நன்றி பாடல் வரிகள்


அருட்திரு தேவ தேவன் போற்றி

அவர் தம் திரு நாமம் போற்றி

1. அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி

அவர் தம் திரு அன்பே போற்றி

2. அருட்திரு தூய ஆவி போற்றி

அவர் தம் திரு ஞானம் போற்றி

3. அருட்திரு அன்னை மரியாள் போற்றி

அவர் தம் திரு தூய்மை போற்றி

4. அருட்திரு சூசை முனியும் போற்றி

அவர் தம் திரு வாய்மை போற்றி

5. அருட்திரு தூதர் அமரர் போற்றி

அவர் தம் திரு சேவை போற்றி


அழகான பா ஒன்று நான் பாடவா

அன்பே என் அரசே உன் அருள் வேண்டவா

எந்நாளும் என் ஜீவன் நீயல்லவா

என் தேவன் நீ தந்த பொருளல்லவா

1. கார்கால மேகம் ஆ... பனித் தூறல் தூவ ஆ...

கானத்துக் குயில்கள் ஆ... கீதங்கள் பாட ஆ...

என் ஜீவனே என் உயிர் நேசனே - 2

எந்நாளும் என் கீதம் நீ கேட்கவே

2. மணம் வீசும் மலர்கள் ஆ... மன்னன் புகழ் பாட ஆ...

மரகத வீணை ஆ... மனதினை உருக்க ஆ... என்...


அழகிய கவிதையில் பாடிடுவேன்

அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன் - 2

1. அறிவிலி எனையே அவர் நினைத்தார்

ஆற்றல் மிகவே எனக்களித்தார் - 2

எதிரியினின்று விடுவித்தார் எனவே அவர் என் ஆண்டவரே

2. துன்பச் சூழல்கள் சூழ்கையிலே

துயரக் கறைகள் படர்கையிலே - 2

அன்பின் கரத்தால் அரவணைத்தார் ஆகவே அவர் என் ஆண்டவரே

3. யாழில் நான் ஒரு இசைமீட்டி யாகமென ஒரு பாடலிலே - 2

இருளிலிருந்து மீட்டதற்கு என்றும் நன்றி பாடிடுவேன்


ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும்

ஆனந்தம் ஆனந்தம் என் மனதில் ஆண்டவா உனைப்பாட - 3

ஆனந்தம் ஆனந்தம் என்மனதில் ஆண்டவா உனைப்பாட

1. வான்முகிலும் உயர்மலையும் உந்தன் புகழ்பாட ஆ...

தேன்பொழியும் நறுமலர்கள் உன் பெயர் சுவைபாட

வான்பொழியும் நீர்த்துளிகள் உந்தன் அருள்பாட

யான் உனது திருப்புகழை கவியால் நிதம்பாட ஆண்டவா...

2. பகல்ஒளியும் பால்நிலவும் ஒளியாம் உனைப்பாட ஆ...

அலைகடலும் அதன் சிறப்பும் கருணையின் விதம்பாட

மழலைகளின் தேன்மொழிகள் தூய்மையின் நிறம்பாட

யான் உனது திருப்புகழை கவியால் நிதம்பாட ஆண்டவா...


ஆயிரம் நாவு வேண்டும் ஆண்டவா உனைப் புகழ

ஆயினும் இயேசுவே உன்புகழ் பெரியதே - 4

1. தாயின் உதரம் தரிக்கும் முன்னே தேவா எனை நினைத்தாய்

தேடி வந்து ஆண்டு கொண்டு தாசன் எனை அழைத்தாய் - 2

தேவா எனை நினைத்தாய் உன் தாசன் எனை அழைத்தாய்

2. உன்னிடமிருந்து நான் பெற்ற வரங்கள் உரைக்க முடியுமோ

கண்மணி என நீ காத்திட்ட அருமை கருத இயலுமோ - 2

அதை உரைக்க முடியுமோ முற்றும் கருத இயலுமோ


ஆயிரம் பாடல் பாடுவேன் ஆனந்தம் வாழ்வில் காணுவேன் - 2

அன்புக்கு அர்த்தங்கள் சொல்லுவேன் அன்பர் அன்பைப் பாடுவேன் - 2

1. தேவையில் தேடினேன் தேற்ற என்னில் வருகிறார்

வாழ்க்கையில் வாடினேன் வாழ்த்த என்னில் வருகிறார் - 2

நான் செல்லும் பாதையில் தடைபடும் வேளையில்

வழிகாட்டி ஒளிகாட்ட வருகிறார் என்னில் வருகிறார்

2. கலங்கிடும் வேளையில் காத்து என்னை ஆள்கிறார்

காரிருள் நீங்கவே கருணை தேவன் வருகிறார் - 2

வறுமையில் துணைவனாய் வெறுமையில் தலைவனாய்

உறவாக நிறைவாக வருகிறார் என்னில் வருகிறார்


ஆயிரம் மலர் தூவி இறையுன்னை வாழ்த்த வந்தேன்

ஆனந்த கவிதையிலே நன்றிப்பண் பாடிடுவேன்

இயேசுவே நன்றி - 4

1. உலகினிலே கவலைகளே என்னை வாட்டுதய்யா - 2

உன்னிடமே ஓடிவந்தேன் என்னை ஏற்றுக் கொள்வாய் - 2

2. உன் வரவால் உலகமெல்லாம் உவகை கொண்டதய்யா - 2

ஊமைகளும் பேசிடவே குருடரும் பார்க்கின்றனர்

உன் புகழ் பரப்புகின்றனர் - 2


இதய யாழில் சுரம் இசைத்து புகழ்ந்து பாடுங்கள் - தேவன்

இணையில்லாத செயலுக்காக நன்றி கூறுங்கள் - 2

1. வாழ்வு முழுவதும் வழியை காட்டி தோழனாகினார் - என்

தாழ்வை நீக்கி ஏழ்மை போக்கி பக்தனாக்கினார் - 2

உருகும் மெழுகாய் என்னை மாற்றி தீபம் ஏற்றினார் - 2

உன் வேதம் சொல்ல பேதை என்னை கருவியாக்கினார்

2. மனிதர்களை புனிதராக்க மனிதனாகினார் - இந்த

அடிமைக்கும் உரிமைப் பெற குரல் கொடுக்கின்றார் - 2

இருள் சூழ்ந்த மனித வாழ்வில் ஒளியை ஏற்றினார் - 2

இந்த உலகம் எங்கும் பொதுமை வளர புதுமை செய்கின்றார்

559. இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமோ

இதயத்தில் நன்றி சொன்னால் இயேசுவுக்காகிடுமோ - 2

1. வாழ்வில் காட்டுதலே வானிறை கேட்கும் நன்றி

மனத்தாழ்ச்சியும் தரித்திரமும் தயவும் காட்டும் நன்றி - 2

2. உலகை உருவாக்கி உண்மை வாழ்வளித்து

தன்னை பலியாக்கி தந்திடும் இறைவனுக்கு - 2


இதுவரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி - 2

1. உவர்நிலமாக இருந்த என்னை

விளைநிலமாக மாற்றிய உம்மை - 2

அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் - 2

நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி - 2

2. தனிமரமாக வளர்ந்த என்னை

பழமரமாக சிறப்பித்த உன்னை - 2

திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் - 2

இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி - 2


இயேசு எனக்குப் போதும் எந்தன் வாழ்வில் நிம்மதி - 2

1. பாவத்தோடு வந்தேன் என்னைப் பாசத்தோடு ஏற்றார் - 2

கண்ணிழந்து நின்றேன் என்னைக் கைகொடுத்துக் காத்தார் - 2 - அந்த

2. கவலையோடு நின்றேன் என்னைக் கருணையோடு பார்த்தார் - 2

வழி இழந்து நின்றேன் என்னை வழியில் வந்து ஏற்றார் - 2 - அந்த

3. உலகில் யாரும் வெறுப்பார் அவர் உருக்கத்தோடு அணைப்பார் - 2

பாவி என்றும் பாரார் என்னைத் தாவி வந்து காப்பார் - 2


இயேசு கிறிஸ்து ஆண்டவர் இன்றும் என்றும் இருப்பவர்

இன்னல் நீக்கி என்னை என்றும் காப்பவர் - 2

ஆனந்தம் அல்லேலூயா - 2

இறைவன் இயேசு என்றும் என்னில் இருப்பதால் - 2

1. பாவக் கறைகள் நிறைந்த எந்தன் உள்ளத்தை

பரமன் இயேசு குருதி சிந்தி கழுவினார் - 2

அமைதியின்றி அலைந்த எந்தன் மனதினை

ஆவி அனுப்பி அன்பு பொழிந்து மாற்றினார்

2. இரவும் பகலும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்

இயேசு அருளால் இனி எனக்கு குறையில்லை - 2

இன்பம் துன்பம் எதுவந்தாலும் பயமில்லை

இயேசு எனது இறைவனாக இருப்பதால்


இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே

உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால்

எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2

1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த

இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும்

இரங்கிடும் இறைவன் இருப்பதனால்

இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2

2. இரவினில் தீபமுண்டு இந்த இல்லத்தில் ஒளியுமுண்டு - 2

எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால்

எந்த இரவிலும் காவலுண்டு - 2


இயேசுவின் நாமம் இனிதான நாமம்

இணையில்லா நாமம் இன்ப நாமம் - 2

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்

பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் - 2

2. பரிமளத் தைலமாம் இயேசுவின் நாமம்

பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம் - 2

3. வானிலும் புவியிலும் மேலான நாமம்

வானாதி வானவர் இயேசுவின் நாமம்

4. நேற்றும் இன்றும் மாறிடா நாமம்

நம்பினோரை என்றும் கைவிடா நாமம்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்

மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்

சாபப் பிசாசை துரத்திடும் நாமம்


இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்

திரும்பிப் பார்க்க மாட்டேன் - 2

சிலுவையே முன்னால் உலகமே பின்னால் - 2

இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே - 2

1. அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை அடியேன் உள்ளத்திலே

ஆண்டவர் இயேசு அடைக்கலம் அன்றோ ஆதலின் குறையில்லை - 2

ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால் - 2

அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே விடுதலை அடைந்தேனே - 2

2. தாயும் அவரே தந்தையும் அவரே தரணியில் நமக்கெல்லாம்

சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும் ஆயன் அவரன்றோ - 2

ஆயனே முன்னால் அலகையே பின்னால் - 2

அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே ஆறுதல் அடைந்தேனே - 2


இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி

என்றே சொல்லிடுவோம் என்றே பாடிடுவோம் - 2

1. அச்சம் என்பது நீங்கி விடும்

ஆண்டவர் இயேசு துணையிருப்பார் - 2

2. பகைமை எல்லாம் பறந்து விடும்

பரமன் அன்பு பெருகி விடும் - 2

3. தீய சக்திகள் பறந்து விடும்

தூய ஆவி குடி கொள்வார் - 2

4. கவலைகள் எல்லாம் கலைந்து விடும்

கடவுள் நம்மைக் காத்திடுவார் - 2

5. ஆவியின் கனிகளைப் பெற்றிடுவோம்

அன்பு மகிழச்சியில் வாழ்ந்திடுவோம் - 2


இயேசுவே இறைவா தொழுகின்றேன் - உன்

திருவடி தொட நான் விழைகின்றேன்

இயேசுவே இறைவா மகிழ்கின்றேன் - உன்

தோழனாய் என்னை ஏற்றுக்கொண்டாய்

1. கருவினிலே எனைத் தெரிந்து கொண்டாய் - என்

உருவினிலே உந்தன் உருபதித்தாய்

கடந்திட்ட பாதையை நோக்குகின்றேன் - உன்

காலடிச் சுவடுகள் காண்கின்றேன்

என் கரம் பிடித்து நடந்துசென்றாய்

உன் வழியில் எனை நடத்திச் சென்றாய்

நன்மையின் நாயகன் நீயன்றோ

நன்றியால் உன்புகழ் பாடிடுவேன்

2. உறவுகள் என்னை பிரிந்திட்ட வேளை

உணர்ந்தேன் இருள் எனை சூழ்ந்தது போல்

சிலுவையின் நிழல் எனைத் தீண்டியவேளை

தென்றலின் இனிமை நான் சுவைத்தேன் என் கரம்...

3. அழுதிடும் கண்களில் நீ இருப்பாய் - என்றும்

சோர்ந்திடும் கரங்களில் நீ தவழ்வாய்

கதி இழந்தோர் வாழ்வில் உறைந்திடும் தேவா - உன்

உறைவிடமே என் புகலிடமே என் கரம்...


இறைவன் எழுந்தார் நம்முளமே இதயம் மகிழ்ந்தே பாடிடுவோம்

இனிமை பொங்கும் அவர் உறவால்

இனிய நல் உலகம் படைத்திடுவோம்

இனி சோகமும் துயரமும் இல்லை

எங்கள் நேசர் எம்மில் வாழ்கின்றார் - 2

1. அன்னியர் போலவே தொலைவில் நின்றோம்

அன்பர் இயேசுவின் வரவில் இணைந்தோம்

அன்பும் பாசமும் வாழ்வெனக் கொண்டு

ஆண்டவன் அரசினை அகிலத்தில் அமைப்போம் - 2 இனி...

2. வஞ்சமும் பழியும் வாழ்வினில் அழிந்து

மன்னிப்பும் ஏற்பும் நிறைவாய் மலர்ந்து

சமத்துவப் பூக்களை பாரினில் உதிர்த்து

அயலானின் அன்பு வாழ்வாய் உயர்ந்து - 2 இனி...


இறைவன் படைத்த நாளிதே நன்றி நன்றிப் பாடுவோம்

நன்றி இறைவா - 4

1. வானம் பூமி யாவுமே நன்றி கூறட்டும்

வாழும் உயிர்கள் இயேசுவை வணங்கி மகிழட்டும் - 2

இதயம் இன்று இனிய கீதம் பாடட்டும் - 2

இறைவன் இயேசு என்றும் நம்மைக் காப்பதால் நன்றி...

2. கவலை யாவும் மறைந்தது கலக்கமில்லையே

காலமெல்லாம் கர்த்தர் இயேசு நம்மோடு உள்ளார்

புதிய வானம் புதிய பூமி பூத்திட - 2

புதிய பயணம் புவியில் இன்று தொடருவோம் நன்றி....


 இறைவா உமக்கு நன்றி இறைவா உமக்கு நன்றி - 2

1. அன்பைப் பொழிவதற்காக அருளை நிறைப்பதற்காக - 2

2. உணவாய் எழுந்ததற்காக உறவை வளர்ப்பதற்காக - 2

3. தந்தையாய் இருப்பதற்காக தாயாய் அணைப்பதற்காக - 2

4. உறவினர் நண்பருக்காக உதவிடும் தோழருக்காக - 2

5. துணையாய்த் தொடர்வதற்காக துன்பங்கள் துடைப்பதற்காக - 2

6. வியத்தகு செயல்களுக்காக விண்ணக மாட்சிமைக்காக - 2


இறைவா உம்மை வாழ்த்துகின்றோம் ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்

1. நித்திய தந்தாய் உமை என்றும் இத்தரை எல்லாம் வணங்கிடுமே

விண்ணும் விண்ணக தூதர்களும் விண்ணின் மாண்புறு ஆற்றல்களும்

2. செரபீம் கெரபீம் யாவருமே சேர்ந்துமக் கென்றும் பண்ணிசைப்பர்

தூயவர் தூயவர் தூயவராம் நாயகன் மூவுலகாள் இறைவன்

3. மாட்சிமை மிக்க உம் மகத்துவத்தால் வானமும் வையமும் நிறைந்துள்ளன

அப்போஸ்தலரின் அருள் அணியும் இறைவாக்கினரின் புகழ் அணியும்

4. மறைசாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே

இத்தரை எங்கும் திருச்சபையும் பக்தியாய் உம்மை ஏற்றிடுமே

5. பகருதற்குரிய மாண்புடையோய் தகைசால் தந்தாய் தாள் பணிந்தோம்

உம் ஒரே திருமகன் இயேசுவையும் எம் இறையெனப் புகழ்ந்தேற்றுகிறோம்

6. தேற்றரவெமக்குத் தருபவராம் தூய உம் ஆவியைத் துதிக்கின்றோம்

வேந்தே மாண்புயர் கிறிஸ்துவே நீர் தந்தையின் நித்திய மகனாவீர்

7. மண்ணுயிர் மீட்க மனங்கொண்டு கன்னியின் வயிற்றில் கருவானீர்

சாவின் கொடுக்கை முறித்தழித்து பாவிகள் எமக்கு வான் திறந்தீர்

8. இறுதி நாளில் நடுத்தீர்க்க வருவீர் என யாம் ஏற்கின்றோம்

உம் திருஇரத்தம் மீட்ட எம்மை அன்பாய் காத்திட வேண்டுகின்றோம்

9. முடியா மகிமையில் புனிதருடன் அடியார் எம்மையும் சேர்த்திடுவீர்

உம்மவர் நாங்கள் எமை மீட்பீர் உம் உடைமைக்கே வாழ்வளிப்பீர்

10. எம்மை ஆண்டு இறைமக்களாய் என்றும் சிறப்புறச் செய்திடுவீர்

எந்நாளும் உம்மை வாழ்த்துகிறோம் என்றும் உம் பெயர் போற்றுகிறோம்

11. இறைவா இந்நாள் எம்பாவக் கறைகள் போக்கிக் காத்திடுவீர்

கனிவாய் இறங்கும் ஆண்டவரே கனிவாய் இரங்கும் எம்மீதே

12. உம்மையே நம்பினோம் ஆண்டவரே எம்மீதிரக்கம் கொள்வீரே

உம்துணை நம்பினோம் ஆண்டவரே என்றும் கலக்கம் அடையோமே


இனிய வாழ்வு கண்டேன் என் இயேசுவே உன் அன்பிலே

இனியும் கவலை இல்லை உனது வரவிலே

என் வாழ்விலே நீ செய்த நன்மைகள்

மறக்க முடியுமா நன்றி இயேசுவே - 2


உம் பணி வாழ்வையே எங்கள் அகலாக ஏற்று

அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம்

அன்பென்னும் கொடையால் மனித வாழ்வை

அழியா உறவில் இணைக்கும் பணியை

நிறைவாய் வாழ்ந்த இறைமைந்தனே

எங்கள் அருள்வாழ்வின் வழிகாட்டியே

1. சிறைப்பட்டோர் விடுதலை அடைய வந்தீர்

வறியவர் வாழ்வுக்கு வழிவகுத்தீர் - 2

உலகின் இடர்களை வென்றிடவே - இறை

சித்தத்தில் நாளும் வாழ்ந்தவரே

நற்செய்தி முழங்கி நம்பிக்கை வாழ்வில்

புதிதாய் உலகை மாற்றினீரே

2. தந்தையின் அன்பினைப் பகிர்ந்தவரே - இறை

ஆவியின் ஏவுதல் நிறைந்தவரே - 2

ஆயிரம் ஆயிரம் புதுமைகளால் - அன்று

எளியவர் மனதை ஆட்கொண்டீர்

வாழ்வெனும் கடலில் அன்பெனும் படகாய்

என்னிலே வாழ்ந்திடும் பரம்பொருளே


உம்மைப் போற்றுகின்றோம்

உம்மைப் புகழுகின்றோம் நன்றி கூறுகின்றோம்

1. இறைவா உம் மாட்சிமை மேலானது

இறைவா உம் மகத்துவம் மேலானது - 2

2. இறைவா உம் வல்லமை மேலானது

இறைவா உம் வார்த்தைகள் மேலானது - 2

3. இறைவா உம் அன்புள்ளம் மேலானது

இறைவா உம் அருட்கரம் மேலானது - 2

4. இறைவா உம் திருவடி மேலானது

இறைவா உம் திருவாழ்வு மேலானது - 2


உயிரோடு கலந்து உறவான உனக்கு நன்றி - 2

உலகினில் உறவுகள் அளித்திட நிலைக்கு நன்றி - 2

மனிதமும் புனிதமும் உறவென்ற மொழிக்கு நன்றி - 2

உறவாலே வாழ்விக்கும் அமுதான கொடைக்கு நன்றி - 2

நன்றியின் பாடல் உறவின் பாடல்

நன்மையைக் கூறல் வாழ்வின் தேடல் - 4

1. கவிபாடும் உலகை படைத்திட்ட இறைக்கு நன்றி - 2

கட்டவும் நடவும் நீ தந்த பணிக்கு நன்றி - 2

கருத்தையும் செயலையும் புதுப்பிக்கும் நெறிக்கு நன்றி - 2

காலமும் உடன் வந்து உயிரூட்டும் தயைக்கு நன்றி - 2

2. வறியோரின் கண்ணீர் துடைக்கின்ற பணிக்கு நன்றி - 2

வளங்களும் நலன்களும்நீ தானே எமக்கு நன்றி - 2

அம்மையும் அப்பனும் ஆனாயே புவிக்கு நன்றி - 2

அன்பினில் அர்ப்பணம் வளர்த்தாயே அதற்கு நன்றி - 2


உலகமே ஒரு குடும்பமாகும் உறவில் நாம் வளர்ந்தாலே

நானிலங்கள் நிறைவைக் காணும்

வளங்கள் கூடும் உறவு சேரும்

இணைந்து நாம் மகிழ்ந்தாலே - 2

1. மண்ணும் வளமும் பொருளும் திறனும்

மனித வாழ்வின் கொடைகளே

தன்னலங்கள் வளர்ந்ததாலே

பிரிவும் பகையும் மலிந்ததே - 2

ஒன்றாகும் எண்ணங்கள் ஓங்கி இன்று

உண்மைகள் உயிர் பெற்று உயரட்டும் - 2

உதிக்கும் உறவில் பிறக்கும் புதுயுகம்

அனைத்தும் சமமென ஆகட்டும் - 2

2. கலையில் கல்லும் கனிதல் போலே

கருணை ஒன்றே போதுமே

கடின மனமும் கரைவதாலே

மனித மாண்பும் உயருமே - 2

பரந்த உள்ளங்கள் அதிகமாக

அமைதி ஆற்றலும் செழிக்கட்டும் - 2 உதிக்கும்...


உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்

துலங்கிடும் உமக்கே இறைவா

நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி கூறுகின்றோம் - 2

1. இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு

இணையில்லா பலியில் இறைவனை உண்டு - 2

சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில் ஆ... - 2

நின்றிட அழைத்தாய் நிலைப்போம் தினமும்

2. உண்மை வழியை உலகுக்குக் காட்ட

உலகத்தை அன்பால் ஒன்றாய் திரட்ட - 2

அகயிருள் அகற்றி இறையருள் புகுத்த ஆ... - 2

அன்புடன் அளித்தோம் எம்மையே உமக்கு


உறவில் மலரும் அன்பின் முரசு முழங்குது - 2

உரிமை பெறவும் புதுமை பெறவும் அழைக்குது

பகிர்ந்து தரவும் பலனைப் பெறவும் அழைக்குது

பலரும் வாழ உறவின் விருந்து மணக்குது

1. வேற்றுமைகள் மறந்து நிற்கும் புதிய உலகிலே

வேண்டியவர் யாவருமே பொதுவெனக் கொள்வோம் - 2

சாதி வெறிகள் கடந்து நின்று அன்பு செய்குவோம் - 2

சமத்துவமே உயிர்மூச்சு என்று சொல்லுவோம்

அனைவருமே இயேசுவுடன் ஒன்று கூடுவோம்

அவருடனே வாழ்ந்து தினம் சாட்சி சொல்லுவோம்

2. உண்மைக்காக சாட்சி சொல்லும் இனிய உலகிலே

நீதி நேர்மை நிலைக்க நம்மை தினம் இழந்திடுவோம் - 2

சுயநலங்கள் மறந்து நின்று உயர்வு காணுவோம் - 2

இறைபணியே உயிர்வாழ்வு என்று கொள்ளுவோம் அனைவருமே...


உறவே மனிதம் உறவே புனிதம் உறவே உண்மை தெய்வம் - 2

மனங்கள் இணைய மலரும் எங்கும் இறைவன் ஆட்சியே

மண்ணில் நாமெல்லாம் அதற்கு சாட்சியே

1. பிறக்கும் போது உலகில் நாமும் தேடி வந்ததென்ன

அன்புச் செல்வமல்லவா

இறக்கும் போது இங்கிருந்து எடுத்துச் செல்வதென்ன

உறவு ஒன்றேயல்லவா - 2

தன்னை வழங்கும் தியாகமாகவே

தெய்வம் கண்களில் தெரியும் நேரிலே

பிறருக்காக ஆற்றும் பணியிலே

பிறப்பின் மேன்மை புரியும் பாரிலே

வாழுவோம் அன்பிலே பண்பிலே

வளருவோம் உறவிலே மனித நிறைவிலே

2. ஏற்றத்தாழ்வை அகற்றி வாழ்ந்தால் மகிழ்வு இல்லையா

எங்கும் வளமை இல்லையா

மக்கள் கைகள் இணைந்தால் ஆற்றல் பிறப்பதில்லையா

மாற்றம் நிகழ்வதில்லையா - 2

அன்பு நீதி நெறியில் நிலைத்தால்

ஆவோம் இன்ப குடும்பமாகவே

சுவர்கள் வீழ்த்திப் பாலம் அமைத்தால்

சுடரும் அமைதி உலகமாகவே

களைவோம் பிரிவையே பிளவையே

காண்போம் உறவையே வாழ்வின் நிறைவையே


உன் நாமம் சொல்லச் சொல்ல என் நெஞ்சம் மகிழுதய்யா

என் வாழ்வில் மெல்ல மெல்ல உன் இன்பம் பெருகுதய்யா - 2

1. மாணிக்கத் தேரோடு காணிக்கை வந்தாலும் உனக்கது ஈடாகுமா

உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமா - 2

2. தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்

உன் நாமம் என்னென்பேன்

நிறை என்பேன் இறையென்பேன் நீங்காத நினைவென்பேன்

உன் நாமம் என்னென்பேன் - 2

3. ஊரெல்லாம் உலகெல்லாம் உயிர் கொண்ட பேரெல்லாம்

உன் நாமம் சொல்லாதோ

பாரெல்லாம் வாழ்கின்ற படைப்புகளெல்லாமே

உன் நாமம் புகழாதோ - 2


உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமய்யா

உன்னருளைப் போற்றுவது என் வாழ்வின் செல்வமய்யா - 2

1. துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீ இருப்பாய்

கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் - 2

அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்

உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் - 2

2. பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்

பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய் - 2

அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்

உன்னன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன் - 2


எத்துணை நன்று எத்துணை நன்று

அத்தனை பேரும் ஒன்றி வாழ்வது எத்துணை நன்று - 2

1. ஒரு கொடி கிளையாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று

அந்த ஒரே திருச்சபையில் நாமிருக்கின்றோம் எத்துணை...

ஒரே குடும்பமாய் நாமிருக்கின்றோம் எத்துணை...

இன்று ஒரேவித அழைப்பை நாம் பெற்றுக்கொண்டோம் எத்துணை...

2. புதியதோர் உலகம் கண்டிடுவோமே எத்துணை நன்று

அதில் புதுமை வாழ்வை அடைந்திடுவோமே எத்துணை...

பிரிவினை பிணக்குகள் தீர்த்திடுவோமே எத்துணை...

என்றும் இறைவனில் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே எத்துணை...


எந்தன் நாவில் புதுப்பாடல் எந்தன் இயேசு தருகிறார் - 2

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்

உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா - 2

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்

தேவன் அவர் தீபமாய் என்னைத் தேற்றினார் ஆனந்தம்....

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்

பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் ஆனந்தம்....


எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

எல்லாம் உமக்காக - 2

1. எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்

எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் - 2

எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் - 2

உந்தன் அதிமிக மகிமைக்கே

2. ஒளியை நோக்கா மலரில்லை

நீரை நோக்கா வேரில்லை - 2

உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் - 2

வாழ்வில்லை அதில் பயனில்லை


எல்லா காலத்திலும் எல்லா வேளையிலும்

நன்றியால் உம்மை நான் துதிப்பேன்

1. தந்தையும் நீயே தாயும் நீயே சொந்தமும் நீயே

எந்தன் பாக்யமும் நீயே

2. ஆதியும் நீயே அந்தமும் நீயே ஜோதியும் நீயே

எந்தன் பாக்யமும் நீயே

3. அன்பனும் நீயே நண்பனும் நீயே அனைத்தும் நீயே

எந்தன் பாக்யமும் நீயே

4. வளமும் நீயே நலமும் நீயே வாழ்வும் நீயே

எந்தன் பாக்யமும் நீயே

5. ஒளியும் நீயே வழியும் நீயே உண்மையும் நீயே

எந்தன் பாக்யமும் நீயே


என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி நன்றியுடன் மகிழுவேன்

இன்னல் யாவும் அகன்ற புதுமை மன்னர் அவர் மகிமையே - 2

பிறந்தார் இயேசு பிறந்தார் உதித்தார் மனதில் உதித்தார் - 2

1. மனிதன் வாழ உலகில் தேவன் மகிமை யாவும் துறந்தார் - 2

இனிதாய் நாமும் புதிதாய் வாழ்வு பெறவே இயேசு பிறந்தார்

கனிவாய் நமது இதயம் தேடி இதமாய் வந்து அமர்ந்தார்

2. கவலை என்னை அணுகும் போது துணையாய் தாமும் வருவார் - 2

புயலாய் துயரம் வாழ்வில் வீசும் அருகில் நின்று காப்பார்

இமைகள் கண்ணைக் காக்கும் தேவன் அதுபோல் என்னைக் காப்பார்


என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு

அன்பு ஆராதனை நன்றியுமென்றும் - 2

1. பரலோக வாசிகள் அருமையாய் உம்மை

புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த - 2

நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ

நேசமுன் அதிசய இரக்கமுமல்லோ

2. மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து

நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென - 2

ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு

பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே

3. சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்

சீரிய திருவுள்ளம் பிறழாது வளர - 2

இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க

நேசமாய் அருள வேண்டுகின்றோமே


என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு

நெஞ்சார என்றும் நன்றி சொல்வேன்

வாழ்வளித்த வள்ளலுக்கு வாழ்வளிக்கும் இயேசுவுக்கு

வானெங்கும் முழங்க நன்றி சொல்வேன்

நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன்

நன்றி நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன்

1. பாவங்களைப் போக்கினார் நன்றி சொல்வேன்

பயமதையே நீக்கினார் நன்றி சொல்வேன்

பரிவுடனே நோக்கினார் நன்றி சொல்வேன்

பாதைதனைக் காட்டினார் நன்றி சொல்வேன்

உண்மை அன்பு நீதியை உணரச் செய்த இயேசுவை

உளமாரப் பாடியே நன்றி சொல்வேன் - 2

2. எளியவரை நோக்கினார் நன்றி சொல்வேன்

ஏழைகளை நேசித்தார் நன்றி சொல்வேன்

அடிமைகளின் விலங்கொடித்தார் நன்றி சொல்வேன்

அழைப்பவரின் குரல் கேட்டார் நன்றி சொல்வேன்

உள்ளம் தேடும் அமைதியை உணரச் செய்த இயேசுவை

ஊரெங்கும் பாடியே நன்றி சொல்வேன் - 2


எனக்கு முன்னும் எனக்குப் பின்னும் இருக்கும் இயேசுவே

என்னைச் சார்ந்தும் என்னைச் சூழ்ந்தும் காக்கும் இயேசுவே - 2

விந்தை மிகுந்த செயல்கள் புரியும் தங்க இயேசுவே

தந்த உமது செயல்களுக்காய் நன்றி இயேசுவே - 5

1. தாயின் கருவில் அறிந்து வைத்து உருவம் தந்தவரே

உடலில் அதையும் பொதிந்து வைத்து அபயம் தந்தவரே

அமர்வதையும் எழுவதையும் அறிந்து வைத்தவரே - 2

பாவி என்னைத் தேர்ந்து மீட்டாய் நன்றி இயேசுவே - 4

2. வார்த்தை வடிவில் ஆற்றல் தந்து வாழ்க்கையானவரே

அழியா உணவாய் இதயம் இறங்கி உயிரில் கலந்தவரே

எந்த நிலையில் இருந்த போதும் சிறகில் அணைப்பவரே - 2

என்னை மீட்க உயிரை ஈந்தாய் நன்றி இயேசுவே - 4


ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன் - அதை

பாமாலையாக நான் சூடுவேன்

உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்

புகழ்பாடி புகழ்பாடி நான் வாழுவேன் - 2

1. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில்

மலர்ப்பாக்கள் பல கோடி உருவாக்கினாய் - 2

என் வாழ்வும் ஒரு பாடல் இசைவேந்தனே - அதில்

எழும் ராகம் எல்லாமுன் புகழ்பாடுதே - 2

ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே

அன்னையும் நீயே தந்தையும் நீயே போற்றுகிறேன் உனை இயேசுவே

2. இளங்காலை பொழுதுந்தன் புகழ்பாடுதே - அங்கு

விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே - 2

அலை ஓயாக்கடல் உந்தன் கருணை மனம் - வந்து

கரை சேரும் நுரை யாவும் கவிதைச்சரம் - 2 ஆதியும் நீயே.....


ஒரு பாடல் நான் பாடுவேன் மன்னன் உந்தன் கருணையை

எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து

நன்றிப் பாடல் நான் பாடுவேன்

1. ஒரு நாளில் நீ செய்த நன்மைகளை

சொல்ல நினைத்தால் வாழ்நாளே போதாதய்யா

சொல்லியும் தீராதய்யா நன்றி சொல்வேன் நாளெல்லாம்

உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன்

2. உன் அன்புத் தாயாக தந்தையாக

எந்தன் இறைவா எந்நாளும் எனைப் பார்க்கின்றாய்

கண்ணாக காத்தாள்கின்றாய்

நான் நினைப்பேன் நன்றி சொல்வேன்

நாளெல்லாம் பாடிப் புகழ்வேன்


ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன்

1. வறுமையில் வாழ்பவன் என் நண்பன்

வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் - 2

அல்லல் படுபவன் என் நண்பன்

ஆபத்தில் இருப்பவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன்

2. பிறர் குலம் சேர்ந்தாலும் என் நண்பன்

பிற இனம் வாழ்ந்தாலும் சகோதரன் - 2

பிற மொழி பேசினாலும் என் நண்பன்

பிற மதம் சார்ந்தாலும் சகோதரன் காரணம் அவனும் மனிதன்

3. அழகை இழந்தவன் என் நண்பன்

அறிவை இழந்தவன் சகோதரன் - 2

ஊனமாய் இருப்பவன் என் நண்பன்

ஊமையாய் பிறந்தவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன்


ஒன்றாகக்கூடி வந்து பாடும் நேரம் - இது

நன்றியை மாலைகட்டி சூடும் நேரம் - 2

ஆண்டவர் படைத்த நாள் இது இன்று -2

அன்போடு உறவாடி சேரும் நேரம்

கூடிவருவோம் நன்றி கூறிவருவோம் - இன்று

உள்ளத்தின் உறவுப்பூவைத் தூவி மகிழ்வோம் - 2

1. இறையன்பு இணைக்கின்ற குலமாகினோம்

பிறரன்பில் வாழுகின்ற பிறப்பாகினோம் - 2

அன்பென்னும் புதுவாழ்வின் ஆடையணிவோம் - 2

ஆனந்த பண்பாடிக் கொண்டாடுவோம் கூடிவருவோம்...

2. குரல் வேறு ஆனாலும் பா ஒன்றுதான்

உடல் வேறு ஆனாலும் மனம் ஒன்றுதான் - 2

இனம் வேறு குலம் வேறு என்பவையெல்லாம் - 2

இயேசுவுக்குள் வந்த நம்மில் இல்லை என்போம் கூடிவருவோம்...


ஒயாத கருணையின் இறைவனே உளமார்ந்த நன்றி நன்றி - 2

பாயாத இடமெல்லாம் பாய்ந்து ஓடிடும்

காயாமல் அவை என்றும் பயன்கள் நல்கிடும்

1. காலங்கள் மாறலாம் கடல் வற்றிப் போகலாம்

ஆனால் உன் கருணையோ மாறாதது

மலை சாய்ந்து போகலாம் மணல் கல்லாய் போகலாம்

ஆனால் உன் கருணையோ தீராது

மாறாத இறைவா தீரா உன் கருணையை

இறவாத வரையில் மறவாது புகழ்வேன் - 2

2. சொந்தங்கள் மாறலாம் சுவையற்றுப் போகலாம்

ஆனால் உன் கருணையோ மாறாதது

எல்லாமும் மாறலாம் இல்லாமல் போகலாம்

ஆனால் உன் கருணையோ மாறாதது மாறாத...


காற்றே கடலே மேகங்களே கடவுளின் புகழ்பாடுங்கள்

கார்கால மேகம் கருக்கொண்ட மழையே கடவுளின் புகழ்பாடுங்கள்

1. வெம்மையின் சூரியனே தண்மையின் நிலவே

கடவுளின் புகழ்பாடுங்கள்

வானத்து மேலுள்ள விண்மீனே முகிலே

கடவுளின் புகழ்பாடுங்கள்

நெருப்பே கல்மழையே திகிலூட்டும் புயலே

கடவுளின் புகழ்பாடுங்கள்

பனியே அனலே புகழ்பாடுங்கள்

2. உயர்வான மலையே தாழ்வான குன்றே

இறைவனின் புகழ்பாடுங்கள்

ஓடிவரும் நதியே வளமாக்கும் நிலமே

இறைவனின் புகழ்பாடுங்கள்

வயலோர மரமே வரப்போர செடியே

இறைவனின் புகழ்பாடுங்கள்

கடலில் மீனே புகழ்பாடுங்கள்


காற்றோடு கரையும் தீபங்கள் கண்ணீரில் நனையும் கோலங்கள் - 2

எந்நாளும் என் நெஞ்சில் உன் எண்ணம்

இந்நேரம் உனக்காக ஒரு பாடல்

என் தேவா கேளாயோ நான் பாடும் ஜீவராகம்

1. உனது ஆலய பீடங்களில் தினம் தினமும் நான் மலர்ந்தேன் ஆ... - 2

உனது மண்டபத்தின் வாயில்கள் காணாமல் என் பாடல் ஓயாது

நாளும் உனது நினைவில் நானும்

2. எங்கெங்கு காணினும் உன் முகமே என் மனமே கண்ணுறங்கு - 2

உனது நினைவென்னும் நதிதன்னில் நாள்தோறும் வருகின்ற ஓடம்போல்

அன்பே நானும் எந்நாளும் வாழ்வேன்


கானாவூரின் கல்யாணத்தில் தான்

தெய்வமகன் தாமே புதுமை செய்தார் - 2

கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ

இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை

தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்

நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் - 2

உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்

சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் - 2

ஆகா நான் எங்கு காண்பேனோ - 2 இயேசு என் நேசர் போல்

2. அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்

தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார் - 2

ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்

இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார் - 2

ஆகா நான் எங்கு காண்பேனோ - 2 நேசர் என் இயேசு போல்


குழந்தை இயேசுவே நன்றி பாடுவேன்

எந்தன் நாவிலே புகழ்ந்து பாடுவேன்- 2

நன்றி நன்றி நன்றி இயேசுவே - 2

நன்றி நன்றி நல்ல இயேசுவே - 2

1. பாவப் பிடியில் வாழ்ந்த எனக்குப்

பாதை காட்டினாய் உமக்கு நன்றி - 2

அமைதி இழந்த எந்தன் வாழ்வில்

அமைதி தந்தாயே உமக்கு நன்றி-2

கேட்கும் போது அனைத்தும் தந்து

தட்டும் போது கதவைத் திறந்து

தேடும் போது உன்னைக் கண்டேனே

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நல்ல இயேசுவே - 2

2. தேடிவந்த தாழ்ந்த மனதை

இமயமாக்கினாய் உமக்கு நன்றி - 2

மீதி நாளும் எம்மில் வளர

தேவனாகினாய் உமக்கு நன்றி - 2 கேட்கும் போது........


கோடி கோடி நன்றிகள் பாட்டுப் பாடுவேன்

இராஜாதி ராஜனுக்கு இசை மீட்டுவேன் - 2

1. நல்லவர் நல்லவர் என்று பாடுவேன்

தீமைகளை நன்மையாக மாற்றிடுவாரே - 2

வல்லவர் வல்லவர் என்று பாடுவேன்

அரிய பெரிய செயல்களைச் செய்திடுவாரே - 2

2. மருத்துவர் மருத்துவர் என்று பாடுவேன்

நோய்களையெல்லாம் அவர் குணமாக்குவார் - 2

துணையாளர் துணையாளர் என்று பாடுவேன்

வழிகளிலெல்லாம் அவர் காத்திடுவாரே - 2

3. தூயவர் தூயவர் என்று பாடுவேன்

தூய்மையான வாழ்வையே தந்திடுவாரே - 2

இனியவர் இனியவர் என்று பாடுவேன்

இனிதாக யாவையும் ஈந்திடுவாரே - 2


கோடி கோடி நன்றி நன்றி இயேசப்பா

நீங்க செஞ்ச நன்மைகளுக்கு நன்றி இயேசப்பா - 2

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நீ என்னோடு இருந்தால் போதும்

உன் ஆவியின் அருளில் வாழ அருள்தருவாய் அனுதினமுமே

1. கூப்பிட்ட போது மறுமொழி கொடுத்து விடுதலை தந்தீரே - 2

குறைகளெல்லாம் போக்கி எந்தன் கூடவே வந்தீரே - 2

2. உணவும் உடையும் கொடுத்து என்னைக் காத்து வந்தீரே - 2

ஒரு குறையும் இல்லாமல் வாழவைத்தீரே - 2

3. ஆடிப்பாடி உன் புகழைப் போற்றிப் பாடவே - 2

புதிய பாடல் பாடும் வரம் இன்று தந்தீரே - 2


கோடி நன்றி சொல்லிட நான் ஆசைப்படுகின்றேன் - உம்

கோயில் முற்றம் அமர்ந்து நான் புகழ்ந்து பாடுவேன் - 2

நன்றி நன்றி இயேசு தேவா நன்றி

நன்றி நன்றி இயேசு தேவா நன்றி நன்றி - 2

1. உடல்வாதை போக்கிவிட்டாய் உன்னத தேவா நன்றி

உயிர்நாட்கள் கூட்டித்தந்தாய் உள்ளம் சொல்லும் நன்றி - 2

இருள் சூழ திகிலானேன் ஒளியாய் வந்தாய் நன்றி

வழி கேட்டு கரம் தந்தேன் அருளாய் வந்தாய் நன்றி

2. சுமையாலே தரை வீழ்ந்தேன் தாங்கிக் கொண்டாய் நன்றி

மனபாரம் கொண்டழுதேன் ஆறுதல் சொன்னாய் நன்றி - 2

குறையோடு நான் வந்தேன் நிறைவாய் தந்தாய் நன்றி

ஒருபோதும் மறவாமல் என்னை காத்தாய் நன்றி


கோடி நன்றி பாடல் பாடும் எந்தன் இதயமே

காக்கும் நல்ல தேவன் அன்பு என்னை தாங்குமே - 2

அவரின் கரங்கள் எனது வாழ்வில் என்றும் இணையுமே - 2

அகமகிழ்ந்து அவரைப் போற்றி நிதமும் பாடுவேன்

நன்றி இறைவா - 2 நன்றி தலைவா - 2

1. எனது ஆற்றல் அரணுமான உம்மை வாழ்த்துவேன்

எனது மீட்பும் மகிழ்வுமான உம்மைப் புகழுவேன் - 2

எனது வளமை வாழ்வுமான உம்மைப் போற்றுவேன் - 2

எனது வலிமை துணிவுமான உம்மைப் பாடுவேன் - 2 நன்றி...

2. கண்ணின் இமைகள் போல என்னைக் காத்து மகிழ்கின்றீர்

கருணை கொண்ட விழிகளாலே இரக்கம் பொழிகின்றீர் - 2

அள்ள அள்ளக் குறையாத அன்பைத் தருகின்றீர் - 2

அன்னைக்கும் மேலான பாசம் பொழிகின்றீர் - 2 நன்றி...


சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே

சந்தோஷம் என்னில் பொங்குதே அல்லேலூயா

இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்

சந்தோஷம் என்னில் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் பாவப்பழிதனை சுமந்தலைந்தேன் - 2

அவர் அன்புக்குரலே அழைத்தது என்னையே - 2

அந்த இன்பநாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே - 2

2. சாத்தான் சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான் - 2

ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார் - 2

இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே - 2


சொல்லில் சொல்லில் வடிக்க முடியா நன்மைகளை நீர் செய்தீர்

குறை என்று என் வாழ்வில் ஏதும் இல்லை - 2

1. வளர்த்த ஆசைகள் வசமாகவில்லை

நினைத்த காரியம் நிறைவேறவில்லை - 2

ஆனாலுமே அன்பானவா - 2

குறை என்று என் வாழ்வில் ஏதும் இல்லை

2. கடந்து போகும் என் வாழ்க்கைப் பயணம்

நடந்தவை யாவிற்கும் அர்த்தங்கள்உண்டு - 2

இன்பங்களிலும் துன்பங்களிலும் - 2

சமநிலை காணும் ஞானம் தந்தாய்


தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே - என்றும்

அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே - 2

உலகம் ஒரு சமநீதி குடும்பமாகவே - 2

என் இல்லம் எங்கும் இறைவன் வாழும் கோயிலாகவே

தரிசனம் தா உந்தன் தரிசனம் தா - 2

1. மடி நிறையப் பொருளிலிருந்தும் மனம் நிறையப் பகையிருந்தால்

மனதில் என்று அமைதி வரும் நண்பனே ஆ...

வழிகளிலே ஒளியிருந்தும் விழிகளிலே இருளிருந்தால்

வாழ்வில் என்று நிறைவு வரும் அன்பனே

நீதியில் நாம் வாழ்ந்தால் வீதியில் தெய்வம் வரும்

சாதியை நாம் ஒழித்தால் சமத்துவத்தென்றல் வரும்

ஒருமுறை தான் பூக்கும் வாழ்வில் மணம் பரப்புவோம்

நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்

அமைதி வரும் நெஞ்சில் அமைதி வரும்

2. தர்மங்களும் நியாயங்களும் அனைவருக்கும் சமமானால்

வானம் என்னும் கூரையின் கீழ் வறுமையும் ஏனோ ஆ...

சுயநலத்தில் அயலவரின் சுதந்திரத்தை மறுக்கிறோம்

வன்முறையால் நாட்டின் அமைதி குலைக்கிறோம்

மதவெறி நாம் மறப்போம் மனிதனை நாம் நினைப்போம்

உயிர்களை நாம் மதிப்போம் உறவுகள் தினம் வளர்ப்போம்

உலகமெங்கும் பிரிவினையின் சுவர்களுடைப்போம்

நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்

அரசு வரும் இறைவன் அரசு வரும்


நன்றிகள் பல கூறி நாம் பாடுவோம்

நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை - 2

அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் - 2

அன்னையாய் தந்தையாய்

அருகில் இருந்து அணைக்கும் தேவனை

1. கோடி துன்பம் வந்த போதும்

கொடிய நோயில் வீழ்ந்த போதும்

தேடிவந்து நம்மைக் காத்திட்டார்

வாடிய மலரைப் போல் வதங்கி வீழ்ந்தாலும் அன்னையாய்...

2. உலகம் நம்மை வெறுத்த போதும்

கலகம் நம்மைச் சூழ்ந்த போதும்

விலகவில்லை அன்பர் இயேசுவே

நிலைகள் குலைந்தும் அலையாய் எழுகின்றார் அன்னையாய்...


நன்றியால் துதிபாடு நம் இயேசுவை நாவாலே எனறும் பாடு - 2

வல்லவர் நல்லவர் போதுமானவர்

வார்த்தையில் உண்மை உள்ளவர் - 2

1. எரிக்கோ மதிலும் முன்னே வந்தாலும்

இயேசு உந்தன் முன்னே செல்கிறார் - 2

கலங்கிடாதே திகைத்திடாதே துதியினால் இடிந்துவிடும் - 2

2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்

சிலுவையின் நிழலுண்டு - 2

பாடிடுவோம் துதித்திடுவோம் பாதைகள் கிடைத்துவிடும் - 2

3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்

கொஞ்சமும் பயம் வேண்டாம் - 2

இயேசு என்னும் நாமம் உண்டு இன்றே ஜெயித்திடுவோம் - 2


நன்றி என்ற வார்த்தைக்குப் பொருள் என்னவோ இறைவா

பொங்கும் உந்தன் கருணைக்கு அளவில்லையோ தலைவா - 2

நன்றி பாடும் நாள் வந்ததே - இனி

நன்றி மட்டும் எந்தன் நெஞ்சிலே - 2

1. நீயில்லா சிறுபொழுதும் வீணானதே

நீ வந்ததால் என்னுள்ளம் மகிழ்வானதே - 2

நீயின்றி என் வாழ்வில் பொருளில்லையே

நீ மட்டும் என் சொந்தம் எப்போதுமே - 2 நன்றி பாடும்...

2. நீரில்லா புவி முழுதும் வீணாகுமே

நீயின்றி ஓ என் நெஞ்சம் பாழாகுமே - 2

நீ வந்து என் வாழ்வில் அருள் தந்ததால்

வான் முட்டும் என் பாடல் எப்போதுமே - 2 நன்றி பாடும்...


நன்றி என்று சொல்ல வந்தோம்

எதுவோ நன்றி என்று கேட்டாய் - 2

நாளும் வாழும் பாசவாழ்வை

எடுத்து சொல்வோம் நன்றி என்று - 2

நன்றி மனநன்றி மகிழ்நன்றி நன்றி நிறை நன்றி இறையே - 2

1. ஒருவர் ஒருவரில் ஒன்றி வாழ்வது

உன்னில் இணைந்த நன்றி வாழ்வு

இருவர் மூவராய் குழுமி உழைப்பது

உனது கனவின் அழகு வாழ்வு - 2

ஊரெல்லாம் அன்பில் நிலைத்து நீதி காப்பது

உயிரெல்லாம் பண்பில் வளர்ந்து மாண்பில் மகிழ்வது

உயர்ந்த நன்றி சிறந்த நன்றி

நீ விரும்பும் வாழ்வின் நன்றி - 2 நன்றி...

2. காலம் போற்றி கடமை உணர்வினில்

கருத்தாய் உழைத்தால் நன்றி வாழ்வு

உண்மை உணர்ந்து நன்மை காத்திட

துணிந்து எழுதல் தூய்மை வாழ்வு - 2

வாழ்வெல்லாம் பகிர்வு தீபம் ஏற்றி வாழ்வது

வாழ்வு தரும் வானம் பூமி பாதுகாப்பது

வாழும் நன்றி வழுவா நன்றி

நீ விரும்பும் வாழ்வின் நன்றி - 2 நன்றி...


நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவோம்

நன்மைக் கோடி செய்யும் நல்ல தேவனை - 2

உண்மையின் உறவில் நாளுமே வளர

தமது அருளை நமக்குத் தருகின்றார் எந்நாளுமே

1. வறண்ட பூமி வான்மழையைக் காணச் செய்பவர்

வரமளித்து வாழ்வினிலே இனிமை சேர்ப்பவர் - 2

நீதியோடு யாவருக்கும் தீர்ப்பளிப்பவர் - 2

பாவி கூட வருந்தும் போது மன்னித்தருள்பவர்

இரக்கமுள்ளவர் இனிமையானவர்

இன்றும் என்றும் மாறாமல் அன்பு செய்பவர்

நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி நன்றி நன்றி இயேசுவே - 2

2. காடு கழனி வயலையெல்லாம் விளையச் செய்பவர்

நாடு வீடு போற்ற நம்மை மகிழச் செய்பவர் - 2

ஏழை சனம் காக்க இந்த பூமி வந்தவர் - 2

வாழையடி வாழையாக வாழவைப்பவர் இரக்கமுள்ளவர்...


நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே

நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே - 2

கோடி நன்றி பாட்டுப் பாடுவேன்

காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் - 2

1. உயிர்கள் யாவும் வாழ நல்உலகைப் படைத்ததால்

உறவு வாழ்வு வளர நல்உள்ளம் உறைந்ததால்

நிஜங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்

நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்தால்

பகிர்ந்து வாழ்வில் வளர நல்மனதைக் கொடுத்ததால்

பரமன் அன்பில் வாழ அருள்வரங்கள் பொழிந்ததால் - 2

2. பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னை சேர்த்ததால்

ஜெபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்

நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்

துன்ப துயரைப் பனியைப் போல விலக வைப்பதால்

உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்

உந்தன் ஒளியே உலகில் எந்தன் வழியாய் ஆனதால் - 2


நன்றி கீதம் பாடி உந்தன் புகழைப் பாடுவோம்

நாவாலே இறைவன் உந்தன் பெருமை சாற்றுவோம் - 2

ஆர்ப்பரித்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்

அகிலமெங்கும் ஆண்டவன் உன் அருளைப் பாடுவோம் - 2

1. எளியோர் வாழ்வு பெற இறைவனைத் தொழுவோம்

வறியவர் நிலை உயர இயேசுவைத் தொழுவோம் - 2

கோடி செல்வம் நன்மை தந்த இறைவனைப் புகழ்வோம் - 2

இன்றும் என்றும் இயேசு காட்டும் வழியில் நடப்போம் ஆர்ப்பரி...

2. துயரில் மகிழ்வு தந்த இறைவனைப் புகழ்வோம்

இதயத்தில் அமைதி தந்த இயேசுவைப் புகழ்வோம் - 2

இன்பம் துன்பம் எது வந்தாலும் தேவனைத் தொழுவோம் - 2

அன்னை தந்தை அன்பைக் காட்டும் இயேசுவைத் தொழுவோம் ஆர்ப்பரி...


நன்றி கீதம் பாடுவோம் வல்ல தேவன் இயேசுவை

நன்றி நன்றி என்று பாடி நாளும் வாழ்த்துவோம்

நன்மை கோடி செய்திடும் நம்மில் வாழும் இயேசுவை

நன்றி நன்றி என்று பாடி நாளும் வாழ்த்துவோம்

1. எந்தன் நெஞ்சில் வந்த தெய்வமே

உந்தன் அன்பை என்றும் பாடியே நன்றி கூறுவோம் - 2

காலம் மாறும் உன் அன்பு மாறுமோ - 2

காலமெல்லாம் உம்மைப் பாடி நன்றி கூறுவோம்

துன்ப துயரங்கள் இனி மறைந்து போகுமே

எந்தன் வாழ்விலே புதுவசந்தம் வீசுமே

2. துன்பத்திலே தேற்றும் தெய்வமே

உந்தன் கருணையிலே என்றும் பாடி நன்றி கூறுவோம் - 2

தாய் மறந்தாலும் உந்தன் அன்பு மாறுமோ - 2

உந்தன் பாசம் நினைத்து நன்றி கூறுவோம் துன்ப...


நன்றி கூறி ஆண்டவரை நாளும் போற்றுவோம்

நாளும் நம்மைக் காத்து வரும் அவரின் அன்புக்காய் - 2

நன்றி இறைவா இறைவா நன்றி நன்றி - 4

1. உயிரையும் தந்தாய் நல்ல உடல்நலம் தந்தாய்

உண்ண உணவும் உடுத்த உடையும் உறைவிடம் தந்தாய் - 2

பாசம் தந்து பரிவு கொண்டு கண்ணை போலக் காத்து வந்தாய் - 2

2. தந்தையைத் தந்தாய் அன்புத் தாயைத் தந்தாய்

உற்ற நண்பன் உண்மை சொந்தம் உறவுமே தந்தாய் - 2

உன்னைத் தந்து அன்பைப் பொழிந்து

என்னை என்றும் காத்து நின்றாய் - 2


நன்றிச் சொல்லி நாளும் பாடுவோம் - கோடி

நன்மை செய்த இயேசு ராஜனை - 2

நமது வாழ்க்கையே உயர்ந்த நன்றியாம் - 2

நன்மை நெறியில் நாளும் வளர்ந்து

நலன்கள் யாவும் நட்பில் பகிர்ந்து

1. விண்ணும் மண்ணுமே காணும் யாவுமே

கடவுள் தந்த கொடைகள் அல்லவா

வலிமை இழந்தவர் வாழ்வில் வசந்தம் பெறுவதும்

வள்ளல் இயேசு தயவில் அல்லவா - 2

அமைதி வரும் அருள் நிறையும்

அவர் வரவில் புது உறவில்

அன்னை போல அன்பு காட்டி நம்மைக்

காக்கும் தேவன் பெயரை

2. கவலை யாவுமே கலைந்து போனதே

கண்ணைப் போல என்னை இயேசு காப்பதால்

சோகம் இல்லையே இனி சுகமே எல்லையே

தேற்றும் தெய்வம் தேடிவந்ததால் - 2

சுமை சுமந்த தோள்களுக்கு சுகம் தருவார் துணை வருவார்

அச்சம் நீக்கி அன்பு தந்து

அருளைப் பொழியும் தேவன் அருளை


நன்றி சொல்லிப் பாடுவோம் நல்லவரை வாழ்த்துவோம்

வல்லவராகுவோம் வளமை காணுவோம் - 2

காலங்கள் நம் கையில் காயங்கள் கரைகையில் - 2

1. மண்ணிலே விண்ணகத்தை மலரச் செய்யும் மனிதராய்

கண்ணிலே தீப்பிழம்பை கொண்டவர் தாம் கிறிஸ்துவே - 2

ஆணவத்தை அடக்கவே அலையலையாய் செல்லுவோம் - 2 காலங்கள்...

2. சாதிகள் பேதங்கள் சந்தி தோறும் மோதல்கள்

சரித்திர நாயகனின் சாட்சியத்தால் சரியுமே - 2

செல்லரிக்கும் சூழலை செயல்வழியில் மாற்றுவோம் - 2 காலங்கள்...


நன்றி சொல்லிப் பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை

அரிய செயல்கள் ஆற்றினார் போற்றுவோம் - 2

மகிழ்ச்சியால் இதயங்கள் பொங்கிப் பொங்கி பாய்ந்திட

ஒரு மனதாய் உறவுடனே பாடிடுவோமே

1. இயேசு கூறும் நல்லுலகு நனவாகும் நாள் வரைக்கும்

உலகினிலே நமக்கென்றும் ஓய்வில்லையே - 2

அன்பினில் நீதியும் நீதியில் அன்பையும்

சமத்துவத்தில் வாழ்வையும் வாழ்வினிலே வளமையும்

இறையரசில் நம் காண்போமே - 2

2. மனித மாண்பு எல்லோருக்கும் மலரும் நல்ல நாள் வரைக்கும்

சமுதாயம் விழிப்போடு வாழவேண்டுமே - 2

உழைப்பினிலே உயர்வையும் பகிர்வினிலே உறவையும்

மனிதத்தில் புனிதமும் புனிதத்தில் மனிதமும்

இறையரசில் நாம் காண்போமே - 2


நன்றி நன்றி ஆண்டவரே நன்மை நன்மை நிறைந்தவரே - 2

என்றுமே உள்ளது பேரன்பு எல்லா நாவிலும் உன்னன்பு

1. பசியின் பிடியில் தாகத்தின் தாக்கத்தில்

சோர்வுற்றுக் களைத்து சோகம் கண்டோர் - 2

நெருக்கடி நினைந்து நெஞ்சினில் கனத்து

சாவில் பிடியில் கிடந்திருந்தோர் - 2

பெற்ற பெருவாழ்வை நினைந்து நினைந்து - 2

நன்றி சொல்லி பாட வந்தோம் - 2

2. வெண்கலக் கதவும் இரும்புத் தாழ்களும்

மண்மீது மனிதரை அழுத்துகையில் - 2

வீசும் புயலினை பூந்தென்றலாக்கி

ஆசி வழங்கிய ஆண்டவரால் - 2 பெற்ற....


நன்றி நன்றி என்று சொல்லும் போது நெஞ்சம் - குன்றில்

துள்ளி விழும் அருவிபோல் மகிழும் - 2

இறையே நான் உந்தன் அன்பு அணைப்பினில்

குழந்தைபோல் மகிழ்ந்தேன்

சிறையாய் எனைச் சூழும் கொடும் சுயநலம்

பகைமையை வென்றேன்

இஸ்ராயேல் செங்கடலை கடந்ததைப் போன்ற நிகழ்வை

இதயத்தில் உணர்ந்தேன் அன்பே

மகிழ்ந்து சொல்வேன் நன்றி மகனா(ளா)ய் வாழ்வேன் நன்றி

1. வாழ்வின் முடிவை உம்மிடம் அளித்தேன் நம்பிக்கை வைத்து

வாழும் போது துன்பம் கண்டேன் விழுந்தேன் திகைத்து - 2

வீழ்ந்த போது கரத்தில் ஏந்தி காத்தவர் நீரே

சாவை வென்ற சக்தியே உந்தன்

ஆற்றலை அளித்தாய் போற்றி - 3

2. உடைந்த யாழாய் நொறுங்கிக் கிடந்தேன் தன்னலம் கொண்டு

உயர்ந்த இலக்கை மறந்து வாழ்ந்தேன் இருளின் முன்பு - 2

உடைந்த என்னை இணைத்து ஒன்றாய் சேர்த்தவர் நீரே

உந்தன் வாழ்வே இயேசுவே எந்தன்

நோக்கம் என்றாய் போற்றி - 3


நன்றிநிறை நெஞ்சமுடன் உன்னைப் புகழ்ந்தேன்

நன்றி இறைவா நன்றி இறைவா

நன்மைகளை உன்னிடமே கண்டு உவந்தேன்

நன்றி இறைவா என் அன்புத் தலைவா - 2

1. என்ன தவம் என்னிடத்தில் கண்டு மகிழ்ந்தாய்

உன் என்னருளே என் எளிய நெஞ்சில் பொழிந்தாய் - 2

மன்னவனே உன் இனிமை நான் சுவைத்தேன் - 2 - இன்று

என்னகத்தில் விண்ணகத்தை நான் உணர்ந்தேன்

2. வண்ண வண்ணப் பூக்கள் உன்னை நம்பி மலரும்

விண்ணில் வட்டமிடும் கோள்கள் உன்னைப் பற்றி ஒளிரும் - 2

உன்னை நம்பி வாழுகின்ற யாவருமே - 2 - கொள்ளும்

எல்லையில்லா இன்பம் கண்டு நான் தெளிந்தேன்


நன்றிப் பாடி நன்றிப் பாடி நாதனைப் போற்றிடுவோம்

நாளும் அவரின் வல்ல செயலுக்கு நன்றிப்பண் பாடிடுவோம் - 2

நன்றி நன்றி எம் இயேசுவே உமக்கு நன்றி

நன்றி நன்றி எம் தேவனே உமக்கு நன்றி - 2

1. அன்னை தந்தை அன்பினைத் தந்தாய்

அளவில்லாத ஆற்றல் தந்தாய் - 2

இனிய உறவுகள் இகமதில் தந்தாய் - 2

இதயத்தில் அமைதி தந்தாய் - நன்றி நன்றி.....

2. இருளின் பாதையில் ஒளியாய் வந்தாய்

இனிய நண்பனாய்த் துணையாய் நின்றாய் - 2

புதிய உலகம் படைக்கச் சொன்னாய் - 2

புதிய மனிதனாய் மாறச் செய்தாய் - நன்றி நன்றி....


நன்றி பாடுவேன் இனிய இயேசுவே

வாழும் நாளெல்லாம் போற்றிப் பாடுவேன்

என்னைத் தேடியே வந்த தெய்வமே

என்றும் உன்னையே வாழ்த்திப் பாடுவேன் - 2

நன்றி நன்றி நன்றி இயேசுவே - 4

1. உயிரைத் தந்ததால் உருவம் தந்ததால்

உறவைத் தருவதால் நன்றி இயேசுவே

வாழ்வைத் தந்ததால் வளமும் தந்ததால்

வாழ வைப்பதால் நன்றி இயேசுவே

உந்தன் அன்பை என்றும் பெறுவதால்

உன்னில் என்னை இணையச் செய்வதால் - 2

உந்தன் பாதையில் எந்தன் பாதங்கள்

வழிநடக்க ஆசி தந்ததால் நன்றி நன்றி நன்றி இயேசுவே

2. தாயும் ஆனதால் தந்தை ஆனதால்

நண்பன் ஆனதால் நன்றி இயேசுவே

எந்த நாளிலும் என்னில் வாழ்ந்திடும்

சொந்தமானதால் நன்றி இயேசுவே

மன்னிக்கின்ற மனதைத் தந்ததால்

மனிதநேய சிந்தை தந்ததால் - 2

விடியல் நோக்கியே எந்தன் வாழ்வையே

அர்ப்பணிக்க ஆசி தந்ததால் நன்றி நன்றி நன்றி இயேசுவே


நாமணக்குது இயேசு என்னும் நாமம் சொன்னாலே

நெஞ்சினிக்குது இயேசுவுக்கு நன்றி சொன்னாலே

1. ஆழ்கடலில் அலைநடுவில் என் துணை நீரே

ஆதரவாய் வந்து கரை சேர்ப்பதும் நீரே

என்னை என்றும் வழிநடத்தும் ஆயனும் நீரே

புல்வெளிக்குக் கூட்டிச் சேர்க்கும் மேய்ப்பனும் நீரே

உன்னை விட்டுப் பிரிந்து ஏங்கித் தவிக்கும் வேளையில்

தேடிவந்து தேவன் என்னைச் சொந்தமாக்கினாய்

நன்மை யாவும் தந்த எந்தன் அன்பு தெய்வமே

நன்றி நன்றி என்று கோடி சிந்து பாடுவேன்

2. துன்பம் என்னை சூழ்ந்தபோது துணையென நின்றாய்

அன்னை போல அருகிருந்து அடைக்கலம் தந்தாய்

அன்பு செய்து வாழ எனக்கு அறிவுரை தந்தாய்

பண்பில் என்றும் வாழ எனக்கு அறிவுரை தந்தாய்

அன்பினாலே உண்ண எனக்கு உணவினைத் தந்தாய்

என்றும் உந்தன் கண்மணி போல் காத்திருக்கின்றாய்

வான்கொடை ஏழு தந்த இயேசு தேவனே

வாழி உந்தன் நாமம் என்று நன்றி சொல்லுவேன்


நிறைவாழ்வை நோக்கித் திருப்பயணம் பாருலகில் செல்லுவோம்

அருள்வாழ்வு தரும் வார்த்தைகளால்

நன்மைகளை நாம் செய்வோம் - 2

செல்வோம் விரைந்து செல்வோம் - நிறை

வாழ்வை நோக்கியே செல்வோம்

செய்வோம் விரைந்து செய்வோம் - இனி

புதியதோர் உலகினைச் செய்வோம்

1. சுமை சுமக்கும் தோள்களுக்கு வலிமையினை ஊட்டுவோம்

சுகம் மறந்த மாந்தருக்கு வளமையினைக் காட்டுவோம் - 2

இருகரங்கள் விரித்திங்கு வாடுவோரைத் தேற்றுவோம் - 2

இறையரசின் கனவுகளை நாடுதோறும் சாற்றுவோம் செல்வோம்...

2. பரிவிரக்கம் சாந்தம் அன்பு பொறுமையினைக் கொள்ளுவோம்

மகிழ்ச்சியிலும் அமைதியாக அடக்கமுடன் வாழுவோம் - 2

விசுவாசம் நன்னயமும் கேடயமாய் தாங்கியே - 2

புது இனமாய் புது யுகமாய் வாழ்வு நோக்கி செல்லுவோம்


தையாரே தையர தையா தையாரே- 4

நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்

நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்

இயேசுவே ஒன் நெனவாக எந்நாளும் வாழுவேன்

1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்ல

பொன்னுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல - 2

ஒன் மனசா என் மனசு ஆகணும்

ஒன் வாழ்வா என் வாழ்வு மாறணும்

இயேசுவே இயேசுவே அதனால ஒன் கனவு பலிக்கணும்

2. துன்பங்கண்டு துடிதுடிச்ச இன்பங்கண்டு மகிழ்ந்து நின்ன

பசிகண்டு பரிதவிச்ச தாகங்கண்டு தவிச்சு நின்ன - 2

ஒன்னப் போல நானும் இங்கு ஆகணும்

அதனால் தான் பிறர் துன்பம் ஏற்கணும் இயேசுவே...

626. நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்

நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4

1. உண்டிட உணவும் உடையுமே கொடுத்து

ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் - 2 - ஒரு

அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து

அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2

2. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி

மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - 2 - உடன்

உலரட்டும் என்றே ஒதுக்கி விடாமல்

களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2


நீங்கள் என் சாட்சிகள் வாழ்வினில் காட்டுங்கள்

நீங்கள் என் சாட்சிகள் உலகினை வெல்லுங்கள்

அல்லேலூயா அல்லேலூயா - 4

1. அன்பின் சாட்சியாய் விளங்கிடுவீர்

அருள்திரு ஆவியைப் பெற்றிடுவீர் - 2

நானிலம் சென்று பலன் தருவீர் - 2

நன்மைகள் உண்டாகும் நற்செய்தி தந்திட

2. தட்டுங்கள் திறக்கப்படும்

கேளுங்கள் கொடுக்கப்படும் - 2

தேடுங்கள் கிடைக்குமென்று - 2

நம்பிக்கை உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட

3. உலகினில் ஒளியாய் திகழ்ந்திடுவீர்

உன்னத நெறியைப் பரப்பிடுவீர் - 2

எளியோர்க்கும் எல்லார்க்கும் - 2

அகத்தில் எந்நாளும் நின்றாடும் ஒளியாக


நீங்களே உயிருள்ள இறைவனின் ஆலயங்கள்

நீங்களே இயேசுவை மூலைக்கல் ஆக்கியவர்

நீங்களே இயேசுவின் நற்செய்தி சொல்லும் சாட்சிகள் - 2

1. உறவினில் உயிர்பெறும் ஆன்மீகம்

இயேசுவின் தலைமையில் மலர்ந்திடட்டும் - 2

பிரிவினைகள் அறுத்து விட்டால்

பேதமைகள் அழித்து விட்டால்

2. கனிதரும் திராட்சைக் கொடி அவரே

கிளைகளாய் இணைந்து கனிதருவோம் - 2

களைகள் எல்லாம் களைந்து விட்டால்

கனிதரவே கொஞ்சம் கழித்து விட்டால்

3. இயேசுவைத் தலையாய் தாங்கிடுவோம்

உயிருள்ள உறுப்புகள் ஆகிடுவோம் - 2

ஜாதிகளை ஒழித்து விட்டால்

சமத்துவத்தை சமைத்து விட்டால்


தேவன் வந்த அந்நாளிலே வானும் மண்ணும் ஒன்றானது

காலகாலமாக இங்கே மனுக்குலம் மகிழ்ந்திடும் நாளானது

நெஞ்சம் நிறைந்த புதுமையில் - இன்று

பொங்கும் இசைமழை வெள்ளம்

இறைவனின் பிள்ளைகள் நாங்கள் காணும்

இலட்சிய விடுதலைக் கனவுகள்

கனவுகள் யாவும் நனவுகள் ஆகும்

இனி இந்த பூமி புதுமுகம் காணும்

வா வா நண்பா நீயும்நானும்

சேர்ந்து வந்தாலே வாழ்வு நன்றாகும்

1. லாலாலாலாலா லாலாலாலாலா - 2

வானமுத மழையில் இதயம் நனைகையில் புதிய உணர்வுகள்

எனது மனதினிலே இனிய நினைவுகள்

கனிவும் கருணையும் கனியும் இதயமும் - 2

நாளும் வாழ்வை அழுத்தும் சுமைகள்

நீங்கும் வழிகள் தெரியும் தெரியும்

பூவும் புயலை எதிர்த்தே தேய்ந்திடும்

புதுமை நமக்கு புரியும் புரியும்

வான்படைகளென நாம் நடந்து வர

நான் எனக்கு எனும் சுயநலம் மறைந்திடும் புதுயுகம் என்றாக

2. லாலாலாலாலா லாலாலாலாலா - 2

என் உலகம் முழுதும் நெடிய இரவுகள் விடியும் அழகினில்

கொடுமை விழியிலும் இனிய கனவுகள்

கோலம் எழுதிடும் புதிய உறுதிகள் - 2

போதும் உலகை மாய்த்திடும் போர்களும்

பேதம் வளர்க்கும் மதங்களும் சாதியும்

யாரும் நமது ஊரெனும் உலகெனும்

வேதம் இங்கு வென்றிட வேண்டும் வான்படை...


நெஞ்சில் சுரக்கும் நன்றி ஸ்வரங்கள்

நானிலமெங்கும் நான் பாட

நந்தவனத்தில் உண்டு களிக்கும் வண்டுகள் பாடும் பண் போல

விண்ணில் முளைத்திடும் மின்மினியாய்

மண்ணில் முளைத்திடும் நல்விதைகள்

மின்னித் தெறித்திடும் மின்னல்களாய்

கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள்

நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன்

நானிலமெங்கும் உன் புகழ் சொல்வேன்

1. தோள் அழுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்க

தோழமையில் பூமியிலே புது உலகம் படைக்க - 2

நெஞ்சுக்குள்ளே புரட்சிக் கனலை யார் விதைத்தது

கண்ணுக்குள்ளே நெருப்புத் தணலை யார் வைத்தது - 2

அஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும்

எல்லாமே நீ தந்தது - 2

2. எல்லையில்லா உலகினிலே எனக்கு உயிர் தந்தாய்

எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய் - 2

ஈரமுள்ள உறவுகளை யார் தந்தது

இறையரசின் நினைவுகளும் யார் தந்தது - 2

புதுயுகத்தின் கனவுகள் புன்னகைக்கும் உறவுகள்

எல்லாமே நீ தந்தது - 2


பாட்டுப்பாடி ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள்

காக்கும் நல்ல தேவன் அவர் இரக்கமுள்ளவர்

நல்லவரும் வல்லவருமாய் என்றும் அவர் இருப்பதினாலே

1. செடியைப் பிரிந்த கொடியைப் போல நாமெல்லாம்

மடிந்து அழிந்து போயிடாமல் காத்திடுவாரே - 2

கடலில் தவித்த பேதுருவைப் போல நாமும் - 2

துன்பம் வந்தால் துயரம் வந்தால் இயேசுவை அழைப்போம்

நிரந்தரமாய் சந்தோஷம் தந்திடுவாரே

2. வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் தானே

என்று சொல்லி அவர் பாதம் பணிந்திடுவோம் நாம் - 2

சுமை சுமந்து சோர்ந்திருப்போர் விரைந்து வாருங்கள் - 2

என்று சொன்ன இயேசுவை நாம் அணுகிச் செல்வோம்

சுகம் தந்து சமாதானம் தந்திடுவாரே


பாடிடுவேன் போற்றிடுவேன்

பாதத்தில் பணிந்து நான் வணங்கிடுவேன்

பாவி எந்தன் பெயர் சொல்லி

அன்புடனே நீ அழைத்து

ஆதரவாய் என்னை நடத்திடும் உன் புகழ்

1. நெஞ்சத்திலே நிறைந்ததெல்லாம் நீங்காத உன் நினைவே

ஆண்டவரே என் இயேசுவே ஆளுகின்றாய் என் இதயத்தையே - 2

அச்சமில்லை ஆ... அதிர்ச்சி இல்லை ஆ... - 2

அலைந்திடும் கடலலை ஓய்ந்திடும் வரையில் நான்

2. இலையுதிர்ந்த மரமதைப் போல் நான் தனியே வாடினாலும்

நிலைகுலைய விடமாட்டீர் எனதருகில் இருக்கின்றீர் அச்ச...

3. பாவத்திலே வாழ்ந்திருந்தும் பாசத்தை நீ மறுக்கவில்லை

தேவன் உந்தன் தரிசனமோ எனை என்றும் பிரிவதில்லை அச்ச...


மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்

இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்

எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ... ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே - 2

1. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்

தூரம் போயினும் கண்டுகொண்டார் - 2

தமது ஜீவனை எனக்கும் அளித்து

ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் ஆ...

2. எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று

என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் - 2

என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை

அவர் வரும்வரை காத்துக்கொள்வேன் ஆ...


மனிதம் மலர்ந்திட வேண்டும்

மனித மாண்புகள் உயர்ந்திட வேண்டும் - 2

இறைமையின் சாயலே மனிதம் மனிதம் - அதன்

நிறைவினில் இறைமை மலருமே - 2

1. உயர்ந்தவன் தாழ்ந்தவன் வேற்றுமை ஒழிந்தால்

மனிதம் நிறைவாகும்

சமத்துவம் மலரும் சரித்திரம் படைத்தால்

இறைமை புலனாகும் - 2

ஏழ்மையும் துன்பமும் இங்குண்டு

எழுவோம் இணைவோம் அன்பு கொண்டு - 2

துன்பத்தில் துணையாய் இன்பத்தில் இணையாய்

மனிதம் மலர்ந்திட மனம் திறப்போம் - 2

2. வறுமையில் வாழ்வோர் விழிநீர் துடைத்தால்

மனிதம் நிறைவாகும்

இறைமொழி கேட்டு இருப்பதைப் பகிர்ந்தால்

இறைமை புலனாகும் - 2

உண்மையும் நீதியும் ஒளிரட்டுமே

பரிவும் பாசமும் மிளிரட்டுமே - 2

வேதங்கள் எல்லாம் வீதியில் வந்து

மனிதம் மலர்ந்திட மாறட்டுமே -2


மனிதனின் உறவு என்றும் தொடர்கதையாகும்

இறைவனின் படைப்பினிலே

இறைவனின் உறவு என்றும் வளர்பிறையாகும்

மனிதனின் உறவினிலே

உறவுகள் என்றும் அழியாத காவியம்

இறை மனித இணைவினிலே

1. அன்பில்லா நெஞ்சங்கள் உயிர் வாழக்கூடும்

அன்பர்களின் உறவிலே இணையாது போகும்

உறவின் அர்த்தங்கள் ஆயிரமாம்

உண்மை தியாகம் அதிலொன்றாம்

உறவில்லா சமுதாயமே வாழ்வின்றி தடுமாறுமே

உண்மையினை உணர்ந்தாலே புது உறவு உருவாகுமே

2. இணைந்திட்ட கரங்கள் உருவாக்கும் உலகம்

இன்பங்களை வழங்கும் புதுவாழ்வு நல்கும்

உலகை மாற்றிடும் நெறி பலவாம்

உள்ளத்தின் உறுதி அதிலொன்றாம்

இதயங்கள் உறவாலே வாழ்வினிலே இணைந்தாலே

இறையருளும் நிறைவாகவே நம்மோடு நிலையாகுமே


மீட்புக்காக நன்றி கூறிடுவேன்

ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன் - 2

1. ஆண்டவர் எனக்கு நன்மைகள் செய்தார்

நான் என்ன கைம்மாறு செய்வேனோ - 2

நான் போற்றிடுவேன் ஆ... பாடிடுவேன் ஆ... புகழ்ந்திடுவேன் ஆ... - 2

2. என்மீது அவரது அருளன்பு நிலைத்தது

புகழ்ச்சி பலியினைச் செலுத்திடுவேன் - 2 - நான்....

3. அவரே என் வலிமையும் திடமுமாய் இருக்கிறார்

அவரே எனக்கு மீட்பானார் - 2 - நான்....


வெண்முடி சூடிய வேந்தனாம் இமயனும்

விந்திய மலையனும் வாழ்த்துங்கள்

தண்ணிய கீழ்மேல் மலைகளும் பழனி

நீலமாம் மலையும் வாழ்த்துங்கள்

2. வானிடமிருந்து நீரினை வழங்கும்

கங்கையும் யமுனையும் வாழ்த்துங்கள்

தேனுறு நீரினைத் தென்னவர்க்களிக்கும்

பொன்னியும் பொருநையும் வாழ்த்துங்கள்

3. இந்திய அன்னையின் எழிலுறு உடையாம்

வங்கமும் அரபியும் வாழ்த்துங்கள்

இந்திய அன்னையின் எழிலடி வருடும்

இந்தியக் கடலே வாழ்த்தாயோ

4. குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலும்

பாலையும் இறைவனை வாழ்த்துங்கள்

அறிதமிழ் நிலமெலாம் நெறியோடு வாழ்ந்திடும்

அன்பர்கள் அனைவரும் வாழ்த்துங்கள்


வெள்ளிச் சுரங்களின் அலைகளிலே

துள்ளி வருகின்ற சந்தங்களே

உள்ளங்கனிந்த என் நன்றியினை சொல்லிப் பாடுங்களே - 2

எந்தன் தேவனுக்கே

1. கருவினில் என்னை அறிந்தவன்

கண்மணி போல வளர்த்தவன் - 2

அறுவடை மிகுந்த பணியிலே

அடியேன் என்னை அழைத்தவன் - 2

அருகில் இருந்து ஆற்றல் பொழிந்து

நிறையானந்தம் தருபவன் - 2

அந்த நல்ல தேவனுக்கே என் நன்றியைக் கூறுங்களே - 2

2. கொடுப்பதில் இன்பம் வைத்தவன்

தன்னையே உண்ணக் கொடுத்தவன்-2

படிப்பினைகள் சொல்லியவன் சொன்னபடியே வாழ்ந்தவன் - 2

இடுக்கண்ணுற்று வீழும் போது

எனக்காய் உயிர் கொடுத்தவன் - 2 அந்த நல்ல....


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *