பொது புத்தி உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள்


சகோதரிகளே..பொது புத்தி உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள்:

1: விலை கொடுத்து மணமகளையோ, அவள் மனதையோ  வாங்குவது சாத்தியம் அல்ல என்பதை அறியும் அளவுக்கு புத்தி உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள்.

2: உங்களை மணந்து கொள்வதால், அவர் தியாகம் செய்வதாகாது என்பதை அறியும் அளவுக்கு புத்தி உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள்.

3: உங்கள் மாதவிடாயின் போது உங்களுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அறியும் அளவுக்கு புத்தி உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள்.

4: ஒரு பெண்ணாக உங்களுக்கும் சில நேரங்களில் உடலுறவுக்கு "இல்லை" என்று சொல்ல உரிமை உண்டு என்பதை அறியும் அளவுக்கு அறிவு உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள், மேலும் அவர் விரும்பியபடி நீங்கள் இருக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் உங்களை மகிழ்ச்சியடையச் செய்து உங்களை நல்ல மனநிலையில் வைக்க முயற்சிக்க வேண்டும்.

5: பிரசவத்திற்குப் பிறகு உங்களுக்கு, பெரிய வயிறு,  stretch marks, தொய்வு மார்பகங்கள் மற்றும் சரியான உடல் வாகு இருக்காது  என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவு உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள், மேலும் அவர் உங்களை மற்றொரு பெண்ணுடன் எப்போதும் ஒப்பிடக்கூடாது.

6, உங்கள் தொய்வு மார்பகங்கள் அல்லது stretch marks தாய்மையின் அடையாளம். (நீங்கள் அதைச் சரிசெய்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியும் என்றாலும், அவர் விமர்சனம் செய்வது ஏற்கத்தக்கதல்ல)

7: தினசரி சமைத்தாலும் சில நேரங்கள் உங்களுக்கும் சோர்வாக இருக்கும் என்பதை அறியும் அளவுக்குப் புத்திசாலியான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள், அவர் உங்களை இரவு உணவு சாப்பிட உணவகத்திற்கு அழைத்துச் செல்வதோ அல்லது அந்த நாளில் உங்களுக்கு சமையலில் ஒத்தாசை செய்வதோ உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பதை அறியும் அளவுக்குப் புத்திசாலியான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

8: உங்கள் விரக்தியை வெளிப்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு, உடன்படவும், உடன்படாமல் இருக்கவும், உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் உங்களுக்கு உரிமை உண்டு என்பதை அறியும் அளவுக்குப் புத்திசாலியான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

9: "மன்னிக்கவும்" என்று உங்களிடம் கேட்க நீங்கள் தகுதியானவர் என்பதை அறியும் அளவுக்குப் புத்திசாலியான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்,  அவர் தவறு செய்யும்போது மன்னிப்பு  கேட்கக் கடமைப்பட்டிருக்கிறார், மேலும் "மன்னிக்கவும்" என்று சொல்லித் தப்பிக்க தனது அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது.

10: ஒரு பெண்ணை அடிப்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்பதை அறியும் அளவுக்குப் புத்திசாலியான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

10: உங்கள் உடலை மட்டுமல்ல, உங்கள் மனதையும் நேசிக்கும் ஒருவரை மணந்து கொள்ளுங்கள், உங்கள் உடலைத் தொடாமலேயே உங்களுடன் பேசுவதை ரசிக்கும் ஒருவரை மணந்து கொள்ளுங்கள், உங்களைத் தொடாமல் உங்களுடன் பேச முடியாத ஒருவரை மணக்க வேண்டாம். 

தோழிகளே.. திருமணம் இருவருக்கானது. 
புரிந்துகொள்ளுங்கள். புரிய வையுங்கள்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *