில் " அங்க போக வழி சொல்லு" என்று கேட்பாங்க . பேச காரணம் தேவை , அதுக்கு மொக்கையாக எதையாவது கண்டுபிடித்து பேசுவாங்க.

6 . நாம் ஆராய்ந்து பார்த்தால்/ அளவிடும் பார்வை பார்த்தால் வெட்கப்பட்டு ஓடி விடுவார்கள் . இல்லையெனில் " எதுக்கு அப்படி பாக்குற" என்று கோபமாக கேட்க முயற்சிப்பது.

7 . நமது ஆண் நண்பர்கள் , உடன் பணியாற்றும் திருமணமாகாத ஆண்கள் , அவர்களின் potential competitors . அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறை, நமக்கு அவர்கள் மீதான அபிப்பிராயம் என்ன என்று அடிக்கடி கேட்பாங்க.

8 . பேருந்து நிலையம் ,கடை வீதிகளில் safari suit ,Coolers, துப்பாக்கி இல்லாத சிறப்பு பாதுகாப்புப்படை காவலர் போல் நடந்து கொள்வார்கள் . நம்மைச் சுற்றி 360° லாம் கண்காணிப்பு இருக்கும் .

9 . ஒரு ஆண் ஆழமாக ஒரு பெண்ணை நேசிக்க ஆரம்பித்தால் புகைபழக்கத்தை தானாக விட்டுவிடுவார் என்பது ஆராய்ச்சி முடிவு . உண்மையில் கண்டதும் கூட.

10 . 180° கேரக்டர் மாற்றம் . அனைவரிடமும் சீரியஸ் முகமாக இருப்பவர்கள் நம்மிடம் விளையாட்டுத் தனமாக நடந்து கொள்வது , பிறரிடம் விளையாட்டுத்தனமாக நடப்பவர்கள் நம்மிடம் பொறுப்பாக நடந்து கொள்வது . நம்மால் மட்டும் அவர்களின் Shy , awkward , restless நிலையை அடிக்கடி பார்க்க முடியும் .

11. நம்மை ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள், நாம் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் போது நம்மை பார்த்துக் கொண்டே இருப்பார்கள் , புன்னகையோடு.

12 . தன்னுடைய தனிப்பட்ட விசயங்களை நம்மிடம் சொல்வார்கள் . அப்பாவோடு சண்டை போட்டது , அம்மாவிடம் அடி வாங்கியது எல்லாம் . சில பிரச்சினைகளைச் சொல்லி " என்ன பண்றது னு தெரியல" என்று நம் கருத்தை மறைமுகமாக கேட்பாங்க.

13 . தனக்காக ஆடை வாங்க போகும் போது நம்மை select பண்ண சொல்வார்கள் . Women love freedom in relationship , men love to be bounded . நீங்கள் அந்த டீக்கடைக்கு போகாதே என்றால் போக மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் நம் அதிகாரத்தை உரிமையை விரும்பி ஏற்பார்கள். ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிவிட்டு வந்து நம் அடி,திட்டை அவார்ட் போல் சிரிப்போடு வாங்கிக் கொள்வார்கள்.

14 . மறைமுகமாக பிடித்தத்தை தெரிவிப்பது. "உன்னை பார்க்கும் முன் ஒரு பொண்ணு என்னை பிடித்து என்கிட்ட சொல்லுச்சு . ஆனா எனக்கு பிடிக்கல . ஏனா .. எனக்கு …இந்த மாதிரி பொண்ணு தான் பிடிக்கும்" என்று நம் குணங்களை பட்டியல் இடுவார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரி சொல்லும் அடையாளம் அளவுக்கு அப்பட்டமாக தெரியும் . ( நாம் புரிஞ்சாலும் புரியாத மாதிரி ' அந்த மாதிரி பொண்ணு எங்க இருந்தாலும் உன் கூட நான் சேர்த்து வைக்கும் வர ஓய மாட்டேன் னு வசனம் பேசுவோம் ).

15 . நம்மோடு அதிக நேரம் செலவிட முயற்சி . கிளம்ப மனமில்லாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருப்பது . Always available ஆக இருப்பார்கள்.

16. நம்மை சந்திக்க தயராகி வரும்போது ,ஒரு கூடுதல் மெனக்கெடல். அது ஒரு நல்ல வாசனை திரவியம், திருத்தப்பட்ட தாடி , இஸ்திரி பண்ண சட்டை .. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

17 . நமக்காக ஏதாவது பணம் செலவு செய்து அதை திருப்பிக் கொடுக்க நினைத்தால் வாங்க மாட்டார்கள் .

18 . விளையாட்டு தனமாக ஹேர் பேண்ட்,பின் ,பேனா என்று நம்முடைய பொருளை பிடிங்கிக் கொள்வது , நமக்கு பிடிக்காத எதையாவது சொல்லி வம்பு வளர்த்து சந்தோசப்படுவாங்க.

19 . மறைமுகமாக உரிமை எடுத்துக் கொண்டு கும்பலில் நம் அருகில் நிற்பது , நாம் சாப்பிடும் தட்டில்/ பாக்ஸில் இருந்து உணவை எடுத்துக் கொள்வது , திருநீறு வைத்து விடு என்று நிற்பது( சிறுபிள்ளைத்தனமான பிடிவாதங்கள்), யாரோ ஒருவர் கழுத்தில் கத்தியை வைத்து பூ வாங்க வைத்திருக்க ,அதை வேறு வழியில்லாமல் நம்மிடம் தருவது .

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *