நாமும் இருப்போம் முடிந்தவரையாரோ அந்த சில மனிதர்களாய்


பேருந்தில் நிற்க முடியாமல்
சிரமப்படும் நமக்கு எழுந்து,
தன் இடம் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு
இருக்கை மனிதர்!

ரயிலில் மேலேற முடியாத 
நமக்கு தன் கீழ் இருக்கையை
கொடுக்கும் அந்த யாரோ ஒரு
உயர்ந்த மனிதர்!

சாலை விபத்தில் நமக்கு 
முதல் ஆளாய் ஓடோடி வந்து 
உதவும் அந்த யாரோ ஒரு
சகாய மனிதர்!
                                    தூக்கிவிடமறந்த நம் 
வண்டி சைட்ஸ்டாண்டை 
தன் சைகையிலேயே 
தூக்கிவிடச் சொல்லும் 
அந்த யாரோ ஒரு
சைகை மனிதர்!

 வண்டிச் சக்கரத்தில் 
மாட்ட இருக்கும் துப்பட்டாவை சொருவிக்கொள்ளச் சொல்லி
எச்சரிக்கும் அந்த யாரோ ஒரு 
எச்சரிக்கை மனிதர்!

செல்லும் வழி தெரியாமல் 
முழிக்கும் நமக்கு சரியான 
வழி சொல்லி உதவும்
அந்த யாரோ ஒரு
முகவரி மனிதர்!
                           திடீரென்று நின்று விட்ட 
நம் வண்டியை உதைத்து 
ஓட வைத்துக் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு 
உதை மனிதர்!

   சில்லறை இல்லாமல் நாம் 
தவிக்கும்போது, சரியான
சில்லறை கொடுத்து உதவும் 
அந்த யாரோ ஒரு 
நாணய மனிதர்!                                              தவறவிட்ட                  நம் பணப்பையை
நம்மைத் தேடிவந்து 
கொடுத்துச் செல்லும் 
அந்த யாரோ ஒரு 
நேர்மை மனிதர்!

    ATM இயந்திரத்தில்
பணம் எடுக்கத் தெரியாமல்
தவிக்கும் போது, எடுத்துதவும்
அந்த யாரோ ஒரு 
நல்ல மனிதர்!

   உயிருக்கு போராடும்
ஆபத்தான நிலையில்,
யாருக்கென்றே தெரியாமல்
இரத்தம் கொடுக்க முன்வரும்
அந்த யாரோ ஒரு
குருதி மனிதர்!

    இன்னும் இன்னும் இப்படி,
நம்மைச் சுற்றியே,
எத்தனையோ அந்த 
"யாரோ மனிதர்கள்!" 
எப்போதும் இருக்கிறார்கள்.

   
  தேவையானச் சூழலில்
தங்களுக்குள் இருக்கும் 
மனிதர்களை அவர்கள்
வெளிப்படுத்தி விடுகிறார்கள்.

      நாமும் இருப்போம் முடிந்தவரை
யாரோ அந்த சில மனிதர்களாய்!

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *