American Online AOL தமிழ்


ஒரு காலத்தில் அமெரிக்காவில் இண்டர்நெட் என்றாலே AOL கம்பேனிதான்! American Online.

தொண்ணூறுகளில் இணைய இணைப்புக்கும், மின்னஞ்சலுக்கும், மெசேஞ்சருக்கும் AOLதான்!

அந்தக் காலக்கட்டத்தில் தரை வழித் தொடர்பு தொலைபேசியுடன் இணைப்பு ஏற்படுத்தித்தான் இணையத்தில் இணைய முடியும். அதுவும் ஒவ்வொரு தடவையும் இணையத்தில் இணைக்கும் போது கணினி வழியே டயல் செய்யும் போது வரும் சப்தம்.. அந்தக் காலத்து சிம்பனி!

Dial Up இணையச் சேவை என்பதை இன்னமும் கூட AOL நிறுவனம் கொடுத்துக் கொண்டிருக்கிறதாம். ADSL, Broadband, Fibernet என்றெல்லாம் எவ்வளவோ தொழில் நுட்ப முன்னேற்றங்கள் வந்து விட்டாலும், இன்னமும் கூட அமெரிக்கா முழுவதும் சில ஆயிரம் பேர் அந்த டயல்-அப் இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

வரும் செப்டம்பர் மாதக் கடைசியுடன் அதற்கு மூடு விழா என்று அறிவித்துள்ளது AOL.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *