ஒரு பொய்யால் பிரையனின் வாழ்க்கை உடைந்தது


சில நேரங்களில் வாழ்க்கை நம்மைப் பரிசோதிக்காது…
அது நேரடியாக நம்மை நசுக்கும்
அப்படித் தான் நடந்தது பிரையன் பேங்க்ஸ் என்பவன் வாழ்க்கையில்.
பள்ளிப் பருவத்திலேயே கால்பந்தில் நட்சத்திரம்.வாழ்க்கை ஒரு பெரிய உயரும் உயரத்தில்.
USC-யில் விளையாட முழு உதவித்தொகை…
மிக பெரிய கனவு! என்ன ஒரு எதிர்காலம்!

ஆனா…
ஒரே ஒரு பொய் சொல்
ஒரு மனிதனின் வாழ்க்கையை தகர்க்க ஆயிரம் அணு குண்டுகளுக்கும் மேல் சக்தி கொண்டது.

ஒரு பதினாறு வயது சிறுமி,
“அவர் மீது ஒரு குற்றசாட்டு வைத்தால் அவர் எனக்கு பாலியல் வன்கொடுமை செய்தார்” என்று சொன்ன அந்த ஒரு பொய்யால்
பிரையனின் வாழ்க்கை  உடைந்தது.

அவர் தவறே செய்யவில்லை …
ஆனால் ஆறு வருடங்கள் சிறையில் இருந்தார்.
ஆறு வருடம் அவரது கனவுகள் அழிந்தன.
ஆறு வருடம் அவரது இளமை காலம் அழிந்தது.

பிறகு…
அதே பெண்,
அவளே மனம் திருந்தி நான் செய்தது தவறு நான் சொன்னது எல்லாம் பொய்… எந்த தவறும் நடக்கல என்று ஒப்புக்கொண்டாள்.

ஆனா அவள் இன்சூரன்ஸ் மூலம் பெற்ற பணத்தை இழக்கக்கூடாது என்பதற்காக
அந்த பொய்யை திரும்பப் பெறவே இல்லை.

குற்றம் சாட்டியவளுக்கு நீதிமன்றம் $2.6 மில்லியன் திருப்பிச் செலுத்த சொன்னது.
பிரையனுக்கு?
ஆறு வருட வாழ்க்கை சிறை மற்றும்  தவறான தண்டனைக்கு பாரிகரமாக
$150,000 மட்டும்.

பிரையனின் கதை தனி கதை இல்லை.
நாட்டின் பல மூலைகளில்
இன்னும் எத்தனையோ பேர்
தாங்கள் செய்யாத குற்றங்களுக்கு
சிறையில் இருக்கிறார்கள் 
சிலர் அங்கேயே உயிரை விட்டவர்கள் பலர் 
நீதிமன்றம்… நியாயத்தை தேடவேண்டிய இடம்.
ஆனா சில நேரங்களில்,
நியாயமே அங்கே தவிக்கிறது.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *