உள்ளத்தில் இருக்கும் சிறு சிறு மனிதத் துளிகள்


நேர்கிறது சாலை விபத்து ,
உதவிக்காக நீள வேண்டிய கரங்கள் 
இன்று கேமராக்களுடன் 
உள்ளம் நொந்து 
சோகத்தில் மனிதன் ,
ஆறுதலுக்காக நீள வேண்டிய வார்த்தைகள் 
இன்று கேலிகளுடன் 
கேட்கிறான் உதவி
ஆபத்தில் மனிதன் ,
உதவிக்காக நீளாத கரங்கள் 
இன்று ஏளனப்படுத்தியபடி
மனம் மகிழ்கிறான் மனிதன் 
சிறப்புகளை செய்து ,
பாராட்ட மனமில்லாத மனிதன் 
வீசுகிறான் விமர்சனங்களை
எதிர்ப்பார்க்கிறான் மனிதன் அன்பை
மனிதனிடம் ,
கொடுக்கும் எண்ணம் இல்லாதவன் 
பரிசளிக்கிறான் கொடுப்பதாக துரோக , மோசடிகளை
தனக்கொரு வலியென்றால் கதறி அழுகிறான் 
தனக்கொரு இன்னல் என்றால் பதறித் திரிகிறான் 
ஏன் பிறரும் மனிதன் தானே என்ற உணர்வு அவனிடத்தில் இல்லாது போனது
எங்கே போயின மனிதம் .... ??
மனிதர்களின் இதயங்களில் அப்படியான புனித உணர்வு மீண்டும் துளிராதா .... ???
தொலைந்துதான் போயிற்றா 
இல்லை
இறந்துதான் போயிற்றா
குழம்பியே தவிக்கிறது
ஒருசிலரின் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறு சிறு மனிதத் துளிகள்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *