காய்கறி வாடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?


காய்கறி வாடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

1.கிழங்குளை மூடி வைக்க கூடாது. கற்றாடப் பரப்பி வைக்க வேண்டும்.

2. கோடையில் காய்கறிகள் சீக்கிரமாக காய்ந்துவிடும். குளிர் சாதனப் பெட்டியில் அவற்றை வைக்கும்போது தனித்தனியே பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்க வேண்டும். எல்லா காய்கறிகளையும் ஒரே பையில் வைக்க கூடாது.

3. கூடையில் காய்களை போட்டு ஈரத் துணியால் மூடி வைத்து இருந்தாலும், பல நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.

4. நீரில் நனைத்த காகிதத்தில் கீரைகளை சுற்றி வைத்தால் சீக்கிரம் வாடாது.

5. பச்சை மிளாயையும் காம்புடன் வைத்தால் சீக்கிரம் வாடிவிடும். அதான் காம்பை அகற்றிவிட்டு வைத்தால் சீக்கிரம் வாடாது, சில நாட்களுக்கு கூட வாடாமல் இருக்கும்.


6. பச்சை பட்டாணி மலிவாக கிடைக்கும் போது அதை உரித்து எடுத்து, பிளாஸ்டிக் பைகளில் போட்டு அதன் வாயை இருக்கக் கட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்தால் பல மாதங்கள் வரை பச்சை மாறாமல் இருக்கும்.

7. பாகற்காயை சீக்கிரம் பழுதுவுடும். இதைத் தவிர்க்க அதை இரண்டு இரண்டாக நறுக்கி வைத்துவிடுங்கள்.

8. தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

9. கருவேப்பிலையை உதிர்த்து ஒரு பாட்டலில் போட்டு வைக்கலாம்.

10. கொத்தமல்லியை அலுமினியம் பேப்பரில் சுற்றியே அல்லது பாட்டலில் போட்டோ வைக்கலாம்.

காய்கறிகளை அதிகம் வாங்கி ஸ்டோர் பண்ணாமல் இருப்பது நல்லது. தேவைக்கு ஏற்ப தினசரி வாங்கி சமையல் செய்வதே நல்லது.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *