மாதா பாடல் வரிகள்


அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா

அருளைப் பொழிவதும் நீதானம்மா

ஆறுதல் அளிப்பதும் நீதானம்மா

1. மணிமுடி அணிந்த மாதவளே - இந்த

மாநிலம் காத்திடும் தூயவளே - 2

உண்மையை ஊட்டிடும் பேரழகே - 2 எந்தன்

உள்ளத்தில் நிறைந்திடும் நறுமலரே

2. துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே - நீ

துணை தந்து காத்திட வேண்டுமம்மா - 2

அன்பினில் என்றுமே அரவணைத் தென்னை - 2

அருளினில் வளர்த்திட வேண்டுமம்மா


அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே

அகமே மகிழ்வாய் மரியே - 2

1. தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே - 2

அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே

2. அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய்

அவனியிலே அருள்பொழிவாய்

அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

3. அருள்நிறை மாமரியே அமல உற்பவியே - 2

கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே


அம்மா உந்தன் அன்பினிலே

அருள்வாய் எமக்கு அடைக்கலமே - 2

1. இறைவன் படைத்த எழிலே எழிலே

இயேசுவைத் தந்த முகிலே முகிலே - 2

தூய்மை பொழியும் நிலவே நிலவே

துணையே வாழ்வில் நீயே

2. புவியோர் எங்கள் புகழே

புனிதம் பொங்கும் அழகே - 2

உம் மகன் புதிய உறவில்

எம்மையும் வதியச் செய்வாய்


அம்மா என்றேன் என் தெய்வமே

அபயம் நீயல்லவா - உயர்

அன்பால் கொண்ட நெஞ்சம் அதில்

நிறைந்த தாயல்லவா அழகே நீயல்லவா - 2

படரும் கொடியாய் தழுவினேன் ஆதாரம் உன் பாதமே - 2

வளர்வதோ மலர்வதோ அம்மா உன் திருவுள்ளமே

1. சேயின் குரலைக் கேட்டிட ஒரு தாய் வேண்டும் அல்லவா - 2

கனிந்து இதயம் உருகினேன் அருளை அருள வா - 2

2. சிறிய பறவை போல நான் உன் சிறகைத் தேடினேன்

சிவந்த மலரின் அரும்பு போல் உன் நிழலை நாடினேன்

ஒளியே வா நல்வழியே வா என் நெஞ்சில் நிறைந்து வா - 2


அன்னையே ஆரோக்கியத்தாயே அருட்கடலே அம்மா

தன்னையே தந்துலகைத்தான் மீட்க வந்தவராம்

மன்னவராம் ஆண்டவரை மகனாகத் தந்தவளே

உன்னையே நம்பிவந்தேன் உற்றதுணை செய்யம்மா

அம்மா தேவனின் தாயே அருளமுதான கடலே - 2

துணை செய்வாய் நீயே ஆரோக்கியத்தாயே - 2

1. எம்மான் இயேசுவைத் தந்தவள் நீயே

எங்கள் நலம் காக்க வந்தவள் நீயே - 2

உம்மால் ஆகாத செயலில்லை தாயே - 2

உலகத்தின் அன்புக்கு எல்லையும் நீயே

2. பிறைசூடும் உன்பாதம் கண்ணீரால் நனைத்தேன் - 2

மறைதந்த மகனிடம் சொல்ல நான் அழைத்தேன் - 2

கரையில்லா கடலான அன்புக்கு வித்தே

கருணையின் மெழுகான கடவுளின் முத்தே

3. துன்பங்கள் எனைவந்து தொடராமல் தாயே

அன்பான உன் நிழல் அண்டினேன் சேயே - 2

கண்போல என்னைக் காத்தருள் நீயே

கடலாடும் வேளாங்கண்ணித் தாயே


அம்மா நீ தந்த ஜெபமாலை

ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை

அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்

மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம்

1. சந்தோஷ தேவ இரகசியத்தில்

தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய்

எம் தோஷம் தீர இயேசுபிரான்

உம் அன்பு மகனானார் அவரை

காணிக்கை வேண்டி புலம்பியதும்

வீணாகவில்லை தாய்மரியே

உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே

2. துயர்நிறை தேவ இரகசியத்தில்

தூயவரின் வியாகுலங்கள் கண்டோம்

உயர் வாழ்விழந்த எமக்காக

உன் மைந்தன் உயிர் தந்தார் அவரை

சாட்டைகளும் கூர் முள்முடியும்

வாட்டிய சிலுவைப்பாடுகளும்

சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா

தாய் நெஞ்சம் நொறுங்கியதார் அறிவார்

3. மகிமையின் தேவ இரகசியத்தில்

மாதா உன் மாண்பினைக் கண்டோம்

சாகாமை கொண்ட நின் மகனார்

சாவினை வென்றெழுந்தார் அவரே

தூயாவியால் உன்னை நிரப்பியதும்

தாயுன்னை வானுக்கு எழுப்பியதும்

மூவுலகரசி ஆக்கியதும்

மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே


அம்மா மரியே சரணம்

ஆரோக்கியத்தாயே சரணம் சரணம் சரணம் - 2

1. மங்கல மணிவிளக்கே சரணம்

மாந்தரில் மாணிக்கமே சரணம் - 2

பெண்களில் சிறந்தவளே சரணம் - 2 - எம்

பெருமான் இயேசுவின் தாயே சரணம்

2. தாழ்ச்சியில் உயர்ந்தவளே சரணம்

தியாகத்தின் காவியமே சரணம் - 2

மாட்சியை அடைந்தவளே சரணம் - 2 - எம்

வாழ்வின் நல்மாதிரி நீயே சரணம்


அம்மா மரியே வாழ்க - 2

மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க - எங்கள்

மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க

1. அறியாத மாந்தருக்கு அறிய வைத்தாய் - உனை

ஆரோக்கியத் தாயாக உணர வைத்தாய்

மறையாத வான்நிலவாய் மாறாத வான்மழையாய்

திகழ்கின்ற திருமரியே நீ வாழ்க

2. உருகாத நெஞ்சமெல்லாம் உருகுதம்மா - உன்

அருகாமை காண இருள் விலகுதம்மா

உலகங்கள் கூறுகின்ற உன் அன்புப் பெருமைகளை

உன் சந்நிதியில் உணர்ந்து கொண்டோம் இந்நாளில்


அமலோற்பவியே அருள்நிறை தாயே வாழ்க வாழ்க

மாசறு கன்னியே மாபரன் தாயே வாழ்க வாழ்க

வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழியவே

அன்னையே வாழ்க அமலியே வாழ்க வாழ்க வாழியவே

1. மாமரியே மாதவளே வாழ்க வாழ்க

மாந்தர்களைக் காப்பவளே வாழ்க வாழ்க - 2

மனம் மகிழ்ந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க

தினம் நினைந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க

2. இறைமகனின் திருத்தாயே வாழ்க வாழ்க

மறைபோற்றும் பேரெழிலே வாழ்க வாழ்க - 2

வான் மண்ணின் இராக்கினியே வாழ்க வாழ்க

வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் வாழ்க வாழ்க


அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே - நீர்

பெண்களில் பேறுபெற்றீர் - உம்

வயிற்றின் கனியாம் கிறிஸ்துவும் பெரியோரே

1. பரிசுத்த மாமரியே எங்கள் பரமனின் மாதாவே

பாவியர் எமக்காய் மன்றாடுவீர்

இன்றுமே அன்றிய காலமுமே - ஆமென்


அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே

பெண்களுள் சிறந்தவள் நீயே மாமரியே நீ வாழ்க

அன்னையே வாழ்க வாழ்க லூர்தன்னையே வாழ்க வாழ்க

1. வாழ்வில் கருணையாய் வந்திடுவாய்

வறியவர் துயரம் தீர்த்திடுவாய்

உரிமையை இழந்து உழல்வோர்க்கு

உலகம் காண வழிசெய்வாய்

உள்ளங்கள் இணைந்தே போராடும்

மனிதர்க்குத் துணையாய் நின்றிடுவாய் - 2

உறவில் மலரும் வாழ்வாக

உண்மை வழியைக் காட்டிடுவாய் அன்னையே...

2. மனதினில் நம்பிக்கை வளர்த்திடுவாய்

மனிதம் காத்திட துணை செய்வாய்

உரிமைக் குரலாய் எழும்போது

அடிமைச் சிறையைத் தகர்த்திடுவாய்

விடியலுக்காகவே வாழ்ந்திடவே

விடுதலைத் தாயாய் அருகிருப்பாய் - 2

மண்ணில் மகத்துவம் கண்டிடவே

மாண்புடன் வாழ்ந்திட அருள் புரிவாய் அன்னையே...


அருள்நிறை மரியே வாழ்கவே ஆண்டவர் உம்முடனே - 2

கன்னியர்க்கெல்லாம் உயர்ந்தவளே - உன்

நாமம் என்றும் வாழியவே

1. இஸ்ரேல் குலத்தின் திருமகளே - நீ

ஆண்டவர் அடிமை என்றவளே - 2

தூய ஆவியால் இயேசுவை ஈன்றவளே - இந்த

அகிலத்தின் தாயும் ஆனவளே

2. பரமனை ஈன்றிட பேறுபெற்றாய் - அவர்

பார்புகழ் தேவனாய் உருக்கொடுத்தாய் - 2 - இனி

அன்புடன் எமையும் ஏற்றருள்வாய் - எம்

அன்னையாய் நீயும் அரவணைப்பாய்


அலைகடல் ஒளிர்மீனே செல்வ ஆண்டவர் தாயாரே - 2

நிலைபெயராக் கன்னி மோட்ச நெறிக்கதவே வாழி - 2

1. வானவன் கபிரியேலின் - தூத்ய

மங்கள மொழி ஏற்பாய் - 2

ஞான சமாதான வழி நாம் நடந்திட தயை செய்வாய்

2. பாவ விலங்கறுப்பாய் - குருடர்

பார்த்திட ஒளி கொடுப்பாய் - 2

சாவுறுந் தீமையெல்லாம் நீக்கி சகல நன்மை அளிப்பாய்


அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா

அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா - 2

1. நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே - 2

அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா - 2

2. கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் - 2

எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா - 2

3. வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் - 2

வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் - 2


அலையொளிர் அருணனை அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ - 2

வாழ்க்கையின் பேரரசி வழுவில்லா மாதரசி - 2

கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ

காலமும் காத்தருள்வாய்

1. அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே - 2

பொல்லாத கூளியின் தொல்லைகள் நீங்கிட

வல்ல உன் மகனிடம் கேள்

2அகோரப் போர் முழங்கி அல்லலும் தோன்றுதன்றோ - 2

எல்லோரும் விரும்பிடும் நல்லதோர் அமைதியை

சொல்லாமல் அளித்திடுவாய்


அழகின் முழுமையே தாயே அமலகையின் தலைமிதித்தாயே

உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே - 2

1. இருளே சூழ்ந்திடும் போதே உதயதாரகை போல - 2

அருளே நிறைந்த மாமரியே அருள்வழி காட்டிடுவாயே - 2

2. அன்பும் அறமும் செய்வோம் அன்னை உனைப் பின்செல்வோம் - 2

உன்னைத் துணையாய்க் கொள்வோம்

என்றும் பாவத்தை வெல்வோம் - 2


அழகோவியமே எங்கள் அன்னை மரியே

உயிரோவியமே எங்கள் உள்ளம் கவர்ந்தவளே - 2

உன் பார்வை சொல்லும் கருணையும் பாதமலரின் அருமையும்

அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே

1. கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே

கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே

அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே

ஒய்யாரமாக மனம் ஊர்வலம் போகிறதே

யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே

உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளங்கள் எல்லாம் தந்தோம்

உந்தன் முகத்தைப் பார்க்கும் போது உள்ளம் மகிழுதே

உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே

2. ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு எல்லாம்

ஆதரவு தருபவளே வேளாங்கண்ணித் தாய் மரியே

அம்மா உன் காட்சி எல்லாம் ஏழைகளின் பாக்கியமே

எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் உம் திருக்கரமே

கண்ணின் மணியைப் போலே எம்மைக் காத்திடும் தெய்வத்தாயே

மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பாதம் பற்றியே வந்தோம்

இன்னும் ஒருமுறை என் தாயே நீ இந்த உலகினில் பிறந்தால்

ஏழை எளியவர் உம்மோடே இங்கு புது உலகம் படைப்பார்


அன்பான மாந்தரே கூடுங்களே

ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே - 4

1. கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே

நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே - 2

மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே

மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே - 2

முப்பொழுதும் அவள் கன்னியம்மா

எப்பொழுதும் நம் அன்னையம்மா

2. வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே

வேதங்கள் அறியாத தத்துவமே - 2

தேவாதி தேவனின் தாயகமே

திருமறை போற்றிடும் நாயகமே - 2 முப்பொழுதும்...

3. தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே

தீமைகள் களைகின்ற அன்புத்தாயே - 2

உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே

ஊமைகள் பேசிட மொழியும் நீயே - 2 முப்பொழுதும்...


அன்பின் வடிவான அன்னை

நெஞ்சில் எனைத் தாங்கும் அன்னை

வஞ்சம் பகை சூழ்ந்து தடுமாறும் போதும்

தஞ்சம் என்றான அன்னை - 2

1. பூமி எங்கெனும் ஜீவஓசையின்

ஆதிதாளமும் அன்னை என்பதே

தேவகாவியம் பூமி வந்ததும்

அன்னை அன்பிலே அன்னை அன்பிலே

பாசம் கோடி என் ஆசை நீதானம்மா

நெஞ்சில் எனைத் தாங்கி நான் கண்ட செல்வம் நீயே

நேசம் தந்தாயம்மா ஸா ஸா பா பநி ஸக ரீ எந்நாளும் நீதானம்மா

பாசம் பல கோடி நெஞ்சில் எனைத் தாங்கி

நேசம் தந்தாயம்மா எந்நாளும் நீதானம்மா

ஆசை வானங்கள் தேடும் பேதை நானாகினேன்

காசு போல வந்து போகும் வாழ்வில் என்றும்

2. ஆயிரம் குறை ஆன போதிலும்

அன்னை அன்புதான் அளவில் மாறுமோ

இன்று போலவே எந்த நாளுமே

உந்தன் அன்பிலே உந்தன் அன்பிலே

பாதை பலவாகும் நான் எங்கு செல்வேனம்மா

கால்கள் திசைமாறும் உன் பாதை நான் வேண்டினேன்

உன்னை மறவேனம்மா ஸா ஸா பா பநி ஸக ரீ எந்நாளும் நீதானம்மா

பாதை பலவாகும் கால்கள் திசைமாறும்

உன்னை மறவேனம்மா எந்நாளும் நீதானம்மா

எண்ணம் பலவான போதும் உன்னை மறவேனம்மா

காசு போல வந்து போகும் வாழ்வில் என்றும்


அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்

இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா

ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே

இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே

கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே - 2

சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே

ஆரோக்கியம் தந்தவளே அம்மா - 2

1. வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே

உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே - 2

சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே - 2

இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே

இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

2. நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி

நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி - 2

முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே - 2

சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே

சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ


அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை

அல்லல்கள் யாவும் தீருதம்மா

என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை

பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா - 2

1சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது

சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் - 2

பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது

படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய்

தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய்

2நிஜமென்று எண்ணிய நேசங்கள் கூட

நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் - 2

உயிரான உறவுகள் பிரிகின்ற போது

உயிரோடு கலந்து நீ குறை தீர்க்கிறாய்

உயிரே நீதான் எந்தன் உறவாகிறாய்


அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்

நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி

வாழ்த்திப் போற்றிடுவோம்

1. அருள் நிறைந்த அம்மணி அகிலம் போற்றும் நாயகி

ஆண்டவனின் அன்புத்தாயும் நீ எங்கள் அன்னையே

காத்திடும் எங்கள் அன்னைமரி

2. அமல உற்பவம் நீ அன்றோ அடைக்கலமும் நீ அன்றோ

அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே

காத்திடும் எங்கள் அன்னைமரி

3. துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ

தூய்மை என்னும் லீலி மலரும் நீ எங்கள் அன்னையே

காத்திடும் எங்கள் அன்னைமரி


அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

என்றும் உந்தன் புகழை பாடுவோம்

தேடும் மாந்தரை தேடிக் காத்திடும்

உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் - 2

1. எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ

எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் - 2

நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்

சகாயத் தாய்மரியே - எம்மை

அரவணைத்துக் காப்பாய் நீயே

2. அண்ணல் இயேசு அன்பு வழியை கற்றுத் தந்த உன்

அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே - 2 நன்றிப்....


அன்னைக்கு கரம் குவிப்போம்

அவள் அன்பைப் பாடிடுவோம் - 2

1. கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் - அந்த

முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள் - 2

மனுக்குலம் வாழ்ந்திடப் பாதை படைத்தாள் - 2

தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

2. பாவமதால் மனிதன் அருள் இழந்தான் -அன்று

பாசமதால் அன்னைக் கருணை கொண்டாள் - 2

பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் - 2

பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்

3. அன்னைமரி உலகில் வாழ்ந்த வழி

நாம் சென்றிடுவோம் அதுவே சிறந்த வழி - 2

நல்வழி நாடிடும் யாவருமின்று - 2

நல்வழி கண்டிடச் செய்திடுவோம்


அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் - நம்

அல்லல்கள் அகன்று விடும் - அவள்

கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால்

கவலைகள் மறைந்து விடும்

1. வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும்

தூய்மை தான் அவள் தோற்றம் - இன்று

தேடா மானிடர் யாருளர் தரணியில்

பாடார் அவள் ஏற்றம் - 2

2. பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம்

பொலிவால் திகழ்ந்தோங்கும் - இன்று

செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை

எடுத்தே அரவணைக்கும் - 2


அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்

அருமருந்தாய் விண்ணவர்கரசியாய்

மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்

மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே

தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா - 2

வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே

கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- 2

தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை

தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - 2

1. அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம்

தௌளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் - 2

வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா

எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே - 2

2. தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே - 2

வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே

ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே - 2


அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில்

ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே - 2

1. கடலின் அலைகள் காவியம் பாடும்

கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும் - 2

மடல்விரி தாழையும் மணமது வீசும் - 2

மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்

2. பன்னிரு விண்மீன் முடியினைக் கொண்டாய்

பாதத்திற் கணியாய் நிலவினைப் பதித்தாய் - 2

உன்னிரு கரங்களில் உலகத்தின் ஒளியாம் - 2

உத்தமர் இயேசு பாலனைக் கொண்டாய்

3. உன் திருப்பாதம் தேடியே வந்தோம்

உன் எழில் கண்டு உள்ளத்தைத் தந்தோம் - 2

கண்ணென எம்மைக் காத்தருள்வாயே - 2

கர்த்தரின் தாயே துணை என்றும் நீயே


அன்னையே உந்தன் ஆதார விந்தம் என் சொந்தம் - இனி

என்றும் உந்தன் தஞ்சம் - அருள்

பொங்கும் அன்பு சிந்தும் - 2 அன்னையே...

1. தத்தம் சம்பூரண ராணியே நித்தம் அருள் ஊறும் கேணியே

சித்தம் பணிந்த நல்மாமரியே ஆ... - 2

தூய மங்கள வாழ்த்தினைப் பெற்றவள் என்

2. ஏக புவனத்தின் ஜோதியே எண்ணில்லா அழகு தேவியே

திங்களைத் தேய்த்த பொற்பாதமே ஆ... - 2

திவ்ய பனிமய இராக்கினியே


அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே

அம்மா உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல்

உன் திருக்கொடிதான் வானில் எழில் திகழ்ந்திடவே பறக்குதம்மா

திசையெல்லாம் மக்களை வருக வருகவென அழைக்குதம்மா

ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே

உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா - 2

கோலவிழாவின் சிறப்பினைக் கூறி

அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா

1. தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்

தாயே உந்தன் நிழல் தேடி - 2

அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை

அண்டியே வந்தவர்கள் பல கோடி - 2

வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா - 2

அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா - 2

2. ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே - 2 - அம்மா

அருள்மழை பொழிந்திட தெரிந்தவளே

ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி - 2

வேளைமாநகர் வாழ் மரியே வாழி - 2


ஆண்டவரை எனதுள்ளம் பெருமைப்படுத்திடுதே - 4

1. கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது

ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலை கண்ணோக்கினார்

2. இதுமுதல் எல்லாத் தலைமுறை என்னை பேறுபெற்றவள் என்பாரே

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயலை செய்துள்ளார்

3. அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு இரக்கம் காட்டி வருகின்றார்

தாழ்நிலை இருப்போரை உயர்த்துகிறார் பசித்தோரை நிரப்புகிறார்


ஆண்டவரை எனதுள்ளம் பெருமைப்படுத்திடுதே - 4

1. கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது

ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலை கண்ணோக்கினார்

2. இதுமுதல் எல்லாத் தலைமுறை என்னை பேறுபெற்றவள் என்பாரே

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயலை செய்துள்ளார்

3. அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு இரக்கம் காட்டி வருகின்றார்

தாழ்நிலை இருப்போரை உயர்த்துகிறார் பசித்தோரை நிரப்புகிறார்


ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே

தீராத துயர் போக்கும் மரியே எம் பரியே

ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே

மரியே வாழ்க அம்மா மரியே ஆரோக்கியத் தாயே

1. தீராத போராட்ட வாழ்க்கை - எங்கள்

துயர் போக்க வரவேண்டுமே

கரை சேராத ஓடங்கள் ஆனோம் - எம்மை

சிறை மீட்க வர வேண்டுமே

வேறெங்கு போவோம் வினை தீர வேண்டி

நீரெங்கள் நிறைவான தயவானதாலே

2. உனை நம்பி வந்தோரில் யாரும் - இங்கு

ஏமாந்த கதையேதும் இல்லை - எங்கள்

தாயுன்னை தினம் போற்றும் நெஞ்சில்

ஒரு துளியேனும் துயர் இல்லையே

விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக

விளங்கும் எம் தாயே உன் துணை வேண்டினோம்


ஆரோக்கிய மாதாவே உமது புகழ்

பாடித் துதித்திடுவோம் - எந்நாளும்

பாடித் துதித்திடுவோம் - 2

1. அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே

வசித்திட ஆசை வைத்தாயே - 2

பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட

அனைவருக்கும் துணை புரிந்தாயே - 2

2. தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்

வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே - 2

வானுலகும் இந்த வையகமும் - அருள்

ஓங்கிட எங்கும் நிறைந்தாயே - 2

3. முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே - அவன்

குறைகளை நீக்கிட நினைத்தாயே - 2

நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும்

இயேசுவின் அருளால் கொடுத்தாயே - 2

4. பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே

பசும்பால் வாங்கித் தந்தாயே - 2 - இந்த

உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும்

அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் - 2

5. சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால்

சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே - 2

பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர்

வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே - 2

6. கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்

கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே - 2 - நமது

நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்

உன்னத நிலைபெற வைத்தாயே


ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்

உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும்

மாண்பைப் போற்றுவேன் ஆவே... ஆவே... ஆவே...

1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கொளியே - 2

அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா - 2

2. தாயெனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம் - 2

மாய உலகினில் காத்திடுவாய் அம்மா


இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா

பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்

நிதம் துணை சேர்ப்பாயே - 2

1. ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை

தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2

மாறாத கொடுமை நீங்காத வறுமை

தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

2. கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி

உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2

வெள்ளம் போல் அருள்கருணை பாய்ந்திட

தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2


இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா

உள்ளமும் துள்ளுதம்மா - உந்தன்

தாய்மையின் நினைவாலே அம்மா

1. தாயெனும் போதினிலே மனம் தானுனைத் தேடுதம்மா - 2

ஈன்ற தாயும் போற்றும் உந்தன்

பாதம் பணிந்திடுவேன் அம்மா

2. அன்னை உன் அன்பினிலே என்றும் அடைக்கலம் தாருமம்மா - 2

நாளும் பொழுதும் உந்தன் நாமம்

பாடிப் புகழ்திடுவேன் அம்மா

3. வாழ்வெனும் பாதையிலே ஒளிவிளக்காய் நீ இருப்பாய் - 2

உண்மை மனதும் உயர்ந்த நெறியும்

நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா


இந்த பூவிலே ஒரு காலத்தில்

தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்

நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார்

கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய் - 2

சொல்லொணாததாய் புயலும் வீச

காணுணாததாய் இருளும் சூழ

மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று

தஞ்சம் தனை தேடினர் - புடழசயை

அன்னை தஞ்சம் தனை தேடினர் - புடழசயை

1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார் - 2

பிழைப்போமேல் உமக்காய்

ஒரு கோயிலை செய்வோமென்றார் - 2

மாதாவாம் மேரியின் உன்னத அருளால் - 2

கரை சேர்ந்திட நொடியில் கண்டார் சொல்லொணாததாய்...

2. மீண்டவர் யாவருமே மேரிய மாதாவை - 2

கண்டு வணங்கினர் தாம்

மேலும் நன்றி நவின்றனர் தாம் - 2

மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை - 2

அவராலயமாகப் பணிந்தார் இந்த...


இனிய உன் நாமம் ஒதிடல் தினமே

அனைவரும் மகிழ்வோமே - 2

தாயினும் மேலாம் தாயுமே நீயே தமியோர் திரவியமே - 2

அன்பிதே அன்பிதே மாதா

தன்னலமே அற்ற மாதா - 2 தாயினும்...

2. கலைமொழியால் உனைத் துதித்திட நாளும்

கவலைகள் நீங்குமம்மா - 2

தேனிசைப் பாவால் தாயுன்னைப் பாட தேவிட்டா உணவாமே - 2

3. பஞ்சமும் நோயும் பகையும் தீர

பரிவுடன் பாருமம்மா - 2

வளமோடு யாவும் நலமுடன் வாழ வரமொன்று தாருமம்மா - 2

4. பஞ்சமும் நோயும் பகையும் தீர

பார்த்திபன் இயேசுவையே - 2

அஞ்சலி புரிவோம் அம்மா மரியே அனவரதமும் துதிப்போம் - 2


உந்தன் திருப்பெயர் சொல்லி அழைப்பேன்

மாதாவே மரியன்னையே

உன்னை நினைந்துருகியே மகிழ்வேன்

என் இதயத்தில் நீர் வாழ்கவே - 2

1. மாதா உன் பெயர் சொல்லி நான் பாடும் போது

ஆறாத துன்பங்கள் ஆறாக ஓடும் - 2

அடைக்கல மாதா அலங்கார மாதா

அமலோற்ப மாதா அருள் ஒளி மாதா

ஆரோக்கிய மாதா ஆறுதல் மாதா

இருதய மாதா இன்னருள் மாதா

உலகின் மாதா உப்பரிகை மாதா

லூர்து மாதா விண்ணரசி மாதா

வியாகுல மாதா விடிவெள்ளி மாதா

வாடிப்பட்டி மாதா வேளாங்கண்ணி மாதாவே

2. மாதா உன் பெயர் சொல்லி நான் பாடும் போது

தீராத துன்பங்கள் மெழுகாக உருகும் - 2

கருணை மாதா கண்ணீர் மாதா

கார்மேல் மாதா காணிக்கை மாதா

மழைமலை மாதா மாசில்லா மாதா

பனிமய மாதா பரலோக மாதா

பாத்திமா மாதா பூண்டி மாதா

வெற்றி மாதா ஜெபமாலை மாதா

சலேத்து மாதா சந்தன மாதா

சந்தோஷ மாதா சகாய மாதாவே...


உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா - 2

1. முடமான மகனை நடமாட வைத்தாய்

கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய் - 2

பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய்

பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் - 2

2. கடல் நீரும் கூட உன் கோயில் காண

அலையாக வந்தே உன் பாதம் சேரும் - 2

உலகாளும் தாயே உனைப் பாடும் வேளை

நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா - 2

3. மலடான மங்கை மடி மீது மகனை

மகிழ்ந்தாடச் செய்த மகிமையின் தாயே - 2

குருடானேன் உன்னை கரங்கூப்பி நின்றால்

அருளாகி எமக்கு ஒளி தாரும் தாயே - 2


எங்கள் அம்மா என்று உன்னை அழைக்கையிலே

நெஞ்சில் ஆறுதல் பிறக்குதம்மா

உந்தன் அன்பால் எம்மை அணைக்கையிலே

எங்கள் இதயம் மகிழுதய்யா

ஓ மரியே வாழ்க ஓ மரியே வாழ்க - 2

1. என் நெஞ்சில் நிலையாக கோயில் கொண்டாய்

எப்போதும் வசந்தமாய் வாசல் வந்தாய்

விடிவெள்ளியாக நீ வரும் போது விடியாத இரவுகள் ஏதம்மா

முடிவொன்று சொல்ல நீ உள்ள போது

முடியாத முடிவுகள் ஏதம்மா

உனைப் பாடவே நான் வாழ்கின்றேன்

ஜெபமாலைத் தாய்மரியே - எங்கள் - 2 ஓ...

2. எல்லோர்க்கும் தாயாக நீயே வந்தாய்

இதயத்தில் ஆனந்தம் கோடி தந்தாய் - 2

வளமான வாழ்வு நீ தரும் போது

வணங்காத உயிர்களும் ஏதம்மா

கனிவான உந்தன் கருணைக்கு உலகில்

ஈடிணையேதும் இல்லையம்மா

மனம் உருகவே உனைப் பாடுவேன்

ஜெபமாலைத் தாய்மரியே - எங்கள் - 2 ஓ...


எங்கள் லூர்தன்னையே - 2

இசைநகர் தனிலே திருத்தலம் கொண்ட எங்கள் லூர்தன்னையே

தேடியே நாங்கள் வருகின்றோம் தேவைகள் தீர்த்திடும் தாய்மரியே

1. அலைகள் தாலாட்டும் எழில்மிகு ஆலயம்

கரைதனில் கண்டவளே

உம்மை நாடிடும் வறியவர் எளியவர்

வேண்டுதல் தீர்த்திட விரைந்திடுவாய்

தீர்த்திட விரைந்திடுவாய் - 2 தேடியே...

2. உம் திருப்பாதத்தை லூர்து நகரினிலே

தடமாய் பதித்தவளே

அந்த சுவடுகள் சுமந்த திருக்கெபி தனிலே

அருளாய் பொழிபவளே அருளாய் பொழிபவளே - 2

எங்கள் லூர்தன்னையே - 2


எந்தன் உள்ளம் ஆண்டவரை போற்றிப் பெருமைப்படுத்துகின்றது

எந்தன் மீட்பராம் வல்ல தேவனை

நினைத்து நாளும் மகிழுகின்றது

1. ஏனெனில் அவர்தம் அடிமையின்

தாழ்நிலையை கடைக்கண் நோக்கினார்

இது முதல் எல்லாத் தலைமுறையும் - என்னைப்

பேறுடையாள் என்று போற்றுமே

வல்லவராம் கடவுள் எனக்கு வியத்தகு செயல் புரிந்துள்ளார்

அவர்க்கு அஞ்சி நடப்பவர்க்கு இரக்கம் காட்டி வருகிறார்

தூயவர் அவர் திருப்பெயராம்

2. ஏனெனில் அவர்தம் வலிமையை

தலைமுறையாய் காட்டி வருகின்றார்

மனதிலே மிகுந்த செருக்குடனே

சிந்திப்போரை சிதறடிக்கின்றார்

வலியவரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்

தாழ்ந்தவரை உயர்த்தினார்

பசித்தவர் நலம் பெறச் செய்தார்

செல்வரை வெறுமையாக்கினார்


என் ஆன்மா எந்நாளுமே

ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது

என் மீட்பரை நினைத்து நினைத்து

எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது - 2

1. ஏழைகளை எளியவரை உயர்த்தினார்

பல இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் - 2

செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் - 2 நெஞ்சில்

செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் - 2

2. அடிமைகளை அன்புடனே நோக்கினார் - அவர்

ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் - 2

தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் - 2 வாழ்வில்

வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் - 2


எனதான்மா இறையவனை ஏற்றியே மகிழ்கின்றது

மீட்பராம் கடவுளையே என் மனம் புகழ்கின்றது

என்றென்றும் பாடிடும் எனதுள்ளமே இறைவனின் வல்லமையே - 2

1. இறைவனின் உறைவிடம் ஏழைகளே

உழைத்து உயர்ந்திடும் கரங்களே - 2

ஏழை எளியவர் நிம்மதி அடைய

சுரண்டிய செல்வர்கள் ஓடியே மறைய - 2

நீதியின் அரசு எங்குமே வளர அழைக்கின்றது இறைவனின்...

2. இன்று முதல் தலைமுறை அறிந்திடுமே

வலியோரின் அரியணை சாய்ந்திடுமே - 2

நீதி உண்மையின் ஆட்சியும் உயர்ந்திட

தீமை வலியவர் வல்லமை குறைய - 2

கருக்குள வார்த்தை சாட்சியாய் விளங்க அழைக்கின்றது

இறைவனின் வல்லமையே - 2


ஒரு நாவும் போதாதம்மா

உன் திருநாமம் புகழ்கூறி மரியே நான் உனைப்பாட

1. முறையோடு ஜெபமாலை தினம் ஏந்துங்கள்

குறையாத நலம் யாவும் பெறலாம் என்று - 2

கரைசேரும் வழிதன்னை எளிதாய்ச் சொன்ன - 2

மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல

2. தவறாமல் இறைநோக்கி செபம் செய்யுங்கள்

உலகோர்க்கு மனசாந்தி கிடைக்கும் என்றே - 2

அழியாத நெறிதன்னை அழகாய்ச் சொன்ன - 2

மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல

3. பலநாமம் உனக்கென்று அடைந்தாயம்மா

களம் யாவும் அருள்வெள்ளம் பொழிந்தாயம்மா - 2

இறைமைந்தன் நிறையாசீர் வழங்கச் செய்யும் - 2

மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல


ஒரு நாளும் உனை மறவேன் - தாயே

ஒரு நாளும் உனை மறவேன் - 2

1. கடல் நீரில் மிதந்தாலும் கானகத்தில் பறந்தாலும் - 2

உலகமெல்லாம் அறிந்தாலும் உத்தமனாய் சிறந்தாலும்

2. நினைத்தவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் - 2

என்னைப் பிறர் தான் இகழ்ந்தாலும் இனிதாகப் புகழ்ந்தாலும்


ஓ! தூய கன்னித்தாயே உம்மை நான் நேசிப்பேன்

ஊழியுள்ள காலமும் நான் உம்மை நேசிப்பேன் - 2

1. மோட்ச இராக்கினி தன்னை பாக்களால் போற்றுவோம்

வாக்கோடே உள்ளம் சேர வந்தனம் சாற்றுவோம்

2. சேயரானோ ரெல்லோரும் சேர்ந்தொன்று கூடுவோம்

தூய நேசத்தினாலே சோபனம் பாடுவோம்

3. அன்னையின் மாட்சி தன்னை எல்லோர்க்கும் காட்டுவோம்

மென்மேலும் அவள் பேரில் மெய்யன்பை மூட்டுவோம்

4. எல்லா விதத்திலேயும் எம் தாயை எண்ணுவோம்

பொல்லாங்கு தீர அவள் பொற்பாதம் நன்னுவோம்


கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே - 2

சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே

ஆரோக்கியம் தந்தவளே அம்மா - 2

1. வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே

உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே - 2

சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே - 2

இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே

இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

2. நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி

நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி - 2

முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே - 2

சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே

சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ


கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ

கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ - 2

1. கன்னிமாதா தேவசபையின் கதவு திறவாதோ - 2

கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ - 2

2. தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே - 2

சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே

ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே

உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே - 3


கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே

துலங்கிடும் மணியே கலங்குவோர்க் கதியே

காத்திடுவாய் தாயே - 2

1. மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே - 2

மாதரசியே மனஒளி தாராய் மாசு அகலச் செய்வாய்

2. தாயெனவே தாவி வந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய் - 2

பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி கூவிடும் குரல் கேளாய்


காணார் மலரே கற்பகமே கருணை வான்முகிலே

தினம் கோடி உன் புகழ்பாட

என் மனம் வேண்டி அழைக்குமே

வினை தானும் அகலுமே - 2 ஆவே - 3

1. ஆயிரம் கோடி ஆதவன் ஒளியைத் தாங்கிய முகமன்றோ - 2

நிறை ஆலயம் மேவியே ஆசனம் கொண்டவள் அழகுத் தாயன்றோ

பூத்திடும் புன்னகை பூவிதழ் ஓரங்கள் சொல்லுவ தென்னென்னவோ

உயர் பாசம் உதிரும் உன் பார்வையுமே

எம்மை பாதங்கள் சேர்த்திடவோ - உந்தன் - 2 ஆவே...

2. மங்கை அருள் அதி சுந்தரமே ஜெபமாலை மந்திரமே - 2

திருமந்திர மாநகர் கோவில் எழுந்த நல் மாணிக்க மகுடமே

அன்புக்கரம் கொண்டு ஆகிய நாள் முதல் ஆதரவானவளே

அருள் இன்முகம் காட்டி தாயெனக் காத்திடும்

தஸ்நேவிஸ் மாமரியே- திவ்ய - 2 காணார்...


கிருபை தயாபத்தின் மாதாவாய்

இருக்கின்ற இராக்கினி நீ வாழ்க - 2

எங்கள் ஜீவியமும் நீயே நிதம் தஞ்சமும் நீயே - 2

அம்மா அம்மா உன்னை நம்பினவர் இதுவரை

ஒன்றும் இல்லாமல் போனதில்லை நாளும் வரை - 2

ஏக அடைக்கல தாயல்லவா ஏழுதுறைக்கும் நீயல்லவா - 2

2. ஏகப் பிரதாபத்தின் இராக்கினியே

எழில்மிகு மனமுள்ள கன்னிகையே - 2

வான் தேவ இரகசியமே வளரும் நல் அதிசயமே - 2 அம்மா...


கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா - அது

கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா

சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2 - அந்த

உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

1. வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி - தாய்

பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன

ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா - 2 - அன்னை

தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

2. ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்

அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன

கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த - 2

காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே - 2

3. கோடானு கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும் - அன்னை

வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா

தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா - 2 - உன்

திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி - 2


சகாயத்தாயின் சித்திரம் நோக்கு

அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு

எத்துணைக் கனிவு எத்துனைத் தெளிவு

வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு

1. குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்

கொடூர சிலுவையும் கண்டு மிரண்டு - 2

தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை

சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ - 2

2. அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் - 2

இம்மாநிலத்தில் இவள் போல் - 2

இரங்கும் தாயும் உளரோ - 2


சகாயத்தாயே எங்கள் சந்தோஷம் நீயே

சதா எம்மைத் தேற்றுகின்ற தேவனின் தாயே

உம்மை மன்றாடி நலம் அடைந்தோம்

கொண்டாடி நன்றி பொழிந்தோம் - 2

1. மாதா நீ ஈன்ற இயேசு எங்கள் தெய்வம்

நீதான் அவர் சொன்ன யாவும் செய்த நெஞ்சம்

மரியே மாமரியே எங்கள் நல்மாதிரியே

எம்மையுன் பிள்ளைகளாய் அரவணைத்தாயே - உம்மை...

2. அம்மா உன் பாதம் வீழ்ந்து கிடக்கும் மலர்கள்

அன்பும் நிம்மதியும் வேண்டும் எங்கள் மனங்கள்

உன்னையே சரணடைந்தோம் உன்னருள் கரம் விழைந்தோம்

இன்னலில் இடராமல் நல்வழி நடக்க - உம்மை...


சதா சகாயமாதா சதா சகாயம் செய்யும் மாதா

தினந்தோறும் யாரும் வேண்டினாலும்

இல்லை என்றாத மாதா - 2

1. ஆதி பிதா ஆனவரின் அன்பான புத்திரியே - 2

ஜோதி சுடர் தேவன் திரு தாயான உத்தமியே - 2

2. இஸ்பிரித்து சாந்து தேவன் இன்பமே பத்தினியே - 2

இஷ்டபிர சாதவாக்கால் என்றதும் சத்தியமே - 2

3. வாசம் சேரும் ரோஜாப்பூவே மாசற்ற தாய்மரியே - 2

நேசமுடன் இயேசுவையே நேசிக்க செய்குவையே


சூரியன் சாய காரிருள் மெல்ல

சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை

பாருலகெங்கும்நின்றெழுந்தோங்கும்

பண்புயர் கீதம் வாழ்க மரியே - 2

2. மாய உலகினில் சிக்கி உழன்று

வாடியே உள்ளம் சோர்ந்திடும் வேளை

தாயகம் காட்டி கண்ணீர் துடைத்து

சஞ்சலம் தீர்க்கும் வாழ்க மரியே - 2

3. சுந்தர வாழ்க்கைத் தோற்றம் மறைய

துன்ப அலைகள் கோஷித்தெழும்ப

அந்திய காலை எம்மருள் குன்றும்

ஆதர வீயும் வாழ்க மரியே - 2

4. பட்சிகள் ஓசை மாய்ந்திட ஆடும்

பாலகர் நின்று வீடு திரும்ப

அட்சய கோபு ரங்கள் இசைக்கும்

ஆனந்த கீதம் வாழ்க மரியே - 2


ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே

உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா - 2

கோலவிழாவின் சிறப்பினைக் கூறி

அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா

1. தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்

தாயே உந்தன் நிழல் தேடி - 2

அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை

அண்டியே வந்தவர்கள் பல கோடி - 2

வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா - 2

அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா - 2

2. ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே - 2 - அம்மா

அருள்மழை பொழிந்திட தெரிந்தவளே

ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி - 2

வேளைமாநகர் வாழ் மரியே வாழி - 2


ஞானம் நிறை கன்னிகையே

நாதனைத் தாங்கிய ஆலயமே

மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2

பலிபீடமுமாய் அலங்கரித்தாயே

1. பாவ நிழலே அணுகா

பாதுகாத்தான் உன்னையே பரமன்

பாவ நிழலே அணுகா

தாய் உதரம் நீ தரித்திடவே - 2

தனதோர் அமலன் தலமெனக் கொண்டார் - 2

2. வாழ்வோர் அனைவரின் தாயே

வானுலகை அடையும் வழியே

வாழ்வோர் அனைவரின் தாயே

மக்கள் இஸ்ராயேல் தாரகையே - 2

வானோர் துதிக்கும் இறைவியே வாழி - 2


தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும் - 2

தலைபணி ஜெயராணி

1. தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை

விமரிசை புரிராணி - 2

2. தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

வங்கமார் கலிங்கம் கொங்கணம் மலையாளம்

குதுகலி மகாராணி - 2

3. தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

ஆந்திரம் குடகும் அகில மராட்டம்

ஆண்டிடு மகாராணி - 2


தரணியர் வாழ்த்தும் தாய்மரியே

வரம் விழைந்தோம் யாம் வாழ்வளிப்பாயே

1. குவலயம் போற்றிடும் கோமகனை

குறையினைப் போக்கிட கொடுத்தவளே

குறையற மனுக்குலம் மிளிர்ந்திடவே

கருணையின் முகில்தனை பரப்பிடுவாய்

2. சிலுவையின் அடியிலே தாயானாய்

சிறுமையில் மனிதரின் துணையானாய்

சிலுவையைச் சுமந்திட துணைபுரிவாய்

சிதறிய மனிதரைச் சேர்த்திடுவாய்

3. தரணியின் அரசியும் நீயன்றோ

தாழ்ச்சியின் வடிவமும் நீயன்றோ

தாயினும் சிறந்தவள் நீயன்றோ

தாசருக்குறு துணை நீயன்றோ


தஸ்நேவிஸ் மாமரி தோத்தரிப்போம் என்றென்றுமே - 2

என்றென்றுமே என்றென்றுமே - 2

தஸ்நேவிஸ் மாமரியைத் தோத்தரிப்போமே

என்றென்றுமே - 2 என்றென்றுமே

1. தூய தாயின் சேவடி தோத்தரிப்போம் என்றென்றுமே - 2

என்றென்றுமே என்றென்றுமே - 2 தஸ்நேவிஸ்...


தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம் - 2

அவள் சேயின் மடிதான் மோட்சம்

நம் சேசுவைத் தொழுதிடுவோம் - 2

1. பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் - 2

அவள் உள்ளம் என்றும் மகிழ

உண்மை வழியில் நாம் நடப்போம்

2. அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணாக் கடலாம் - 2

அன்பு கருணை உருவாய்

ஆண்டவன் தந்த அரும்பொருளாம்

3. வங்கக் கடற்கரை யோரம் வேளாங்கண்ணியில் வாழும் - 2

தங்கநிலாவின் ஒளியால்

தாரகை சூடும் ஆரோக்கியமாதா


தாயிருக்க அவள் தயவிருக்க

தாழ்வதில்லை நாம் வீழ்வதில்லை - 2

மரியே உலகின் தாய்

அவள் போல் மாறா அன்புத்தாய் உண்டோ

1. அடிமையென தனைத் தாழ்த்தி உரிமையை நமக்களித்தாள்

பொறுமையுடன் திருமகனை நமக்காய் பறிகொடுத்தாள் - 2

நம் சிறுமை அவள் பொறுப்பாளோ - 2

ஸா நீ தம மா ரிம பநி தம பா

பா மா பா தா மா மா கா ரிக ஸா

வறுமையில் நம்மை விடுவாளோ ஆ...

2. அம்மாவெனத் தன் குழந்தை அழைத்திட விரும்புகிறாள்

தன் மழலைக் குரல் கேட்டு மனம் மகிழ்ந்துருகிறாள் - 2

தினம் அம்மா மரி என அழைப்போம் - 2 ஸா...

அன்பாய் நம் குறை அவள் தீர்ப்பாள் ஆ...


தாயே உன் பாதமே நாடினோம் தஞ்சம் எனக் கூடினோம்

நீயே கதியென வாயார வாழ்த்தினோம்

நெஞ்சில் உறை அன்னையே

1. பிணியால் வருந்தும் துயர் நீங்கவே

தினம் கோடிப் பேர்கள் உனை நாடுவார் - 2

கனிவோடு நீ வந்து மகிழ்வோடு துணை செய்வாய்

கருணாகரி நீயே மரியன்னையே

2. கவலைகளினால் வாடுவோர்

கண்ணீர் துடைத்தருளே

பாவவினை நீக்கி ஜெபதபம் ஓங்கி

பாங்குடன் வாழச் செய்வாயே


தாயே மாமரி தஞ்சம் தாராய் தாய்மரி

மாய உலகினில் காப்பாய் தாய்மரி

1. துன்பக் கடல்தனில் துயரில் மூழ்கையில் - 2

இன்பமாக இனிக்கும் உன் இனிய நாமமே

2. முட்கள் நடுவினில் முளைத்த லீலியே - 2

முப்பொமுதும் கன்னியே மகிழ்ந்து வாழ்த்துவோம்


தாரகை சூடும் மாமரியே

தாளினைப் பணிந்தோம் காத்திடுவாய் - 2

1. தேவனை உலகுக்கு அளித்தவளே

தேடிய துணையைக் கொடுப்பவளே - 2

வாடிய மகவை அணைப்பவளே

வாழிய ஞானியர் காவலியே

2. தென்னகக் கன்னி கடலலையும்

பன்னெழில் இமய மாமலையும் - 2

மென்னெழில் எமது தாயகமும்

உன் புகழ் பணிந்தே பாடாதோ


தாவீதின் குலமலரே - ஒளி

தாங்கிடும் அகல்விளக்கே - எமைக்

காத்திடும் ஆரணங்கே - அருள்

சுரந்திடும் தேன்சுனையே - 2

1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்

கறை சிறிதில்லாக் காத்திருந்தார் - 2

மறையவர் புகழும் மாமணியே

கரை சேர்ப்பதுவே உன் பணியே

2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே

நற்கனி சுதனை எமக்களித்தாய் - 2

கற்றவர் மற்றவர் யாவருமே

பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா


தினமும் வாழ்த்துவோம் ஓ அன்னையே

நாம் தொழுதுனை ஏற்றி

1. தினமும் உனது பதத்தை ஏற்றி

வனமே அரும்பும் மலரை தூற்றி

மனமே உனது புகழைச் சாற்றி

தனமோர் அன்னையென் றுனையே போற்றி

2. சிறுமை நிறைந்த மனிதன் பூச்சி

வெறுமை அடர்ந்த உலகக் காட்சி

அருமை உமது தயையின் மாட்சி

பெருமை அதற்கு உலகம் சாட்சி

3. அழுது நிறை உன் தயைக்கு ஸ்துத்யம்

எமது நாவே படிக்கும் நித்யம்

உமது சலுகை எமக்க கத்யம்

சமயம் உதவி தருவாய் சத்யம்


தேவ தாயின் மாதம் இது அல்லவோ - இதை

சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா - 2

1. தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை

சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம் - 2

கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து - 2

கோயிலுக்கு சாயரட்சை ஆவலுடன் போவோம் வாரீர்

2. ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க

ஒப்பந்தமே செய்தாலொரு தப்புமில்லையே - 2

இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் - 2

இந்த மாதம் எல்லோருக்கும் நல்லதிர்ஷ்ட முள்ளதாகும்

3. பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை

புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே - 2

ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி - 2

ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே


தேவன் தந்த தேவிநீ தெய்வீக புவனராணி நீ

தேனோர் தம் புகழும் வாணி நீ

தெய்வம் நீ என் தாயும் நீ - 2

1. கற்பின் நிறை பொற்கலசம் நீ கருணை வடிவம் நீ

கர்த்தரைத் தாங்கிய கவசம் நீ கன்னியும் தாயும் நீ - 2

தெய்வத்தின் தெய்வம் அம்மா தேற்றிடும் அன்னையம்மா - 2

2. சத்திய வேத உத்திரம் நீ சாஸ்வத பொக்கிஷம் நீ

சர்வலோகாதி இராக்கினி சகாய அன்னை நீ - 2

இன்முக காட்சி தனை என்றென்றும் நீ அருள்வாய் - 2


நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்

எந்நாளும் அன்னையின் புகழ்பாடுவோம்

நெஞ்சத்தில் நிறைந்திடும் நல் அன்னைக்குப்

புகழ்ப்பாக்கள் பாடிடுவோம்

ஆ... அன்னையே வாழ்க - 2

அருளால் - 2 நிறைந்த - 2 அன்னையே நீ வாழ்க

1. இறைவனின் திருவுளத்தை

நிறைவேற்றிட மனமுவந்தாய் - 2 என்றும்

மறைபுகழ் உன் வழி இறையுளம் அறிந்திட

குறையின்றிக் காத்திடுவாய்

2. தரணிக்குத் தாயானாய் - திருத்

தாய்மையைப் பாடுகின்றோம் - 2 என்றும்

திருவாம் இயேசுவின் அன்பர்கள் ஆகிடத்

தாயே உன் அருள் தாராய்


நாளாம் நாளாம் புனித நாளாம்

மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் - 2

1. அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் - 2

அருளான கன்னித் தாயாரின் நாளாம்

ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் - 2

Gloria Gloria Gloria Gloria in excelcis Deo

2. தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் - 2

தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம

ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் - 2

Gloria Gloria Gloria Gloria in excelcis Deo

3. தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் - 2

தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்

மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் - 2

Gloria Gloria Gloria Gloria in excelcis Deo


நினைக்கும் மருந்தாகி அருள்வெளிக்கே விருந்தாகி

ஏழிசைக்கு நீ காற்றாகி இன்பம் சுரக்கும் நல் ஊற்றாகி

நினைக்க நினைக்க நெஞ்சம் தித்திக்க தித்திக்க

வரம் கொடுக்கும் அன்னையே அம்மா - 2 அம்மா அம்மா

வணக்கம் வணக்கம் வணக்கமம்மா

வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே - 2

1. மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா - எழில்

மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா - 2

நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே

தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே - 2

2. வேளைநகர் வந்த விண்ணவர் தாயே

வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே - 2

தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே

கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே


புகழ்வாய் மனமே இசைப்பாய் கானமழை

பணிவாய் புலன்களே மேரி மாதா சந்நிதியில் - 2

1. அவள்தான் உன் அன்னையே உனக்காய் ஜெபிப்பவளுமே

உன் ஆத்ம வாஞ்சையுமாய் இருப்பாள் அவள் என்றுமே

ஒருபோதும் மறவாமலே புவிமீது காத்திடுவாள் - 2

2. தெய்வமாதா தான் அவளே செய்வதெல்லாம் மகத்துவமே

போக்குவாள் உன் துயரங்களை துதிப்பாய் நீ அவள் அடியே

வேளாங்கண்ணியளாம் அன்னையை மறவாமலே தினமும் - 2


புவனராணியே புனித ராணி புகழுமா மகிமை ராணியே - 2

1. சகல லோக மாளும் மகா ஏக பரமன் தாய் - 2

அகமும் உடலும் அழகு மிளிரும் அன்னைமரி நீயே - 2

2. கவலை மோதி வாட்டும் எம்மைக் காப்பதுன் கடமை - 2

தபமும் தயையும் நிறையும் மரியே

அபயம் எங்கள் தாயே - 2


பொற்பை நகரின் காவிரியே பாசத்தோடு பாட வந்தோமே - 2

பரிவுடன் எம் குறைதீர்க்க பரமன் உன் இயேசுவைக் கேளும் - 2

1. நோயில் வாடும் எம்மவர்க்கு நோய் தீர்க்கும் மருந்தானாய்

எளிய எங்கள் வேண்டுதலை ஏற்று எமக்கு வரம் தருவாய் - 2

2. ஆண்டவர் அருளால் நிறைந்து இயேசுவையே எமக்குத் தந்தாய்

இயேசு வழியில் நடந்திடவே எமக்கு என்றும் துணை நிற்பாய் - 2


மதுமலர் முகமோ ஒளிர்நிறை நிலவோ அழகுறும் தேவதையே

கதிரவன் சுடரோ கருணையின் வடிவோ

தரணியின் தாரகையே - 2

இந்த வானமும் பூமியும் தோன்றும் முன்னே

பரிபூரணத் தாயென நீ நிகழ்ந்தாய் ஆவே - 4

1. ஆதிப்பிதாவின் திருமகளே

அனைத்துலகாளும் குலமகளே - 2

வானிறை வந்த சீதனமே

வளரு மாமந்திர ஆலயமே - 2 இந்த...

2. ஆலயமணி உன் புகழ்பாடும்

அலைகடல் ஓசை இசையாகும் - 2

உறைபனி நிறைதிகழ் ஆசனத்தில்

உன் திரு அழகினை எமக்களிப்பாய் - 2 இந்த...


மரியின் மடியில் மனிதம் மலர சுரங்கள் இசைக்கின்றேன் - 2

ஏழை மனதின் ஏக்கம் தீர வரங்கள் கேட்கின்றேன்- 2

மரியே தாய்மரியே மரியே அருள்மரியே

1. பாலைமணலில் பயணம் போலே எந்தன் துணையே நீதானே - 2

மரியே மரியே மரியே மரியே

அந்த சோலைமலர்கள் பூப்பது போல் - நீ

எந்தன் மனதுக்குள்பூத்திருந்தாய்

மரியே மரியே நீ எந்நாளும் தாய்மரியே

நீ எந்நாளும் அருள்மரியே

2. தேடும் போது வாழ்க்கை வந்தால் உந்தன் கருணை அதுதானே - 2

மரியே மரியே மரியே மரியே

அந்த காலைக்குயிலின் கீதம் போல் - நீ

எந்தன் நெஞ்சில் பதிந்திருந்தாய் - மரியே...


மரியென்னும் நாமம் அழகு நாமம்

மங்காத நாமம் திருநாமம் ஆவே மரியா

1. அடிமை என்பதும் இவளன்றோ

அற்புதத் தாயும் இவளன்றோ

இறைவனின் தாயாய் இவளிருக்க

அழுதிட இவள் நம்மை விடுவாளோ

2. பகையும் வன்மையும் மறைந்திடவே

ஒற்றுமை எங்களில் நிறைந்திடவே

எல்லோரும் உம் அருள் பெற்றிடவே

எந்நாளும் அருள்வாய் தாய்மரியே


மரியே உன்னை போற்றுகின்றோம்

மாதவமே உன்னை வாழ்த்துகிறோம்

இறையே உன்னை ஏற்றுகின்றோம்

அருள்வடிவே நன்றி கூறுகின்றோம்

1. கிறிஸ்துவின் போதனை செயல்களையே

மனதினில் எந்நாளும் தியானம் செய்தாய்

இயேசுவை முழுமையாய் புரிந்துகொண்டு

உத்தம சீடனாய் உயர்ந்து நின்றாய்

2. இயேசுவின் புரட்சி செயல்களிலே

இறைவனை புகழ்ந்து பாடி நின்றாய்

துன்பங்கள் இயேசுவை சூழ்கையிலே

உணர்வாய் அவருடன் ஒன்றுபட்டாய்

3. மனிதனின் விடுதலைப் பணியினிலே

மீட்பதன் கீதம் முழங்கிடுதே

விடுதலைப் பணியில் எம்மோடு

துணை வரவேண்டும் எம் தாயே


மறந்தாலும் மறவாத தாய்மரியே - உந்தன்

மலர்ப்பாதம் பணிவேனம்மா - 2

இறந்தாலும் இறவாத மாமரியே - உன்னை

இசையாலே புகழ்வேனம்மா - 2

1. கடலினிலே கண்டெடுத்த விலையுயர்ந்த முத்தினைப் போல்

உலகினிலே இறையவனின் சொத்தாகினாய் - 2

பல வழியில் நிலைமாறி தடுமாறும் மானிடரை - 2

திருமகனின் பதம் சேர்க்கும் வழியாகினாய்

2. இறைவார்த்தை நிதம் கேட்டு இதயத்தில் தியானித்து

கறையேதும் இல்லாமல் சிறந்தோங்கினாய் - 2

முறையாக இவ்வுலகில் இறைஇயேசு வழி வாழ - 2

குறையாத அருள்பொழியும் சுனையாகினாய்


மாசற்ற கன்னியே வாழ்க தேவன்னையே

தாசர்க்குதவியே நேசர்க்கருள்வாயே - 2

1. மானிடர்க் குற்ற சாபம் மாதுனக் கிலையே

ஆனந்தப் பிரதாபம் ஆனதுன் நிலையே

2. சாதந்த கனியாலே சாபமும் அழிவும்

நீதந்த கனியாலே நேசமும் உயிரும்

3. பாசஞ்செய் பிசாசான பையரவதனை

நாசமாய்க் குதிங்காலால் நைந்திட மிதித்தாய்


மாசில்லா மரியே மங்காத மதியே அருட்சுடர் பெறும் வழியே - 2

உன்னை அம்மா என்றழைத்தால்

ஆறுதல் தந்து அடைக்கலம் தருபவளே

அன்னை நீ வாழ்கவே எங்கள் மரியே நீ வாழ்கவே - 2

1. ஆகட்டும் என்று அம்மா மொழிந்தாய் எம் மீட்பர் வந்தாரம்மா

இதோ உன் தாயென இறைமகன் தந்தார் இன்பமே பெருகுதம்மா

வானமும் வையமும் என்றுமே வாழ்த்தும்

மகிமையின் தாய்மரியே இறை மகிமையின் தாய்மரியே அன்னை...

2. சீடர்கள் குழுவினில் இறைவனை வேண்டிய ஆவியின் ஓவியமே

இயேசுவின் வார்த்தைக்கு செயல் உருக்கொடுத்திட பணிக்கின்ற காவியமே

பன்னிரு விண்மீன் முடிசூட வாழ்த்தும் விண்ணகப் பேரெழிலே

இறை விண்ணகப் பேரெழிலே அன்னை...


மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்

நேசமில்லாதவர் நீசரேயாவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2

1. மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்

ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் - 2 வாழ்க...

2. தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ

நேசம் வைத்தாள்வது நின் கடனாமே - 2 வாழ்க...


மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்

கன்னி மாதாவே சரணம்

மாபாவம் எம்மை மேவாமல் காவாயே அருள் ஈவாயே - கன்னி...

1. மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்

மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் - 2

ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் - 2

பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம்

2. நானிலத்தில் சமாதானமே நிலவ

நாஸ்திக உலகம் ஆஸ்திக மடைய - 2

உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் - 2

உன் இருதயத்தில் இன்றெமை வைப்போம்


மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும்

ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா

ஏற்றன் பாக எமைப் பாரும் - 2

1. வானோர் தம்மரசே தாயே எம் மன்றாட்டைத் தயவாய் கேளும் - 2

ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல் எக்காலத்துமே தற்காரும்

2. ஒன்றே கேட்டிடுவோம் தாயே யாம் ஓர் சாவான பாவந்தானும் - 2

என்றேனும் செய்திடாமற் காத்து எம்மை சுத்தர்களாய்ப் பேணும்


மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

தாய் என்று உன்னைத் தான் - 2

பிள்ளைக்குக் காட்டினேன் மாதா

1. மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே - 2

மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே

மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா

2. காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே - 2

கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே

அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா

3. பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2

அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது

கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா


மாமறை புகழும் மரியென்னும் மலரே

மாதரின் மாமணியே - 2

1. அமலியாய் உதித்து அலகையை மிதித்து

அவனியைக் காத்த ஆரணங்கே - 2

உருவிலா இறைவன் கருவினில் மலர

உறைவிடம் தந்த ஆலயமே

2. பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து

ஒளியினை ஏற்றிய அகல்விளக்கே - 2

இருள்திரை அகற்றி அருள்வழி காட்டி

வானக வாழ்வை அளிப்பாயே


முதல்வனின் தாயே புதல்வர்கள் பணிந்தோம்

உதவிட வாராயோ உந்தன் அருள்நிறை தாராயோ

1. வாழ்ந்திடத் துடிக்கின்றேன் எனக்கு வழிவகை தெரியவில்லை - 2

கைகளைப் பிடித்திடுவாய் அம்மா துயரின்றி நடந்திடுவேன்

2. இறைவனின் மகளானாய் எங்கள் ஆண்டவர் தாயானாய் - 2

நீ இன்று அறிந்திடுவாய் உந்தன் சேய்களின் குறைகளம்மா


முதிர் முத்தொளிவோ முகம் குளிர்நிலவோ

இவள் இத்தரை தாரகையோ

விண்ணில் பொற்சரமோ வியர் புதுமலரோ

நம் விமலனின் தாயல்வவோ - 2

ஓயாது பாடிடுவோமே புகழ் உன்னத அன்னையற்கே

ஓ தேவதாய் இவளே இவளே

நம் ஏக அடைக்கலமே நிதமும்

ஓ தேவதாய் இவளே இவளே

துதி பாடியே தோத்தரிப்போம்

1. புதுமணம் கமழும் நிதம் அகம் மலரும்

திருப்பதமது நிதம் திகழும்

திருமந்திர மாநகர் ஆலயத்தில்

வளம் தந்தருள் மாமரியே - 2 ஓயாது...


யாத்ரி கட்குப் பாதை காட்டும் தாரகையே

என்றும் கன்னித் தாயே என் தஞ்சமே வாழ்க

ஆவே ஆவே ஆவே மரியே - 2

2. தேவ தூதன் சொன்ன தேவ வாழ்க்கை ஏற்று

ஏவை பேரை மாற்றும் ஜீவ இன்பம் ஊற்றும் ஆவே...

3. பாவ இருள் போக்கி தேவ ஒளி யாக்கி

ஆவியின் நோய் தீரும் ஜீவ வரந் தாரும் ஆவே...

4. மாசில்லாக் கன்னியே மாதாவே உம்மேல்

நேசமில்லாதவர் நீசரே ஆவார் ஆவே...


வங்கக் கடலலைகள் வந்து தாலாட்டும்

எங்கள் ஆரோக்கியத் தாய்மரியே நீ வாழ்க

எங்கும் புகழ் மணக்க விளங்கும் பேரணங்கே

எங்கள் தாயாக என்றும் இருப்பவளே

1. முடமாய் இருந்தவனை முழுவதும் குணமாக்கி

நடமாடச் செய்தவளே நாயகியே தாயே

குறைந்திட்ட பால் பெருக்கி குன்றாத நலம் புரிந்து - 2

நிறைவு அடைந்திடச் செய்த எம் தாய்மரியே

2. செவ்வாய் இதழ்விரித்து செங்காந்தள் கரமுயர்த்தி

ஒவ்வாத பிணியெல்லாம் நொடியில் தீர்ப்பாய்

கத்தும் கடல் புயலடக்கி காற்றை நெறிப்படுத்தி - 2

தரையில் அமைதியை தந்தவள் நீ தாயே


வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே

கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- 2

தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை

தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - 2

1. அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம்

தௌளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் - 2

வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா

எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே - 2

2. தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே - 2

வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே

ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே - 2


வணக்கம் வணக்கம் வணக்கமம்மா

வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே - 2

1. மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா - எழில்

மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா - 2

நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே

தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே - 2

2. வேளைநகர் வந்த விண்ணவர் தாயே

வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே - 2

தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே

கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே


வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத்தாயே

சந்தோஷமாகப் பாடி உன் தாள் பணியவே

1. பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரணத் தாயே

மேலோனின் உள்ளந்தன்னில் நீ வீற்றிருந்தாயே

2. தூயோர்களாம் எல்லோரும் நீ தோன்றும் நாளினை

ஓயாமல் நோக்கிப் பார்த்தே தம்முள் மகிழ்ந்தாரே

3. வானங்கள் கீதம் பாட நல் மாந்தர் தேடிட

ஊனஞ்செய் பாம்பு ஓட நீ உற்பவித்தாயே


வான்லோக ராணி வையக ராணி

மண்மீதிலே புனித மாது நீ - 2

1. விண்ணொளிர் தாரகை தாயே நீ

தண்ணொளிர் வீசிடும் ஆரணி - 2

பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வராணி

பாதுகாத்து ஆளுவாயே நீ - 2

2. ஜென்ம மாசில்லா மாதரசி

செம்மைசேர் மங்கையர் ராணி நீ பாவமேது...

3. புண்ணிய மேநிறை மாது நீ

விண்ணவர் போற்றிடும் அம்மணி பாவமேது...


வானக அரசியே மாந்தரின் அன்னையே - நான்

உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன்

1. பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ

பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ - 2

அலகையின் தலைமிதித்தாய் விண் மன்னனை எமக்களித்தாய்

2. இன்றும் மீட்பின் பணி தொடர்கின்றாய்

காட்சிகள் வழி இறையருள் தருகின்றாய் - 2

புவியதன் தாய் எனவே மக்கள் அனைவரைக் காக்கின்றாய்


விடியலைத் தேடும் நெஞ்சங்களே விடியாக் கனவின் சொந்தங்களே

நமக்கொரு தாய் இருக்கின்றாள்

வாருங்கள் அவளிடம் செல்வோம் - 2

1. இருள் சூழம் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்

கீழ்வானம் சிவக்கும்மென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் - 2

தாயவள் அழகு பொற்சித்திரம்

கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் - 3

2. புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்

மலராத மொட்டுக்களாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் - 2

வாழ்வினில் என்றும் போராட்டமே

தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே


விண்மீன் முடியென கொண்டவளே - எங்கள்

விமலனைத் தாங்கிய ஆலயமே

எழில்மலர் போன்ற சித்திரமே - உந்தன்

நித்திய அழைப்பினை ஏற்கவந்தோம் - 2

1. அன்பிலும் அருளிலும் வளரச் செய்வாய் - இறை

ஆசீரை எங்களில் மிளிரச் செய்வாய் - 2

இறைவாக்கினை யாம் மனதிற்கொண்டே - என்றும்

உன்னைப் போல் ஊன்றி வாழச் செய்வாய் - 2

இகமதில் மலர்ந்திட இறைபுகழ் பாடிட

இயேசுவின் பாதத்தில் சேர்த்திடுவாய் - 2

2. நீதியில் யாம் செல்ல வழிகாட்டுவாய் - என்றும்

நேரிய நெறிதனில் வளரச் செய்வாய் - 2

சமத்துவம் என்னும் சங்கீதத்தை - யாம்

பாரெங்கும் பாடிட வரம் தருவாய் - 2

வலியவர் அரியணை உடைந்திட தகர்ந்திட

எளியவர் வாழ்வு மலரச் செய்வாய்


விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு

அன்னைமரி உள்ளம் தட்டும் மன்றாட்டு - 2

ஜெபமாலை சொல்லுவோம் அருள்மாலை சூடுவோம் - 2

1. விண்ணகத்தந்தையின் அன்பு பரிசாம் அன்னை மரியாள்

மண்ணவர் தாயின் பெரும் பரிசாம் அருள்மணியாம் - 2

சொல்லொண்ணா துயரம் நீங்கவே

சொந்தங்கள் யாவும் சூழவே - 2

ஜெபமாலை சொல்லுவோம் அருள்மாலை சூடுவோம் - 2

2. நெஞ்சனில் கனக்கும் பாவச்சுமைகள் இறக்கிவைப்பாள்

மின்னியே மிரட்டும் பகையதனை விரட்டி நிற்பாள் - 2

அன்னையால் எதுவும் ஆகுமே

அற்புதங்கள் கோடி நிகழுமே - 2

ஜெபமாலை சொல்லுவோம் அருள்மரியே சூடுவோம் - 2


வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே

சிலுவை அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ - 2

1. பன்னிரு வயதில் ஆலயத்தில் - அன்று

அறிஞர்கள் புகழ்ந்தவரை - 2

கரங்களை விரித்தே கள்வனைப்போல்

கழுமரத்தினில் கண்டதினால்

2. திருமணப் பந்தியில் கனி இரசமே - அன்று

அருளிய திருமகனை - 2

குருதி சிந்தி கடற்காடியினை - இன்று

பருகிடக் கண்டதினால்

3. கண்ணீரே சிந்திய மனிதருக்கு - அருள்

புண்ணிய திருமகனே - 2

மண்ணவர்க்காகத் தன்னுயிரை - இன்று

மாய்த்திடக் கண்டதினால்


ஜென்மப்பாவம் இல்லாமலே உற்பவித்த இராக்கினியே

நாங்கள் எல்லாம் உன் பதத்தை நாடிவந்தோம் நாயகியே

மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே

2. பேய் மயக்கும் பாவவழி நின்று எம்மைக் காத்திடுவாய்

தூய வெண்லீ லிமலர்போல் தோன்றினாயே பூமிதனில் மரியே...

3. மணிமுடி தாங்கி நிற்கும் மகிமையின் அரசியே

வானவரும் மானிடரும் வாழ்த்தி உம்மைப் போற்றுகின்றோம் மரியே...


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *