வீட்டுக்கு முன்னால் பெயிண்டால் கோலம் போடலாமா?
அந்த காலத்தில் கிராமங்களில் நூல்பிடித்த மாதிரி வரிசையாக வீடுகள் கட்டியிருப்பார்கள் தெருமுழுவதும் காலை மாலை சுத்தப்படுத்தி சாணம் தெளித்து தெருவே அடைத்து கொள்வது போல கோலம் போடுவார்கர்கள். ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் போடப்பட்டிருக்கும் கோலத்தின் அழகு கண்ணை பறிக்கும்
கோலம் வெறுமனே பார்த்து ரசிக்க கூடிய கோடுகள் அல்ல ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் மறைந்து கிடக்கும் பொதுவாக பெண்கள் புள்ளி இல்லாத கோலத்தை விரும்புவது இல்லை கோலம் என்பது கோடுகளால் போடும் ஒரு வரைபடம் தானே அதற்கு எதற்கு புள்ளிகள்... புள்ளிகள் இல்லாது கோலம் போட்டால் கற்பனைக்கு தகுந்தவாறு சுதந்திரமாக சித்திரங்களை தீட்டலாமே என்று நாம் சிந்திக்கலாம் .
ஆனால் கோலத்தில் உள்ள புள்ளிகள் சுகந்திரத்தை தடை செய்யும் முற்று புள்ளிகள் அல்ல ... வாழ்க்கை என்றால் எப்படியும் வாழலாம் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் சந்தோசம் மட்டும் தான் முக்கியமென்று வாழ்ந்தால் அது மிருக வாழ்க்கையாகும் . வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறை ஒழுக்கம் என்பது வேண்டும் . அப்போதுதான் அது வாழ்க்கையாக இருக்கும், இல்லை என்றால் அது முறையான வாழ்வாக இராது.
ஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை தர்ம வாழ்க்கையாக மாற்றுகிறதோ அதே போலத்தான் கோலங்களுக்கான புள்ளிகளும் கோலத்தை அர்த்தமுடையதாக்குகிறது. முறைப்படி இலக்கண சுத்தமாக கணக்கு போட்டு வைக்கின்ற புள்ளிகள் கோலத்தின் கோடுகளை தாறுமாறாக வளரவிடாது நெறிப்படுத்தி வகைப்படுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி விடும்... புள்ளிகளை மீறிய கோடுகள் அலங்கோலமாகத்தான் இருக்கும் .
புள்ளிகள் என்பது ஒழுக்கத்தின் மறுவடிவம். இந்துக்கள் எதையெடுத்தாலும் எதை சொல்ல வந்தாலும் ஒழுக்கத்தை மையப்படுத்தி சொல்வார்களே தவிர அதற்கு புறம்பாக சொல்ல மாட்டார்கள் ... காரணம் இந்த உலகமாக இருக்கட்டும் அல்லது இந்த பிரபஞ்சமாக இருக்கட்டும் எல்லாமே ஒரு வித ஒழுக்கத்தில் தான் அதாவது ஒரு கட்டுபாட்டில் தான் கால காலமாக நெறி தவறாமல் இயங்கி வருகிறது. வானத்தில் இருக்கின்ற எதோ ஒரு கிரகம் தனக்கென்று உள்ள நெறியை அதாவது சுற்று பாதையை விட்டு விட்டு தாறுமாறாக இயங்குகிறது என்று வைத்து கொள்வோம் அது மற்ற கிரகத்தின் மீது மோதி அந்த கிரகத்தை அழிப்பதோடு மட்டுமல்ல தன்னையும் அழித்து கொள்ளும். எனவே , ஒழுக்கம் மற்றும் நெறி என்பது இறைவன் வகுத்த விதி. அந்த விதியை மீறுகின்ற போது அழிவு தான் நிகழும்.
எனவே தான் நெறிப்பட்ட வாழ்க்கையை வலியுறுத்தி சொல்ல வந்த இந்துக்கள், தங்களது புறசெயலில் செயலில் கூட ஒழுங்கு படுத்தப்பட்ட நெறிமுறைகளை வலியுறுத்தினார்கள். அதன் சின்னம் தான் புள்ளிகளுக்குள் அடைபட்ட அல்லது கட்டுப்பட்ட கோலம் என்பது . இன்று வீடுகளின் முன்னால் கோலங்களை பார்ப்பது அரிதாகி விட்டது அதனால் தான் மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதும் அரிதாகி சந்தோசம் என்பது மனித வாழ்க்கையில் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது.
கோலத்தில் வைக்கின்ற புள்ளிகளுக்கே இத்தனை தத்துவம் என்றால் கோலம் போட பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை தத்துவம் மறைந்திருக்க வேண்டும் ... அரிசி மாவில் போடுகின்ற கோலம் சம்பிரதாய பழக்கம் மட்டுமல்ல ... சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானம் அவற்றில் மறைந்திருக்கிறது. உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட அரிசிக்கு எங்கே போவான் அதனால் மாக்கோலத்தை வலியுறுத்திய இந்து மதம்,.. மண்ணால் போடுகின்ற கோலத்தையும் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டது.
அரிசியை தவிர்த்து மண்ணால் போடுகின்ற கோலத்திற்கு கூட தத்துவம் இருக்கிறது. சந்தனமும், ஜவ்வாதும், பாலும் , நெய்யும், போஷித்து வளருகின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போகப்போகிறது.. தினசரி காலை நேரம் கோலம் போட அந்த மண்ணை தொடுகின்ற பெண் நானும் ஒரு நாள் இப்படி தான் ஆவேன் என்று வாழ்வின் நிலையாமையை யோசித்தாள் என்றால் அவளுக்கு பேராசை என்பது எப்படி வரும்?
எனவே மாவாலும் மண்ணாலும் கோலம் போடலாமே தவிர செயற்கை வண்ணங்களால் ரசாயன பொருட்களால் கோலம் போடவே கூடாது அப்படி போடுவது கோலங்கள் அல்ல அவை வெறும் கிறுக்கல்கள்.
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.