ஒரு மாணவனின் லீவு லட்டர்


ஒரு மாணவனின் லீவு லட்டர்.
அன்புக்குரிய தலைமை ஆசிரியர்
அய்யா அவர்களுக்கு வணக்கம்.

ஊர் கூடி தேர் இழுத்தபோது நடந்த
ஊர்ச் சண்டையில் ஊனமாகிப்
போனார் எனது அப்பா.
ஆஸ்பத்திரிக்குப் போனால்
ஆயிரம் ஆயிரமாய்ப் பணம்
கேட்கிறார்கள்.

காசு சேகரிக்க வேண்டி
கடன் கேட்டு அலைகிறாள் என் அம்மா.

காசு தருவதாகச் சொல்கிறவர்களும்
கந்து வட்டி கேட்டு கட்டாயப்
படுத்துகிறார்கள்.

சினிமா ஆசையில் சென்னைக்குப் போன
அண்ணன் என்ன ஆனான் என்றே
தெரியவில்லை.

காலம் கடந்தும் கல்யாணம் ஆகாததால்
ஊர் கடந்து ஒருவனோடு
ஓடிப் போய் விட்டாள் அக்கா.

எல்லாப் பிரச்னைகளும் தீர
மலைக்கோவில் சாமியை வேண்டி
நடைப்பயணம் போகிறேன் நான்.

அருள் கூர்ந்து விடுமுறை தந்து
ஆதரிக்க வேண்டுகிறேன்

இப்படிக்கு


 ஒரு மாணவனின் லீவு லட்டர்.
அன்புக்குரிய தலைமை ஆசிரியர்
அய்யா அவர்களுக்கு வணக்கம்.

ஊர் கூடி தேர் இழுத்தபோது நடந்த
ஊர்ச் சண்டையில் ஊனமாகிப்
போனார் எனது அப்பா.
ஆஸ்பத்திரிக்குப் போனால்
ஆயிரம் ஆயிரமாய்ப் பணம்
கேட்கிறார்கள்.

காசு சேகரிக்க வேண்டி
கடன் கேட்டு அலைகிறாள் என் அம்மா.

காசு தருவதாகச் சொல்கிறவர்களும்
கந்து வட்டி கேட்டு கட்டாயப்
படுத்துகிறார்கள்.

சினிமா ஆசையில் சென்னைக்குப் போன
அண்ணன் என்ன ஆனான் என்றே
தெரியவில்லை.

காலம் கடந்தும் கல்யாணம் ஆகாததால்
ஊர் கடந்து ஒருவனோடு
ஓடிப் போய் விட்டாள் அக்கா.

எல்லாப் பிரச்னைகளும் தீர
மலைக்கோவில் சாமியை வேண்டி
நடைப்பயணம் போகிறேன் நான்.

அருள் கூர்ந்து விடுமுறை தந்து
ஆதரிக்க வேண்டுகிறேன்

இப்படிக்கு


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *