எப்போதெல்லாம் ஓர் ஆண் அழுவான்.
தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்...
தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்...
தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்...
தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்...
அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும்போது வெளியில் சொல்ல முடியாமல் அழுவான்.
காதல் கொண்ட மனைவி தன்னை ஏமாற்றுவதை அறிந்தால் அந்த ஆண் அழுவான்...
தங்கள் குழந்தைகளுக்கான உணவு போன்றவற்றை அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க முடியாமல் போனால் ஆண் அழுவான்...
பிழைப்பை தேடி கடன் சுமைக்காக தாயகத்தைப் பிரிந்து
செல்லும்போது, தான் நேசிக்கும் அன்பானவர்கள் தன் அருகே இல்லையென ஒவ்வொரு இரவிலும் ஆண் அழுவான்...
ஆண்கள் அழுகிறார்கள் ஆனால்... எப்படி?
இருட்டில்...
பிறர் அறியாவண்ணம்...
தலையணைகளில் முகத்தைப் புதைத்து... கழிவறையில் தண்ணீரை திறந்து...
அவன் அழுகையின் கண்ணீரை யாரும் பார்த்துவிடக்கூடாது என நினைப்பான்...
அவன் அழுது கொண்டு இருக்கிறான் என்பதை அவன் சங்கடத்தில் விடும்
பெருமூச்சு , அதற்கு சாட்சியாகும்...
கண்களில் வெளிப்படும் ஏக்கம்...
நடுங்கும் கைகள்
வார்த்தையில் தடுமாற்றம்...
பெரும்பாலான ஆண்கள் குடும்ப சூழல், போதிய வருமானம் இல்லாதது, ஏமாற்றும் மற்றும் தேவைக்கு தேடிவரும் உறவுகள், உறவுகளின் துரோகம், போன்ற மனசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில்தான் நிறைய ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல் அழுகிறார்கள்...
இவன் குழப்பத்தில் இருக்கிறான், பைத்தியக்காரன், என மற்றவர் நினைக்க அது அவனுக்கு மட்டும்தான் தெரியும் உள்ளுக்குள் அவன் அழுதுகொண்டு இருக்கிறான் என...
ஒரு விஷயத்தில் இந்த ஆண் வர்க்கம் மிகவும் கெட்டிக்காரர்கள் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு வெளியில் சிரிப்பது இந்த வித்தையில் ஆண் சமூகம் எப்போதுமே தேர்ச்சிப்பெற்றவையே...
ஆண்கள் இப்படித்தான் அழுகிறார்கள்.
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.