சிறிய உண்மையான பேஸ்புக் கதை


என் மனைவி என் அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள். திடீரென்று எனக்கு ஒரு Facebook Request வந்தது. அவளது Request யை Confirm பண்ணும் படி ஒரு பெண் என்னிடம் கேட்டாள். அதனால் அவளைச் சேர்த்தேன். Friend Request யை ஏற்ற பின் "நமக்கு ஒருவரையொருவர் தெரியுமா?" என்று Message அனுப்பினேன். அதற்கு அவள், “உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன், ஆனா நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன்." என்று கூறினாள்.

அவள் முன்பு இருந்தே எனக்கு தோழியாக இருந்தாள். படத்தில் மிகவும் அழகாக இருந்தாள். நான் அரட்டை அடிப்பதை ஒரு பக்கம் வைத்து விட்டு என் மனைவியைப் பார்த்தேன், அவள் இன்றைய நாள் செய்த வேலையில் களைத்துப் போய் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து, என்னோடு ஒரு புத்தம் புதிய வீட்டில் இவ்வளவு வசதியாகத் தூங்கும் அளவுக்கு அவள் எப்படியான, எந்தளவுக்கு பாதுகாப்பை உணர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவள் இப்போது தனது பெற்றோரின் வீட்டை விட்டு விலகி இருக்கிறாள், அங்கு அவள் தனது குடும்பத்தினரால் சூழப்பட்ட 24 ஆண்டுகள் கழித்தாள். அவள் வருத்தமாகவோ அல்லது சோகமாகவோ இருந்தபோது, அவள் மடியில் அழுவதற்கு அவளுடைய அம்மா இருந்தாள். அவளுடைய சகோதரியோ அல்லது சகோதரனோ அவளிடம் நகைச்சுவைகளைச் சொல்லி அவளை சிரிக்க வைப்பார்கள். அவளுடைய அப்பா வீட்டிற்கு வந்து அவள் விரும்பிய அனைத்தையும் கொண்டு வருவார், அத்தோடு முக்கியமாக அவள் என்னை மிகவும் நம்பினாள்.

இந்த எண்ணங்கள் அனைத்தும் என் மனதில் தோன்றியதால், நான் தொலைபேசியை எடுத்து "BLOCK" யினை அழுத்தினேன். நான் அவள் பக்கம் திரும்பி அவள் பக்கத்தில் தூங்கினேன். நான் ஒரு ஆண் (Man) , பையன் (Boy) அல்ல. நான் அவளுக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதியளித்தேன், அது அப்படியே இருக்கும். மனைவியை ஏமாற்றாத, குடும்பத்தை சீரழிக்காத மனிதனாக என்றென்றும் போராடுவேன்.

இது சிறிய மற்றும் உண்மையான கதையாகும்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *