பாலியல் உணர்வில் கவனமாக இருங்கள்


பாலியல் ஆபத்து 

செக்ஸ் இனிமையானது ஆனால் அது உங்கள் வாழ்க்கையை அழிக்க முடியும்.

ஆண்களின் பெரும்பாலான வீழ்ச்சிகள் பல பெண்களால் ஏற்படுகின்றன.

செக்ஸ் ஒரு ஆத்மார்த்தமான நிகழ்வு. ஆனால் இங்கு எல்லா பெண்களும் ஆத்மார்த்தமாக இருப்பதில்லை.
சில பேய்கள் இருக்கின்றன, அவர்களுக்கு உடலில் விஷம் தோய்ந்த கொடுக்கு உள்ளது. அவர்களை தீண்டினால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்க்கை நாசமாகும்.

பாலியல் உணர்வில் கவனமாக இருங்கள். மோசமான ஒரு மனிதனால் தனது பாலியல் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாது.
தனது பாலியல் தூண்டுதலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மனிதன் பூமியில் பல வெற்றிகளுக்கு தகுதியானவன்.

1. பல பெண் தோழிகள் இருப்பது உங்களை ஒரு ஆண் மகனாக மாற்றாது. அது உங்களை ஒரு பெண் பித்தனாக, ஏமாற்றுபவனாக, பாவியாக மட்டுமே ஆக்குகிறது.

2. ஒரு உண்மையான ஆணின் வாழ்க்கையில் ஒரே ஒரு பெண் (காதலி/மனைவி) மட்டுமே இருப்பார்.

3. நீங்கள் படுக்கையில் வித்தை தெரிந்தவனாக இருப்பது உங்களை ஒரு ஆண் மகனாக மாற்றாது. தன் பொறுப்பில் இருந்து தப்பி ஓடாமல் அதை நேர்மையாக எதிர்கொள்பவனே உண்மையான ஆண் மகன்.

4. பெண்களைப் பயன்படுத்த நினைக்காதீர்கள். கர்மாவின் விதியை நினைவில் வையுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், உங்களுக்கு அது திரும்ப கிடைக்கும்.

5. உங்களால் அவளை மனைவியாக்க முடியாவிட்டால், அவளைத் தாயாக ஆக்காதீர்கள். மனதை தொட்டு உடலை தொடுங்கள்.

6. எல்லா நேரங்களிலும் உங்கள் விறைப்புத்தன்மைக்குக் கீழ்ப்படியாதீர்கள். பெரும்பாலான நேரங்களில் உங்கள் விறைப்புத்தன்மை உங்களை தவறான திசைக்கு வழிநடத்துகிறது.
உங்கள் விறைப்புத்தன்மையைக் கட்டுப்படுத்தாவிட்டால் பல நாட்கள் வாழ்க்கையில் தோல்வியுடனும், பணப் பிரச்னையுடனும் போராடுவீர்கள்.

இந்த வரிகளுக்காக, நீங்கள் என்னை அவமானப்படுத்தலாம். ஆனால் இப்போது எனக்கு அது முக்கியமில்லை, ஏனென்றால் நான் உங்களிடம் இதைச் சொல்லும்போது உங்கள் மனதில் உண்மை எதிரொலிக்கும்.

7. நீங்கள் ஆடைக்குள் பார்ப்பதை எல்லாம் அவசரமாக சாப்பிட துடிக்காதீர்கள். சில ஆடைகளுக்குள் பாம்புகள் இருக்கும், அவை உங்களைக் கடித்து உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். உங்கள் பாலியல் தூண்டுதலைக் கட்டுப்படுத்துங்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சுய கட்டுப்பாடு உங்கள் வாழ்க்கையை காப்பாற்றும்.

8. உங்களை நேசிக்கும் எந்த பெண்ணையும் உண்மையாக மதிக்க பழகுங்கள்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *