கதை: மனைவியை தினமும் பாராட்ட வேண்டும்


மனைவியை தினமும் பாராட்ட வேண்டும் என்று ஒரு பேச்சாளர் மூச்சை பிடித்து கொண்டு அறிவுரை சொல்ல, நம்ம குமாரு முடிவு செஞ்சுட்டான்.. இனி மேல் மனைவியை எல்லா தருணங்களிலும் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டில் வேலைக்கார அம்மா அறையை பெருக்கி கொண்டு இருக்க, வேலைக்காரியை குரு குரு என்று பார்த்து கொண்டு இருந்தான்.

கிச்சனில் இருந்து வந்த மனைவி, கணவன் வேலைக்காரியை பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து கோபம் கொண்டு, கணவனை பார்த்து, "என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க" என்று திட்ட

அதற்கு நம்ம குமாரு, "அடியே நம்ம வேலைக்காரி போட்டு இருக்கும் பச்சை கலர் புடவையும் அதற்கு மேட்சிங் ரவிக்கையும் நீ அணிந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்து கொண்டு இருந்தேன்.. என்னை போய் தப்பா நினைத்து விட்டாயே..." என்றான்....

மனைவிக்கு இன்னும் சற்று கோபம் ஜாஸ்தியாகி, "அட சண்டாளா! மூனு வருடத்திற்கு முன் நம்ம கல்யாண நாள்க்கு வாங்கி கொடுத்த புடவை ரவிக்கை அது.... பழசாச்சு என்று வேலைக்காரிக்கு கொடுத்தேன், எத்தனை பங்சன்ல நான் அந்த புடவையை கட்டி வந்து இருப்பேன்... ஒரு நாளாவது ஒரு வார்த்தை நல்லா இருக்குன்னு சொல்லிருக்கியா நீ... ஆனா இன்னிக்கி வேலைக்காரி கட்டி இருக்கும் போது தான் கண்ணு தெரியுதோ ஐயாவுக்கு....."

விளைவுகள் என்ன ஆகியிக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை....

படித்ததில் பிடித்தது.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *