படையப்பா படத்துல ரம்யா கிருஷ்ணன்


படையப்பா படத்துல ரம்யா கிருஷ்ணனுக்கு ஒவ்வொரு காட்சியிலும் அவர் அணிந்து வருகின்ற ஆடை அணிகலன்களை பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். 

தன்னைப் பிடிக்காத பொண்ண தொரத்தி தொரத்திக் காதலித்து கைப்பிடிக்கின்ற நாயகர்கள் இருந்த காலத்தில், தன்னைப் பிடிக்காத ஆண் ஒருவனை அடைய தன்னால் ஆனமட்டும் முயன்ற நீலாம்பரி மட்டும் வில்லியாகிவிட்டார். என்னவொரு முரண். 

படையப்பா படத்திலேயே சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த  தன் முடிவுகளை தானே எடுத்துக்கொள்ளத் துணிவுள்ள ஒரேயொரு கதாபாத்திரம் நீலாம்பரி மட்டும்தான்.

தன் அண்ணன் அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விடுத்து வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ததும் அதைச் சரியான தர்க்கங்களோடு எதிர்த்தவள் நீலாம்பரி மட்டும்தான். அண்ணன் மனைவியிடம் சொல்வார் "உனக்குப் பிடிக்கலன்னா கூட பெத்தவங்க சொன்னாங்கன்னு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டல்ல, உன்ன மாதிரி பொம்பளைங்க இருக்கறதாலதான் ஆம்பளைங்க இன்னும் நம்மள மிதிக்காங்க"


இழந்த காதலுக்காக கடைசி வரை திருமணமே செய்துகொள்ளாமல், வேறு எவரையுமே வாழ்க்கைக்குள் அனுமதிக்காமல் வாழ்ந்த ஒரு நற்காதலி. படையப்பனை அவள் வெறுக்கவில்லை ஆனால் பழிவாங்கவேண்டும். அதுவும் அவன் அவமானப்பட வேண்டும் என்கிற அளவில்தான் இருக்கும். ஒருவேளை படையப்பன் அப்படி அவமானப்பட்டு இருந்தால்  நீலாம்பரியின் எல்லா கோபமும் வடிந்து அவன் மீதிருந்த காதல் மட்டுமே எஞ்சி இருக்கும். 

தொலைபேசியில் படையப்பன் தனது மகளுக்குத் தந்த  முத்தத்தை நீலாம்பரி வாங்கிக்கொள்ளும் அந்த ஒரு காட்சி. உயிரின் வேர்வரை முத்தம் சென்று சேர்ந்து கண்களை மூடிக் கொண்டு தொலைபேசியை துண்டிப்பார். படையப்பன் doesn't deserve நீலாம்பரி. she is unique.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *