நாளை எனக்கான நல்ல நாள் பிறக்கும்


ஒரு முறை ஒரு காட்டில் ஒரு யானையும் ஒரு நாயும் ஒரே நேரத்தில் கருவுற்றன. 
3 மாதங்களுக்குப் பிறகு நாய் 4 குட்டிகள் போட்டது. யானை குட்டி போடவில்லை.
பின்னர் நாய் மீண்டும் கருவுற்று 6 மாதம் கழித்து இன்னும் 4 குட்டிகளை போட்டது. யானை இன்னும் குட்டி போடவில்லை. 
9 மாதம் கழித்து நாய் இன்னும் 4  குட்டிகள் போட்டது. யானைக்கு இன்னும் எதுவும் இல்லை.

நாய் யானையிடம் சென்றது: "நாம் இருவரும் ஒரே நேரத்தில் தானே கருத்தரித்தோம். எனக்கு இப்போது 12 குட்டிகள், அவைகள் வேறு பெருத்துவிட்டன. உனக்கு இன்னும் ஒன்றாவது இல்லை!" ஏன் என தனது சந்தேகத்துக்கு விளக்கம் கேட்டது. 

அதற்கு யானை புன்னகைத்துவிட்டு: "நான் வயிற்றில் சுமப்பது நாய் குட்டியல்ல! யானைக் குட்டி. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு குட்டி தான் நான் போடுவேன். நான் குட்டி ஈனும் போது காடே அதிரும், அது பாதையில் நடந்து போகும் போது மனிதர்கள் அதிர்ந்து போய் நின்று பார்ப்பார்கள். நான் ஈன்றெடுக்கும் குட்டியை காடும் நாடும் வித்தியாசமாக பார்க்கும்! என்றது. 

படிப்பினை: பிறர் வேகமாக சாதிக்கும் சாதனைகளைக் கண்டு நாம் மனமுடைந்து போகக் கூடாது, நிராசை அடைந்து விடக் கூடாது. அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி குறுகிய கால பணியாக இருக்கலாம். உங்களுக்கு வழங்கப்பட்ட பணி நீண்ட கால பணியாக இருக்கலாம். நாளை எனக்கான நல்ல நாள் பிறக்கும் என்ற ஆவலுடன் உங்கள் கடமையை தொடருங்கள்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *