எலுமிச்சை பிழியும் போட்டியில் வெல்பவருக்கு 50,000 ரூபாய் பரிசு


ஒரு உள்ளூர் மதுக்கடையில் தங்களுடைய மதுப் பரிசாரகர் தான் நகரத்தின் வலிமையான மனிதர் என்றும் அவரை எலுமிச்சை பிழியும் போட்டியில் வெல்பவருக்கு 50,000 ரூபாய் பரிசு எனவும் அறிவித்தனர்.

ஒரு கிளாஸில் அனைத்து சாறும் இறங்கும் வரை ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, பிறகு பந்தயக்காரரிடம் எலுமிச்சையைக் கொடுப்பது தான் பார் டெண்டரின் சவால். இன்னும் ஒரு சொட்டு சாற்றை பிழிந்த எவரும் பணத்தை வெல்வார்கள்.

காலப்போக்கில், பலர் முயற்சித்தனர், ஆனால் யாரும் வெற்றிபெறவில்லை.

ஒரு நாள், தடிமனான கண்ணாடியும், மலிவான உடையும் அணிந்த ஒரு ஒல்லிப்பிச்சான் மனிதர் உள்ளே நுழைந்து, "நான் பந்தயம் எடுக்கிறேன்" எனக் கசங்கிய குரலில் கூறினார்.

சிரிப்பு அடங்கிய பிறகு, மதுக்கடைக்காரர் ஒப்புக்கொண்டார், எலுமிச்சைப் பழத்தை எடுத்து, தனது உரமேறிய விரல்களுக்கிடையே நசுக்கிப் பிழிந்தார்.

பின்னர் அவர் அந்தச் சிறு மனிதனிடம் சுருக்கம் படிந்த எச்சங்களை ஒப்படைத்தார்.

அனைவரும் வியக்கும் வண்ணம், எலுமிச்சை பழத்தை முறுக்கிப் பிடித்த அந்த நோஞ்சானின் விரல்கள் வழி வழிந்தது, ஒன்றல்ல, ஆறு துளிகள். அவை சொட்டுச் சொட்டாக அந்தக் கண்ணாடிக் குவளைக்குள் சொட்டின.

கூட்டம் ஆரவாரம் செய்தபோது, அதிர்ந்து போன ​​மதுக்கடைக்காரர் நோட்டுகளை எண்ணி, பணம் கொடுத்துவிட்டு, “யார் நீங்கள்?! நீங்கள் என்ன செய்கிறீர்கள்!?” என்றார்.

அதற்கு அந்தப் பூஞ்சை மனிதர், "நான் tax officer ஆஹா வேலை செய்கிறேன்" என்றார்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *