திருவிருந்து பாடல் வரிகள்


அகவிருந்தாக என் இறைவா வா - மனம்

மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா - 2

1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு

ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே - 2

உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2

உமதுடலென எமை நீ மாறவைப்பாய்

2. நேரிய மனத்தவர் குறைதணிப்பாய் - எமை

நீடிய மகிழ்வினில் நிலைக்க வைப்பாய் - 2

நலமிகு உணவாய் நிறைந்திருப்பாய் - 2 - இனி

உலகினில் உனிலே வாழ வைப்பாய்

3. தேன்மொழி மொழிந்த உன் திரு இதழால் - எம

தான்மா நற்குணம் பெற மொழிந்திடுவாய் - 2

உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2 - இனி

உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்


அகழ்ந்திடுவார் தம்மை என்றும் அன்புடன் நிலம் தாங்கும்

என்ன தான் குறைகள் செய்தாலும்

உன் இதயம் தாங்கும் என்றும் எனைத் தாங்கும்

1. அழுதாலும் உன் கரம் தேற்றும்

மகிழ்ந்தாலும் அது உன் நிழலில் - 2

உன்னை நான் மறந்து வாழ்ந்தாலும் வாழ்வதும் உன்னாலே

வல்லவன் நீயின்றி என் இதயத்தில் நிறைவில்லை - 2

உந்தன் தாளில் கூடும் பலகோடி பூவிதழுள் நானும் ஒன்றாவேன்

உன் திருநாளில் என் உள்ளம் மங்களம் பாடும் தன் இல்லம்

உன் நினைவாலே தெய்வீகம் வாழ்வு பெறும்

2. ஆசைகளில் தடுமாறியதில் விழுந்தால்

எடுப்பதும் உன் உருவே - 2

துன்பம் நான் அடைந்து சோர்ந்தாலும் வாடுவதும் நீயே

என்னிடம் வலுவில்லை உன் பலமன்றி கதியில்லை - 2

வரும் காலம் உன் மடியில்

வாழ்வும் உன் மடியில் நானும் உன் சந்நிதியில்

உன் திரு உள்ளம் என் இல்லம்

உன் திரு சொல்லே என் சொந்தம்

உன் உறவொன்றே என் இன்பம் என்றென்றும்


அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு

எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு - 2

1. குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்

உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் - 2

என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது

அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2

2. அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ

சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ - 2

அன்னை உன்னை மறந்தாலும்

உன்னை நானோ மறவேனே அஞ்சாதே......


அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே - 2

1. மண்ணோர்க்கு மீட்பு ஈந்தவா பீடம் தன்னில் வந்தாய் - 2

விண்ணகம் நின்று மண்ணகம் வந்த ராஜ ராஜனே - 2

2. எம்மோடு ஒன்றி வாழவே உண்ணும் உணவானாய் - 2

அருளின் வாழ்வில் நிலைத்து வாழும் பாதை காட்டினாய் - 2

3. பாவிக்கு மோட்சம் நல்கவே பாவி உருவானாய் - 2

பாவத்தில் வாழும் மாந்தரின் உள்ளம் புனித மாக்குவாய் - 2


அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே - உன்

அடியெடுத்து நான் செல்லும் பாதைகளெல்லாம்

என்னோடு தொடர்ந்து அரவணைக்க வேண்டுமே - 2

1. சோகங்கள் பலகோடி சூழ்ந்திடும் வேளையில் - உன்

சிறகினுள் எனை மூடி அடைக்கலம் தரவேண்டும் - 2

உந்தன் புது உறவிலே கவலையெல்லாம் மறந்து - 2

உலகெலாம் நற்செய்திப் பணியினைத் தொடர்வேன்

2. வாழ்வினில் தடைகள் தொடர்ந்து வந்தாலும் - உன்

வல்லமை கரமென்னில் இருந்திட வேண்டும் - 2

உந்தன் நல்துணையிலே பாதையினைத் தெளிந்து - 2

எந்நாளும் நிறைவாழ்வுப் பயணம் செல்வேன்


அருட்கனியே என் அகநிலவே - என் இருளினை நீக்கிட வா

அருள்மழையே என் உளமதில் மருட்சியை நீக்கிட வா

1. ஆயிரம் வாழ்த்தொலிகள் - உன்னை

ஆராதனை செய்யும் தீபங்களோ

ஆனந்தம் பொழிந்திட வா - இன்ப

ஆறுதல் மொழிந்திட வா - இறைவா

2. நல்லறம் காப்பவனே நீ இல்லாமல் என் வாழ்வு நன்றாகுமோ

ஆலயம் வாழ்பவனே உள்ள ஆறுதல் அளித்திட வா - இறைவா

3. காலமென்னும் கடலில் எம் வாழ்வென்னும் படகு நீயன்றோ

வாழ்க்கையின் வழியே வா எம் வாழ்க்கை மலர்ந்திட வா - இறைவா

4. கலங்கரைச் சுடரே வா நல் காலங்கள் உருவாக்கும் தென்றலே வா

நிலவிடும் அகவிருளை உன் ஒளியால் நீக்கிடவா - இறைவா


அருள்பொழி அண்ணலே வா இன்பம் தரும் அன்பனே வா

என்னுள்ளத்தின் அன்பைக் கவர்ந்த ராஜனே - 2

1. தென்றல் இன்பம் திளைத்திடும் விண்ணிலவின் தண்ணொளி போல்

இன்பம் தரும் இயேசுநாதா என்னுள்ளத்தில் இறங்கி வா

இன்பம் தரும் இயேசு நாதா

என் உள்ளத்தின் அன்பைக் கவர்ந்த ராஜனே - 2

2. இன்றலர்ந்த மல்லிகை போல் நறுமணம் வீசிடவே

அள்ளி எனை அணைத்திட வந்திடுவாய் விண்ணமுதே இன்பம்...

3. துன்பம் பல சூழ்ந்திடவே உன்னையே நான் நாடி நிற்க

தட்டி எனைத் தேற்ற வாராய் விண்ணவரின் போஜனமே இன்பம்...


அருள்வடிவே ஆனந்தமே வரம் ஒன்று தருவாயா

திருவிருந்தே அருமருந்தே அருகினில் வருவாயா

ஒருகணம் உனையழைத்தேன் நீ என் மனம் அமர்வாயா

என்னகம் நீ அமர்ந்து நீ ஒளிதனை பொழிவாயா

வழியாக வாழ்வாக வா

1. ஆகாயம் போன்ற உள்ளம் உன்னிடம் பார்க்கிறேன்

மடைதிறந்த வெள்ளம் போல உன் முகமே பார்க்கிறேன்

மலைபோன்ற உந்தன் உள்ளம் மன்னிக்க கேட்கிறேன்

தாய்மைக்கும் மேலாம் உந்தன் அன்பிதயம் கேட்கிறேன்

எனக்கினி ஏதும் இல்லை நீதானே என் எல்லை - 2

அடைவேனே உன்னை

2. ஊதாரி மைந்தன் என்னை மன்னித்து ஏற்கிறாய்

வழிமாறிப் போன என்னை கரம் ஏந்தி காக்கிறாய்

புகைவந்த சுடராய் என்னை மலைமீது ஏற்றினாய்

புறந்தள்ளி ஒதுக்கிய என்னை மூலைக்கல் ஆக்கினாய்

இனி உனக்காக வாழ்வேன் இகமதை நானும் வெல்வேன் - 2

உயிர்ப்பேனே உன்னில்


அருளே எம்மில் வாழ்வுதந்த அருளே

மகிழ்வே எங்கள் வாழ்வில் என்றும் மகிழ்வே

வாழும் ஒரு தெய்வம் எமைத் தேடி வந்தது

பாதை அது காட்டி நின்று முன் நடந்தது

உள்நிறைந்து உலகளந்து உயிர் கொடுத்தது

1. ஞாலம் கண் காணுகின்ற வடிவெடுத்தது

எங்களோடு தெய்வம் வாழ்தல் உண்மையானது

வாழும் வழி தந்து உடன் துணையளித்தது

வழியமைத்தது உண்மை உயிர் கொடுத்தது

நிலமெனும் வீட்டில் நிலையொளி வந்தது

மனமென்னும் தோட்டம் அமைதியைக் கொண்டது

நீதியின் ஆதவன் மகிழ்வோடு உதித்தது

2. ஏழ்மை ஒரு சாபம் என்ற எண்ணம் போனது

தாழ்ந்தவரை உயர்த்தி தெய்வம் கருணை செய்தது

பெண்மை சமம் இல்லை என்ற நிலையும் ஓய்ந்தது

விடிவு வந்தது அடிமை நிலை முடிந்தது

விடுதலை வேட்கை எங்கும் எழுந்தது

துயர்களைத் தாங்கும் துணிவு பிறந்தது

தடைகளைத் தகர்த்திடும் நம் காலம் விடிந்தது


அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்

இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - 2

நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்

நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் - 2

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்

தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்

தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் - நான்

சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - 2

2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்

பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்

நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் - அதன்

விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - 2


அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே

அருள்வாய் அருள்வாய் யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி

அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - 2

1. நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி

தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி - 2

அன்பு மொழியை விதைத்திடுவோர்

அருளின் பயிரை அறுத்திடுவார் - 2 அமைதி....

2. உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி

உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி

ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்

வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் - 2 அமைதி....


அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே

அன்பனே இறைவனே என்னிலே வாருமே - 2

1. பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் - 2

வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும் - 2

கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்

2. தளர்ச்சி தோன்றும் பொழுது மனதிடம் தழைக்கவும் - 2

இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும் - 2

துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்

3. ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் - 2

கொடுப்பதில் நிறைவு கண்டு மன்னித்து வாழவும் - 2

தன்னலம் ஒழித்து புதிய உலகம் படைக்கவும்


அமைதி தேடி அலையும் நெஞ்சமே

அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2

நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2

அவரின்றி வேறில்லையே

1. போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்

என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே - 2

காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து

அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே - 2

2. இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்

நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே - 2

பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்

என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே - 2


அன்பனே விரைவில் வா உன் அடியேனைத் தேற்ற வா

1. பாவச் சுமையால் பதறுகிறேன்

பாதை அறியாது வருந்துகிறேன் - 2

பாதை காட்டிடும் உன்னையே நான் - 2

பாதம் பணிந்து வேண்டுகிறேன்

2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்

அருளை அளிக்க வேண்டுகிறேன் - 2

வாழ்வில் உணவே உன்னையே நான் - 2

வாழ்வு அளிக்க வேண்டுகிறேன்

3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்

இதயம் நொந்து அழுகிறேன் - 2

ஒளியாய் விளங்கும் உன்னையே நான் - 2

வழியாய் ஏற்றுக் கொள்ளுகிறேன்

4. ஏழ்மை நிலையில் இருக்கிறேன்

என்பு உருகிக் கிடக்கிறேன் - 2

வாழ்வின் விளக்கே உன்னையே நான் - 2

வாழ்வின் துணையாய் பெறுகிறேன்


அன்பான இறைவா பாவம் செய்தேன் அன்பாய் மன்னிப்பீரே

அன்பின் மானிடரே பாவம் செய்தேன் அன்பாய் ஏற்பீரே - 2

1. கண்களால் பாவம் செய்தேன் - என்

சிந்தனையால் பாவம் செய்தேன் - 2

சொற்களால் பாவம் செய்தேன் - என்

செயல்களால் பாவம் செய்தேன் - 2

2. கடமை தவறி நான் பாவம் செய்தேன்

கருணை புரியாமல் பாவம் செய்தேன் - 2

நன்மை செய்யாமலும் பாவம் செய்தேன்

நன்மை செய்விடாமல் பாவம் செய்தேன் - 2

3. அம்மா மரியே நீர் மன்றாடுவீர்

தூயவரே தூதர்களே மன்றாடுவீர் - 2

மானிடரே நீவீர் மன்றாடுவீர்

இறை நோக்கி மன்றாடுவீர் - 2


அன்பு என்பது வல்லமை ஆக்கம் அளித்திடும் ஆற்றலே

அர்த்தம் ஆகிடும் வாழ்விலே அன்பு என்றும் வாழுமே - 2

1. நின்று நிலைக்கும் எதுவுமே அன்பு உருவம் கொடுத்ததே - 2

தன்னை வழங்கும் இதயமே அன்பில் நனைந்தே கனிந்ததே - 2

ஆள விடுங்கள் அன்பையே அன்பையே அன்பையே

வாழும் தெய்வம் நம்மிலே நம்மிலே நம்மிலே

2. உயிர்கள் அனைத்தின் இயக்கமாய்

இயங்கும் உலகின் ஏக்கமாய் - 2

ஏங்கும் மனங்களின் இதயமாய்

அனைத்தின் நிறைவும் அன்புதான் - 2 ஆளவிடுங்கள்...


அன்பில் விளைந்த அமுதமே என்னில் மலர்ந்த தெய்வமே

உயிரில் கலந்த ராகமே உறவில் எரியும் தீபமே - 2

தேவனே இறைவனே தேடி வந்த தெய்வமே - 2

1. தனித்துச் செல்லும் வழிகள் எல்லாம்

தலைவன் உனையே தேடவே - 2

தவித்து ஏங்கும் விழிகள் எல்லாம் தாகம் கொண்டு நாடவே

அணைத்துச் செல்லும் அன்னையாகி

அழைத்துச் சென்றாய் தெய்வமே

அன்பனே நண்பனே என்னை ஆளும் செல்வமே - 2

2. கல்லும் முள்ளும் காடும் மலையும்

கடந்து செல்லும் வேளையில் - 2

பொழுதும் சாய்ந்து புயலும் ஓய்ந்து

வாழ்க்கைப் படகும் மூழ்கவே

சின்ன எனது இதயம் தனை நீ

சிறகில் அமர்த்தி விரைகிறாய் அன்பனே......


அன்பின் இறைவா வருக விண் அமுதாய் நெஞ்சில் நிறைக - 2

1. உள்ளம் ஒன்றே வைத்திருந்தேன்

உமக்கே அதையும் திறக்கின்றேன்

வாழ்வது என்னில் நீராக வளர்வீர் நெஞ்சில் நினைவாக

2. உலகம் என்னில் உம்மைக் காண உவந்து வருவீர் நீரெம்மில்

விண்ணின் நினைவுச் சின்னங்களாய் விளங்க எம்மில் வாருமே

3. பிறப்பில் வந்தீர் உறவாக உம் பிரிவில் ஆனீர் உணவாக

மலையில் நின்றீர் பலியாக மறுமை நீரே பரிசாக


அன்பைக் கொண்டாடு எந்தன் நெஞ்சமே

இந்த பூலோகம் உந்தன் சொந்தமே - 2

நீயில்லாமலே இந்த உலகம் நடக்கிறது

உன்னைக் கேட்காமலே இந்த இயற்கை வளர்கிறது

இந்த வானும் பூமியும் காற்றும் காலமும்

காசில்லாமல் வந்தது - 2

யார் தந்தது தெரியுமா சொல் மனமே இறைவன் - 3

ஒருவன் அவனே தலைவன்

1. வாழும் பல ஆயிரம் உயிர்களின்

இரகசியம் அணுவினில் அமைத்தது யார்

நாளும் வரும் ஆதவன் ஒளியினில்

அகிலமும் வாழ்ந்திட அமைத்தது யார்

காற்று நடனமிடும் நாற்று உயிரளிக்கும் ஊற்று என் மனம்

பாட்டு பல கலைகள் அழகு வான்மழையின் அமுது என் மனம்

உலகெங்குமே உயிராற்றல்கள்

நீ உணர்ந்திடு உள்ளம் ஒளி பெறும் யார் தந்தது....

2. விதையில் பெரும் விருட்சமும் அடங்கிடும்

அதிசயம் அமைத்தது யாரறிவு

மண்ணில் பல மகத்துவம் மனிதனும்

படைத்திட அமைத்தது யாரறிவு

மாசு நிறை உலகில் கேட்கும் மனக்குரலின் சாட்சி என் மனம்

பாசம் மனிதகுல நேசம் நீதியெனும் எண்ணம் எங்ஙனம்

இதை வென்றிட நிலை நின்றிட

எழும் குரல்களும் மக்கள் இயக்கமும் யார் தந்தது...


அன்பென்ற நதி மீது படகாகு

அறியாத பேரின்ப கரை சேர்க்கும்

அன்பென்ற வில்லின் முன் இலக்காகு

அகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும் - 2

1. வெயில் காய்ந்து நிழல் ஈயும் மரங்கள் போல்

துன்பங்கள் மறைத்தே இன்முகம் காட்டு

உயிர் காக்கும் காற்றும் கண் மறைதல் போல்

தனைக் காட்டும் குணம் நீக்கி நலம் நாட்டு

நெருப்புக்கு வலுவூட்டும் காற்றைப் போல்

பணிவேகம் தனில் இன்னும் பலம் ஊட்டு - 2

அன்புக்கு ஈர்க்கின்ற மனம் உண்டு

இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு - 2

2. மலர்வாசம் தரும் பூவில் இழப்பில்லை

மாண்பில் நீ மறைந்தாலும் குறைவில்லை

தானே தன் கனி உண்ணும் செடியில்லை

தனக்கென்று வாழ்ந்தால் விண் விடிவில்லை

இளகாத மனம் செய்த பணியில்லை

இரங்காத இதயத்தில் இறையில்லை - 2

தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும்

அன்புள்ளம் இறை தந்த வரமாகும் - 2


அன்பே அன்பே இறைவன்

அன்பே உலகின் ஒளியாகும்

அன்பே மாந்தரின் நிறைவாழ்வு

அன்பென்னும் சக்தி நீ அகம் பெறும் நிம்மதி உள்றும் பேரமைதி - 2

கண்காணும் மகிழ்வாய் மண்மீது நிலவாய்

என் வாழ்வில் எதிர்வந்த பேரொளி நீ

நெஞ்சம் அமிழ்கின்ற அமுதான அன்பு - என்றும்

திளைத்தாலும் தெவிட்டாத அன்பு

முழு நாளும் நிறைகின்ற அன்பு அன்பு அன்பு பேரன்பு

1. தண்குளிர் ஓடையாய் என்மனம் பாய்கிறாய் நன்னிலம் ஆகிறேன் - 2

நன்னிலம் ஆனபின் என் கனி கேட்கிறாய்

என்ன நான் செய்கிறேன் - 2

அன்புக்கு பதில் கூறும் ஆற்றலைத் தா

அன்போடு இணைகின்ற தியாகத்தை தா - 2 நெஞ்சம்...

2. என் திறன் காண்கிறாய் என் துயர் தீர்க்கிறாய்

என் பலமாகிறாய் - 2

என் பலமானபின் என் பணி கேட்கிறாய்

என்ன நான் ஆகிறேன் - 2

அன்புக்கு பலம் கூட வாழ்ந்திட வா

அன்பென்றால் இதுவென்று காட்டிட வா - 2 நெஞ்சம்...


அன்பென்னும் சுரங்களில் ஆ....

தெய்வீக சந்தங்களில் ஆ.....

விண்ணக ராகத்தில் மீட்பென்னும் கீதத்தைப்

பாடிய என் தலைவா

உன் அன்பு கானம் பாட ஆ......

என்னில் என்ன ஆனந்தம் ஆ...... - 2

1. கானக் குயிலின் ராகமும் ஆ.....

தென்றல் தவழும் கீதமும் ஆ.....

அருவி விழும் ஓசையும் ஆ...

அலைகள் பாடும் இன்பராகம் ஆ......

உந்தன் சொந்த ராகங்கள் ஆ......

உந்தன் படைப்பிலே ஆ........

எத்தனை ராகங்கள் ஆ......

இறைவா எத்தனை ராகங்கள் ஆ...... - 2

2. பறவை பாடும் கானமும் ஆ.....

பாயும் நதியின் ஓசையும் ஆ......

வண்டினத்தின் ரீங்காரமும் ஆ......

எந்தன் ஆன்ம சுரங்கள் அனைத்தும்

உந்தன் சொந்த ராகங்கள் ஆ...... உந்தன்.....


அன்பெனும் அருளே நீ வாழ்க

உயிர்ப்பொருளே உறைவிடமே நீ வாழ்க

அன்பெனும் அருட்சுடராய் அமைந்தாயே இறைவா - 2

ஆதியந்தம் இல்லாது ஆட்சி செய்யும் தலைவா

1. இன்பமெல்லாம் ஓர் உருவாய் இயங்கி வரும் இறைவா

ஈயாதார் உள்ளத்திலும் வீற்றிருக்கும் இறைவா - 2

உண்மைக்கே உறைவிடமாய் உத்தமனே இறைவா - 2

ஊன் உயிர் நிலையாக வந்து உணவளிக்கும் இறைவா - 2

2. எல்லார்க்கும் எல்லாமே அளித்து வரும் இறைவா

ஏகபரன் ஏகமகன் என்றுணர்த்தும் இறைவா - 2

அய்யமின்றி வாழ்ந்திடவே வழிவகுத்தாய் இறைவா - 2

குறைவில்லா மனிதம் என்றென்றும் வாழவேண்டும் இறைவா - 2


அன்பெனும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே

ஆலய மேடையிலே உன் அருளினைப் பாடிடுவேன் - 2

1. அகமெனும் கோவிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் - 2

அன்பெனும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன்

2. வாழ்வெனும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் - 2

தூய்மையென்னும் மலரை நான் தாழ்மலர் படைத்திடுவேன்

3. தென்றலே கமழ்ந்திடுமே என் தெய்வமே நீயிருக்க - 2

இன்பமே மலர்ந்திடுமே நான் உன்னில் வாழ்ந்திருக்க

325. அன்பே இறை அன்பே

உயர்ந்தது உலகில் சிறந்தது

அன்பே அன்பே உயர்ந்தது இறை அன்பே உலகில் சிறந்தது - 2

அன்பிற்காய் மனுவான அன்பிற்காய் தனைத்தந்த - அவர்

அன்பே உலகில் சிறந்தது - 2

1. இறையன்பில் வேரூன்றி நான் பிறரன்பில் செழித்தோங்கி

அவரன்பின் ஆற்றலிலே நான் அவனியிலே காலூன்றி - 2

அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2

2. மதவெறியை வேரறுத்து தினம் மனித இனம் தனை நினைத்து

கல்வாரி சரித்திரத்தை நான் காலமெல்லாம் காத்திடவே - 2

அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2


அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா

உன் மேன்மை வானம் என்றாகினாலும்

என் ஏழ்மை குறை தீர்த்தவா - 2

1. வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில்

வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய்

பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில்

எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய்

மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான் - 2

என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன் - 2

2. உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன்

உன் நெஞ்சமலராலே எனை மூடினாய்

கண் பார்வை அருள் போதும் என நாடினேன்

என் பாதை வழி செல்லும் துணையாகினாய்

மண்மீது காலூன்றும் தொடுவானமாய் - 2

என்மீது நீ வந்து நானாகிறாய் - 2


அனுதின உணவாய் எனதுள்ளம் வருவாய் - 2

அன்பின் நற்கருணையே இயேசுவே ஆன்மாவின் உயிருணவே - 2

1. உயிருள்ள உந்தன் இரத்தமும் தசையும்

என்னுயிர் உடலினில் கலந்திட - 2

என்னை இயக்கிட வாழ்வேன் சிறந்து

உந்தன் அருளால் நாளும் நிறைந்து - 2

2. உண்ணும் உணவாய் மாறுவதனால்

உன்னையே உண்பேன் உவந்து நான் - 2

உன்னைப் போல ஒளிர்வேன் உயர்ந்து

உருகும் மெழுகாய் என்னை அளித்து - 2

3. நலன் கெட வைக்கும் சுயநல வேட்கை

தணிந்திடச் செய்யும் வானமுதே - 2

பணிந்து அழைத்தேன் வாருமே

பிறர்நலம் காக்க உதவுமே - 2


வானம் பொழிந்திட வேண்டும்

செல்வமெல்லாம் புவியில் பெருகிட வேண்டும்

நீதியும் அன்பும் நிலைத்திட வேண்டும்

இறைவனின் அரசு மலர்ந்திட வேண்டும்

ஆண்டவரே தாவீதின் திருமகனே கேட்பதை தாரும் இயேசய்யா

நாங்கள் கேட்பதை தாரும் இயேசய்யா - 2

1. வயல்வெளியில் வியர்வை சிந்தும் உழைக்கும் மக்களின்

வறுமை நீங்கிட வழியைச் சொல்ல வா - 2

சமநீதி இல்லாமல் தவிக்கும் உலகிலே

உரிமைக்காக உயிர் கொடுக்கும் சக்தியாக வா - 2

பொய்மை அழிந்து உண்மை மலர பாசம் மலர்ந்து உறவு பிறக்க - 2

உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே

2. கடலலையில் போராடும் மனிதருக்கெல்லாம்

கலங்கரை தீபம் நீயாக வா - 2

ஏழ்மையெனும் பிடியில் வாடும் மாந்தருக்கெல்லாம்

ஏற்றம் காண வழியை சொல்லும் இயேசு ராஜனே - 2

நன்மை நிறைந்து நீதி நிலைக்க வானம் பொழிந்து வறுமை ஒழிய - 2

உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே


ஆத்துமமே நீ வாழ்த்திடுவாய்

ஆண்டவராம் உந்தன் இறைவனையும்

ஏனெனில் அவரே பெரியவரே

அழகின் மகத்துவம் நிறைந்தவரே

1. வானத்தின் விரிவே கூடாரம்

மேகங்கள் அவர் வரும் ரதமாகும்

ஒளியே அவரது ஆடைகளாம் - அங்கு

சுடர்விடும் நெருப்பவர் தூதர்களாம் - அதனால்

2. பூமியின் படைப் பவர் எழில் முகமாம்

ஆழ்கடல் அமைப்பும் அவர் செயலாம்

கனலும் நீரும் அவர்க்கடங்கும் - அந்த

கதிதரும் காற்றும் அவர்க்கடங்கும் - அதனால்

3. மலைகளின் பள்ளத்தாக்குகளில்

வழிந்தோடும் நீர் அருவிகளில்

மான்களும் பறவை விலங்குகளும் வந்து

பருகிடும் எழில் அவர் திருவுடலாம் - அதனால்

4. பூமியை தொடுவார் அது அதிரும்

மலைகளைத் தொடுவார் அது அதிரும்

தமதரும் படைப்பில் அவர் மகிழ்வார் - என்

உயிருள்ளவரை அவர் புகழ் இசைப்பேன் - எனவே


ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும்

உன்னுடலை சுவைத்திட போதாதய்யா

என் இயேசுவே என் தெய்வமே ஏழையின் உணவாய் வந்தவரே - 2

வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா - 2

1. எளியவர் உள்ளங்கள் அழைத்திடும் வேளை

எரிந்திடும் தீபம் நீதானய்யா - என்றும்

அழுபவர் குரலில் எழுந்திடும் ஓலம்

கேட்டிட எழுவதும் நீதானய்யா - 2

எங்கள் துயரத்தில் ஆறுதல் ஆனவரே

சுமைகளைத் தாங்கிட வந்தவரே உணவாய் வந்தனையோ வா...

2. துணை ஏதும் இன்றி வாடிடும் நேரம்

அருட்கரம் தருவதும் நீதமானய்யா

நண்பர்கள் அனைவரும் பிரிந்திடும் போது(ம்)

அருகினில் இருப்பதும் நீதானய்யா - 2

எங்கள் வெறுமையில் உறவாய் இருந்திடுவாய்

பெருமைகள் போக்க உதவிடுவாய் துணையாய் வந்திடுவாய் வா...


ஆன்ம உணவாய் எனில் வந்து

அன்பு உறவில் எனை வளர்த்து

அந்தம் வரையில் என்னைக் காக்க

ஆதவனே உனை வேண்டுகிறேன் - உன்

ஆதரவையே நாடுகிறேன் - 2

1. அச்சம் யாவும் நீக்கும் மருந்தாம்

அல்லல் யாவும் போக்கும் மருந்தாம்

நித்தம் உந்தன் உணவையே நான்

உண்ணும் வேளையில் உள்ளம் ஒன்றிப் போகுமே

உறவில் உள்ளம் மகிழ்ந்திடுமே

வருவாயே என் இறைவா வரம் அருள்வாயே என் தலைவா - 2

2. தாகம் யாவும் தணிக்கும் விருந்தாம்

தளர்ச்சி யாவும் நீக்கும் விருந்தாம்

நித்தம் உந்தன் குருதியை நான் பருகிடும் போதிலே

உள்ளம் உருகிப் போகுமே

ஊக்கம் நெஞ்சில் பிறந்திடுமே வருவாயே...


ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் - 2

ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ

அவனியை மாற்றிடும் அருட்கடலோ

1. மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான்

விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் - 2

இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே

பண்பாடவோ என்றும் கொண்டாவோ

மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே

என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3

2. சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே

காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே - 2

எனில் ஒன்றாகினான் நான் நன்றாகினேன்

பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன் - மலர்கின்ற...


இசை ஒன்று இசைக்கின்றேன்

இறைவா எளிய நல்குரல் தனிலே - 2

என் இதயத் துடிப்புக்களோ - என்

இசையின் குரலுக்குத் தாளங்களே - 2

1. காலத்தின் குரல்தனில் தேவா - உன்

காலடி ஓசை கேட்கின்றது - 2

ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2

மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே

2. ஏழையின் வியர்வையில் இறைவா - உன்

சிலுவையின் தியாகம் தொடர்கின்றது - 2

சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2

உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்


இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே

இனிய வரங்கள் பெறுகின்றோம் இறைவன் உறவிலே

மனதில் தோன்றும் கவலைகள் மறையும் இறைவன் வரவிலே

1. உருகும் உள்ளம் மலர்ந்திடும் உயர் நற்கருணைப் பந்தியிலே

பெருகும் கண்ணீர் உலர்ந்திடும் இறைவன் கருணைக் கரத்திலே

2. பழைய வேத வனத்திலே பொழிந்த மன்னா மறையவே

புதிய வேத மாந்தரின் புனித மன்னா இறைவனே

3. ஆயன் உலகில் கிறிஸ்துவே அவர் தம் ஆட்டுக்கிடையிலே

புனித வாழ்வு அடையவே புசிக்கத் தந்தார் உடலையே


இதயக் கதவைத் திறந்து வைத்தேன்

இனிமை நிறைக்கும் இயேசுவே

உதயம் தேடும் நேரமெல்லாம் உந்தன் உறவை நாடுவேன்

இயேசுவே இயேசுவே இயேசுவே - 2

1. ஏழை மனிதரில் உன் முகம் காணவே

ஏங்கிடும் இதயத்தில் உன்னருள் நிறைக்கவே

உண்மை அன்பு மாண்பு ஓங்கிட

உந்தன் அன்பில் தியாகம் ஆகுவேன்

புதிய அன்புவெள்ளம் எங்கும் பொங்கிப் பாயும் நேரமே

புதிய உலகம் மலருமே இறைவன் அரசும் வளருமே

2. நீதி தேடிடும் அன்பின் பணியிலே

சமத்துவ உறவினைச் சத்தியமாக்குவேன்

மனிதநேயம் காக்கும் பொறுப்பிலே

புனிதப் பயணம் தினமும் செல்லுவேன்

நீதி நேர்மை உணர்வு கொண்டு இறைவன் வழியை நாடுவேன்

புதிய உலகம் காணுவேன் இறைவன் அரசில் வாழுவேன்


இதய வானில் பறக்கின்றேன் இனிய உலகம் காண்கின்றேன்

எங்கு நோக்கினும் உமதன்பு

எதிலும் உமது இறையன்பு என்றும் மாறா பேரன்பு

1. வானெங்கும் பறந்து திரியும் பறவை இனங்கள்

ஊரெங்கும் ஊர்ந்து தவழும் உயிரினங்கள்

கடலெங்கும் காணக் கிடக்கும் காட்சிகள்

காற்றினில் கலந்து நிற்கும் சாட்சிகள்

எங்கும் இறைவா உந்தன் இயக்கமே

2. காடெங்கும் வனப்பு மிகுந்த பசுமை இனங்கள்

நாடெங்கும் வியப்பு நிறைந்த விந்தைப் பொருட்கள்

நிலமெங்கும் நிதமும் காணும் நிகழ்வுகள்

நெஞ்சங்கள் நாளும் பாடும் நாதங்கள் எங்கும்...


இதய வேந்தே வா என் இன்ப மன்னா வா - 2

1. கண்ணில் நீ நிறைந்தாயே நான் மண்மீது மடிகின்றேன்

என்னோடு நீ சேர உன்னோடு நான் வாழ

பண்பாடி அழைக்கின்றேன்

2. பாரில் எனைத் தேடினாய் நான் பாதையில் அழுகின்றேன்

என் உள்ளம் நீ தேட உன் உள்ளம் நான் தேட

இந்நாளில் கண்டடைவேன்

3. ஆயிரமாயிரமாய் நான் ஆசைகள் வளர்த்தேனே

என் ஆசை தீர்ந்திடும் எந்நாளும் வாழ்ந்திடும்

என் ஆயன் உனைக் கண்டேன்


இதயத்தில் வாராய் இன்னருள் இறைவா

உதயத்தைப் போலவே உன்னொளி தாராய் இறைவா வாராய் - 2

துன்பங்கள் செய்யும் பாவி நான் என்று

தூற்றாமல் நன்றே அன்புடன் இன்று

1. வையகம் வாழும் மானிடர் நாமே

வானகம் செல்ல வழித்துணை நீயே

இன்பமும் துன்பமும் வந்திடும் போதே

இன்னருள் துணையாய் வரவேண்டும் நீயே

2. மழை தந்த மேகம் இனி பெய்யாது

தரைகாய்ந்த ஆறு இனி நீர் தராது

உன் வாழ்வு மட்டும் என்றும் வற்றாது

உலகெல்லாம் கொடுத்தாலும் அது தீராது

3. மழையின்றிப் போனால் பயிரென்ன செய்யும்

மலரின்றிப் போனால் வண்டென்ன செய்யும்

தாயின்றிப் போனால் சேயென்ன செய்யும்

நீயின்றிப் போனால் நாமென்ன செய்வோம்


இதயத்தைப் புரிந்திடும் இதயம் கண்டேன் - அதன்

ஆழத்தை அளந்திடும் கரங்கள் கண்டேன்

அன்பின் தூய்மையை உன்னில் கண்டேன்

மாதவனே உன்னில் என்னைக் கண்டேன்

1. அன்புக்கு பதிலன்பு தந்திடவோ - அது

விண்ணிற்கும் மண்ணிற்கும் தூரமல்லோ - 2

என்றவோர் எண்ணத்தை மாற்றிடவோ - 2

இன்றுனைக் காண்பது உண்மையல்லோ - 2

2. எரியும் ஒளியெல்லாம் நீயல்லவோ - அதை

அறியும் அறிவெல்லாம் உனதல்லவோ

பரிவின் தொடக்கம் நீயல்லவோ - 2

பரிந்து பேசுவதுன் குணமல்லவோ - 2


இதயமே இதயமே இறைவனைத் தேடு

இகமதில் இறைவனின் புகழினைப் பாடு - 2

1. உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது

உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமுமடைந்தது - 2

பாறையும் கேடயமாம் எந்தன் தந்தையே

பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே இறைவனே - 4

2. ஆ... வானினின்று மானிடரைக் காணும் தெய்வமே

வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே - 2

நீதியும் நேர்மையுமாய் வழிநடத்துமே

நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே இறைவனே - 4


இதயமே இதயமே என்னில் எழுந்து வா

உதயமாய் மனதினில் ஒளியை ஏற்றவா

வாழ்வினில் வலிமையாக வா

வசந்தமாய் என்னில் வாழ வா இதயமே ஏற்ற வா

1. என்றும் எனதுள்ளம் நீயாக வேண்டும்

தாங்கிடும் உனது கரம் எனைக் காக்க வேண்டும்

நன்மை வடிவாக நாதா நீ வேண்டும்

நாளும் புதுவாழ்வு நான் வாழ வேண்டும்

துயரும் பிணியும் என்னை இங்கு சூழ்கின்ற போது

துணையாக மருந்தாக நீ என்னில் வர வேண்டும்

2. வாழும் வாழ்வெல்லாம் நீயாக வேண்டும்

வசந்தம் என் வாழ்வில் நிலையாக வேண்டும்

எல்லா துன்பங்களும் எனை நீங்க வேண்டும்

தெய்வம் உன் பாதம் நான் சேர வேண்டும்

தாயும் தந்தை யாவுமே நீயாக வேண்டும்

தயவோடு எனை நாளும் எனை நடத்திட வேண்டும்


இதோ இறைவனின் செம்மறியே

இவரே நம் பாவம் போக்குகின்றார்

அவனியில் அமைதியை ஆக்குகின்றார் - 2

1. கடவுள் நம்மோடு இருக்கின்றார் - நற்

கருணை வடிவில் திகழ்கின்றார் - 2

உடலும் உள்ளமும் நலம்பெறவே - 2 - இவர்

உணவின் வடிவில் வருகின்றார்

இதயத்தின் கதவுகள் திறக்கட்டுமே - இறை

இயேசுவே அரசராய் அமரட்டுமே - 2

2. இன்பமும் துன்பமும் நமக்கு ஒன்றே

இவர் அன்பில் ஒன்றாய் இணைந்து விட்டால் - 2

துன்பமும் பகைமையும் மறைந்துவிடும் - 2 - இறை

வல்லமை நம்மிடம் நிறைந்துவிடும் இதயத்தின்...


இதோ என் கைகளில் உன்னைப் பொறித்துள்ளேனே

நான் உன்னை ஒரு போதும் மறப்பதில்லையே - 2

1. கடலின் அலையைப் போல துன்பம் ஓயாமல் வந்தாலும்

மலையைப் போல சோதனைகள் உன் வாழ்வைச் சூழ்ந்தாலும் - 2

மகனே நீ அஞ்சாதே மகளே நீ கலங்காதே - 2

நான் உன்னை விட்டு விலகுவதும் கைவிடுவதுமில்லையே

2. பெற்ற தாயும் உன்னைப் பிரிந்து போகும் நிலை வந்திடலாம்

உற்ற நண்பர் உன்னைப் பிரிந்து

தூர விலகிப் போய் விடலாம் - 2 மகனே...


இம்மையும் நீ மறுமையும் நீ

இயேசுவே என் இன்பமே நீ இன்பமே நீ

1. உன்னிடம் என்னை நான் கொடுத்தேன்

உன் கரம் பற்றி வழிநடப்பேன்

நான் இனி என்றும் மறைந்திடுவேன்

நாளும் நீ என்னில் வளர்ந்திடவே

2. உன் அருள் ஒன்றே நினைந்திருப்பேன்

உனக்கொரு பாடல் புனைந்திருப்பேன்

காலடி பற்றியே வாழ்ந்திருப்பேன்

காலமெல்லாம் உனை வாழ்த்திடுவேன்


இமைப்பொழுதேனும் எனைப்பிரியாமல் காக்கும் நல் தேவனாக

எல்லாமும் தந்து என்னோடு இருக்கும்

இயேசுவே வாழ்க வாழ்க - 3

1. இயேசுவே உமது பெயரைச் சொன்னாலே

இதயத்தின் கவலைகள் மறையுதய்யா

நெஞ்சினில் உமையே நினைக்கின்ற போது

உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது - 2

நலம் தரும் நல்லவரே எழுந்திங்கு வாருமய்யா

குறைவில்லா புதுவாழ்வு தருபவர் நீரல்லவா

ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாடி

ஆண்டவா உன்னைத் துதிக்க வந்தேன்

2. தாளத்தை இழந்த பாடலைப் போல

உனை நான் பிரிந்தேன் வாழ்க்கையிலே

உன் திரு வார்த்தையைத் தியானிக்கும் போது

பலன்தரும் நல்ல நிலமானேன் - 2

ஆகாய கங்கையைப் போல் அருள்மழை பொழிபவரே

பூமழை தூவி உந்தன் பொற்பாதம் பணிகின்றேன்

கண்மணி போல் எனைக் காக்கும் ராஜா

கானங்கள் இசைத்து துதிக்க வந்தேன்


இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா - என்

இதயத்தில் எழுந்திட வா

என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு

காத்திடு என் தலைவா - 2

1. உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு

சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ - 2

மெழுகாகினேன் திரியாக வா

மலராகினேன் மணமாக வா - 2

2. உருவில்லா இறைவன் உன் உதவியின்றி

உலகத்தில் எதுவும் நடந்திடுமோ - 2

குயிலாகினேன் குரலாக வா

மயிலாகினேன் நடமாக வா - 2


இயேசு என்னை அன்பு செய்கின்றார் - 2

அளவில்லாமல் ஆசீர் அருள்கின்றார் - 2

இனித் துன்பம் ஏதும் இல்லை ஒரு துயரம் வாழ்வில் இல்லை - 2

1. தனிமை என்னும் பாழ்வெளி என்னைத் தவிக்க வைத்ததுவே

தவறு செய்த நேரத்தில் மனம் பதறித் துடித்ததுவே - 2

இனியும் வாழ்வு கிடைக்குமா என்று கலங்கி தவித்து நின்றேன்

இதயம் தேடும் தலைவனை நான் காணத் துடித்து நின்றேன்

தாயைப் போல தேடி வந்து

என்னை அணைத்தாரே தழுவி அணைத்தாரே

2. உறவுகள் என்னை வெறுத்தபோது உள்ளம் கலங்கி நின்றேன்

உண்மைக்காக உழைத்த நேரம் உதவி தேடி வந்தேன் - 2

என்றும் மாறா இறைவனை நான் காண வேண்டி நின்றேன்

ஏழை வாழ்வில் ஏற்றம் காண ஏங்கி காத்து நின்றேன்

இரக்கம் பொழியும் இறைவன் என்னைத்

தேடி வந்தாரே அன்பை பொழிந்தாரே


இயேசு தெய்வீகனே

1. அருளும் தயவும் நிறைந்தவா அமிர்த போஜனமே

வருவாய் எங்களின் உள்ளமிதே தருவாய் ஜீவியமே - 2

இயேசு தெய்வீகனே - 4

2. அன்னையின் அன்பையும் வென்றவனே ஆருயிர் ஈன்றவனே - 2

தன்னையே பலியாய் தந்தமைக்கே என்னவோ நன்றி சொல்வோம்

இயேசு தெய்வீகனே - 2

3. உயர்ந்த மன்னாவை அருந்தியோ இறந்தார் அந்நாளிலே - 2

இறவார் எவரும் எந்நாளுமே உன்னையே அருந்தினால்

இயேசு தெய்வீகனே - 2


இயேசுவின் கரங்களில் நான் தவழ்கின்றேன் இனி என்ன கவலை

கேட்பது எல்லாம் கொடுத்திடும் இயேசு

இருக்கையில் ஏன் கவலை - 2

1. என் தேவை என்னவென்று படைத்தவர் அவர் அறிவார்

என்னையே நான் கொடுத்துவிட்டேன் அவரே பார்த்துக் கொள்வார் - 2

2. என் இதயம் கவலையினால் மிகுந்திடும் வேளையிலே

ஆண்டவர் தம் ஆறுதலால் இன்பத்தில் ஆழ்த்துகிறார் - 2

3. உம் வழியில் என் கால்கள் தள்ளாடும் நேரத்திலே

ஆண்டவரே உன் அருளே என்னைத் தாங்கிடுதே - 2


இயேசுவே என் இறைவா இயேசுவே என் தலைவா

எழுந்து வா என்னில் நிலைக்க வா

இயேசுவே என் இறைவா இயேசுவே என் தலைவா - 2

எழுந்தே வருவீர் என்னோடு தங்குவீர்

என்றுமே உம்மில் நிலைத்திட செய்குவீர்

1. நானே உயிர்தரும் உணவு என்றீர் நாதனே வந்தருள்வீர் - 2

நான் தரும் உணவை உண்பவனோ - 2

என்றுமே வாழ்வான் என்றீர் - 2

2. கிறிஸ்துவின் ஆவியை கொண்டிராதவன் கிறிஸ்தவனே அல்லன் - 2

கிறிஸ்துவே உம் தூய ஆவியையே - 2

என்னில் பொழிந்திடுமே - 2


இயேசுவே என் நண்பனே ஏழை நெஞ்சில் எழுந்து வா

மனுமகனே என் இளவரசே என் இதயக் குடிலில் தவழ்ந்து வா

1. நன்மைகள் செய்வதில் என்னையே மறந்து

பிறரின் வளர்ச்சிக்காய் வாழுவேன் - 2

உன்னையே நாடி உண்மைக்கு வாழும் உயர்வு மனமே போதுமே - 2

கன்னி ஈன்ற திருமகனே காலம் தந்த தனிமகனே

கருணை இருப்பிடம் நீயன்றோ கண்ணீர் துடைப்பதுன் கரமன்றோ

2. ஒளியினைத் தேடும் செடியெனத் திகழும்

உனதருள் பார்வைக்காய் ஏங்குவேன் - 2

நம்பிக்கையில்லா மனங்களில் உனது நலந்தரும் செய்தி ஆகுவேன் - 2

கடவுள் மனிதனாய் வந்தவனே மனிதனில் இறைவனைக் கண்டவனே

ஒன்றே அனைவரும் என்றவனே உலகினில் பேரின்பம் ஆனவனே


இயேசுவே என் ராஜனே வாழ்வை வழங்க வந்தாய்

தேவனே என் தெய்வீகனே வார்த்தை உலகில் வந்தாய் - 2

1. மன்னாவை உண்டார்கள் மடிந்தார்கள் - அத்

தண்ணீரைப் பருகியவன் தாகங்கொண்டான் - 2

இயேசுவே என்னை உண்பவன் வாழ்வடைவான்

என்னிடம் வருபவன் தாகம் கொள்ளான்

என்று சொன்னதால் நான் வந்தேன்

நீர் தந்ததால் வாழ்வைக் கண்டேன் வாழ்வைப் பகிர்ந்தளிப்பேன்

2. வானமும் பூமியும் அழிந்துவிடும் - இறை

வார்த்தையோ ஒருநாளும் அழியாது - 2

இயேசுவே தன்னை உயர்த்துவோன் தாழ்வடைவான்

தன்னைத் தாழ்த்துவோன் உயர்வடைவான்

என்று சொன்னதால் நான் வந்தேன்

நீர் வாழ்ந்ததால் அன்பைக் கண்டேன் அன்பாய் வாழ்ந்திடுவேன்


இறையவனே அருள் உறவே உளமதில் வருவாயே

வெண்மதியே தண்ணிலவே சுடரொளி பொழிவாயே

ஒரு கணம் உனை அழைத்தேன் நீ குரல்தனைக் கேளாயோ

உன்னருகில் இருந்து நான் என்னுறவே நீ வா

1. உன்னிலன்றி உயிர் இல்லை வாழ்வினில் செயல் இல்லை - 2

தருவுடனே கிளை இணைந்து கனி தரவே வந்திடுவாய்

நீயின்றி நானில்லையே எனக்கேதும் உறவில்லையே - 2

கொடியாக நான் படர்ந்து உறவாகவே வந்திடுவாய்

2. உலகையாளும் மெய்ப்பொருளே தலமெல்லாம் பார்த்திருந்தேன் - 2

பொழுதெல்லாம் உன் நினைவே எனையாள வந்திடுவாய்

எங்கேனும் வன்பகையே உள்ளத்தில் படர் வெறுமை - 2

அளவில்லா உம்மன்பு நிரம்பிடவே வந்திடுவாய்


இறையவனே என் வழித்துணை நீயே

இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க - 3

1. திசை தெரியாத மரக்கலம் போல

திரிந்திடும் வாழ்வு உனதொளி காண - 2

கலங்கரை தீபம் எனக்கு நீ ஆவாய்

நலம் தரும் வானகஉணவென வாராய்.

2. இகவழியாக அகவொளியாவாய்.

பகைமையை நீக்கி புது உறவாவாய் - 2

தகுதியில்லாத எளியேனைத் தேடி

எழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய்

3. பழம்பெரும் பாவ மனிதனை நீக்கி

வளம் தரும் தேவ மகனுனில் சேர்ந்து - 2

புது மனுவாக வந்திக வாழ்வை

முடித்திட ஆசீர் அருளிட வாராய்


இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு

இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் - 2

1. பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி - 2

பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே - 2

2. அப்பத்தை கையெடுத்துஅன்புடனே கொடுத்து - 2

இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் - 2

3. இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் - 2

எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே - 2


இறைவன் என்னில் எழுந்தது எனக்கு என்னென்ன ஆனந்தம்

இந்த ஏழையின் உறவினில் ஒன்றென ஆனது என்னென்ன பேரின்பம்

1. வானக வழியைக் காட்டிட வந்தார் மனிதரின் உணவாக - 2

வாய்மையும் தூய்மையும் விளங்கிட எழுந்தார் வாழ்வின் உணவாக

நல்ல வாழ்வின் உருவாக அது வான்மட்டும் உயர்ந்தாக

என் ஆண்டவரே என் தேவனே அன்பின் இயேசுவே எழுந்தாக

2. மாயஇவ் வுலகில் நான் உழன்றாலும் மேன்மைக்கு வழியாக - 2

தூயவன் திருமகன் புகழை எந்நாளும் துதியுடன் நான் பாட

நல்ல மெய்யுணர் வதுக்காக என்னில் பேதமை ஒழிந்தாக என்...


இறைவன் என்னில் தங்கிட வா

நிறைவாய் அருளைப் பொழிந்திட வா

ஒரு வார்த்தை சொல்லி என்னை தகுதியாய் மாற்றிட வா

இயேசுவே வாராய் எழுந்து வாராய்

உறவோடு உயிரோடு கலந்திட வாராய்

1. என் பாதம் நோகாமல் என் பயணம் இனிதாக

என்னோடு என்றும் வாழ்ந்திட வா

எந்நாளும் என்னோடு தங்கிட வா

என் வாழ்வின் வழியாக முன் போக வா

உனில் வாழ என் வாழ்வில் அருள் தந்திடு இயேசுவே...

2. உன் அருகில் எனை சேர்த்து உறவோடு அணைத்திட

உணர்வோடு என்னில் மகிழ்ந்திடவா

பாவங்கள் புரிந்தே நான் வாழ்கின்றேன்

பரிவோடு எனை மீட்க வந்திடுவாய்

பண்போடு நான் வாழ வரம் தந்திடு இயேசுவே...


இறைவன் தரும் திருவிருந்து - இது

ஆன்ம வாழ்வின் அருமருந்து - 2

கல்வாரி மலைமீது பலியானதை

கனிவோடு நினைக்கும் திருவிருந்து

விருந்து விருந்து - இது

இறைவன் தரும் திருவிருந்து - 2

1. பாவங்களோடு வாழ்வோரெல்லாம்

பரிவில் அழைக்கும் விருந்து - 2

தயவோடு பாவக்குறை நீக்க - 2

இறைவனே தன்னை உணவாக்கும் விருந்து விருந்து...

2. வாழ்நாளிலே இனை உண்போரெல்லாம்

பரகதி சேர்க்கும் விருந்து - 2

இறையோடு புதுவாழ்வினிலே - 2

இணையவே தன்னை உணவாக்கும் விருந்து விருந்து....


இறைவன் நமது வானகத் தந்தை

இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை

குறைகள் தீரும் கவலைகள் மாறும்

குழம்பிய மனதில் அமைதி வந்தேறும் - 2

1. பறவைகள் விதைப்பதும் அறுப்பதும்இல்லை

பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை - 2

மறந்து விடாமல் அவைகளுக்குணவு -2

வாரி வழங்கி பேணியே காக்கும் - 2

2. வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள்

வருந்தி உழைப்பதும் நூற்பதுமில்லை - 2

மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன் - 2

மன்னனும் என்றும் உடுத்தியதில்லை - 2

3. எதனை உண்போம் எதனை உடுப்போம்

எதனைக் குடிப்போம் எனத் திகைக்காதே - 2

முதலில் பரமனின் அரசின் நீதியை - 2

முனைந்து தேடிடு சித்திக்கும் அனைத்தும் - 2


இறைவனின் உடலிது அவரது இரத்தமிது

அவர் நினைவாய் நாம் செய்யும் மீட்பின் சின்னமிது

நம் வாழ்வின் உணவிது - 2

1. அப்பத்தை உண்டு கிண்ணத்தைப் பருகும்

வேளைகள் எல்லாம் விசுவாசமே

ஆண்டவர் வருகின்ற நாள் வரை நாமும்

மரணத்தின் அறிக்கை செய்வோமே

ஆதலினால் தகுதியுடன் - 2 அப்பத்தை உண்டிடுவோம் - நாம்

கிண்ணத்தைப் பருகிடுவோம்

2. பிளவுகள் அகற்றி பிரிவினை மறந்து

விருந்தினில் ஒன்றாய் கூடிடுவோம்

உறவினை வளர்க்க உள்ளத்தைப் பகிர்ந்து

விருந்தினை உலகினில் படைத்திடுவோம்

தினந்தோறும் திருவிருந்தில் - 2 இறைவனில் கலந்திடுவோம்

இறை நிழலாய் வாழ்ந்திடுவோம்


இறைவா எழுந்தருள்வாய் எந்தன் இதயத்தில் வந்தருள்வாய்

கறைகளைக் கழுவிடுவாய் - உந்தன்

இதயம் போல் மாற்றிடுவாய் - 2

1. உலகினைப் படைத்து உயிரினைக் காக்கும் இறைவா...

அலகையை அடக்கி அமைதியைத் தந்த இறைவா...

எந்தனின் இதயம் அமைதியைக் கண்டிட இறைவா...

உந்தனின் அமைதியை உலகமும் கண்டிட இறைவா...

2. நொறுங்கிய உள்ளமும் மலர்ந்திடக் கனிந்திட இறைவா...

குறுகிய மனமும் பரந்திட விரிந்திட இறைவா...

பொய்மையும் பகைமையும் ஒழிந்திட மறைந்திட இறைவா...

வாய்மையும் அன்பும் வளர்ந்திட வாழ்ந்திட இறைவா...


இறைவா எழுந்தே வர வேண்டும்

நிறைவாய் அருளைத் தர வேண்டும்

நின்வழி சென்றிடும் வரம் வேண்டும்

நிம்மதி வாழ்வில் பெற வேண்டும்

1. அன்பின் வடிவே ஆரா அமுதே

இன்பப் பெருக்கே பரம்பொருளே - 2

அல்லும் பகலும் உனையே நினைத்து

உருகும் வரமே தருவாயே - 2

நல்லோர் தீயோர் எல்லா உயிர்க்கும்

நலமே நல்கும் நாயகனே - 2

நானில மனைத்தும் ஒருங்கே அணைக்கும்

நல்லதோர் இதயம் தருவாயே - 2

அருட்கனியே - 2 தனிமுதலே - 2

அகநிறைவே - 2 ஆண்டவனே

அகவிருள் நீக்கி அருள் ஒளி காட்ட

அருட்பெரும் சுடரே வாராயோ

2. என்னைப் படைத்தாய் இதயம் தந்தாய்

என்னில் நிறைவாய் அன்பிறையே - 2

எந்தன் எண்ணம் சொல்லில் செயலில்

என்றும் உறைவாய் முழுமுதலே - 2

எளியோர் தாழ்ந்தோர் வறியோர் வாழ்வில்

ஒளியை ஏற்ற அருள்வாயே - 2

தன்னலமின்றிப் பிறர்க்கென வாழும்

பொன்னரும் இதயம் அருள்வாயே - 2 - அருட்கனியே...


இறைவா என் உள்ளம் வருவீர் இதய ஆலயம் வாழ்வீர்

அன்பின் மழையை பொழிந்திட வாரீர் - 2

அருளின் கொடையை தந்திட வாரீர்

1. உலகின் ஒளியே உண்மையின் உருவே

உள்ளத்தின் இருளை நீக்கிட வாரீர்

என்றும் உம்மை நேசித்திடவே - 2

எங்கள் இதயம் எழுந்தே வாரீர்

2. ஆன்ம நோயை அகற்றிட வாரீர்

ஆசீர் அளித்து காத்திட வாரீர்

துன்பம் துடைத்து தேற்றிட வாரீர்

தூயனாய் என்னை மாற்றிட வாரீர்

3. உள்ளம் என்னும் எமதாலயத்தில்

உமது அன்பின் ஒளி வீசிடவே

விரைந்து எம்மில் வந்திடுவீரே

சிந்தை மகிழ்ந்து இன்புறுவேனே


இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில்

இணைந்தே பாடிடும் என் கீதம்

உன் கரம் தவழும் திருயாழிசை - அதில்

என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

1. புல்லாங்குழலென தனித்திருந்தேன் - அதில்

இசையாய் என் மனம் புகுந்திடுவாய் - 2

பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் - புதுப்

பாடலால் என்னகம் இணைந்திடுமே

எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்

எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா

காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி

வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா - 2

2. கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் - நீ

தோளினில் சுமந்தே வழிநடந்தாய் - 2

நாதா உன் வார்த்தைகள் வானமுதம் - 2 என்னை

நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்

தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்

தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்

அருளாளன் நீயின்றி அழகேது என்னில்

அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் - 2


இறைவா வா விரைவாய் வா

என்னுள்ளத்தின் தெய்வமே வா

1. எந்தன் சிந்தனை உமக்கன்றோ

சிந்தை சிறக்க எழுந்து வா - 4

2. எந்தையும் தாயும் நீயன்றோ

எந்தன் இதயம் மகிழ வா - 4

3. ஒளியும் உயிரும் நீயன்றோ

வழியில் இருளை நீக்க வா - 4

4. பாவத்தில் புரண்டு மயங்கினேன்

தாவத்தில் உன்னடி பணிகின்றேன்- 4

5. கண்ணில் குளிர்ச்சி கடல் சென்றால்

என்னில் மகிழ்ச்சி நீயும் வந்தாய் - 4


இன்பக் கனவொன்று நான் கண்டேன்

இறையாட்சி மலரக் கண்டேன்

எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன் - 2

1. இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன் - இறை

அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன் - 2

பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக் கண்டேன் - 2

பிறர்நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தேன் - எந்தன்

வாழ்வின் பொருள் அறிந்தேன்

2. அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன் - அகச்

சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டு கொண்டேன் - 2

நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன் - 2

நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன் - அன்பின்

நிறைவை நான் கண்டேன்


இன்றும் என்றும் திருநாளாம் நம் இயேசுவின் பாதத்திலே

அடியவர்க்கெல்லாம் பெரும்விருந்தாம் அவர் ஆலய பீடத்திலே - 3

1. மன்னவன் விருந்து தருகின்றார் அது மனிதர்க்கு திருவுணவாம் - 2

மாநிலமெல்லாம் அழைக்கின்றார் அது மாறாத பேரின்பமாம் - 2

அது மாறாத பேரின்பமாம் மாநிலமெல்லாம் அழைக்கின்றார்

அது மாறாத பேரின்பமாம்

2. கொடியில் கிளைகள் சேர்ந்திருந்தால் - அவை

கோடியாய் பலன் தருமாம் - 2

இயேசுவில் நானும் இணைந்திருந்தால் - என்றும்

இல்லாத பேரின்பமாம் - 2 இல்லாத...

3. உயர்வுகள் தாழ்வுகள் மறைந்திடுமே - இந்த

விருந்தினில் நாம் அமர்ந்தால் - 2

உயர்ந்த நல்வாழ்வு விடிந்திடுமே - இனி

உண்டாகும் பேரின்பமே - 2 உண்டாகும்...

4. கிறிஸ்துவில் புதியவர் ஆகிடுவோம் - இந்த

கிறிஸ்துவின் உடலாலே - 2

பழையன எல்லாம் களைந்திடுவோம் - இனி

பண்போடு வாழ்ந்திடுவோம் - 2 பண்போடு...


இனிய அன்பு தேவனே எம் இதயம் எழுந்து வாரும்

இனி எந்தன் வாழ்வு உமதே - 2

1. துன்பங்கள் ஆயிரம் அலைகளாய் என்னிடம் வருகின்றன

அதில் துவண்டு நான் போயினும் - உந்தன்

திருமுகம் காண்கின்றேன்

என்றும் நீ இருக்க எனக்கேன் குறையோ - 2

உயர் இறைவன் அன்பு என்றும் போதுமே

துயர் யாவுமே என்றும் தீருமே

2. தீபம் போல் வாழ்வு உன்முன் என்றும் ஒளிரட்டும்

அதில் சுடர்போல் நானும் என்றும் உன்னால் ஒளிரணும்

என்றும் நீ இருக்க குறையே இல்லையே - 2

இந்த இறைவன் கருணை என்றும் போதுமே

எல்லை இன்றியே கடலாகுமே


இனிய இயேசுவே என் இதயம் வாருமே

தனியாய் பேசவே மனம் உனையே நாடுதே - 2

1. ஒளியும் உயிருமில்லா எளிய பேழையில் - 2

எளியேன் எனக்காய் இரவும் பகலும் மறைந்து இருப்பதேன்

2. வெண்மை அப்பந்தன்னில் உண்மையாகவே - 2

உயிரும் உடலும் ஒருங்கே இணைத்து எமக்குத் தந்தாய்

3. உந்தன் வருகை தந்தாய் எந்தன் நெஞ்சமே - 2

இறைவன் வதியும் இல்லிடமாகவே உயர்ந்து மாறுமே

4. வழியும் உயிரும் நீயே அழியா உணவும் நீயே - 2

குறையாக் கருணை நிறைந்து பெருகும் இன்ப ஊரணியே


இறைவா இறைவா இறைவா இறைவா ஆ....

உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா

உமதன்பு படைப்புக்களை நேசிக்கின்றேன் இறைவா

உம் கரத்தின் வல்லமை உணர்கின்றேன் இறைவா

உம் முகத்தை படைப்பினிலே காணுகின்றேன் இறைவா

இறைவா இறைவா உயிரான இறைவா உடன் வாழும் இறைவா

1. வானம் பூமி கடல் யாவும் நேசிக்கின்றேன் இறைவா

கானம் பாடும் பறவைகளை நேசிக்கின்றேன் இறைவா

அதிகாலைப் பனிப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா

அழகுமலர்கள் புல்வெளிகள் நேசிக்கின்றேன் இறைவா

உன் புகழ் உரைக்கின்றேன் உதயம் ஆகிறாய் - 2

உன் பதம் பணிகின்றேன் ஒளிவிளக்காகிறாய்

அழகிய என் உலகை அணைத்துக் காத்திடவே

அன்பால் நிறைத்திடவே ஆற்றல் தருகின்றாய் இறைவா...

2. கதிரவனை முழுநிலவை நேசிக்கின்றேன் இறைவா

தவழும் நதி வீசும் தென்றல் நேசிக்கின்றேன் இறைவா

நீலவானில் நீந்தும் மேகம் நேசிக்கின்றேன் இறைவா

வான்பொழியும் மழைப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா

இயற்கையில் சங்கமித்து உன்னைக் காணுகிறேன் - 2

இறையுன் படைப்போடு ஒன்றாய் பாடுவேன்

எல்லா உயிர்களுமே என்றும் வாழ்ந்திடணும்

எல்லா மாந்தருமே மகிழ்வைக் கண்டிடணும் இறைவா...


இஸ்ராயேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்

சத்திய ஜீவ வழியான தெய்வம்

நடுவராய் பூமியில் பிறந்த அன்பு தெய்வம்

நித்திய வாழ்வு தருகின்ற தெய்வம்

ஆதி பிதாவே தெய்வமே உமது ராஜ்யம் வருகவே

உம் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறைவேறவே - 2

1. செங்கடலில் நீர் அன்று பாதை பிளந்தீர்

பாலையில் மக்களுக்கு மன்னா பொழிந்தீர்

கடும் வெயிலில் மேக நிழலானீர் இருளில் தீப ஒளியானீர்

சீனாய் மாமலை மேலே நீர் நீதிப்பிரமாணங்கள் பகிர்ந்து தந்தீர் - 2

2. மனிதனாய் பூமியில் வந்து பிறந்தீர்

இறுதியில் எமக்காய் உயிரைத் தந்தீர்

திருவுடலை எமக்குத் திருவுணவாய் இவ்வுலகத்தின் ஜீவனாய்

வழியும் உண்மையும் ஆனவனே உம் திருநாமம் வாழ்கவே - 2


உம்மைப் போல் நானும் வாழ என்னில் வாருமே

உமது அருளில் வளர்ந்திட என்னில் தங்குமே

என் வாழ்வின் நிறைவாய் என்னில் நீ நிலைத்திட

என்னில் வாருமே என்னை மாற்றுமே

1. சின்னஞ்சிறு கோதுமை அப்பமதில் உம்

தெய்வீகக் கோலத்தை அடக்கியே - 2

தினம் தினம் நீர் என்னில் வந்து

உம்மால் எம்மை நிரப்புகின்றீர்

நான் வாழ நீ வேண்டும் என் இயேசுவே

நீயின்றி நான் இல்லையே - 2

2. என்னில் உம் திட்டம் என்னவென்று

நானும் கருத்தாய் அறிந்திடவே - 2

வாழ்வில் அதனை செயலாக்கிட

என்னை உம் அருளால் நிரப்பிடும் நான் வாழ...

3. திராட்சை ரசமான உம் பானத்தில்

உம் திரு இரத்தத்தைக் கலந்திடவே

செந்நீரும் குருதியும் ஒன்று சேர்ந்து

மானிடர் நல்வாழ்வு பெற்றிடவே நான் வாழ...


உயர்ந்த அன்பு எது நண்பனுக்காக உயிரைத் தருவதுதான்

அந்த அன்பில் வளர்வது உயர் மானிடப் பண்பு - 2

தன்னையே தந்த தலைவன் அந்த இறைவனே நல்ல நண்பன் - 2

1. சொந்த பந்தங்களெல்லாம் நல்உறவாய் நிலைத்திடுமோ - உன்னை

துயரங்கள் சூழ்ந்திடும் போது அந்த உறவுகள் உயர்ந்திடுமோ - 2

காலங்கள் கடந்து சென்றாலும் உன்னைக் காரிருள் சூழ்ந்து நின்றாலும் - 2

நிலைத்த அன்பாகி விழியின் சுடராகி நண்பனே வாழ்கின்றான்

2. இன்ப துன்பங்களெல்லாம் இந்த நட்பினில் பொதுவுடைமை - உளப்

பகிர்தலில் உயர்ந்திடும் உறவே அந்த அன்பின் தனிப்பெருமை - 2

பெறுவதில் மலர்ந்திடும் அன்பு தன்னை தருவதில் துலங்கிடும் பண்பு - 2

நண்பன் வேண்டுமா நட்பில் நிலைத்திடு நண்பனாய் மாறிடு


உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்

என் நம்பிக்கை பலமானதே

ஒருபோதும் இனி நான் பயம் கொள்ள மாட்டேன்

என் ஆண்டவரின் அடிதொட்டு நடப்பேன்

என் ஆண்டவரே என் தேவன் நீரே என் கடவுள்

அய்யா நீரே என் கடவுள்

1. என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன

கண்டேன் கண்டேன் என் தேவனைக் கண்டேன் - 2

காயத் தழும்பினைத் தொட்டுப் பார்த்தேன்

விரல்களை அங்கு இட்டுப் பார்த்தேன் - 2

நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன் - 2

2. உள்ளத்தில் நான் கண்ட பெருஞ்ஜோதியை

உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளியேற்றுவேன் - 2

இனி மாறாது மறையாது என் நம்பிக்கை

அடி பிறழாது சிதையாது இறைமாளிகை

உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை

அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை நம்பினேன்...


உயிரான உணவு வடிவில் இயேசு வருகிறார் - நம்

உடன் வாழும் ஆவலோடு தேடி வருகிறார்

உண்ணும் உணவு நம்மில் இணைந்து ஒன்றாவதுபோல்

உள்ளம் ஏற்கும் நம் வாழ்வு இயேசுவாகவே

1. நீதி தேடும் நெஞ்சம் வாழ இயேசு துடிக்கிறார்

அநீதி புரியும் நெஞ்சம் செல்ல இயேசு மறுக்கிறார் - 2

ஒருவர் ஒருவர் புரிந்து வாழும் கூட்டுவாழ்விலே - 2

ஒன்றி நின்று உறவை வளர்த்து மகிழ்வு காண்கிறார்

2. உழைத்துக் காய்ந்த கரத்தில் தவழ இயேசு சிரிக்கிறார்

உழைக்காதுண்போர் அருகில் வரவே இயேசு அழுகிறார் - 2

இறைமைக் கனவே இகத்தில் மலர்த்தும் மாந்தர் மனதிலே - 2

இறவா உணவாய் தன்னை இணைத்து உறுதி கொடுக்கிறார்


உயிரின் உயிரே வா உன்னத ஒளியே வா

அருளின் நிறைவே வா அன்பே எம்மில் எழுந்து வா - 2

1. வாழ்விக்கும் தெய்வம் நீயானாய் வாழ்ந்தோம் உந்தன் தயவினால் - 2

முத்துக்கள் நீ தந்தாய் முத்தங்கள் நான் தந்தேன்

முதல்வா தலைவா விரைந்து வா - 2

2. அன்பென்னும் உறவு நீட்டினாய் ஆனந்த ராகம் மீட்டினேன் - 2

பாவங்கள் நீ வென்றாய் பாவியாய் நான் நின்றேன்

மாபரனே என்னை ஏற்றிட வா - 2


உலகாளும் தலைவன் உயிருள்ள இறைவன் உதிக்கின்ற நேரமிது

உள்ளங்கள் எல்லாம் உண்மையில் வாழ உணவாகும் தருணமிது

கரம் கூப்பி சிரம் தாழ்த்திப் பணிவோம் - அவர்

பணி செய்யும் சீடராய் உயர்வோம் - 2

1. செல்கின்ற இடமெல்லாம் நன்மைகள் செய்தவர்

நமையெல்லாம் அழைக்கும் நேரமிது

தேவையில் இருப்பவர் அனைவரைத் தேடி

பணி செய்ய அழைக்கும் நேரமிது

ஆனந்த நேரமிது - 2 அருள்மழை பொழிகிறது கரம்...

2. அயலாரைத் தேடி நேசித்த இறைவன்

பாதையில் சென்றிடும் நேரமிது

நண்பருக்காக உயிர்தர அழைத்தவர்

தியாகத்தை உணரும் நேரமிது ஆனந்த...


உலகொன்று தந்து நலமென்று கண்ட தெய்வம் வாழ்கவே

உயிர்மூச்சில் நின்று நடமாடுகின்ற தெய்வம் வாழ்கவே - 2

தெய்வம் வாழ்கவே தெய்வம் வாழ்கவே தெய்வம் வாழ்கவே

1. புவியோடு வானம் மழையாகக் கண்ட பந்தம் வாழ்கவே

அதிகாலை ஒளியில் மலர் காணும் புதிய சொந்தம் வாழ்கவே

நிலமென்னும் அன்னை உயிர்வாழத் தந்த கனிகள் வாழ்கவே

உறவாடி வாழ உயிர்நாடியான வார்த்தை வாழ்கவே

எது இங்கு இல்லை உன்னன்பை சொல்ல யாவும் வாழ்கவே - 2

2. எது வந்த போதும் எனைத் தாங்கும் அன்புத் தாய்மை வாழ்கவே

தடுமாறும் போதும் தன் பிள்ளை என்ற தந்தை வாழ்கவே

சுமைதாங்கி வாழ்வில் சுவைகூடச் செய்த நண்பர் வாழ்கவே

இதயங்கள் இரண்டு ஒன்றாகிக் கண்ட இன்பம் வாழ்கவே எது...

3. அன்பொன்று தானே முதல் என்று சொன்ன வேதம் வாழ்கவே

அது காண தேவன் கல்வாரி சென்ற பாதை வாழ்கவே

மனிதாபிமானம் புவி காணச் செய்த புனிதர் வாழ்கவே

சமநீதி காண ஒன்றாகும் மனிதக் கரங்கள் வாழ்கவே எது...


உள்ளத்தின் ஆழத்தின் ஒரு சந்தோஷம் என் இயேசுவே என் தெய்வமே

உன் வார்த்தையே என் வாழ்வையே உனதாக அழைக்கின்றது - 2

1. உள்ளக் கதவை திறந்து வைத்து உந்தன் குரலைக் கேட்கின்றேன்

உனது இனிய மொழியும் எனிலே நம்பிக்கை தீபங்கள் ஏற்றுதே

உன் வழி தொடரவே தயக்கமோ தடுக்குதே

தயக்கமும் நீங்கினால் தடைகளே இல்லையே

அன்பே இறைவா அருளைப் பொழிவாயே

2. உந்தன் நினைவால் உயிரை வளர்க்க

அன்பால் இதயம் துடிக்கணும்

மனித இதய காயங்கள் மறைய என் வாழ்வே மருந்தாய் மாறணும்

நண்பர்கள் சூழவே என் சுயநலம் மறையணும்

உறவுகள் நிலைக்கவே தியாகத்தில் வளரணும் அன்பே...


உள்ளத்தின் உயிராய் எழுவாய் உயிருக்கு உணவாய் வருவாய்

குரு இவர் கரம் வழி அருள்வாய் இறைவா வருவாய்

1. வானுறை இறைவன் பாவியர் எம்மை

சீருடன் பொறுத்த அன்பின் சின்னமாய் இறைவா வருவாய் - 2

2. உலகத்தின் ஒளியாய் பலருக்கு துணையாய்

நிலவிட அருள்வாய் திருக்குலத்தவர் யாம் இறைவா வருவாய் - 2

3. அழிவிற்கு மரித்து அருளிலே உயிர்க்கும்

எழில்மிகு கிறிஸ்துவ வாழ்வில் வளர இறைவா வருவாய் - 2

4. பாசத்தின் பிணைப்பால் பாரிலுள்ளோர்க்கு

பரமனின் சபையின் சான்றாய் விளங்க இறைவா வருவாய் - 2


உள்ளத்தின் உள்ளே ஒரு தேடல் இறைவனுக்கே எந்தன் பாடல் - 2

உருவமில்லாத வலிமை இது வாழ்வினை வெல்லும் இலக்கு இது

உள்ளம் என் உள்ளம் அது இறைவனின் இல்லம்

செல்லும் அது செல்லும் உன் வழிதனில் என்றும்

1. பசியினில் நானும் வாடிடும் பொழுது மன்னா பொழிகின்ற உள்ளம்

தாகத்தினாலே தவித்திடும் பொழுது பாறையில் நீர்சுரக்கும் உள்ளம் - 2

2. பகலினில் நானும் பயணத்தை தொடர மேகதூணாகும் உள்ளம்

இலக்கினை அடைய இரவிலும் செல்ல நெருப்பு தூணாகும் உள்ளம் - 2


என்னுள்ளம் நிதம் ஆள நீ வேண்டும் இறைவா

இயலாக இசையாக நீPங்காத நினைவாக

மழையாக நதியாக கதியாக வா ஆ...

உள்ளம் என்னும் கோவிலிலே வாராயோ இறைவா

இன்பம் எங்கள் வாழ்வினிலே தாராயோ தலைவா - 2

நீயே என் தேடல் நீயே என் பாடல்

நீயே என் ராகம் தாளம் சங்கீதமாம் - 2

மழையாக நதியாக இசையாக வா

உணவாக உறவாக உயிராக வா

1. என் வாழ்வு உனைத் தேடும் பயணம் அன்றோ

உன் அன்பு எனை மேவும் தருணம் அன்றோ - 2

தாயன்பில் தலை சாய்க்கும் சேயாகினேன்

நானுந்தன் பேரன்பில் குயிலாகினேன் - 2

ஆனந்தம் ஆனந்தம் என் விழியிலும் மொழியிலும் ஆனந்தம்

பேரின்பம் பேரின்பம் என் கனவிலும் நனவிலும் பேரின்பம்

2. உம் வாக்கு என் வாழ்வு விளக்கல்லவா

என் போக்கு தனை மாற்றும் மொழியல்லவா - 2

உள்ளார்ந்த நலம் வேண்டி மன்றாடினேன்

உம் மார்பில் கார்மேக மயிலாகினேன் - 2 ஆனந்தம்....


உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன்

உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே - 2

உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2

1. உள்ளமெனும் கோவிலில் உறவென்னும் தீபமே

வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே - 2

அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா

ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா

உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா

அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா

2. துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே

துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே - 2

இறைவனே இயேசுவே இதயம் எழுந்து வா

நாதனே நேசனே பாசமாய் நீ வா உறவின்...


உறவே வா என் உயிரே வா - 2 புதுவாழ்வினை அளிக்க வா

நீ இல்லையென்றால் நான் ஒன்றும் இல்லை

உன் உறவினில் எனக்கொன்றும் குறையுமில்லை

உயிர் கொடுக்கும் உறவே வா உன்னத கொடையே வா

1. எங்கள் அன்பில் நீ இருக்க வேண்டும்

இறைவா நீ இருக்க வேண்டும்

உந்தன் அன்பு இல்லை என்றால்

எந்தன் வாழ்வு அழிந்திடுமே

உன் உறவாலே என்னை தேற்றுமய்யா

உன் வரவாலே என்னை மாற்றுமய்யா

2. எங்கள் உறவில் நீ இருக்க வேண்டும்

இறைவா உயிர் கொடுக்க வேண்டும்

உயிர் தரும் வாழ்வினை அளிக்க வா - உம்

உறவினில் நாளும் களிக்க வா உன்...


உறவைத் தேடி இறைவன் இங்கு வருகிறார்

நிறைவைத் தந்து நம்மில் இன்று வாழ்கிறார்

உள மகிழ்ச்சியில் நமை நிறைத்திட

அவர் மாட்சியில் நாம் நிலைத்திட

மனக்கதவைத் திறந்து அன்பை நாளும் பொழிகிறார்

1. அமைதி அன்பு நிலைத்திடவே அருமைத் தோழனாய்

அழைத்துச் செல்ல நேசக்கரம் நீட்டி வருகிறார் - 2

காடும் மலையும் கடலின் அலையும் என்ன செய்திடும்

அன்பர் இயேசு நம்மில் என்றும் நிலைத்து இருப்பதால் - 2

2. உரிமை வாழ்வைத் தந்திடவே உண்மை நண்பனாய்

உணர்வு பெற்று வாழ்ந்திடவே உயிர்த்து வருகிறார் - 2

சாவும் பிணியும் பேயின் பிடியும் என்ன செய்திடும்

அன்பர் இயேசு நம்மில் என்றும் நிலைத்து இருப்பதால் - 2


உறவை வளர்க்கும் விருந்தாக பிறந்த வானின் அமுதே வா

1. செடியைப் பிரிந்த கொடியாக மடிந்து அழிந்து போகாமல்

இணைந்த கொடியாய்ப் புவியினரை

அணைக்கும் இனிய விருந்தே வா

2. படர்ந்த இருளோ மறைந்துவிடும்

பரிதியுன் முகத்தைக் காண்பதனால்

பாவியென் வாழ்வு தூய்மை பெறும்

தேவன் உனது வருகையினால்

3. அழியா வாழ்வு விருந்தில் வரும்

பலியால் விருந்தோ தொடர்ந்து வரும்

குருவால் பலியோ தினம் தொடரும்

அருளால் வாழ்வு வளர்ந்து வரும்


அசைவுறேன் அசைவுறேன் ஆதாரம் நீ என்றால் அசைவுறேன்

உன்னருகில் நான் இருக்கும் ஒரு நொடிப் பொழுதும்

ஒரு கோடி இன்பங்கள் என் இதயம் பாயும் - 2

ஒளிக்கீற்றாய் உன் பார்வை எனைத் தொடும் நேரம்

அனல்காற்றாய் உன் அன்பு எனைச் சூழ்ந்து கொள்ளும்

இதயமே பேசு ஆதாரம் இயேசு - 2

1. கண்ணுக்குள் கருவிழியாய் பார்க்கும் உன் பாசம்

மண்ணுக்குள் சிறுவிதையாய் எனை மாறச் செய்யும் - 2

எனக்குள்ளே மறைந்திருக்கும் உன் இதய பந்தம்

உன்னோடு நான் கொள்ளும் மாறாத சொந்தம் இதயமே....

2. எனை விட்டு விலகாத உன்னன்புத் தேடல்

உன் அன்பின் சாட்சியாக மாறிடவே தூண்டும் - 2

என் பாதை பயணத்தில் சோர்கின்ற நேரம்

அணைக்கின்ற தாயாக எனை என்றும் தேற்றும் இதயமே....


உன் திரு வீணையில் என்னை ஒரு நரம்பென

இறைவா ஏற்றிடுவீர் சுகராகம் மீட்டிடுவீர் - 2

1. தூசு படிந்த நரம்பு என்று என்னை வெறுத்து விடாதீர்

மாசு நிறைந்த மனிதன் என்று உம் உறவை நிறுத்தி விடாதீர் - 2

என் இயேசுவே என் தெய்வமே என்னோடு நீர் பேச வேண்டும்

உம் வார்த்தையில் தினம் நானும் உயிர் வாழ வேண்டும்

இறைவா இறைவா இறைவா இறைவா - 2

2. தீராத சோகத்தில் நான் மூழ்கும்போது சுமைதாங்கி நீதானய்யா

ஆறாத சொல்லால் அடிவாங்கும் போது இடிதாங்கி நீதானய்யா - 2

என் தலைவா என் துணை வா என் தனிமை நீர் நீக்க வேண்டும்

உம் பார்வையால் என் விழி ஒளி பெற வேண்டும் இறைவா....


உன் நினைவில் சங்கமிக்கும் என் இதயம் - அது

உன் வழியைப் பின்தொடரும் வாழ்வில் நிதம் - 2

1. உன் உறவினில் விழி திறந்தது

தன்னலத்தின் தளை அறுந்தது எந்தன் இயேசுவே

உன் வழியினில் நான் நடந்திட

உன் பணியினை நான் தொடர்ந்திட

உன் உடலும் குருதியுமே உறுதி தந்தது ஆ....

உந்தன் அன்புக்கெல்லை இல்லையே

உன் நினைவில் துன்பம் இல்லையே

2. வழி தவறிய ஆடென உனதருள் வழியினை நான் மறந்திட

என்னைக் காண கல்லும் முள்ளும் அலைந்து தேடினாய்

ஒரு கிளையென நீ இருந்திட அதில் கொடியென நான் படர்ந்திட

உந்தன் அன்பு நெஞ்சினிலே என்னை மூடினாய் ஆ..... உந்தன்...


உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக

என்னில் வா என் மன்னவா - 3

1. நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்

துணையாளன் நீயல்லவா - 2

எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக

இணைகின்ற என் மன்னவா - 2

2. முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி

மூன்றாகி ஒன்றானவா - 2

இனிதாகக் கனிவாக அருள்வாழ்வின் நிறைகாண

எனைத் தேர்ந்த என் மன்னவா - 2


உன்னைக் கண்டு உறவாட உன்னை உண்டு உயிர் வாழ

ஏங்குகிறேன் இயேசுவே என்னை தாங்கிட வா நேசரே - 2

அழைத்தேன் இறைவா இதயம் வருவாய் - 2

1. மாறாத பேரன்பு உன் கருணை அது

மலரச் செய்யும் என்னில் உன் திறனை - 2

வாராது வந்த அன்பே இயேசய்யா - உன்னை

சேராது வாழ்வு என்னில் ஏதய்யா

2. யாவர்க்கும் நிறைவாகும் சமாதானம் - அதை

வாழ்வோர்க்கும் பகிர்ந்தளிக்க வரவேணும் - 2

மேகங்கள் மீதமர்ந்து மீண்டும் வரும் - உந்தன்

வருகையின் மகிழ்வூட்டும் விருந்தருளும்


உன்னைத் தேடி உன் உறவைத் தேடி காத்திருந்தேன் வா

அன்பின் சிறகில் என்னை மூடி இன்பம் பொழிந்திட வா - 2

1. தகுதி இழந்தும் தாழ்ந்து இருந்தும் தலைவா என்னைத் தேர்ந்ததேன் - 2

வார்த்தை போதும் என்று இருந்தேன் வாழ்வின் விருந்தாய் வந்ததேன்

எனது ஆன்மவீணை மீட்டி அமுதகானம் இசைக்கின்றாய் - 2

உமது பாதம் அமர்ந்து நானும் உயிரின் கீதம் இசைக்கவா - 2

2. தலைவன் என்னும் மமதை கொண்டு ஆட்சி செய்திடவில்லையே - 2

சீடர் பாதம் கழுவி அன்பின் பணியை நாளும் உணர்த்தினாய்

நண்பர் வாழ்ந்திட உயிரை அளிக்கும் பலியே உயர்ந்த வாழ்வென்றாய் - 2

அதையே நாங்கள் வாழ்வில் தொடர இதையுன் நினைவாய் செய்யவா - 2

3. ஏழை எளியோர் வாழ்வை நானும் என்றும் பார்த்திட வேண்டுமே - 2

உறவு இழந்து தொலைந்த இதயம் தேடி அலைந்திட வேண்டுமே

உரிமை இழந்தோர் அணியில் இணைந்து நீதிக்காக நான் வாழவே - 2

மனதில் என்றும் உறுதிகொண்டு உலகில் பயணம் தொடர வா - 2


உன்னைத்தேடி உன்னைத்தேடி அலைகின்றேன் தெய்வமே

உன்னைத் தேடித் தேடி அலைந்தேன் வாழும் தெய்வமே

உந்தன் ஒளியை என்று காண்பேன் வாழ்வின் தெய்வமே

என்றும் வாழும் தெய்வமே

1. உள்ளம் உண்மை நெறியில் சென்றால் தெய்வம் தோன்றிடும்

அன்பில் அறிவை நாளும் வளர்த்தால் நெஞ்சம் வாழ்ந்திடும் - 2

நீதி இங்கு நிலைத்ததென்றால் ஜோதி தெரிந்திடும் - 2

உள்ளங்களே உள்ளங்களே உணர்ந்து கொள்ளுங்கள்

இன்று உணர்ந்து கொள்ளுங்கள்

2. விண்ணை நோக்கும் உந்தன் பார்வை மண்ணில் திரும்பட்டும்

கண்ணில் புதிய ஒளியினைக் கொள்ளும் எண்ணம் தோன்றட்டும் - 2

புதிய வானம் புதிய பூமி காட்சி காணட்டும் - 2

நெஞ்சங்களே நெஞ்சங்களே உணர்ந்து கொள்ளுங்கள்

இன்று உணர்ந்து கொள்ளுங்கள்

உன்னைத்தேடிக் கண்டுகொண்டேன் வாழும் தெய்வமே

உந்தன் ஒளியை அறிந்துகொண்டேன் வாழ்வின் தெய்வமே

என்றும் வாழும் தெய்வமே


உன்னை நான் ஒருபோதும் மறப்பதே இல்லை

உனக்காக உன்னில் இருக்கின்றேன் - 2

உன் அன்பன் இயேசுவே நான் இருக்கின்றேன் - 2

உன் நண்பன் இயேசுவே அருகில் இருக்கின்றேன் - 2

2. பாவியாய் எனதன்பை மறந்து நீ சென்றாலும் - 2

பரிவுடனே தேடி நான் அணைத்துக் கொள்வேன் - உன்னை - 2

3. சோதனையாய் வேதனையில் சோர்ந்து நீ துவண்டாலும் - 2

அன்னையாய் அரவணைத்தே காத்திடுவேன் - உன்னை - 2

4. உண்மை நீதி வாழ்வினிலே எதிர்ப்பு நிதம் வந்தாலும் - 2

உறுதி தந்து உன்னையே நான் உயர்த்திடுவேன் - என்றும் - 2


உன்னை நான் புகழ்ந்திட ஒரு வரம் வேண்டினேன்

உன்னை அன்பு செய்திட உன்னருள் தேடினேன் - 2

உன் நாமம் பாடிடவும் உனக்காக வாழ்ந்திடவும்

உன் அன்பு துணையினை நான் தினமும் நாடினேன் - 2

1. உனையன்றி எனக்கென்று வேறொரு தலைவனுண்டோ

நீயின்றி என் இதயம் நிறைவினை அடைவதுண்டோ - 2

கார்முகிலாய் என் வாழ்வில் கருணைமழை பொழிபவனே

கனவிலும் நான் உனைப்பிரியா வரமொன்று தாருமய்யா

2. பாசத்தின் கண்கொண்டு பாவியைப் பார்க்கையிலே

பாவச்சுமை உன் கண்களுக்கு பாரமாய் தெரிவதில்லை - 2

உன் கையில் எனைப் பொறித்தாய் உன் தோளில் எனைச் சுமந்தாய்

உன் அருளின்றி பதிலன்பு செய்ய எனக்கேது திறனய்யா


உன்னோடுநான் விருந்துண்ண வேண்டும்

உன் வீட்டில் நான் குடிகொள்ள வேண்டும்

உன் அன்பில் நான் உறவாட வேண்டும் - 2

1. என் வாழ்விலே இது ஒரு பொன்னாள்

என் அகமதிலே நீ வரும் திருநாள் - 2

உன் அன்புக்காய் அனைத்தையம் இழப்பேன் - 2

மன்னவன் உனக்காய் என்னையே கொடுப்பேன்

2. பொருட் செல்வமே என் கடவுள் என்று

ஏழையின் பொருளை எனக்கெனப் பறித்தேன் - 2

மனம் மாறினேன் மகிழ்வடைந்தேன் நான் -2

பன்மடங்காக ஏழைக்கு கொடுப்பேன்

3. என் பாவத்தை மன்னிக்க வருவாய்

என் உளமதிலே அமைதியைத் தருவாய் - 2

என் இதயத்திலே வாழ்ந்திட வருவாய் - 2

என் வீட்டிற்கு மீட்பினைத் தருவாய்


எந்தன் இதய இனிய வேந்தன் என்னில் வந்து தங்கும் நேரம்

வந்ததும் வசந்தம் வீசுமே

வசந்தத்தில் வாழ்வுண்டு வாழ்வில் அவனுண்டு - 2

என்னில் அவனும் அவனில் நானும் என்றும் ஒன்றுதானே

1. வாழ்க்கை மூச்சு நின்றுவிடும் அன்பே

வீசிடும் காற்று நீ எனில் இல்லையென்றால் - 2

ஓடோடி வந்தேன் உனை என்னில் ஏற்க

ஒன்றாகும் நேரம் நான் உன்னைப் பாட ஆ....

அன்பு தெய்வமே அருள் தாருமே

நீ மீட்டும் வீணையும் நான் பாடும் பாடலும்

இறைகடலில் சங்கமிக்கும் இதய வேந்தனே

2. நிம்மதி நீயாய் இருக்கின்ற போது

நிதமும் நீ என்னில் தங்கிட வேண்டும் - 2

சிந்தனைகள் யாவும் நீர் சீர்படுத்த வேண்டும்

சொல் செயல் யாவும் தூய்மையாக வேண்டும் ஆ.....

அன்பு தெய்வமே அருள் தாருமே

என் வறுமை எனும் இருள் உன் வளமை ஒளியிலே

அகன்றிட வேண்டும் என் அன்பு தெய்வமே


எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்

இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக் கூறும் - 2

1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்

சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்

மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்

மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள்

நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்

நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்

எல்லாம் உன் புகழ்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே

2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்

தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்

கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்

பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்

நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்

நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள் எல்லாம்....


எந்தன் இதயம் வந்த நேரம் இன்ப நேரமே

நீயும் நானும் பேசும் மொழி தான் புனித கானமே - 2

மன்னவனே நீ மகிழும் காலம் எனது வாழ்விலே

நான் திருந்தி உன்னை தழுவும் போது உயதமாகுதே

1. நடந்து செல்லும் பாதையில் தடைகள் வந்து சேர்கையில்

உள்ளம் வருந்தி சோருதே உவகை என்னில் மறையுதே

இடர்கள் நீக்கும் இறையே வா சுடராய் என்னில் எழுந்து வா - 2

ஒடம் போல சுமந்து என்னை அணைத்து கரைக்கு அழைத்து வா - 2

2. அருவி போல பாய்ந்திடும் உந்தன் அன்பின் சுகமதை

எளியோர் பணியில் காண்கிறேன் அவரில் உன்னை தொழுகிறேன்

நன்மை ஒருநாள் வென்றிடும் உந்தன் அன்பைச் சொல்லிடும் - 2

ஏற்றத்தாழ்வு மறைந்து போகும் எந்தன் வாழ்வு மலர்ந்திடும் உம்மில் - 2


எந்தன் உயிரே நீதான் இயேசுவே உன்னை மட்டும் சுவாசிப்பேன் - 2

நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறவாமல் - 2

என் மீது பாசம் கொண்டாய் என் நெஞ்சில் வாசம் செய்தாய் - 2

1. கல்வாரி நினைவுகள் தான் என் வாழ்வின் வரமாகுமே

உன்னோடு ஒன்றாகினால் என் வாழ்வில் வளமாகுமே - 2

உணவாய் எழுந்து எனில் வந்து - என்

உணர்வாய் கலந்து உயிர் சுமந்தாய்

மெழுகாய் உருகி ஒளிர்ந்திடவே உனது ஆற்றல் வேண்டுமே

2. என் வாழ்வின் தேடல்களில் வழியாக ஒளியாக வா

என் வாழ்வின் சோகங்களில் தாயாகி தாலாட்ட வா - 2

உறவாய் என்னை நீ அழைத்தாய் - என்

உறவுகள் இன்று உயிர் பெறுமே

சிலுவைகள் தோளில் நான் சுமக்க உனது சிறகுகள் வேண்டுமே


எந்தன் சொந்தமே இயேசுவே

உன்னில் மகிழ்ந்து வாழ உன்னை எனக்குத் தாராய்

எந்தன் சொல்லும் செயலும் உந்தன் உணர்வில் ஓங்குமே

1. சுமைகளால் வாழ்வை நான் வெறுத்திடும் போது

சுகமாய் வாழ எழுந்தென்னில் வா - 2

எனக்காய் நின் வாழ்வை வெறுமையாக்கினீர் - 2

என்னையும் பிறர் அன்பில் வாழச் செய்குவாய்

2. சிங்கார வாழ்வின் சிகரத்தில் இருந்தாலும்

என் நெஞ்சிலே நீ இல்லையேல் - 2

சரிந்தே வீழும் வாழ்வின் செல்வங்கள் - 2

இதனையே உணர்ந்தே நான் வாழ விழைகிறேன்


தேடுகிறேன் தெய்வமே பாடுகிறேன் பரம்பொருளே

எந்தன் மனதில் நீயே

எந்தன் மனதில் இன்றும் என்றும் உந்தன் நினைவுகள் வேண்டும்

எந்தன் வாழ்வின் செயல்களில் எல்லாம்

உந்தன் வழித்துணை வேண்டும்

தேடுகிறேன் தெய்வமே பாடுகிறேன் பரம்பொருளே

வாழத்தான் கேட்கிறேன் வேறு யாரைக் கேட்பது

உன்னைத் தானே கேட்கிறேன்

1. ஏன் பிறந்தேன் என நான் அழும் போது

தாங்கிடும் தாய்மடி வேண்டும்

வான்மழை வரம் தரத் துளிர்த்திடும் வசந்தம்

போல் ஒரு இதம் தர வேண்டும்

இமைப் பொழுதும் நீங்காமல்

உனை நான் நினைத்திட வேண்டும்

இம்மையிலும் மறுமையிலும்

அதுவே தொடர்ந்திட வேண்டும் வாழத்தானே...

2. தொழுதிடும் காலை இளங்கதிர் போல

என் மனம் நிறைந்திட வேண்டும்

விழுந்திடும் போதும் தளர்ந்திடும் போதும்

எழுந்திடும் வல்லமை வேண்டும்

என்னுடனே நீ இருக்க யாருக்கு நான் அஞ்ச வேண்டும்

மண்ணுயிரைக் காப்பவனே மனதினில் நேசம் வேண்டும் வாழத்தானே...


எழுவாய் அமலா மகிழ எம் இதயம் எனதுள்ளம் மகிழ்ந்திட வா

அருள்பொழி நிலவே இருள்நிறை உலகை மாற்றி அமைத்திட வா

1. வாழ்வில் உமை மறந்தோம் எம் தாழ்வில் உமை இகழ்ந்தோம் - 2

வானவர் போற்றும் வானமுதே வாழ்த்திப் புகழ்ந்திட வா

2. பாவக் கறை போக்க எம் வாழ்வில் குறை நீக்க - 2

தாழ்ந்து நின்றோம் உம் மாபதமே வாழ்த்திப் புகழ்ந்திட வா


எழுவாய் எமதுள்ளம் இறைவா - உம்

எளியோர் உண்ணும் உணவாய் நீ எழுவாய் எமதுள்ளம் இறைவா

1. வருந்தி வாடிடும் மக்கள் நீர் வாருங்கள் என்னிடம் என்றீர்

வருந்திய மக்கள் வந்தோம் உம்மை அருந்திட உணவாய் அளிப்பாய்

2. உண்ண உடலை அளித்தீர் - யாம்

குடிக்கக் குருதியை கொடுத்தீர்

மாசின் மக்கள் பிழைக்க மண்ணில்

மனுமகன் புகழைப் போற்ற

3. அன்பின் அருவி நீரே உன் அன்பைப் பருக வந்தோம்

அருளின் மழைநீர் நீரே அதனை அடியோர் எம்மேல் பொழிவீர்


எழுவீர் இறைவா ஏழையின் உளமே

எழிலே வாழ்வில் தருவீர் வளமே - 2

1. பாலை நிலத்தில் பசித்த முன்னோர்

புசிக்கும் உணவாய் அளித்தீர் மன்னா - 2

பாரில் வாடும் மாந்தர் நாடும் பரம உணவே வா

2. வாழ்வில் வழியும் நீரே என்றீர்

வானோர் அமுதம் எமக்கு ஈந்தீர் - 2

பாறை பிளந்தே பானம் அளித்த ஜீவிய சுனையே வா

3. பேழையில் உறைந்த ஏழையின் விருந்தே

வேளையில் உதவும் தெய்வீக மருந்தே - 2

பனிமலை உருக்கும் பகலவன் போல பாவத்தை போக்கிட வா

4. கவலை மிகுந்தே கண்ணீர் வடித்தேன்

கருணை முகிலே கைவிடலாமோ - 2

அன்பின் ஊற்றே அருளின் உருவே இருளை அகற்றிட வா


என் ஆத்துமம் ஆண்டவரை புகழ்கின்ற வேளையிது - என்

ஆயன் அவரினிலே மகிழ்கின்ற வேளையிது - 2

1. அன்பின் தேவனவர் தினம் அவர் குரல் கேட்டிடுவேன்

இரக்கத்தின் கடவுளவர் அவர் இதயத்தில் வாழ்ந்திடுவேன் - 2

அவரருகினிலே நான் இருப்பேன் - தினம்

அவர் வழி தனிலே நான் நடப்பேன் - 2

2. நீதியின் மன்னரவர் அவர் நிழலினில் வாழ்ந்திடுவேன்

மகிழ்ச்சியின் நிறைவுமவர் என் மனதினை மீட்டிடுவேன் - 2 அவர்...


என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது

என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது - 2

என் தவம் நான் செய்தேன் என் நன்றி நான் சொல்வேன் - 2

1. பசியால் வாடும் ஏழையின் நிலையில்

பாவி நான் நின்றிருந்தேன்

பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி

அருளமுதை ஈந்தார் - 2

2. ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும்

அணைத்திடவே வந்தார்

ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை

மாற்றிடவே வந்தார் - 2

3. நண்பனுக்காய் தரும் உயிர்த் தியாகம் மிஞ்சும்

நட்பெதுவும் உளதோ

என் அன்பர் இயேசு சிலுவையில் மரித்து

எனைக் காத்தார் என் சொல்லவோ - 2


என் ஆன்ம உணவே வா என் உள்ள உயிரே வா

நீயின்றிப் போனால் நான் வீழ்ந்து போவேன்

நான் வாழ என்னகம் வா - 2

1. முன்னோர் உண்டனர் மன்னா மடிந்து போயினர்

உன்னைத் தகுதியாய் உண்டால் வாழ்வோம்

சாவை வெல்லுவோம் - 2

ஆவலாய் அழைத்தேன் வா இறைவா - இந்த

ஏழைக்கு உன் அருள் தா இறைவா - 2

உன்னில் நான் என்னில் நீ வாழ்ந்திட வரம் தர

2. இனி நான் மெல்ல தேய்வேன் மறைந்து போவேன்

இனி நீரே என்னில் வாழ்வீர் வாழச் செய்குவீர் - 2

எனவே அழைத்தேன் வா இறைவா - என்றும்

என்னகம் குளிர வா இறைவா உன்னில...



என் இயேசு தந்த இந்த அன்பான விருந்து

என் வாழ்வின் அருமருந்து - 2

இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றார் இயேசு - 2

1. உயிரினை அளித்திடும் திருவுடலாம்

உறவினை வளர்த்திடும் இறையுடலாம்

பிணிகளை நீக்கிடும் கனிகளைக் கொடுத்திடும்

மாபரன் இயேசுவின் உயிருடலாம் - 2

அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் என்றே

அன்புடன் அழைக்கின்றார் இயேசு இயேசு

2. பாவங்கள் கழுவிடும் திரு இரத்தமாம்

பரகதி சேர்த்திடும் இறை இரத்தமாம்

அன்பிலும் பண்பிலும் அருளிலும் வளர்த்திடும்

ஆண்டவர் இயேசுவின் திரு இரத்தமாம்

அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் என்றே

அன்புடன் அழைக்கின்றார் இயேசு இயேசு


என் இயேசு நாயகா என்னகம் வாரும்

பண் கொண்டு பாடி வா விண்ணக ராகம் - 2

உன் இதயம் தாரும் மன்னவா என் இதயம் வாரும் இனியவா

1. மண்ணில் அன்று உம்மை அங்கு நீர் தந்தாயே

என்னில் இங்கு நீயும் இன்று வந்தருள்வாயே - 2

விண்ணில் கீதங்களை பாடும் என் ஜீவனே - 2

என்னில் உன் கவிதைகளை பாடிடவா - 2

2. இருளின் பாதை தானே இங்கு தெரிகின்றது

அருளின் பாதை தனையே நீ காட்டிடுவாயே - 2

வாரும் என் இயேசுவே மாற்றும் எம் வாழ்க்கையை - 2

தாரும் உன் ஜீவனுள்ள சந்தங்களை - 2


உன்னை நான் மறவேன் இயேசுவே நான் மறவேன்

என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்

எந்நாளும் உன்னருளை நான் பாடி மகிழ்ந்திருப்பேன் - 2

1. உன் நாமம் என் வாயில் நல் தேனாய் இனிக்கிறது - 2 உன்

அன்பை நானும் எண்ணும் போது ஆனந்தம் பிறக்கின்றது

1. உன் வாயில் சொல்லமுதாய் எந்நாளும் வாழ்ந்திடுவேன் - 2 நல்

வாழ்வு நல்கும் வார்த்தையெல்லாம் நானிலம் முழங்கிடுவேன்

3. உன் மேனி பாய்ந்து வரும் செந்நீராய் நானிருப்பேன் - 2 பிறர்

வாழ்வு காண நானும் ஒருநாள் ஆறாய்ப் பாய்ந்திடுவேன்

4. என் ஆசை ஆயிரமாம் உன்னாலே நிறைவுபெறும் - 2 என்

பாச வலைகள் நாச கனிகள் உன்னால் அறுந்து விடும்

5. நல்மாலை வேளையிலே நலம் கூற எழும் மதிபோல் - 2 என்

வாழ்வின் மாலை வந்திடும் போது எழுமதி நீயாவாய்


என் இறைவன் இயேசு என் இதயம் தேடி

எழுந்து வரும் வேளையிது

உணவாய் எழுந்து வரும் வேளையிது

1. அன்பு செய்து வாழுங்கள் என்று சொன்ன இயேசுவே

நமது இதயம் தேடி வருகிறார்

பாவக் கறைகள் போக்கியே பரிசுத்தமாக்கவே

பரமன் இயேசு நம்மில் வருகிறார்

முடிவில்லாத வாழ்வையே மானிடருக்கு அருளவே

மாட்சியோடு தேவன் வருகிறார் ஆ...

அழிவில்லாத உணவென தன்னையே தந்து நம்

ஆத்துமாவின் பசியைப் போக்கினார்

2. வெறுமையான என்னையே செல்வராக ஆக்கிட

இயேசு என்னைத் தேடி வருகிறார்

பிரிவில்லாத உறவையே நிரந்தரமாய் தந்திட

மகிழ்ச்சியோடு விருந்து தருகிறார்

இறைவன் என்னில் எழுந்ததால் இன்பம் என்னில் நிறைந்ததால்

துயரமேகம் கலைந்து போனதே ஆ...

இதயக்கதவு திறந்ததால் புதிய ஒளி பிறந்ததால்

இருளின் ஆட்சி மறைந்து போனதே

3. வண்ணமலரின் கூட்டமாய் எனது இதயம் ஆனதே

இறைவன் இங்கு எழுந்து வந்ததால்

அமுதம் சிந்தும் கனிகளின் உறைவிடம் ஆனதே

இதயதேவன் நிறைவைத் தந்ததால்

அருவியாகத் துள்ளுதே ஆற்றல் மிகக் கொள்ளுதே

அன்பர் இயேசு என்னில் வந்ததால் ஆ...

பறவைகளின் பாடலில் என்னிதயம் சேர்ந்ததே

இயேசு என்னை மீட்டுகின்றதால் என்றும் வாழ்ந்திருப்பேன் - 2


என் உயிரே என் இயேசுவே உம்மைப் புகழ்கின்றேன்

என் வாழ்வு மலர சமூகம் மாற என்னை அர்ப்பணித்தேன் - 2

1. ஊர்கள் தோறும் உனக்காய் செல்லுவேன்

வேர்கள் உம் சொல் என்று சொல்லுவேன் - 2

கார்மேகம் போன்ற நல்லன்பைப் பொழிந்து

பிறரை உயர்த்துவேன் - 2

வாழ்வு கொடுத்த இறையே போற்றி என்னை நீ நடத்திடு

அன்பே எந்தன் வேதம் வந்தேன் உந்தன் பாதம் - 2

2. அருளால் என்னை உலகில் படைத்திட்டாய்

இருளில் ஒளியை ஏற்ற அழைத்திட்டாய் - 2

நீதியும் அன்பும் இல்லா இவ்வுலகில் ஒளியை ஏற்றுவேன் - 2

வார்த்தை அளித்த இறையே போற்றி என்னால் நீ மகிழ்ந்திடு

அன்பே எந்தன் தந்தை நீரே வாழ்வின் எல்லை - 2


என் தெய்வம் என் சொந்தம்

என்னோடு வாழும் என் ஜீவ சங்கீதமே

எனக்காக எல்லாமும் எனதாக்க ஜீவன்

எந்நாளும் உமைப் பாடுதே - 2

1. நான் வாழும் வாழ்வெல்லாம் நானல்ல நாதா

நீயின்றி வாழ்வேதய்யா

காண்கின்ற யாவும் என் கர்த்தாவே தேவா

கவிபாடும் கலைக்கூடமே

என்பாடல் உன்னோடு எந்நாளும் வாழும்

என் இதயம் நீர் மீட்டவே

பாடும் சங்கீதம் பரமன் உன் கீதம்

பார் போற்றும் தேவா நீர் வந்தாள வேண்டும்

2. நதிபாடும் கடல்பாடும் நிலமெல்லாம் பாடும்

நின் அன்பின் நிறைவாகவே

நிழல் தேடும் நெஞ்சங்கள் நின் அன்பில் வாழும்

நிறைவோடு நிறைவாகவே

வசந்தங்கள் என் வாழ்வில் வருமின்ப வேளை

வான் நோக்கும் என் கண்களே

வரம் வேண்டி நாளும் வாழ்கின்ற ஜீவன்

வளம் ஈந்து என்னில் தினம் வாழ்கின்ற தேவன்


என் தெய்வம் வாழும் பூமியிது எத்துணை அழகு இது

உலகே கண்கள் திறவாயோ உவகை கண்டு காணாயோ

1. பரந்து விரிந்த உலகம் படைத்தவன் அன்பு இதயம்

உயர்ந்து விரிந்த வானம் படர்ந்த அவர் மனம் கூறும்

எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும் பொங்கிடும் நீரின் ஊற்றும்

மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும்

மின்னலும் தண்ணொளி நிலவும்

என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு

இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப் பருகு

2. நிறைந்த அன்புடை நெஞ்சும் நிலவென ஒளிதரும் அறிவும்

மலர்ந்த முகந்தனின் அழகும் மங்கா கலைகளின் வளமும்

என்றென்றும் உழைக்கும் தன்மான மாந்தர்

எங்கெங்கும் ஒன்றாகும் கரங்கள்

நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் குரல்கள்

நிம்மதி தேடிடும் மனங்கள்

என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு

எழில் கண்டு வணங்கு இன்பம் அள்ளிப் பருகு


என் தெய்வமே இயேசு தெய்வமே

உன் பாதமே மலர் சூடுவேன் - 2

1. என் இறையே என் எழிலே வா - உன்

சொந்தமாக என்னைத் தேற்ற வா

பூவிளையும் தேனமுதே வா

உன் புன்னகையால் என்னைத் தேற்ற வா

என் உயிரே என் உளமே வா

உன் உயிரில் கலந்திடுவேன் நான்

2. உலகமெல்லாம் ஒளிபெறவே வா - என்

உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ள வா - 2

தென்றலிலே மகிழ்ந்து தவழ்ந்து வா

உன் தேனிசையால் என்னை ஈர்க்க வா

தென்பொதிகை சந்தனமே வா தேன்மதுர தீந்தமிழே வா


என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே

உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2

இறைவா இறைவா வருவாய் இங்கே

இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2

1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்

நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்

பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்

உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்

இறைவார்த்தையில் நிறைவாகுவேன்

மறைவாழ்விலே நிலையாகுவேன்

வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே இறைவா...

2. உன்னோடு நான் காணும் உறவானது

உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்

பலியான உனை நானும் தினம் ஏற்கையில்

எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்

உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்

உன் தேடலால் எனில் ஆற்றல்கள்

வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமேஇறைவா...


என் தேவன் என்னில் வந்தார் என் வாழ்வில் துணையாய் நின்றார்

அன்பின் பாதையில் அவர் நாளுமே

எனை ஆட்கொள்வார் இனிதாகவே என் ஜீவிய காலம் மட்டும்

1. இத்தனை காலம் என்னிறை தேவன்

எத்துணை நன்மைகள் என்னிடம் கண்டார்

நித்தமும் என்னிலே நெஞ்சமும் பாடாதோ

கர்த்தரின் நாமம் நித்தமும் வாழும்

இத்தரை மீது சத்தியமாக

நித்திய வாழ்வினை நெஞ்சம் தேடாதோ

இனி நாளுமே இறை பாதையில் - 2 இனிதான பயணங்களே

2. என்னிறை தேவன் தன் நினைவாக

தன்னையே தந்து என்னையே மீட்டார்

உன்னதமாகவே என்னகமே வந்தார்

கண்ணியமாகவே என்னையே நாளும்

மண்ணகம் மீதே காத்திடும் போதே

விண்ணகம் வாழ்வது எண்ணியே மகிழ்கின்றேன் இனி...


என் தேவனே என் இறைவனே என் இனிய நேசனே

என் அன்பனே என் நண்பனே இதயம் வாருமே

வா வா விரைந்து வா என்னில் வா எழுந்து வா - 2

1. தண்ணீர் கண்ட மானைப் போல் தாவி நானும் வருகின்றேன் - 2

ஆன்மதாகம் தீரவே அள்ளிப் பருக விழைகின்றேன் வா...

2. வருக தேவா வருகவே வாழ்வை எமக்குத் தருகவே - 2

உன்னில் என்றும் வாழவே உமது அருளைப் பொழியவே வா...


என் தேவா வா எழுந்து வா

உன்னில் இன்பம் நான் என்றும் காண என் தேவா எழுந்து வா

1. நாடினேன் உன்னுள்ளம் காணவே

விரும்பினேன் உன்னோடு வாழவே - 2

மலரைப் போல வாசமாய் ஒளியைப் போல உள்ளமாய் - 2

நான் வாழ என்னில் வா உன்னில் நான் மகிழ வா

2. அப்பத்திலே உணவாய் வருகின்றாய்

இரசத்திலே இரத்தமாய் வருகின்றாய் - 2

கருணை உள்ளம் கொண்டவனே

அருளும் ஒளியும் தந்திடுவாய் நான்...


என் ஜீவநாயகா எனையாளும் என் மன்னவா

உன் நாமம் நான் பாடவா உன்னோடு ஒன்றாகவா

நிதம் பாடும் ஜீவன் உன்னையே

1. என்றும் உன் நினைவில் உன்னுறவில்

உலகமெல்லாம் உன் சிறகில்

உயிர்வாழ நான் காண்கின்றேன்

மண்ணில் வாழுகின்ற காலமெல்லாம்

வந்து விடும் வசந்தங்களும் உன்னன்பில் நான் வாழவே

உந்தன் அன்பு ஒன்றே போதுமே எந்தன் துன்பம் தூரப் போகுமே

என்றும் வாழும் தேவனே என்னை ஆளும் நாதனே

நிதம் பாடும் ஜீவன் உன்னையே

2. தேவன் நீ எழுதும் கவிதைகளே

நின் அன்பில் சங்கமமே எனைத் தேடும் நெஞ்சங்களே

எங்கும் உன்முகம் தான் காணுகின்றேன்

உன் உறவில் வாழுகின்றேன் உயிரோடு உயிராகவே

என்னில் வாழும் ஜீவநாதனே என்றும் வாழும் தேவநாமமே

தேடும் அன்பு தெய்வமே நாடும் யாவும் உம்மையே

நிதம் பாடும் ஜீவன் உன்னையே


என் ஜீவன் தேடும் தெய்வம் என் நெஞ்சில் வரும் நேரம்

என் உள்ளம் எங்கும் பூப்பூக்குதே

புது சந்தோஷங்கள் எனில் தோன்றுதே - 2

வாரும் தேவா வாரும் புதுவாழ்வு என்னில் தாரும்

உன் ஆசீர் பொங்க நான் வாழுவேன் - 2

1. எனைத் தேற்றும் உன் வார்த்தை உயிரானது - நான்

உனக்காக உயிர் வாழ உரமாகுது - 2

எனையாளும் நினைவெல்லாம் நீயல்லவா - 2 - நிதம்

துணையாகும் என் வாழ்வின் வரமல்லவா - 2

2. எனைத் தாங்கும் உன் அன்பு மாறாதது - அது

என் வாழ்வின் செல்வத்துள் மேலானது - 2

என் சொந்தம் இனி என்றும் நீயல்லவா - 2 - நிதம்

என் வாழ்வின் பொருள் தேடும் உறவல்லவா - 2


என் ஜீவன் பாடுது உன் வரவை நாடுது

அன்பே அருட் செல்வமே

1. காலம் கடந்தாலும் கோலம் அழிந்தாலும்

உன் வாக்கு மாறாது இறைவா - 2

புதுமை பிறந்தது பாவம் அழிந்தது

புனிதம் சேர்ந்திட வா - 2

2. இராகம் ஓய்ந்தாலும் தாளம் மாய்ந்தாலும்

என் பாடல் மாறாது இறைவா

நாளும் மலர்ந்தது தீபம் எரிந்தது

வாழ்வை வளமாக்க வா


என்னில் எழும் தேவன் என் இதயம் வந்தாரே - 2

எண்ணில்லாத பேரன்பில் மனம் பொங்கி நிரம்பிடுதே

1. மலரைப் போல் எந்தன் மனதினை

தினம் திறந்து காத்திருந்தேன் - 2

காலைப் பொழுதாக எழும் கதிரே எனக்காக - 2

எழுந்து மலர்ந்து இதயம் திறந்து

வல்ல தேவன் என்னில் எழுந்தார்

2. நிலவைப் போல் எந்தன் மனதினில்

நீர் ஒளிரக் காத்திருந்தேன் - 2

மாலைப் பொழுதாக எழும் மதியே எனக்காக - 2

இதயமதிலே உதயமாவாய் புதிய வாழ்வினையே தருவாய்


என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் எழுந்து வருகின்றார்

எண்ணில்லா அருளை அன்புடனே

தலைவன் தருகின்றார் - என் - 2

1. உதயம் காண விழையுமோர் மலரைப் போலவே

இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே - 2

பகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததே - 2

அந்த முகிலும் இருளும் குறையும் தீர முழுமை தோன்றுமே

2. என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே

என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன் - 2

என்று பகர்ந்த இறைவா என்னை அணைக்க வாருமே - 2 - உந்தன்

அன்பு விருந்தை நாளும் அருந்தி அமைதி காணுவேன்


என்னிறை தேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்

தன்னிறை அன்பால் தான் கண்ட ஜீவனாம் பரமனின் பாதம் - 2

எந்நாதமே என்னிதயம் பண்ணாகுமே

எந்நாளுமே அவரன்பு என் மீதிலே - 2

1. என் ஆயனே உன் பாதையில் எந்நாளும் நான் பாடும் சங்கீதமே

உன்னோடு நான் ஒன்றாகிட உயிரோடு உயிர் சேர்ந்து உறவாகிட

நெஞ்சமும் பாடுது கண்களும் தேடுது

தஞ்சமென்றவரையே என்னுள்ளம் நாடுது - 2

2. உறவானவா என் உயிரானவா

உலகெங்கம் அரசாளும் என் மன்னவா

நிலையானவா என் கலையானவா

அலைபாடும் கடலாக எனைக் காக்க வா

என்னன்பு தேவனே என்னகம் வாருமே

என்னிலே எழுந்து நீர் என் நிலை மாற்றுமே - 2


என்னை சுமப்பதனால் இறைவா

உந்தன் சிறகுகள் உடைவதில்லை

என்னை நேசிப்பதால் இறைவா

உந்தன் அன்பு குறைவதில்லை

இயேசுவே என் சொந்தமே இயேசுவே என் பந்தமே

எந்நாளும் எனைக் காக்கும் என் தெய்வமே

1. அன்பு ஒன்றால் உலகை ஆள

உண்மை வழியைக் காட்டினாய்

பகைமை நீக்கி பாசம் ஓங்க நேசதீபம் ஏற்றினாய்

உன் சிறகின் நிழலில் பயணம் தொடர்வேன்

பாதுகாப்பாய் இறைவா என்னைப் - 2

2. நீதி வழியில் நிறைவினைக் காண

நீயும் உலகில் தோன்றினாய்

சேயை நேசிக்கும் தாயைப் போல

தயவாய் என்னைக் காக்கின்றாய்

உன் அமைதியின் வழியில் அனைத்துமாய் ஆனேன்

ஆண்டு நடத்தும் இறைவா என்னை - 2


எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே

நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தாமே என் எல்லையே

1. என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே

உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே

என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே

என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே

தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2

உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே

2. பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே

வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே

சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே

நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே தேவா...


எனையாளும் அன்பே என் இறைவா

நீ வரும் நேரம் நான் மலர்ந்தேன்

உன்னருளின் உன்னதத்தில் உள்ளமெல்லாம் நிறைந்து நின்றேன்

இனி நான் மறைந்து போய்விடுவேன்

வருகிறான் இறைவன் அன்பைத் தருகிறான் தலைவன்

1. சொல்லாத நேசங்களை உன்

தியாகத்தில் சொல்லித் தந்தாய் - நீ

இல்லாத குறை நீங்கவே உணவாக உடலைத் தந்தாய்

கல்லாகிப் போனேனே கருணாளனே - 2

உனது கரத்தின் சிற்பங்களாக என்னை மாற்றுவாய் வருகிறான்...

2. எழுந்து நான் செல்லுவேன் - என்

தந்தையின் இல்லம் நோக்கி - வெகு

தூரம் விலகிச் சென்றேன் உந்தன் அன்பை மறந்து நின்றேன்

காலம் கடந்து வந்தேன் கருணாளனே - 2

பாசம் கொண்டு என்னை ஏற்று

பகிர்வு கொண்டாடச் செய்வாய் வருகிறான்...


எனையாளும் இறைவா என் நெஞ்சம் வா வா உனை நம்புகிறேன்

உன்னோடு நான் கொண்ட உறவினிலே வாழ

உனைத் தேடுகிறேன்

இறைவா வருவாய் இதயம் தருவாய் - 2

1. உள்ளத்தின் இறைவா உமதருள் வார்த்தை

உருக்கிடுமே பாவக்கறை தனையே - 2

உதிர்த்திடுமே உள்ளக் கவலைகளை - 2

அன்பால் உயர்த்திடுமே இந்த உலகந்தனை - 2

2. பார் போற்றும் பண்பாம் உன் எளிய வாழ்வு

படைத்திடுமே பாச உலகந்தனை - 2

பகிர்ந்திடுமே அன்பு வாழ்வுதனை - 2

பாசத்தால் உயர்த்திடுமே இந்த உலகந்தனை - 2


ஏழிசை நாதனே எழுவாய் - இறை

அருளை என்னில் நீ பொழிவாய் - பல

வரங்கள் தந்து என்னைக் காப்பாய்

வழிகாட்ட எழுந்து வருவாய் - 2

1. வாழ்வும் வழியும் நீ எனக்கு

வளங்கள் சேர்க்கும் அரும் மருந்து - 2

உறவை வளர்க்கும் விருந்து - 2

என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது

பாடுவேன் பாடுவேன் பல சிந்து

பாரினில் வாழுவேன் உனில் இணைந்து - 2

2. விழியும் ஒளியும் நீ எனக்கு

விடியல் காட்டும் ஒளிவிளக்கு - 2

மனிதம் வாழும் தெய்வம் - 2

என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம் - பாடுவேன்....


ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே - என்

பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே - 2

அலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்

வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே

1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே - நீர்

குடியிருக்கும் கோவிலாகத் திகழவில்லையோ - 2

பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே

தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ

2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன் - உம்

மலர்பதத்தைக் கழுவித் துடைக்கக் கண்ணீர் வடிக்கின்றேன் - 2

சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே

உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்


ஏழைமனம் அழைக்கின்றது இயேசு நீ வரவேண்டும்

நான் கலங்கும் வேளையிலும் நீ துணையாக வேண்டும்

இயேசுவே உன் கரம் தாங்க வேண்டும்

1. உன் வழி தொடரும் என் கால்கள்

உறுதியாய் நடந்திட ஒளி தாராய்

உணர்வினில் கலந்திடுவாய்

மனமென்னும் கோவிலில் எரிந்திடும்

தீபங்கள் இயேசுவே நீயாவாய்

நீ என்னில் எழுந்திடும் நேரமிது

நான் எனை மறந்திடும் காலமிது

2. நீயின்றி எனக்கோர் உறுதியில்லை - உன்

துணையின்றி எனக்கோர் கதியில்லை

உயிராய் எழுந்திடுவாய் அன்பிலும்

நட்பிலும் நான் தினம் வளர

அகமதில் நிறைந்திடுவாய்

அமைதியின் பாதையில் நடந்திடவே

அடைக்கலமாகும் ஆண்டவரே


ஒளியாம் இறையே வாராய்

எளியோர் நெஞ்சம் தனிலே

ஒளியாம் இறையே வாராய் - 2

1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் - 2

உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா

ஒளியே எழிலே வருக - 2

2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் - 2

உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால் ஒளியே...

3. அருளே பொங்கும் அமலா இருளே போக்க வா வா - 2

குறையே நீக்கும் விமலா நிறையே வளர்க்க வா வா ஒளியே...


ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே

ஒன்றானவா உறவானவா நின்மலர் பதத்திலே

எனை மறந்து உனையறிந்து எழிலடைந்திட பாடுகின்றேன்

1. உனக்காக என் ஜீவன் உயிர் வாழுது

உலகெல்லாம் உனைக் காண துடிக்கின்றது - 2

உன் பார்வை நிதம் காண மனம் ஏங்குது - 2

நாளும் பொழுதும் நீ எனில் வளர

நானிலம் எங்கும் நின் மணம் கமழ

உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட

எனை மறந்து பாடுகின்றேன்

2. உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது

உறவில் உன் உறவே சுகமானது - 2

உன் நெஞ்சம் எனக்கென்றும் மடியானது - 2

நீயே தானே நினைவினில் மலர

நின் உயிர் தானே எனில் என்றும் வளர உயிர்...


ஒளியெல்லாம் நீயல்லோ இயேசய்யா

வழியெல்லாம் நீயல்லோ இயேசய்யா - 2

தாவீதின் குமரா என் இயேசுநாதா - 4

1. நீ செல்லும் இடமெல்லாம் நான் உன்னைத் தொடர்ந்தேன்

நீ சொல்லும் வார்த்தைகளால் நான் உன்னை அடைந்தேன் தாவீதின்...

உன் பின்னே வருவோர்க்கு நல்லாசி தருவாய்

உன் பாதம் அடைவோர்க்கு நல்வாழ்வு தருவாய் தாவீதின்...

2. என்னிடம் வாருங்கள் என்று நீர் மொழிந்தீரே

உன்னிடம் ஓடி வந்தேன் என்னை நீர் காப்பீரே தாவீதின்...

இவ்வாழ்வின் இறுதியில் உம்மோடு இணைந்திட

நான் உந்தன் சொல்கேட்டு நல்வாழ்வு வாழ்வேன் தாவீதின்...


ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்

இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் - 2

முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர

மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர - 2

1. இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம்

பின்பு பிரிந்து திரிந்த காலம் - 2

இனியொரு தரம் இறைவனின் கரம்

விலகிடின் என்ன சுகம் சொல் மனமே - 2

2. உலக வாழ்வில் உறவும் பிரிவும் விலக்கு இல்லா நியதி

அதை மறுப்போர் இல்லை உறுதி - 2

தினம் அவர் தரும் உறவினில் வரும்

சுகமோ என்ன சுகம் என் மனமே - 2


ஓடோடி எங்கோ சென்றேன் நாடோடி வாழ்வைக் கண்டேன்

நான் தேடும் அமைதி உன் உள்ள நியதி

நீயின்றி நானில்லை என் இறைவா

1. பணமென்றும் பொருளென்றும் பல பாதை சென்றாலும்

நான் தேடும் அமைதியில்லை - 2

பேரென்றும் புகழென்றும் என் வாழ்வில் கண்டாலும்

பெருந்துன்பம் விலகாது அமைதியில்லை - 3

2. அறிவோடு நிறைந்தாலும் அறியாமல் வாழ்ந்தாலும்

குறை என்றும் வாழ்வில் உண்டு - 2

குறை போக்கி வாழ்வினையே நிறைவாகச் செய்தாலே

நீ என்னில் வந்திடுவாய் அமைதியுண்டு - 3

3. வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் வாழ்வு சிறப்பாகும்

என் எண்ணம் உயர்ந்திருந்தால் - 2

நான் வாழும் வாழ்வினிலே நிலையாக உனைப்பற்றி

வாழ்ந்தாலே நலமாகும் அமைதியுண்டு - 3


கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்

புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை

நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நான் இருப்பேன் - 2

அஞ்சாதே கலங்காதே - 2

1. தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்

பொன் விளைநிலம் போலே

பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை

உயர்ந்தது அவராலே - 2

பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடி மேலே

மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார்

வாழ்வினில் ஒளிதானே அஞ்சாதே......

2. பாலையில் பாதையும் பாழ்வெளி ஓடையும்

தோன்றிடும் அவர் கையால்

வான்படை ஆண்டவர் வாய்மொழியால் வரும்

மேன்மையை எவர் சொல்வார் - 2

பார்வை இழந்தவர் வாய் திறவாதோர் யாவரும் நலமடைவார்

இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும் அஞ்சாதே...


கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும்

அகிலமும் படைத்த என் தலைவா எனை நோக்கி வருவதேன் - 2

1. குருவிகள் பறந்திடும் நேரத்திலே ஏணி தேவையில்லை - 2

நீரில் மீனினம் நீந்திடவே படகு தேடி செல்வதில்லை - 2

ஞாலம் தாங்கும் எந்தன் இறைவா என்னை நாடுவதேன் - 2

2. காத்திடும் இமைகள் அருகிருந்தும் விழிகள் காண்பதில்லை - 2

நெஞ்சில் உன்னொளி நிறைந்திருந்தும்

உள்ளம் ஏனோ உணர்வதில்லை - 2

தவறிச் செல்லும் ஆடு நானே என்னைத் தேடுவதேன் - 2


கண்டு கொண்டேன் எந்தன் வாழ்வில் நான்

கண்டு கொண்டேன் நான் கண்டு கொண்டேன்

கண்டு கொண்டேன் நான் கண்டு கொண்டேன்

கண்டு கொண்டேன் எந்தன் வாழ்வில இயேசு தெய்வத்தை - 2

காலமெல்லாம் மகிழ்ந்திருப்பேன் - 2

கடவுளின் நெறியினில் நடைபயில்வேன் - 2 நான் - 2

1. உலக வாழ்வில் உயர்வு தாழ்வு ஒழிந்திடச் செய்தால்

குடும்பப் பாசம் நெஞ்சில் பொங்கி குவலயம் வழிந்தால் - 2

தெய்வதரிசனம் ஏற்றிடுவாய் தூய வாழ்வினை போற்றிடுவாய் - 2

வாழ்வினில் சாதனை ஆற்றிடுவாய் நீ - 2

2. வளம் அடைந்தோர் பிறரும் மகிழ பகிர்ந்திடச் செய்தால்

வாழ்வில் யாவும் வெறுமை என்போர்

நம்பிக்கை கொண்டால் - 2 தெய்வதரிசனம்...


கருணையின் உருவே இறைவா கரையிலா அருள்நிறை தலைவா

கனிமொழி பேசிடும் முதல்வா

எம் கனவுகள் மெய்ப்பட வருவாய் - 2

1. பகைமையும் வெறுப்பும் அழிந்திடணும்

பகிர்வதில் மனங்கள் மகிழ்ந்திடணும்

நீதியும் நேர்மையும் நிலைத்திடணும்

நிம்மதி வாழ்வில் நிறைந்திடணும்

இதயங்களில் இரக்கம் வேண்டும் இன்னல்களில் உதவ வேண்டும்

உறவுகளில் உண்மை வேண்டும் வேற்றுமைகள் மறையணும்

இந்த உலகில் உந்தன் ஆட்சி உருவானால் பேரின்பம் - 2

2. வறுமையும் பிணிகளும் ஒழிந்திடணும்

வளமையும் வாழ்வும் பெருகிடணும்

தீமையின் வேர்கள் அழிந்திடணும்

நன்மையின் பாதைகள் தெரிந்திடணும்

போர்களில்லா பூமி வேண்டும் புவியினிலே அமைதி வேண்டும்

ஆயுதங்கள் அழிய வேண்டும் அன்புலகம் மலரணும் இந்த.....


கருணை தேவனே கனிவாய் என்னில் வா

வானின் அமுதமே வாழ்வில் கலந்து வா

உந்தன் விருந்திலே உள்ளம் மகிழுதே உணவாய் எழுந்து வா

1. அன்பே உன் வரவின்றி அருளே உன் துணையின்றி

இருளில் நான் தள்ளாடுவேன்

உயிரே உன் உறவின்றி உலகில் உன் நிழலின்றி

துயரில் நான் கண் மூடுவேன் - 2

உயிரூட்டும் உணவாக வா வழிகாட்டும் விளக்காக வா - 2

ஆன்மாவின் ஆனந்தமே ஆறாகும் பேரின்பமே

2. ஊர் தூங்கும் வேளை ஒளி தூவும் நிலவாய்

என் வாழ்வில் ஒளியாகினாய்

வழி பார்த்து கண்கள் நீர் கோர்த்து நிற்க

என் பாதை வழியாகினாய் - 2

என் தேவன் நீயில்லையேல் என்னுள்ளம் தடுமாறுமே - 2

உன் பாதை நானில்லையேல் என் வாழ்வு வீணாகுமே


கருணையின் நிறைவே அருள் வள உறைவே

திரு விருந்தினிலே உவந்து வந்தாய்

நின் திருவுடலை உணவாய் அளித்தாய்

உந்தன் உறவைத் தரலானாய் - 2

1. அடிமைத்தளையை அகற்றும் விருந்தாய்

ஆவலைத் தணிக்கும் அமுதாய் மாறி

அகத்தொளி வீசிடும் அகலாய்த் திகழ்ந்திடும்

ஆசீர் சுனையே அகம் வருவாய்

2. பழைய புதிய முறைகள் இணையும்

பாலமே புதுமை விருந்தே வாழி

இறைமனு உன்னில் முறையாய் கலந்திட

தேவா கருணை வடிவெடுத்தாய்

3. ஒருமை விளைத்து மறுமை அளிக்கும்

தேவ நற்கருணை விருந்தே போற்றி

குழந்தையின் ஆலய அரங்கைத் தருகின்றேன்

வாழ்வே வருவாய் குடியிருப்பாய்


கல்மனம் கரைய கண்களும் பணிக்க

கைகளைக் குவித்தேன் இறைவா

என் மனம் வருவாய் இறைவா - 2

1. என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து

பொன்னகம் புனைவாய் இறைவா - 2 - அங்கு

வன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய

இன்னருள் தருவாய் இறைவா - 2

2. பாசத்தை வளர்த்துபாவத்தை விலக்க

பாதத்தைப் பிடித்தேன் இறைவா - 2 - துயர்

வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்

அமைந்திட பணிப்பாய் இறைவா - 2

3. நான் என்னும் அகந்தை நரகத்தை அழித்து

நல்லுலகமைப்போம் இறைவா - 2 - அங்கு

பூவென்னும் இதய பீடத்தில் எனையே

பலியாய் அளிப்பேன் இறைவா - 2


கவலைகள் இனி வேண்டாம் கடவுளை நம்பியிரு

தாழ்ந்து போகமாட்டாய் உயர்வு பெறச்செய்வார் - 3

1. பாம்புகள் மீது நடந்து செல்ல பறவை நாகத்தை மிதித்துப் போட - 2

வல்லமை பெறச் செய்வார் வெற்றியும் தந்திடுவார்

கலங்கியும் கவலை போக்கிடும் தேவன்

உன்னை மறப்பாரோ உன்னைக் காத்திடுவார்

2. செங்கடல் போலத் துன்பங்களும்

எரிக்கோ மதில் போல் தோல்விகளும் - 2

எதிர்கொண்டு வந்தாலும் தோல்விகள் உனக்கில்லை

பாலையில் மன்னா பொழிந்திட்ட தேவன்

பாரங்கள் போக்கிடுவார் சுமைகளைத் தாங்கிடுவார்


கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்

உயிர் வாழ எதை உண்பதோ

உடலுக்கெதை உடுப்பதென்றோ - 2

1. பறவைகளைப் பாருங்கள் - அவை

விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை

களஞ்சியம் சேர்ப்பதுமில்லை - 2

கடவுள் அதற்கும் உணவளிக்கின்றார் - 2

2. காட்டுச் செடியைப் பாருங்கள் - அவை

உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை

அழகிலே இணை ஏதுமில்லை - 2

கடவுள் அவற்றை உடுத்தி வருகின்றார் - 2

3. இறையரசின் நீதிதனை முதலில் தேடுவோம்

அதை முதன்மையாக்குவோம்

உலகினில் வாழ்ந்து காட்டுவோம் - 2

கடவுள் நம்மை காத்து வருகிறார் - 2


கள்ளமில்லா ஒரு வெள்ளி நிலா - என

உள்ளமெல்லாம் வரும் தௌளமுதா

தீராத பாசமே நறும் தேனான இயேசுவே

அன்பே பாரினில் நீயும் நானும்

ஒன்றாய் வாழ்வது வாழ்க்கையே வாரும் தேவா வாருமே

1. எங்கே நோக்கினும் தனிமையே - உனை

என் மனம் மறந்ததன் தீமையே - 2

கண்களும் நீரினில் ஆடுதே இறை கர்த்தருன் பூமுகம் தேடுதே

தேவ தேவா சிலுவைநாதா திரும்ப நாவினில் வாருமே - 2

தாகம் யாவும் தீருமே தூய வாழ்வைத் தாருமே

தாயும் நீயாய் சேயும் நானாய் வாழ வேண்டும் நாளுமே

2. எல்லாம் தேவனின் மகிமையே - அதை

எங்ஙனம் புகழ்வது ஏழையே - 2

என் மனம் நீ வரும் போதிலே - பெரும்

நிம்மதி ஆயிரம் வாழ்விலே

வாழ்வும் நீயே வழியும் நீயே உயிரும் நீ இனி தேவனே - 2

வாரும் நாவில் இயேசுவே நீயும் நானும் பேசவே

ஆயன் நீயாய் தோளில் நானாய் வாழ வேண்டும் நாளுமே


காக்கும் எந்தன் அன்பு தெய்வமே

காலம் தோறும் கரங்கள் தாங்கியே

எம்மைக் காத்திடுவாய்

1. துன்பதுயரம் என்ற போது துணையாய் வந்த தெய்வமே

உள்ளம் நொறுங்கி உடையும் வேளை

உன்னைத் தேடி ஓடி வந்தேன்

கருணை தெய்வமே கரங்கள் தாருமே

2. விடியல் நோக்கி நெருப்புத் தூணாய் பாலைநிலத்தில் நடத்தினாய்

கடலை அடையத் துடிக்கும் ஆறாய்

உந்தன் வழியாய் நடக்க வந்தேன்

உடனே வாருமே உதவி தாருமே


காணாமலே உன்னை கண்டுகொண்டேன்

கேளாமலே உந்தன் குரல்கேட்டேன்

தேடாமலே உன்னைதெரிந்துகொண்டேன்

தேடிவந்து என்னோடு ஒன்றான தெய்வமே

1. எம்மோடு குடிகொள்ளும் இம்மானுவேலா

உனைக் காணும் பேராவல் எனக்குண்டு நாளாய் - 2

எளியோரில் சிறியோரில் நான் உன்னைக் காணலாம்

ஏக்கத்தில் இடர்பாட்டில் உன் குரலைக் கேட்கலாம் - 2

2. மனம் மாற மனமின்றி இடம் மாறித் தேடலாம்

ஏன் அங்கு இல்லையென்று ஏமாந்துப் போகலாம் - 2

உன் வார்த்தை வழியில் மனம்மாறித் தேடினால்

தேடிவரும் தெய்வம் உன்னைத் தெளிவாகக் காணலாம் - 2


காலம் மலராதோ இறைவா கவலை மறையாதோ

கண்ணீரும் அழுகையெல்லாம் புரட்சிக் கனலாக வெடிக்காதோ

கனவெல்லாம் நனவாகுமோ - 2

1. எல்லார்க்கும் எல்லாம் என்று உலகில் எல்லாமே படைத்தாயே

இல்லாரே இல்லை என்ற நியதி இதமாக வகுத்தாயே - 2

விண்ணை முட்டும் எழில்மாளிகை மண்ணை முட்டும் சிறுகூரைகள் - 2

ஏன் இந்த பெரும் பேதங்கள் நீயே ஏற்காத வெறும் பேதங்கள்

2. சமத்துவம் மலரும் என்றே நீயும் உலகெங்கும் சொல்லிவைத்தாய்

அன்புகள் மலரும் என்றே அன்று சிலுவையில் தொங்கி நின்றாய் - 2

உரிமைகளோ சிறையானதே வறுமை ஒன்றே வளமானதே - 2

ஏன் இந்த நிலையானதோ உன் சொல்லாலே இனி மாறுமோ

3. பொய்கூறும் அரசியலும் நாளும் தடுமாறும் ஆட்சிகளும்

விலைபோகும் நீதிகளும் நம்மை உலையாக்கும் சேதிகளும் - 2

பகைவீதியில் கடும் ஆயுதம் புகை போன்றெழும் போரின் விஷம் - 2

எல்லாமே இனி மாறுமோ உன் சொல்லாலே அருளாகுமோ


கிறிஸ்துவின் அன்பினின்று நம்மைப் பிரிப்பவன் யார் - 2

1. வானத்தின் தலைமைத் தூதர்களோ

வல்லமை வலிமை மிக்கவரோ - 2

வானத்தில் உள்ள வேறெதுவோ

வாக்கினில் வந்த படைப்புக்களோ

2. வாட்டிடும் வயிற்றுப் பெரும்பசியோ

வாழ்வினை முடிக்கும் கொடும்வாளோ - 2

ஆட்டிடும் உலகின் இடர் பலவோ

அதிர்ச்சியை அளிக்கும் மரணங்களோ

3. வாழ்வினில் கண்டிடும் வேதனையோ

வறுமையில் வந்திடும் சோதனையோ - 2

தாழ்வினைத் தந்திடும் கலாபனையோ

தருக்கரின் அதிமிகு நெருக்கடியோ


கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது - இந்த

உணவையே உண்போம் ஓருடலாவோம்

ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் - 2

1. கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது - 2

அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது - 2

2. மனதிற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் - 2

மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் - 2

3. உறவுக்குப் பாலமிது நம் உரிமைக்குக் குரலுமிது - 2

உண்மையின் கோலமிது எந்த நன்மைக்கும் நன்மையிது - 2


குயில்களே ம்... இனிதாய் மகிந்தே பாடுங்கள்

இறைவனின் ம்... மகிமை அழகாய்க் கூறுங்கள்

அலைகளே தலைவனின் பெருமையைச் சொல்லுங்களே

கருணை கிருபை பொறுமை

1. கணமேனும் மறவாதவர் ஆ... தினம் துணையாக இருப்பாரவர் - 2

பகலாகிலும் இருள் பொழுதாகிலும்

கனிவாக நமைக் காக்கும் நாதன்

2. அணுவேனும் விலகாதவர் ஆ...

கண்ணின் இமையாகக் காப்பாரவர் - 2

நிலையானவர் ஒளிமயமானவர் சரியாக வழிகாட்டும் இயேசு


குழந்தையே எங்கள் செல்வமே எம்மில் வாருமே

நாளுமே எங்கள் ஜீவனில் கலந்தாட வாருமே - 2

இதயம் உமக்குத்தானே எந்தன் இறைவன் உமக்குத்தானே - 2

1. மழலை சொல்லி மனதின் சுமையை மறக்க வைத்தாயே

மாசு படிந்த மனிதர்எம்மை மன்னித்து அணைத்தாயே - 2

தேய்ந்த மனதை தேற்றியே தேவா வாருமே

நாடி வா எம்மைத் தேடி வா தேற்ற வாருமே

குழந்தை இயேசு தேவா லல்லாலலால...

2. அன்பு சொல்லி அமுத சிரிப்பில் ஆனந்தம் தந்தாயே

அலையும் மனதில் அமைதி தந்து அருளை அளித்தாயே - 2

வாடும் மனித உலகிலே வாழ்வைத் தாருமே நாடி வா...


குறையாத அன்பு கடல் போல வந்து

நிறைவாக என்னில் அலைமோதுதே - அந்த

அலைமீது இயேசு அசைந்தாடி வரவே

பலகோடி கீதம் உருவாகுதே - 2

1. கண்மூடி இரவில் நான் தூங்கும் போது

கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் - 2

உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி

மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ.... நான் - 2

2. அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்

தொடர்கின்ற இரவின் முடிவாகுமே - 2

மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்

துடைக்கின்ற இயேசு அரசாகுமே - 2

3. இருள் வந்து சூழ பயமேவும் காலை

அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் - 2

தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை

சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ... நான் - 2


சமபந்தி விருந்தின் சங்கமமே - இது

இறைமகன் இயேசுவின் திருவுள்ளமே - 2

இதை எந்தன் நினைவாய் செய்யுங்கள் என்ற

இறைவாக்கு நிறைவேறும் பலிபீடமே - 2

1. அன்பின் சின்னம் சமபந்தி நட்பின் இலக்கணம் சமபந்தி

உறவின் பாலம் சமபந்தி இந்த உன்னத வாழ்வே சமபந்தி

ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய்

நம்மை இணைத்திடும் சமபந்தி - இந்த

உன்னத வாழ்வே சமபந்தி

2. மன்னிப்பு தந்திடும் சமபந்தி மாண்பினைப் போற்றிடும் சமபந்தி

பணிவிடை புரிந்திடும் சமபந்தி - நம்மில்

புனிதமாய் மலர்ந்திடும் சமபந்தி ஒரே...

3. தீமைகள் தகர்த்திடும் சமபந்தி நன்மைகள் வளர்த்திடும் சமபந்தி

மனிதத்தை காத்திடும் சமபந்தி - பெரு

மகிழ்வினை சேர்த்திடும் சமபந்தி ஒரே...

4. சாதியை அழித்திடும் சமபந்தி நீதியில் நிலைத்திடும் சமபந்தி

சமத்துவம் படைத்திடும் சமபந்தி - புது

சமுதாயம் அமைத்திடும் சமபந்தி ஒரே...


சிலுவையில் இயேசுவை இணைத்ததெல்லாம் - அவர்

அன்பே தவிர ஆணியில்லை

சாவை வென்றவர் உயிர்த்ததுவும் - அன்பின்

சக்தியைத் தவிர ஏதுமில்லை

சக மனிதனை அன்பு செய்தால் - இங்கே

சகலமும் சரியாகும் தோழா - 2 தோழா என் அன்புத் தோழா

1. தரணியில் இயேசுவாய் பிறந்ததெல்லாம் - நம்மைத்

தாங்கும் இறைவனின் அன்பேதான்

இறப்பிலும் கூட இறைமகனும் - நமக்கு

உரைத்து அன்பின் மகத்துவம்தான்

அன்பே இறைவன் என்றறிந்தால் - நம்

அகமே ஆலயம் எனத் தெளிவோம்

ஒருவரை ஒருவர் அன்பு செய்து - அங்கே

ஒன்றாய் தினமும் வழிபடுவோம் சக மனிதனை.....

2. மனதிற்கு தேவை உடன் வாழும் - பிற

மனிதரின் அன்பே எனப் புரிந்தால்

என் தேவை என் ஆசை என்றெண்ணியே - இங்கு

எந்நாளும் அலையாத மனம் வாய்த்திடும் அன்பே.......


சுடர் விடும் அன்பே வருக சுவை தரும் கனியே வருக

சுடரொளி விளக்கே பவித்திர அழகே வருக வருக வருக

1. கற்பனை கடந்த ஜோதியே வருக

கருணையே உருவாம் விளக்கே வருக

அற்புதக் கோல ஆதியே வருக

அருமறை வேத ஆண்டவா வருக வருக...

2. அருளொளி விளக்கை ஆணவம் எனுமோர்

இருளற என்னுள் ஏற்றிட வருக

துன்புறு தத்துவத் துரிசெல்லாம் நீக்கி

இன்புற நான் இனி வாழ்ந்திட வருக வருக...

3. ஒளியில்லையானால் மலர் விரிவில்லை

ஒளியில்லையானால் உடல் வாழ்வு இல்லை

நீயில்லையானால் மனமகிழ்வில்லை

நீயில்லையானால் உயிர் வாழ்வு இல்லை வருக வருக...


சுமை சுமந்து சோர்ந்திருப்போரே

வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்

இளைப்பாற்றி கொடுக்கின்றார் ஆ...

1. இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் - 2

இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்

2. வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் - 2

வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன்

3. துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் - 2

அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்

4. வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே

வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன்


செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி நான் பாடிடுவேன் இறைவா

என் சிந்தனையில் நீ இருந்து வாழ

எழுந்தருள்வாய் தலைவா என்னில் - 2

1. பாலையில் மன்னா வழங்கி நின்றாய்

பலியினில் உன்னை வழங்குகின்றாய் - 2

காலையில் உணவின்றித் தவிக்கின்றேன் - 2

கனியமுதாய் என்னில் எழுந்தருள்வாய - 2

2. உன்னுடல் உயிர்த்ததுன் வல்லமையால்

உலகினர் உயிர்ப்பதுன் வல்லமையால் - 2

என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே - 2

இறைமகனே என்னில் எழுந்தருள்வாய் - 2

3. உன்னுயிர் தியாகம் புரிவதனால்

மண்ணுயிர் தினமும் மகிழ்கின்றது - 2

என்னுயிர் மெழுகாய் கரைவதனால் - 2

என்னுயிர் காத்திட எழுந்தருள்வாய - 2


செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்

அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க - 2

1. இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன

உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன - 2

உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் - 2

உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய்

2. வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே

வளமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே - 2

எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே - 2

உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே

3. உலகம் எல்லாம் இணைவது உன் உள்ளம் ஒன்றிலே

இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே - 2

மனித உள்ளம் மகிழ்வது உன் புனித உறவிலே - 2

மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே


சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்

சுமைகள் சுமந்து சோர்ந்த வாழ்வில் அமைதியைத் தாரும்

உணவாய் வந்த தெய்வமே என் உணர்வில் கலந்திடு

உறவில் நானும் வளர்ந்திட உன் அருளைப் பொழிந்திடு

1. ஓடைநீரை நாடிவரும் மானின் நிலையினில்

உயிரின் தாகம் தீர்க்கும் உந்தன் அன்பை எண்ணியே - நான்

ஏங்கினேன் என் இதயம் திறந்தேன் இனிமை சேர்த்திட வா

இயேசுவே உம் பாதம் தொடர்ந்திடவே ஆற்றலே அளித்திட வா

துணையென நீ வருகையில் தயக்கமில்லையே

துயிலும் போதும் நடக்கும் போதும் கலக்கமில்லையே

2. அமைதி உன்னில் காணும்போது வசந்தம் மலருதே

அன்பில் இணைந்து வாழும்போது நிறைவு நெஞ்சிலே - நான்

தேடினேன் உன் வரவில் மகிழ்ந்தேன் வருந்தும் மனங்களெல்லாம்

இயேசுவே உன் மார்பில் சாய்ந்திடவே

பேரருள் பொழிந்திட வா துணையென...


தஞ்சம் வந்தேன் இயேசுவே ஓ... கொஞ்சம் பாரும் தேவனே

என்னைப் பார்த்தால் போதுமே ஓ... இன்பம் வந்து பாயுமே

ஏங்குதே ஏங்குதே என் மனம் ஏங்குதே

தேடுதே தேடுதே இயேசு உன்னைத் தேடுதே - 2

1. பணம் வேண்டாம் நீயே போதும் மனம் ஒன்று தருவாயா

இனம் வேண்டாம் நீயே போதும் எனில் இன்று வருவாயா - 2

நான் வந்தேன் உன்னைக் கண்டேன்

என்னைத் தந்தேன் அணைப்பாயா - 2

தேகம் அழிந்தாலும் உன் ஸ்நேகம் அழியாது

தேகம் அழிந்தாலுமே உன் ஸ்நேகம் அழியாதய்யா

உன்னை நினைப்பேன் உயிர் கொடுப்பேன் ஒரு போதும் மறவேனே

2. புகழ் வேண்டாம் நீயே போதும் மனம் ஒன்று தருவாயா

சுகம் வேண்டாம் நீயே போதும் வரம் ஒன்று தருவாயா - 2

என் சொந்தம் என்றும் நீயே உன் சொந்தம் நானய்யா - 2

ஞாலம் மறைந்தாலும் உன் பாசம் மறையாது

ஞாலம் மறைந்தாலுமே உன் பாசம் மறையாதய்யா உன்னை...


தந்தையும் தாயும் மறந்திட்டாலும் மறந்திடாத தெய்வமே

நண்பரும் உறவும் பிரிந்திட்டாலும் பிரிந்திடாத இயேசுவே

உனது இரக்கம் இன்றியே உயிர்கள் வாழ்வது இல்லையே - 2

கண்ணின் மணியாய் சிறகின் நிழலில்

அணைத்துக் காக்கும் ஆயனே

1. காலை மலர்ந்து மாலைக்குள் வாடி மடியும் மலரைப் போல் - 2

எந்த உறவும் முடிந்திடும் உந்தன் உறவோ தொடர்ந்திடும் - 2

கடலும் தீரும் காற்றும் ஓயும் கைவிடாத பேரன்பே

2. பாலை நிலமும் பூத்திடும் பாறையும் நீர் சொரிந்திடும் - 2

உந்தன் கிருபை போதுமே எந்த நிலையும் மாறுமே - 2

கல்லும் கனியும் இறப்பும் உயிர்க்கும்

வியக்க வைக்கும் அருளன்பே


தரிசனம் தருவாய் என் இறைவா

தரிசனம் தருவாய் என் இறைவா - 2

1. நானே உலகின் ஒளியென மொழிந்து

இருளினை நீக்கி நல்வழி தந்தாய் - 2

உண்மையின் உருவே உன்னதத் திருவே - 2

ஒவ்வொரு நொடியும் உம் திரு நினைவே - 2

2. நானே உலகின் உயிரென உரைத்து

உன்னுயிர் தந்து என்னுயிர் மீட்டாய் - 2

அன்பின் வடிவே அருள் பரம்பொருளே - 2

பாரினில் உந்தன் புகழினை இசைத்து - 2


தன்னை வழங்கும் தலைவன் தந்த விருந்திது - இந்த

தரணி மாந்தர் வாழ நல்ல மருந்திது - 2

உள்ளங்களில் ஆட்சி செய்ய வந்தது - நாளும்

உண்மையின் சாட்சியாக அழைக்குது

1. அவல நிலையில் உள்ளோர்க்கு அமைதி தரும் - இது

உரிமை இழந்த மனிதருக்கு சக்தி தரும் - 2

அன்பு நீதி நேர்மையுள்ள ஆட்சியைத் தேடும் - 2 - நம்

உள்ளத்தில் உறைந்து உணர்வினில் கலந்திட

2. காலந்தோறும் கண்ணிமை போல் நம்மைக் காக்கும் - இது

கறைகள் நிறைந்த இதயத்தினைத் தேடிவரும் - 2

மனிதநேயம் மானிடரில் காண ஏங்கிடும - 2 - நம்

மனக்கவலைகளை மகிழ்ச்சியால் நிறைத்திட


தனிமையில் இனி நானில்லை தலைவன் இருக்கின்றார்

தரணி அழியும் காலம் வரையில்

அருகில் துணையிருப்பார் தேவன்

1. தேடிவைத்த செல்வம் யாவும் தேய்ந்து போய்விடுமே

நாடி வந்த சுகங்கள் எல்லாம் நலிவு கண்டிடுமே - 2

கூடி வந்த உறவும் கூட கலைந்து சென்றிடுமே

தேவன் நீ என்றும் அருகில் இருப்பாயே

தேடும் எனக்கு வாழ்வில் என்றும் துணை அருள்வாயே

2. இம்மை முழுதும் கொஞ்சும் அழகு என்னைப் புன்னகைக்கும்

தம்மைக் கருதா நண்பர் உறவு என்னைக் கரம் பிடிக்கும் - 2

நம்பும் நல்ல கொள்கை என்றும் நெஞ்சில் உரமளிக்கும் தேவன்...


தாய் என்னை மறந்தாலும் மறவாத தெய்வமே இயேசுவே - 3

நான் உன்னைப் பிரிந்தாலும் பிரியாத நண்பனே இயேசுவே - 3

உன்னைப் பாடப் பாட உள்ளம் கொள்ளை கொள்ளுதே

உன்னில் சேர சேர நெஞ்சம் ஏங்குதே - 2

1. துன்ப துயரங்கள் சூழ்ந்த போதிலும்

அச்சமில்லை அச்சமில்லையே

கொள்ளை நோய்களோ வந்த போதிலும்

அச்சமில்லை அச்சமில்லையே - 2

என்னோடு இருப்பதால் எனக்கு என்றும் பயமில்லை

உன் தோளில் சுமப்பதால் கலக்கமில்லையே

நான் உன்னை மறக்கலாம் நீ என்னை மறவாயோ - 2

2சொந்த பந்தங்கள் மறந்து போகலாம்

அச்சமில்லை அச்சமில்லையே

சுற்றம் சூழலும் பிரிந்து போகலாம்

அச்சமில்லை அச்சமில்லையே - 2 என்னோடு.....


தாய் போல எனைக் காக்கும் என் தெய்வமே - உன்

துணையின்றி என் வாழ்வு வீணாகுமே - 2

நீயில்லையேல் நானில்லையே - 2 - உன்

உறவில்லையேல் வாழ்வில்லையே

1. தாய் என்னை மறந்தாலும் நீ என்னைப் பிரியாமல்

உறவாலே என் வாழ்வை மகிழ்வாக்கினாய் ம்... ஆ... - 2

அன்பானவா அருளானவா - 2

துயர் நீக்கி துணையாக நீர் வாருமே - 2

2. உறவெல்லாம் வெறுத்தாலும் பரிதவித்து தவித்தாலும்

உன் கண்ணில் எனை வைத்து நீ காக்கின்றாய் ம்... ஆ... - 2

ஒளியானவா உயிரானவா - 2

உன் அன்பு நிலையாகும் வரம் வேண்டுமே - 2


தாயகம் முழுவதும் நாயகன் இயேசுவின் திருப்புகழ் பாடவந்தேன்

தேனினும் இனிய என் தேவனின் நாமத்தை

தினம் தினம் போற்ற வந்தேன்

எல்லா நாவும் முழங்கிடட்டும் இயேசு கிறிஸ்து ஆண்டவர் - 2

1. கடவுளின் தன்மையில் விளங்கிய இயேசு எனக்காய் மனுவானார்

அடிமையைப் போலவே தன்னையே தாழ்த்தி மனிதருக்கொப்பானார் - 2

தந்தையின் திருவுளம் யாவும் நிறைவேற்றி - 2

சிலுவையில் மரித்தார் என்னை மீட்டார் எல்லா...

2. இயேசுவின் திருப்பெயர் ஒருமுறை சொன்னால் இதயத்தில் அமைதிவரும்

விண்ணும் மண்ணும் கீழுலகும் அவர் திருமுன் மண்டியிடும் - 2

பாவங்கள் விலகும் நோய்களும் நீங்கும் - 2

சாத்தானின் படைகள் தூள் தூளாய் உடையும் எல்லா...


தாயான தெய்வமே என் துணையான செல்வமே

தேன்தமிழில் கவி புனைந்து தினமும் உன்னை வாழ்த்துவேன் - 2

1. பாடி உன்னைச் சரணடைந்தேன் பாசமழை பொழிந்தாய்

கோடி நலம் செய்தாய் என் குறைகளெல்லாம் தீர்த்தாய் - 2

கரை காணா உன் அன்பில் நான் வாழ்கிறேன்

கரம் கூப்பி உன் பாடல் நான் பாடுவேன் - 2

2. தஞ்சமென்று உன்னையே செந்தமிழில் பாடினேன்

பண்போடு வாழ்ந்திட நல்ல மனம் தந்தாய் - 2

உன் வழியில் உண்மையில் நாளும் நடந்திட

உலகெங்கும் நீ வாழ்ந்து சக்தியாகிறாய் - 2


தியாக தீபம் இயேசுவின் திருவுடல் இதுவே

தேடும் நெஞ்சம் தேற்ற வரும் திருவுணவிதுவே

அன்பு நெஞ்சம் கொண்டவரே உண்ண வாருங்கள் - 2

உணவை உண்டு தனை அளித்து தரணி மாற்றுங்கள்

1. கோதுமை மணியின் பலியினிலே - இந்த

வெண்மை அப்பம் பிறக்கின்றது

என்றும் ஏங்கிடும் மாந்தர் வாழ்ந்திட

தன்னைத் தியாகமாய் தருகின்றது - இதை

உண்ணும் யாவரும் தன்னை பிறர்க்கென

அளித்திடக் கேட்கின்றது - 2

நம்மையும் உணவென நாம் கொடுப்போம் - பிறர்

நலமுடன் வாழ்ந்திட உயிர் கொடுப்போம் - 2

2. விருந்தினில் கலந்திடும் பொழுதினிலே - நெஞ்சில்

பேத உணர்வுகள் மறைகின்றது

ஏழை அடிமைகள் உயர்வு தாழ்நிலை

என்ற பிரிவுகள் இறக்கின்றது - பிறர்

பணி செய்வதே தலைவன் பண்பென்ற

படிப்பினை தருகின்றது - 2

விருந்தினில் கலந்திடும் பொருள் உணர்வோம் - பிறர்

பணி செய்து வாழ்வதில் நிறைவடைவோம் - 2


தியாகதீபம் இயேசுவின் ப்ரசன்னம் - நம்மைத்

தேடிவந்த தெய்வ அன்பின் ப்ரசன்னம் - 2

மன்னிக்கின்ற மனதில் இயேசு ப்ரசன்னம் - 2

மனிதநேயம் தேடுவோரில் ப்ரசன்னம்

ப்ரசன்னம் ப்ரசன்னம் ப்ரசன்னம் ப்ரசன்னம்

1. கடலில் தவிப்போர் காணும் இயேசு ப்ரசன்னம்

கலங்கிப் புயலில் நிற்போர் காணும் ப்ரசன்னம் - 2

மயங்கும் மாலைப்பொழுதில் இயேசு ப்ரசன்னம்

மயக்கும் மன அமைதி தரும் ப்ரசன்னம் - 2

ஒளியே உயிரே உண்மையின் வடிவே

எம்மில் தருவாய் ப்ரசன்னம் - 2

கருணைக்கடலே கனிந்த அன்பே

எம்மில் தருவாய் ப்ரசன்னம் - 2

2. பாசம் உள்ள நெஞ்சில் இயேசு ப்ரசன்னம்

பகிர்ந்து வாழும் மனிதர் நடுவில் ப்ரசன்னம் - 2

பாவ வாழ்வை நீக்கும் இயேசு ப்ரசன்னம்

பகிர்வு கொண்ட பணியில் இயேசு ப்ரசன்னம் - 2 ஒளியே...


தியாகப் பலியினிலே இறைவன் எழுகின்றார்

பகிரும் உள்ளங்கள் நடுவிலே பரமன் வருகின்றார் - 2

வருகின்றார் வருகின்றார் அருளை நம்மில் பொழிகின்றார் - 2

1. உறவில் நாளும் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்

உண்மை வழியில் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார் - 2

கண்ணின் மணிபோல் என்னைக் காக்கும் பரமன் வருகின்றார் - 2

கனிவாய் உன்னை நாளும் தேற்றும் பரமன் வருகின்றார் - வரு...

2. அன்பில் என்றும் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்

அமைதி வழியில் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார் - 2

உடனிருந்து உயிரை வழங்கும் பரமன் வருகின்றார் - 2

தன்னை தந்து நம்மை மீட்கும் பரமன் வருகின்றார் - வரு...


தினம் ஒரு வரம் வேண்டும் தீர்க்கமாய் தினம் வேண்டும்

தீங்கில்லா உளம் வேண்டும்

தீர்ப்பிடாத மனம் வேண்டும் இயேசுவே - 2

கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே

1. கடுகளவு விசுவாசம் தேவையென்று ஓடிவந்தேன்

கரையாத கல்மனமும் கரைந்திடக் காத்திருந்தேன் - 2 - இனி

இறைவார்த்தை விதையாவேன் நிறைவாழ்வுப் பயிராவேன்

குறையில்லா நிறைவாழ்வு விரைவாக தினம் பெறவே கேட்கிறேன்...

2. பறவைகள் பகிர்வது போல் மரங்கள் கனி தருவது போல்

மேகம் மழை பொழிவது போல் நிலவு ஒளி தருவது போல் - 2

இனி இரக்கத்தால் இறைமகனாய் நீதியால் பண்பாளராய்

உண்மையாய் வாழ்ந்திடவே

உணர்ந்து உயிர் வாழ்ந்திடவே கேட்கிறேன்...


தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்

தேவன் வரவிலே ஜீவன் உருகிடுமே

இதைப் (உமைப்) பாடாத நாளில்லையே

இதைத் (உமைத்) தேடாமல் வாழ்வில்லையே

இறைவா இறைவா என் இதயம் இணைவாய் - 2

1. வாழ்வு வழங்கும் வல்ல தேவன் வரவு என்னிலே

வசந்தம் என்றும் வசந்தம் எந்தன் வாழ்வு தன்னிலே

வானதேவன் வார்த்தை இங்கும் வடிவம் ஆனதே

வானும் மண்ணும் அழிந்த பின்னும் வாழும் என்னிலே

ஒளியே ஒளியே உலகின் ஒளியே

உயிரே உயிரே உயிரின் உயிரே உமைப் பாடாத...

2. அன்பிற்காக ஏங்கும் எந்தன் ஆசை ஓய்ந்திடும்

அழிவில்லாத அன்பின் நேசம் அரவணைத்திடும்

நினைவில் ஆடும் நிழல்கள் யாவும் நிஜங்களாகிடும்

நீங்கிடாமல் நிறைவின் நேசம் நிதமும் தொடர்ந்திடும் ஒளியே...


தெய்வம் நமது தாயும் தந்தையாம்

வையம் நமது அன்னை இல்லமாம்

வாழும் நாமெல்லாம் ஒரே குடும்பமாம் - 2

ஆளுவோம் உலகையே அன்பின் சக்தியால்

தெய்வ அன்பின் சக்தியால்

1. அழகிய உலகினில் அருமையாய் நாமெல்லாம்

வாழும் நாளில் அன்பு வேதகீதம் இசைப்போம்

ஒருவரை ஒருவர் மதித்திங்கு வாழ்ந்து

ஒருமைப்பாடு நெறியில் நின்று பெருமை பாடுவோம்

உறவு ஒன்றுதான் உலகை இயக்குமே - அந்த

உண்மை உணர்ந்து நாம் உறவில் வளருவோம்

2. மத இன சாதியின் அடிமைகள் நாமில்லை

மாண்புநிறை நேயத்தாலே மனிதம் உயர்த்துவோம்

நீதியும் நேர்மையும் தூய்மையும் வாய்மையும்

வாழ்வுப் பயண வழித்துணையாய் நாளும் கொள்ளுவோம் உறவு...


தெய்வீக நண்பனே தெம்பூட்டும் அன்பனே

என் ஆன்ம உயிர் மூச்சு நீ

இயேசுவே வந்தென்னை வளமாக்குமே - 2

1. உன்னோடு கைகோர்த்து நடந்திடும்போது

என்னோடு உறைகின்ற அச்சம் விலகுமே - 2

உன் மார்பில் தலைசாய்த்து மகிழ்ந்திடும் போது

என் நெஞ்சின் பாரங்கள் எளிதாகுமே

உன் அன்புக்கருணையை நான் அள்ளிப் பருகிட

எனை வாட்டும் தாகங்கள் தீருமே - 2

2. எங்கெங்கும் உனைக்கண்டு மகிழ்ந்திட வேண்டும்

எல்லோரும் உறவென்று அறிந்திட வேண்டும் - 2

எல்லாமே எனக்கென்று தவித்திடும் நெஞ்சம்

எல்லோர்க்கும் நானென்று உணராதோ

உன் அன்புக் கருணையில் என் ஏக்கம் தீர்ந்திட

உனைப்போல என் நெஞ்சை மாற்றுமே - 2


தெய்வீக ராகம் தேன் சிந்தும் ராகம்

தேவா உன் நினைவாக உருவான ராகம் - 2

என் பாடல்தானே உன் கோயில் நாளும் - 2

அரங்கேறும் வேளை ஆனந்தமே

உயிரே வருக உறவைத் தருக

உயிரே உனக்காக உருவான பாடல்

உறவே உனக்காக நான் பாடும் பாடல் - 2

1. உன் நாமம் சொல்லாத நாவில்லையே

எந்நாளும் நினைக்காத நெஞ்சில்லையே - 2

உன் நாமம் தானே நெஞ்சாரப் பாட

சுகமான ராகம் நான் பாடும் பாடல் உயிரே...

2. உன்னாட்சி உயராத இடமில்லையே

உன்னாட்சி மலராத மனமில்லையே - 2

உன் அன்பைத் தானே நாள்தோறும் பாட

மேலான ராகம் நான் பாடும் பாடல் உயிரே...


தேடாத இடமில்லை இறைவா - உன்னைத்

தேடாத நாளில்லை இறைவா

காணாமல் அலைகின்றேன் இறைவா - உன்னைக்

காண்கின்ற இடமேது இறைவா

1. ஆலயத்தில் ஆண்டவனே உனைத் தேடினேன்

அமைதி தரும் சந்நிதியில் உறவாடினேன் - 2

அயலானில் உன்னைக் காண நீ கூறினாய - 2

அவன் அன்பொழுகும் உறவினிலே உனைக் காண்கிறேன் - 2

2. வாடுகின்ற மனிதனுக்கு வாழ்க்கை அளித்தேன்

வருந்துகின்ற நண்பனுக்கு ஆறுதல் தந்தேன் - 2

தேடுகின்ற அமைதிதனை வாழ்வினில் தந்தாய் - 2 என்

தேவா உன் சந்நிதியில் நான் வாழ்கிறேன் - 2

3. நான் என்ற சுயநலத்தில் வாழ்ந்த போதெல்லாம்

ஏன் இந்த வாழ்க்கையென தோல்வியைக் கண்டேன் - 2

தேன் போன்ற பிறர்நலத்தில் வாழ்ந்த போதெல்லாம் - 2

நான் தெவிட்டாத இன்பத்தையே வாழ்வினில் கண்டேன் - 2


தேடி வந்த தெய்வம் இயேசு - எனைத்

தேடி வந்த தெய்வம் இயேசு

வாடி நின்ற என்னையே வாழ வைத்திட

தேடி வந்த தெய்வம் இயேசு

1. பாவியாக இருந்த என் பாவம் போக்கினார்

நாளும் பொழுதும் என்னையே தாவி அணைத்திட்டார்

அன்பே அவர் பெயராம் அருளே அவரின் மொழியாம்

இருளே போக்கும் ஒளியாம் - 2

2. இயேசு என்னில் எழுந்திட்டார் என்ன ஆனந்தம்

இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ

இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும்

என்றும் உமை நாடும் - 2


தேடும் அன்பு தெய்வம் என்னைத் தேடி வந்த தெய்வம்

கோடி நன்மை கூடும் புவி வாழும் நிலைகள் மாறும் - 2

இந்த வானதேவன் தந்த வாழ்வுப்பாதை

எந்தன் வாழும் காலம் போதும் - 2

1. வார்த்தையாகி நின்ற இறைவன் - இந்த

வாழ்வைத் தேர்ந்த தலைவன் - 2

பாரில் எங்கும் புதுப்பார்வை தந்து - அந்தப்

பாதையில் அழைத்த அறிஞன் - 2

காலம் கடந்த கலைஞன் என் தலைவன் இந்த...

2. அடிமை அமைப்பு இங்கு ஒழிய - எங்கும்

மனித மாண்பு நிறைய - 2

புரட்சிக் குரல் கொடுத்து புதிய வழி வகுத்து

புதுமை செய்த பெரும் புனிதன் - 2

வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன் இந்த...


தேவன் திருமகனே அவர் பாதம் சரணடைந்தேன் - 2

மன்னன் சொன்ன வேதம் பக்தன் எந்தன் கீதம்

வாழும் வழி திறந்தேன்

1. அழகான நாதன் முன்னே அடியாரின் கால்கள் பின்னே

அவர் பாதம் தூய செந்தேன் மலராகித் தாங்க வந்தேன் - 2

பாரெல்லாம் இயேசுவின் ஊராகப் பார்ப்பேன்

சேராத ஆடெல்லாம் நான் தேடிச் சேர்ப்பேன்

மன்னன் எவ்வழி அவ்வழி சென்றினி வாழ்வேன் நாளுமே

2. எளியோர்க்கு தேவன் சொன்ன அருள்வாக்கைக் கூற வந்தேன்

சிறை வாடும் மாந்தர் மீண்டும் இறைவாழ்வில் சேர வந்தேன் - 2

வாழ்விலா சேய்களின் தாயாகிப் போவேன்

போராடும் ஏழையின் கூர்வாளும் ஆவேன்

விண்ணவன் மண்ணில் என்னுரு கொண்டிட வாழ்வேனே நாளுமே


தேவனே என்னை பாருமே உந்தன் வார்த்தை வழி நடத்தும்

நினைவே மனமே எந்தன் வாழ்வை மலரச் செய்யும் - 2

1. நம்பிக்கை ஒளியிலே உன்னை நாடி நான் தேடினேன் - 2

உந்தன் வார்த்தைகள் உந்தன் புதுமைகள் - 2

என்னைப் புனிதனாய் மாற்றிடுமோ

2. சிலுவையின் வடிவிலே என்னை மீட்கவே வந்தாயே - 2

உந்தன் பாடுகள் உந்தன் துயரங்கள் - 2

என்னைப் புனிதனாய் மாற்றிடுமோ


தேவா தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா தேவா தேவா

தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா

தேவா உந்தன் வான்புகழைப் பாட வரம் தா - 2

உன்னருள் மேன்மையால் பூமி எங்கும் புன்னகை

உன் புகழ் பாடவே பொங்கி வரும் வல்லமை - 2

மனமார வாழ்த்த எழும் இறையரசின் வைகறை

1. நான் எந்தன் வேலியாக எந்நலம் கொண்டேன் - நீ

பூமி எங்கும் வாழும் தென்றலாகிறாய் - 2

உன்னொளி காணக் காண உள்ளம் மலர வேண்டுமே

உன் வழி போகப் போக உறவும் பெருக வேண்டுமே - 2

இறையே திருவே வாழ்வு உந்தன் கீPதமாகவே

2. நான் சிறு கணம் எரியும் ஒளித்துகளானேன் - நீ

அதை ஏற்றி வைத்த ஒளிக் கடலானாய் - 2

உன் பணி செய்வதிலே எந்தன் ஆசை தீரவே

தன் தலை தியாகம் ஏற்கும் தீபவாழ்வைப் போலவே - 2 இறையே...


தேவாதி தேவன் ராஜாதி ராஜன் விருந்து அளிக்கின்றார்

மாறாத தேவன் மண்ணோரின் ராஜன் மகிழ்வாய் வருகின்றார்

வாரும் வாரும் அனைவரும் விருந்தில் கலந்து மகிழுவோம்

இறைவன் அளிக்கும் விருந்திது இனிதே உண்போம் அனைவரும்

1. உள்ளம் உவந்து அழைக்கின்றார் உண்மை இறைவன் அழைக்கின்றார் - 2

உலகம் மகிழ அழைக்கின்றார் புனிதரோடு அழைக்கின்றார்

2. தேவன் தன்னை அளிக்கின்றார் தேற்றும் உணவாய் தருகின்றார் - 2

தூய வாழ்வு வாழ்ந்திட தூயன் தன்னை அளிக்கின்றார்

3. இறைவன் தரும் நல் விருந்திது இன்பம் தரும் நல் விருந்திது - 2

மறையோர் போற்றும் உணவிது அன்பைப் பொழியும் அமுதிது


நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்குத் தா

அதில் அன்பை நிறைத்துத் தா

அனைவருக்கும் நான் அளிக்கத் தா

1. எனக்கெதிராய் பகைமை செய்வோரை

மன்னிக்கும் மனதைத் தா - 2 - அந்த

பகைமையைத் திரும்ப நினையாமல்

நான் மறக்கும் மனதைத் தா

2. உன்னால் அடைந்த நன்மை மறவாத

உள்ளம் ஒன்று தா - 2

எந்நாளும் உந்தன் நினைவால் வாழும்

உள்ளத்தை எனக்குத் தா


நற்கருணை ஆண்டவர் விருந்திது

நமக்குத் தரும் ஆன்ம உணவிது

இதனை நாம் உண்டிடுவோம் ஓருடலாய் வாழ்ந்திடுவோம்

இயேசுவோடு இணைந்திடுவோம் இயேசுவாக வாழ்ந்திடுவோம்

1. நற்கருணை ஆண்டவர் எழுந்து நம்மில் வருகின்றார் - அவர்

விருந்திலே நாமும் பங்கு கொள்வோம் - 2

தகுதியோடு நற்கருணை நாளும் நாமும் உண்டால்

இனி வாழ்வது நானல்ல இயேசு வாழ்கின்றார் - 2

2. நற்கருணை விருந்தில் நாமும் தினம் மகிழ்ந்திடுவோம் - 2

நாமெல்லாம் ஒன்றுகூடி பகிர்ந்து உண்போம் - 2

நல்லவராய் இயேசு நம்மில் எழுந்து இன்று வருகின்றார்

நலமோடு வாழ்வு வாழ அருளைப் பொழிகின்றார் - 2


நாளெல்லாம் நினைந்தேன் நலம்தரும் உணவே

வாழ்வுக்கு நீரே ஆதரவே - 2

1. வானிலிருந்து இறங்கிய விருந்தே

தான் என பகர்ந்தாய் தவறில்லா தலைவா

ஏன் எனக்கே இனி வீண் தயக்கம்

தெளிதேன் சுவை நீ என யான் அறிந்தேன்

2. உண்மையின் அரசே உணர்ந்திட்ட மொழியே

என்னுள்ளத்தினிலே எழுந்திடும் உறுதி

காரணமாம் விசுவாசமுமாம்

நிறைபேர் மகிழ்வாம் அருள் பூரணமாம்

3. பேரன்பினாலே வாழ்ந்திடும் வழியை

வேறெவர் தானோ நாட்டிடக் கூடும்

ஆருயிரே அளித்தாருயிரே

அதி ஜீவபலி எழ நண்பனே நீ

4. மானிடர் எமக்காய் மனுமகனாகி

ஊனுடல் குருதி உவந் தளித்தனையே

தேனினும் இனித்திடும் தௌளமுதே - கதி

நீயின்றி எனக்கொரு துணையுமுண்டோ

5. விண்ணக உணவே வினைதீர் மருந்தே

மண்ணக மாந்தரை வாழ்விக்கும் அமுதே

கண்ணலின் தெளிவினும் இனியவனே

எனக்குன்னிலும் இனியதோர் பொருளுண்டோ


நான் கண்ட தெய்வம் நீயல்லவா

என் உள்ளம் கவர்ந்ததும் உனையல்லவா

நான் பாடும் பாடல் உனக்கல்லவா

என் வாழ்வின் பொழுதெல்லாம் நீயாக வா

1. கனிவான இதயம் உனதல்லவா

இனிதாகப் பேசும் உன் மனமல்லவா - 2

இரக்கத்தைப் பொழிவதுன் குணமல்லவா

மறவாது ஈவதுன் கரமல்லவா

2. பாவத்தால் பலதூரம் சென்றாலும் - உன்

பாசத்தால் பாவியை வென்றாயே நீ - 2

பரிசுத்த உமது திரு இரத்தத்தால்

பரிசுத்த படைப்பாக உருவாக்கினாய்


நான் தேடும் தெய்வம் இன்று எனைத் தேடி வரும் பொழுது

பலகோடி இன்பம் என் நெஞ்சில் தங்கும்

வானாளும் வல்ல மகன் வருகின்ற வழியெங்கும்

மலர்தூவிக் கவிபாட இன்பம் பொங்கும் - 2

1. பாலையிலே உயிர்வாழ மன்னாவைக் கொடுத்தாய்

பகலெல்லாம் வேதமாகி இரவினில் ஒளிபதித்தாய்

வானத்துப் பறவைகளே மலர்களைக் கண்பார்த்தால் - 2

வாடாது என் முகத்தை தானேற்றுப் பொழிகின்றார்

நாளெல்லாம் பிறர்க்காக நான் வாழும் போது

நான் வாழ என் தெய்வம் வழிகாட்டுவார் - 2

2. ஏழைகளின் உருவிலே என் இறைவன் இருக்கின்றார்

தேடி அலைந்து நானும் சேவை செய்திடுவேன்

வேலைகளின் இடையினிலே வேந்தனை நான் நினைக்கையிலே - 2

நாடி எந்தன் செயல்களிலே தானிருந்து முடிக்கின்றார் நாளெல்லாம்...


நான் தேடினேன் என் இயேசுவே

உன் வரம் வேண்டினேன் அருள்நாதனே - 2

என் வாழ்வில் ஒளியாக நீயாக வேண்டும்

என் வானின் கதிரே என் தேவனே

1. மேலான அன்பாக நீயாகி நின்றாய்

உன் வார்த்தை என் வாழ்வில் பொருளாகுமே - 2

என் அன்பே வா வா என் பலமாய் வா வா - 2

என் வாழ்க்கை ஓடம் தடுமாறும் நேரம்

கரை சேர்க்கும் சுடராக இறையே நீ வா வா

2. வழியோரம் வாழ்கின்ற எளியோர்கள் இறைவா

விழியோரக் கண்ணீரை உன் பாதம் வைக்கின்றேன் - 2

நிழலாகச் சோகம் தொடர்கின்ற போது - 2

துயர் நீக்கும் மருந்தாக தலைவா நீ வா வா

வான் சேர்க்கும் சுரங்கள் உருவாக்க வா வா


நான் மீட்டும் ராகம் உனக்காகத்தானே

உன் அன்பைப் பாடிடத்தான் - 2

எங்கே நீ என் அன்பே உனைப் பாடத் துடிக்கின்றேன்

1. காற்றினில் அலையும் நாணல்களில் - உன்

அசைவினை நான் காண்கின்றேன்

கடலினில் வீசும் அலைகளிலே உன் தரிசனம் பெறுகின்றேன்

பூக்களும் கவிதை கூறுமோ உன் புகழ் சொல்லுமோ

உனக்காய் ஏங்கும் என் மனதை குயில்கள் பாடுமோ

உன்னோடு நான் வாழும் நன்னாளை எதிர்நோக்கி

என் இயேசுவே ஆசை தீரப் பாடுவேன்

2. மனதினில் நீ எழும் அழகினைக் கண்டதும்

என்னையே மறந்துவிட்டேன்

நயமுறு தோரணம் உனக்காய் அமைத்தே அன்புடன் கும்பிடுவேன்

பளிங்கு மாளிகை ஒளியிழக்கும் உன்னைக் கண்டாலே

தென்றல் கூட மெய்சிலிர்க்கும் உன் கால் பட்டாலே

திசையெங்கும் உன் நாமம் தேனாக சுவைத்திட

என்னுயிரே ஆசை தீரப் பாடுவேன்


நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு

இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் - 2

1. எனது உணவை உண்ணும் எவரும்

பசியை அறிந்திடார் ஆ... - 2 - என்றும்

எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்

2. அழிந்து போகும் உணவிற்காக

உழைத்திட வேண்டாம் ஆ... - 2 - என்றும்

அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்


மாறாத தெய்வம் நீ மட்டும் ஆ...

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

நிலையானதொன்றும் இங்கில்லை

நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்

நீ மட்டும் போதும் எப்போதும்

நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்

நீ மட்டும் போதும் எப்போதும் - 2

1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து

ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை

வாழ்வு தரும் வார்த்தை வாழ்க்கை தனை வளர்த்தால்

வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும் - 2

நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் - 2

நீ மட்டும் போதும் எப்போதும்

2. பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து

பொழுதிங்கு போகுது கழிந்து

உண்மை தனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்

ஊதியங்கள் தேவையில்லை நமக்கு - 2 நீ....


நினைவெல்லாம் நீயே நினைவெல்லாம் நீயே - 2

நினைவெல்லாம் நீயாக உன் நிழலில் நான் வாழ

எனையாளும் இறைவா என்னில் வாருமே - 2

அன்பெனும் அருட்கரத்தால் எனைக் காக்க வேண்டும்

அன்றாடம் எனை நீ தொடர்ந்தாக வேண்டும் - 2

1. துன்பங்கள் துயரங்கள் எனைச் சூழ்ந்த போதும்

என் இயேசுவே உம்மை என்றும் நம்புவேன் - 2

எந்நாளும் என்னில் வாழ்ந்திட வா - 2

எந்தன் நினைவெல்லாம் நீயாக வா

காம காம கம ரிக மக ரிஸ நிஸ

காம காம கம ரிப மக ரிஸ நிஸ

கஸ ரிஸ ரிஸ நிஸ - 2

கஸ ரிகா ஸரி கமா ரிக மபா

2. என் உள்ளம் உனை இழந்து தவிக்கின்ற போது

உந்தன் அருட்கரம் தான் என்னைத் தேற்றுதே - 2

நீ பெற்ற வெற்றி யாவும் எனதாக்க வா - 2

நிலையாக என்னில் நீயும் எனக்காக வா காம காம கம...


நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்

எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் - 2

இறைவா இறைவா இறைவா இறைவா

1. மழையாக வந்தும் மனம்மீது நின்றும் நனையாத நிலமாகினேன்

ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்

விடிவில்லா இரவாகினேன் - 2

உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ

வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ - 2 இறைவா...

2. கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்

தவிக்கின்றேன் உனைத் தேடியே

போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்

அழுகின்றேன் துணை நாடியே - 2

எதனாலும் நிறையாத வெறுமையிது - உன்

அருளின்றி துயிலாத இதயம் இது - 2 இறைவா...


நீ இல்லாமல் என்னிதயம் முழுமை ஆகுமா

நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா - 2

இயேசு நாயகா பேசும் தெய்வமே ஜீவநாயகா தாகம் தீருமே

மௌனம் கலையுமா சேதி சொல்லுமா

வார்த்தை வழியிலே கால்கள் செல்லுமா

1. குருடர் பார்வை பெற்றதும் சீடர் பாடம் கற்றதும்

பாவி திருந்தி வாழ்ந்ததும் தேவன் வார்த்தை வலிமையே - 2

காற்றும் கடலும் தணிந்ததும் பகிர்ந்து வாழத் துணிந்ததும்

அன்பின் ஆட்சி மலர்ந்ததும் வார்த்தையால்

அடியேன் கேட்கிறேன் பேசும் இயேசுவே

2. பயணம் இணைந்து செல்லவும் சாவின் ஆற்றல் கொல்லவும்

அன்பின் சக்தி வெல்லவும் வார்த்தை வேண்டும் சொல்லுமே - 2

வெறித்தனங்கள் அழியவும் நெறித்தடங்கள் அமையவும்

அமைதித் தென்றல் வீசவும் பேசும் தெய்வமே

எல்லாம் அன்பின் மயம் ஆகும் இயேசுவே


நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க

இறைவன் உன்னைத் தேடுகிறார்

நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க

அவரோ உன் புகழ் பாடுகிறார் - 2

1. அழுகையில் அவரை அழைத்திடுங்கள்

அழுகுரல் கேட்டு அரவணைப்பார்

நீதியைப் பூவினில் இறைத்திடுங்கள்

நீதியின் தலைவன் சிரித்திடுவார்

2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே

இனிமை பொழிந்திட வந்திடுவார்

தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்

வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார்


நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்

நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும்

அரணும் நீயே கோட்டையும் நீயே

அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே

1. நீ வரும் நாளில் அமைதி வரும் - உன்

நீதியும் அருளும் சுமந்து வரும்

இரவின் இருளிலும் பயம் விலகும் - உன்

கரத்தின் வலிமையில் உயர்வு வரும்

கால்களும் இடறி வீழ்வதில்லை

தோள்களும் சுமையால் சாய்வதில்லை - என்

ஆற்றலும் வலிமையும் நீயாக - 2

2. விடியலைத் தேடிடும் விழிகளிலே - புது

விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ

பால் நினைந்தூட்டும் தாயும் நீ - என்

பாழ்வெளிப் பயணத்தின் பாதையும் நீ

அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ

அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ - என்

மீட்பரும் நேசரும் நீயாகும் - 2


நீ தந்த ராகம் நான் பாடும் கீதம்

என் சோகம் போகும் உனைக் கண்டால் போதும் - 2

1. ஆயிரம் தீமைகள் சூழ்ந்தென்னை இங்கு

ஆன்மாவை ஆட்கொள்ளும் நேரம் - 2

ஆயனே நீ வந்து ஆறுதல் பல தந்து - 2

அன்பான வார்த்தைகள் பேசும் - 2

2. நீயின்றி வேறென்ன என் வாழ்வில் வேண்டும்

நீதானே என்றென்றும் என் சொந்தம் - 2

நிறைவான செல்வங்கள் இருந்தென்ன லாபம் - 2

இறைவா நீ தீராத இன்பம் - 2


நீதானே இறைவா நிலையான சொந்தம்

உனையன்றி உலகில் எனக்கேது பந்தம்

உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம்

உனையென்றும் பிரியாது ஏழை (என்) நெஞ்சம் - 2

நீயே சொந்தம் நீயே தஞ்சம்

நீயே செல்வம் வாழ்வின் மையம் - 2

1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே

உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே - 2

கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2

வருவாயே தலைவா என் உயிர்மூச்சிலே - 2

2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ

இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன - 2

நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2

நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2


நீதானே என் கீதம் இறைவா - உன்

நினைவே என் சங்கீதம் தலைவா - 2

நிறைவாழ்வு நான் காண வரம் வேண்டுமே - இனி

நிதம் எந்தன் வாழ்வு உம் பணிக்காகவே

1. ஒரு கோடி மலருண்டு உன் தாளிலே - அது

ஒரு பூவாய் இணைந்தாலே மணம் வீசுமே - 2

எழிலான சுரம் கோடி உன் யாழிலே - 2 - அதில்

நரம்பாக இணைந்தாலே மனம் பாடுமே

2. அழகான கனவொன்று என் நெஞ்சிலே - அது

அன்பாலே நிறைகின்ற உலகாகுமே - 2

இதற்காகத் தானே நீ மனுவாகினாய் - 2 - இன்று

என் வாழ்வை அதற்காகப் பலியாக்கினேன்


நீயின்றி வேறேது சொந்தம் - உன்

நினைவின்றி எனிலேது இன்பம்

நிலையான நீயே பந்தம் - 2 - உன்

நிறைவாழ்வு ஒன்றே செல்வம் - 2

1. விளக்கின் கீழ் இருளுண்டு நிலவின் உள் கறையுண்டு

குறையுண்டு என் வாழ்விலே ஓ... நிறையுண்டு என் வாழ்விலே

நிறம் மாறும் பூவுண்டு நிலை மாறும் உறவுண்டு

அகழ்வோரை நிலம் தாங்குமே ஓ... ஆகாயம் மழை தூவுமே

கரை சேரா அலையுண்டு கரை சேரா படகுண்டு

கடல் மீது நீர் வாருமே ஓ... உடன் யாவும் நீர் மேவுமே

அலைபாயும் ஆன்மாவின் நிலைமாறும் நிலை கண்டு

எனையாளும் என் தெய்வமே ஓ... அருள் வீசும் ஓர் தென்றலே

2. சந்தங்கள் ஏழும் என் சொந்தங்கள் ஆனாலும்

சங்கீதம் நீயல்லவா ஓ... சந்தோஷம் நீயல்லவா

சோகங்கள் சூழும் என் பாதங்கள் மீளும் - என்

பயணங்கள் நீயல்லவா ஓ... பாதைகள் நீயல்லவா

அழுகின்ற நல்லார்க்கும் தொழுகின்ற தீயோர்க்கும்

ஆகாரம் நீயல்லவா ஓ... ஆதாரம் நீயல்லவா

பாரங்கள் சுமப்போர்க்கும் பாவங்கள் சுமப்போர்க்கும்

சுமைதாங்கி நீயல்லவா நீ தோள் தாங்கும் தாயல்லவா


நீயே எந்தன் தெய்வம் நீயின்றி வேறேது சொந்தம்

நீயே எந்தன் தெய்வம்

1. ஆயிரம் மனிதரில் என்னைத் தேடினாய்

அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய் ஆ.... - 2

கண்ணென காத்திட எந்தன் நெஞ்சில் வா வா

கவலையின்றி நான் வாழ என்னில் எழுந்து வா

2. விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்

வீணென என் மனம் சோர்ந்து போகலாம் ஆ.... - 2

துணை வரும் அருளினால் என்னைத் தாங்க வா வா

துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா


நீயே எமது வழி நீயே எனது ஒளி

நீயே எமது வாழ்வு இயேசய்யா - 2

1. நான்கு திசையும் பாதைகள் சந்திக்கின்ற வேளைகள்

நன்மையென்ன தீமையென்ன அறியாத கோலங்கள் - 2

நீயே எங்கள் வழியாவாய் நீதியின் பாதையின் பொருளாவாய் - 2

உனது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெரிவுகள்

அவற்றில் நாம் நடந்தால் வெற்றியின் கனிகள்

2. துன்ப துயர நிகழ்வுகள் இருளின் ஆட்சிக் காலங்கள்

தட்டுத் தடுமாறி விழ தகுமான சூழல்கள் - 2

நீயே எங்கள் ஒளியாவாய் நீதியின் பாதையில் சுடராவாய் - 2

உண்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட

உண்மையின் இறைவா உமதருள் தாரும்


நீயே என் கோயில் ஆண்டவனே - உன்னில்

நிலையாக வாழ்வேன் ஆசையிலே

நீயே என் கோயில் நானோ உன் சாயல்

உனைப் போல வாழ்வேன் ஆசையிலே

நீயே என் கோயில் நீயே என் தெய்வம்

நீயே என் கோயில் ஆண்டவனே

1. வார்த்தையின் வடிவில் உனைப் பார்க்கிறேன்

வாழ்க்கையில் வழியெங்கும் உனைப் பார்க்கிறேன்

செயலுள்ள நம்பிக்கையில் உனைப் பார்க்கிறேன்

வாழ்க்கையில் வழிபாடாய் உனைப் பார்க்கிறேன் நீயே...

2. புதுமையின் பொலிவினிலே உனைப் பார்க்கிறேன்

உருவ அருவங்களில் உனைப் பார்க்கிறேன்

பேழையின் ப்ரசன்னத்தில் உனைப் பார்க்கிறேன்

உயிருள்ள வசனத்தில் உனைப் பார்க்கிறேன் நீயே...

3. மண்ணின் மனிதரிலே உனைப் பார்க்கிறேன்

தாய்மையின் நேசத்திலே உனைப் பார்க்கிறேன்

நண்பரின் தியாகத்திலே உனைப் பார்க்கிறேன்

இயற்கையின் இயல்பினிலே உனைப் பார்க்கிறேன் நீயே...


நீயே நிரந்தரம் இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம்

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்

இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - 2

நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்

நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் - 2

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்

தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்

தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் - நான்

சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - 2

2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்

பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்

நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் - அதன்

விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - 2


நீர் ஒருவர் மட்டும் இயேசுவே - என்னைவிட்டு

நீங்கா திருப்பதும் ஏனோ தெய்வீக அன்பால் தானோ - 2

1. என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள்

தங்கள் கூடுகள் தேடிப் பறந்த பின்னும் - 2

நான் வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம்

நான் தாழ்ந்த காலத்துப் பிரிந்த பின்னும்

2. எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்

சொந்தத் தாய்க்கடலோடு கலந்த பின்னும் - 2

எந்தன் பாதையின் விளக்காம் பகலவனும்

வந்த காரிருள் மாயையால் பிரிந்த பின்னும்


நெஞ்சத்தில் வா என் தெய்வமே நீயாக நான் மாறவே

உன்னை நான் கண்டு உன் பாதை சென்று

நீயாக நான் வாழவே - 2

1. என் உள்ளம் நீ வந்து அமர்கின்ற நேரம்

என் கண்கள் புதுப்பார்வை காணும் - 2

என்னில் நீ ஒன்றான நிலையான உறவு

புதுவாழ்வு எனை வந்து சேரும்

எனில் வாழ்வது இனி நீயல்லவா

உன் வாழ்வு எந்தன் வழியல்லவா - 2

2. உன்னோடு கைகோர்த்து நான் செல்லும் பாதை

ஒருபோதும் தவறாவதில்லை - 2

என்னோடு நீ வாழும் சுகமான நினைவில்

எதைக் கண்டும் நான் அஞ்சவில்லை

என் நெஞ்சமே இனி உன் இல்லமே

என்னோடு நிதம் வாழ வா தெய்வமே - 2


நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்

நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார்

1. வருந்திச் சுமக்கும் பாவம் - நம்மை

கொடிய இருளில் சேர்க்கும் - 2

செய்த பாவம் இனி போதும் - 2

அவர் பாதம் வந்து சேரும் - 2

1. குருதிச் சிந்தும் நெஞ்சம் - நம்மை

கூர்ந்து நோக்கும் கண்கள் - 2

அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் - 2

அவர் பாதம் வந்து சேரும் - 2


நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்

உனையழைத்தேன் நீ வா வா

சிந்தையெல்லாம் நொந்தழுதேன் - 2

சொந்தமெல்லாம் நீ தானே

1. அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு

எந்நாளும் நண்பன் நீயே - 2

கண்ணின் மணிபோல காத்திடுவோனே - 2

உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன்

1. வானின் முழுநிலவே வாழும் உயிர்ச்சுடரே

நீயின்றி வாழ்வேதய்யா - 2

பாடி வரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2

உன் ஆசீர் தந்தால் மகிழ்வேனய்யா

2. சோகம் வந்து தாக்கும் போது என்னைக் காக்கும்

என் ஆயன் நீயே அன்றோ - 2

மாசு கொண்ட உள்ளம் பேசும் உந்தன் நாமம் - 2

இயேசு எந்தன் வாழ்வின் தெய்வம் நீயே


நெஞ்சமெனும் ஆலயத்தில் வரவேண்டும் இறைவா - உனைத்

தஞ்சமெனத் தேடுமெனில் வரவேண்டும் இறைவா

1. என்னகம் எழுந்து இருள் ஒழித்து விண்ணகம் சேர்க்க வரவேண்டும் - 2

மண்ணக இன்ப நினைவழித்து உன்பதம் காண வரவேண்டும்

2. அன்பின் சின்னம் எனில் வளர அன்பனே நீயும் வரவேண்டும் - 2

உன்னத வாழ்வில் உனை அடைய என்னகம் நீயும் வரவேண்டும்


நெஞ்சில் ஒரு சங்கீதமே இறைவா நித்தம் அது உனதாகுமே - 2

நேசம் உன்னில் நான் காண்பதால்

உன்னோடு உறவாட என் ஜீவன் ஏங்கும்

1. உன்னைக் காணாமலே உடன்

பேசாமலே நான் தவித்திடுவேன் ஆ...

எந்தன் நிலைமாறியே வழி தடுமாறியே

நான் கலங்கிடுவேன் ஆ...

நீயில்லாமல் உயிர்வாடுதே எந்தன் உணர்வோடு போராடுதே - 2

உயிராக வா... உறவாக வா...

அழைத்தேன் அழுதேன் உயிரே நீ வா வா

2. என் கோயில் தெய்வம் அது நீயானதால்

உன்னை வணங்கிடுவேன் ஆ...

உயிர் ஆதாரமே என்னில் நீயானதால்

உன்னில் மகிழ்ந்திடுவேன் ஆ...

நீயில்லாமல் நானில்லையே - உந்தன்

நினைவின்றி வாழ்வில்லையே - 2

நிழலாக வா... நீங்காமல் வா...

அழைத்தேன் அழுதேன் அன்பே நீ வா வா


ஆழிப்பேரலை கரை தாண்டி வந்தபோது

வாழ்விழந்தோர் துன்பமதை சொல்லும் வகை ஏது

நெய்தல் மக்கள் வாழ்வு உந்தன் கருணையிலே

தெய்வபக்தி வாழ்வதுந்தன் கரையினிலே

செய்யும் தொழில் அத்தனையும்உன்னுடனே

வாழ்வுடனும் சாவுடனும் போர் தினமே

தந்தை உன்னை நம்பி வந்தார் படகையல்ல

எந்தத் தாய்க்கும் உன்னில் என்றும் பயமுமல்ல

மெல்லலைகள் மலை உயர வடிவம் கொள்ள

கோரமுகம் கொண்டு விட்டாய் என்ன சொல்ல - 2

பிறந்தது உன் கரையிலே பிழைத்தது உன் தயவிலே

தினம் தினமும் படகிலே மிதந்தது உன் அலையிலே

வளர்ந்தது உன் அருகிலே தூங்கியதுன் மணலிலே

வலை பிடித்த மீனிலே உயர்ந்ததெங்கள் ஊர்களே

1. பேரலை ஓடிவந்து கரையில் மோதியே

போனதும் போனதெங்கள் ஜீவநாடியே - 2

வீடுகள் கட்டினோம் செல்வங்கள் சேர்த்து வைத்தோம்

அன்பின் குழந்தைகளை ஆளாக்கினோம்

எல்லாம் இழந்தோம் அலையோடு போக வாடினோம்

மூன்றில் ஒன்று குழந்தைகள் முளைவிடாத வாழ்வுகள்

அன்னை என்ற சொல்லையும் அறிந்திடாத மழலைகள்

மடியிருந்த மகளையும் கைப்பிடித்த மகனையும்

அலைபறித்து சென்றதே மறந்திடாத இதயங்கள்

2. மானிடநேயம் பொங்கி ஊற்றெடுத்தது

பூமியே ஓர் குடும்பம் ஆகிவிட்டது - 2

ஒவ்வொரு சேதியும் தீயாக ஆழ்மனதும்

சாவின் களைபடிந்த வீடானது

எல்லா மனமும் மனிதாபிமானம் வாழுது

உலக உள்ளம் கனிந்தது உதவிக் கைகள் விரித்தது

துயரம் மாறும் நாள் வரை துணையிருக்க விழைந்தது

மதவெறிகள் மறைந்தது மனிதநெறியில் இணைந்தது

சாதி சார்பு சரிந்தது சாவில் கருணை தெரிந்தது

துன்பம் உண்டு அழிவும் உண்டு வாழ்வினிலே

நோயும் உண்டு சாவும் உண்டு உலகினிலே

நல்ல தொண்டு செய்பவர்கள் வழியினிலே

நமது தெய்வம் கருணையுண்டு கவலையில்லை - 2


பகிர்வினில் இணைந்திடுவோம்

இறை உறவினில் கலந்திடுவோம் - 2

இயேசுவின் உடலை உள்ளத்தில் ஏற்று

என்றுமே வாழ்ந்திடுவோம் - நாம் - 2

இயேசுவின் நல்விருந்து நிறைவாழ்வினைத் தரும் விருந்து - 2

1. உயிருள்ள உணவாய் நீ இருக்க

உவப்புடன் உம்மை உண்டிடுவோம் - 2

உடல் பொருள் ஆவி அனைத்தையுமே - 2

உலகுக்கு அளித்து வாழ வைப்போம் - 2 இயேசுவின்.......

2. அழிவில்லா உணவாய் நீ இருக்க

அகத்தினில் ஏற்று வாழ்ந்திடுவோம் - 2

புவிதனில் புனிதனாய் நடந்திடவே - 2

புதுயுகம் படைப்போம் இப்பூவுலகில் - 2 இயேசுவின்.....


பண்பாடி நாளும் பதம் தேடிவந்தேன்

அகம் வந்து என்னை அருள் செய்ய வாராய்

மருள்நிறை வாழ்வில் நான் வாடும் போது

இருள் போக்க இறையே நீ எழுவாயே - 2

1. உள்ளத்தின் ஏக்கங்கள் நிதம் வாட்டுதே

உன்னன்பு தொடுதல்கள் எனைத் தேற்றுதே- 2

உதிர்த்திடும் கண்ணீர் உன் முன்னே மலராய் - 2

உருமாறி ஒன்றாய் கரம் கோர்த்து நிற்கும்

உவப்புடன் உன்னை அணி செய்து மகிழும்

2. கன்னல் போல் உன்னை நான் சுவைத்திடுவேன்

கார்மேக மழையுன்னில் நனைந்திடுவேன் - 2

கனிவுறு வார்த்தைகள் உதிர்த்திடும் போது - 2

கறை நீங்கி என் வாழ்வும் கனிவாக ஒளிரும்

கதிரான உன்னைக் கனவாகக் காணும்


பரம பரிசுத்த தேவனே படைப்பின் மூலவனே

நெஞ்சத்தில் நீங்கிடா நேசனே நித்தமும் காப்பவனே

என் பாடலின் ஜீவனே பரமனே என் தேவனே

1. அருளின் தெய்வம் என் வாழ்விலே அது பேசும் ஆனந்தமே

அன்பின் சுனை உருவாக்கிடும் இன்பத்தின் சுவைநீரது - 2

ஓர் நாளிலே உருவாகிடும் ஊரெங்குமே அரங்கேறிடும் - 2

உந்தன் அன்பினில் நாளும் வாழ்ந்திடும்

அன்பு பேரின்பம் எங்கும் சூழ்ந்திடும்

இன்றும் என்றும் எந்தன் தேவன் நீ

2. புவியெங்கிலும் புதுமை பொங்கும் புலரும் நல் புதுவானமே

குயில் பாடிடும் புதுப்பாடலின் பூபாள பூந்தென்றலே ஓர்...


பாட்டு நான்பாடக் கேட்டு

என் பாடல்நாயகா விருந்தாக வா வா

உன் அன்பில் நான் இன்று ஒன்றாக வேண்டும்

உன்னாலே என் வாழ்வு நன்றாக வேண்டும்

1. இராகங்கள் இல்லாத வாழ்வெனும் வீணையில்

கானங்கள் அரங்கேறும் உன் வரவால் - இறைவா

சோகங்கள் மறைந்தோடும் உன் உறவால்

இருளோடும் துயரோடும் போராடும் என் வாழ்வில்

அருளாலே விளக்கொன்று நீ ஏற்ற வா

அதை நானும் அணையாமல் நான் காக்க வா

2. மாதங்கள் பன்னிரண்டும் தேவா உன் திருவாசல்

மானிடரின் வரவுக்காய் காத்திருக்கும் - தினம்

மாறாத அன்புக்காய் பூத்திருக்கும்

நீ வாழும் கோயில் தான் ஏழை என்னுள்ளம்

உனை உண்டு வாழ்ந்தாலே அழிவில்லையே

உனைவிட்டுப் பிரிந்தாலே அருளில்லையே


பார்வை பெறவேண்டும் நான் பார்வை பெறவேண்டும்

என் உள்ளம் உன் ஒளி பெறவேண்டும் - புதுப்

பார்வை பெறவேண்டும் நான் பார்வை பெறவேண்டும்

1. வாழ்வின் தடைகளைத் தாண்டி எழும் புதுப்பார்வை பெறவேண்டும் - 2

நாளும் பிறக்கும் உன் வழியை காணும் பார்வை தரவேண்டும் - 2

உன்னாலே எல்லாமுமே ஆகும் நிலை வேண்டும் நான் பார்வை...

2. நீதி நேர்மை உணர்வுகளை நான் பார்க்கும் வரம் வேண்டும் - 2

உண்மை அன்பு உயர்ந்திடவே உழைக்கும் உறுதி தரவேண்டும் - 2

எல்லோரும் ஒன்றாகவே வாழ வழி வேண்டும் நான் பார்வை...


புதிய வாழ்வு என்னில் காண இயேசு உன்னையே

விடியலாக உன்னைத் தேடி நாடி வந்தேனே

வரங்கள் யாவும் தந்திடு அருளை நாளும் வழங்கிடு - 2

இதயம் திறந்து தினமும் தொழுதேன்

1. ஏழு சுரங்களில் மீட்டினேன் தினம் ஏக்கத்தோடு நாடினேன் - 2

கரங்கள் நீட்டி அணைத்திடு - 2

உந்தன் கருணையாலே மாற்றிடு - 3

உறவின் வரவு எந்தன் யாகமே - உந்தன்

தரவின் தேர்வு எந்தன் யோகமே - 2

2. தேனின் இனிமை உன்னிலே அதைப் பானமாகப் பருகினேன் - 2

காலமாய் நீ மிளிர்ந்திட - 2

உந்தன் நொடிகளாய் என்னை மாற்றிடு - 3 உறவின்...


பேரின்பமே வாருமே என்னில் பேறாகும் நிலையாகுமே - நீர்

ஆனந்த நிலையாகும் அறவாழ்வின் துலக்காகும் - 2

1. வானோக்கி வாழ்வோர்க்கு வழியாகினாய்

தானீந்து உலகோர்க்கு உணவாகினாய்

எம் தெய்வமே எமில் வாருமே - 2

இயேசு என் மீட்பரே எம்மைக் காப்பவரே - 2

இயேசு எம் ஆண்டவர் இன்புறும் வானகம் சேர்த்திடும் நல்லவர்

2. புறவாழ்வில் நிலையில்லை உமை நோக்கினால்

அறவாழ்வில் தெளிவில்லை இருள் மேவினால் - 2

ஒளி வீசுவாய் உமை ஏத்துவாய் - 2 இயேசு...

3. உமைக் காணும் முழுஞானம் எமக்கில்லையே

உலகோர்க்கு உமைச் சொல்லும் துணிவில்லையே - 2

உமதாவியே பெறவேண்டுமே - 2 இயேசு...


பொன்னிலும் மணியிலும் விருப்பமானது

தேனிலும் அடையிலும் இனிமையானது

இறைவனின் வார்த்தை உயிர்தரும் இறைவனின் வார்த்தை - 2

1. இறைவனின் வார்த்தைகள் நிறைவு உள்ளது

உளத்திற்கு புதுஉயிர் ஊட்ட வல்லது - 2

இறைவனின் ஆணைகள் உறுதியானது - 2

எளியோர்க் கறிவு ஊட்ட வல்லது - 2

2. இறைவனின் வார்த்தைகள் சரி நேரானது

உளத்திற்கு மகிழ்ச்சி ஊட்ட வல்லது - 2

இறைவனின் கற்பனை தூய்மையானது - 2

கண்களுக்கு ஒளி ஊட்ட வல்லது - 2


மங்கள நாளின் தலைவனே எம் மனக்கோயிலின் இறைவனே - 2

அன்பு நிறைந்த தந்தையே என்றும் ஆராதிப்போம் துதிப்போம் - 2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2

1. நீ தந்த நாளெல்லாம் திருநாளே பேரானந்தத் திருநாளே

நீ செய்த செயலெல்லாம் வெளிப்பாடே

உம் நேசத்தின் வெளிப்பாடே - 2

உண்மையிலும் ஆவியிலும் உம்மைத் தொழுதேத்தும்

இந்த நாள் நல்ல நாளே

உண்மையிலும் ஆவியிலும் உம்மைத் தொழுதேத்தும்

இந்த நாள் திருநாளே

2. உம் கோயில் பறவைகள் சரணாலயம்

என்றும் வாழ்கின்ற சரணாலயம்

உம் பார்வை பட்டாலே வளமாகும்

எம் பயிர்கள் வளமாகும் - 2

பறவையிலும் பயிர்களிலும்

பெரிதாகும் உமதன்பு எமக்கின்பம் - 2


மனவீணை தனில் இன்று உருவாகும் பலராகம்

உனைப் பாடவேண்டும் என் திருவேந்தனே

மலரோடு மணமாக அகலோடு சுடராக

உன்னோடு நான் வாழ வரவேண்டுமே - 2

1. மனுவாகி நீ தந்த மகிழ்வான செய்தியை

தினம் இந்த இகம் தன்னில் நான் பாடுவேன்

இரவோடு துயரோடு போராடும் பலரோடு

உதயங்கள் வரவேண்டிப் போராடுவேன்

அருளே ஒளியே உதயம் தருவாய் - 2

திருவே தினமே புனிதம் பொழிவாய்

2. கண்ணீரில் தினம் காணும் எளியோரின் கனவுகள்

என்னன்புப் பணியாலே நனவாகிடும்

நிழல் தேடித் தொடர்கின்ற பலர் வாழ்வுப் பயணங்கள்

திருப்பாத நிழல் தன்னில் சுகம் கண்டிடும் அருளே...


மனிதம் மலர மண்ணில் வந்தவா

விண்ணகம் செல்ல வழியைத் தந்தவா

அமிழ்தே தேனே எம்மைத் தேற்ற வா - 2

உயிரே உறவே எம்மில் உறைய வா - 2

1. அருள் கொடுப்பாய் இன்று இருள் போக்குவாய்

ஒளியேற்றுவாய் ஒளியானவா - 2

உரிமைகளைக் காக்க வா உறவாக வா அன்பாக வா - 2

எம்மை அரவணைப்பாய்

2. பிரிவுகளைக் களைந்திடுவாய் உறவுகளை வளர்த்திடுவாய்

தாழ்வுகளை ஒழித்திடுவாய் சமத்துவத்தைக் கொணர்ந்திடுவாய் - 2

மனிதத்தையே போற்ற வா எம்முயிரே எம்மில் வா - 2

எம்மை அரவணைப்பாய்


மாறாத நேசம் எனில் தந்த தேவா

மனதென்னும் கோவில் உனக்காக நீ வா - 2

உளம் என்னும் வீணை கரம் தேடுதே

உறவே நீ என்னில் சுரம் மீட்ட வா

1. ஆறுதல் தேடி அலைகின்ற போது

ஆதவன் நீயே ஆறுதல் தந்தாய் - 2

துயரினில் மூழ்கி மடிந்திடும் வேளை

துணையாக வந்தாய் துயரெல்லாம் மறந்தேன் - 2

போற்றுவேன் தேவா போற்றுவேன் - உன்

திருவடி பணிந்து போற்றுவேன் - 2

2. உன்னருள் தேடி உன் பதம் வந்தேன்

உலகாளும் தேவா உன்னருள் தந்தாய் - 2

உனக்காக வாழ உறவெல்லாம் துறந்தேன்

அழியாத உறவாய் எனில் வந்து சேர்ந்தாய் - 2 போற்றுவேன்...


மாறாத நேசரே மறவாத இயேசுவே

கருவாகு முன்னரே கண்டுகொண்ட பாசமே - 2

உயிரே உறவே உனை மறவேனே இன்றும் என்றுமே - 2

1. குயவன் நீ களிமண் நான் உந்தன் கையாலே வனைந்திடுமே

ஆயன் நீ ஆடு நான் உந்தன் அருளாலே நடத்திடுமே

செடியாக நீயும் கிளையாக நானும் - 2

இருந்தாலும் போதும் வேறென்ன வேண்டும் உயிரே...

2. இருளில் நான் விழும் போது உந்தன் ஒளியாலே நிரப்பிடுமே

தனிமையிலே தவிக்கையிலே உந்தன் அன்பாலே அணைத்திடுமே

உயிராக நீயும் உடலாக நானும் - 2

இருந்தாலும் போதும் வேறென்ன வேண்டும் உயிரே...


மிகுந்த அன்பிதுவே உயர்ந்த அன்பிதுவே

பரமும் துறந்து இகமுமே எழுந்த அன்பரசே

இத்துணை எம்மையே நேசித்து எளிமை நிலை கொண்டாய்

பக்தியோடென்றென்றும் பணிசெய்வோமே பாரின் மீட்பரே - 2

2. சிறந்த போஜனமே நிறைந்த போஜனமே

உவந்த உள்ளமும் நிரம்பிட உறைந்த போஜனமே இத்துணை...

3. நித்தமும் வாழ்வடைவார் நின்னையே அருந்துவோர்

சத்தியம் வழியும் உயிரும் நீ சதமும் தோத்திரமே இத்துணை...


முத்தமிழ் தலைவன் மூவொரு இறைவன் எழுந்து வருகின்றார்

என் நெஞ்சத்தில் நிறைந்து சிந்தையில் கனிந்து

இனிமை பொழிகின்றார் - 2 என் இறைவன் வருகின்றார்

1. பாவத்தின் பிடியில் தவித்திடும் நிலையில்

பாவியைத் தேடிவந்தார் - தன்

உடலையே அளித்து விடுதலை அளித்து உயிராய் மாறுகின்றார்

எல்லையில்லாத அன்பினைப் பொழிந்து

என்னைக் காக்கின்றார் என் இறைவன் வருகின்றார்

2. வாழ்வினை இழந்து வாடியே உலர்ந்த

உள்ளத்தில் உறைகின்றார் - அங்கு

வறட்சியை நீக்கி வளமையை ஈந்து வாழ்வாய் மாறுகின்றார்

எண்ணில்லாத அருளினால் என்றும்

என்னை ஆளுகின்றார் என் இறைவன் வருகின்றார்


முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகின்றேன்- இறைவா

உன் முன்னிலையில் மண்டியிட்டு கிடக்கின்றேன் இயேசய்யா

1. நானே உயிர்தரும் ஊற்று என்ற

வார்த்தையின் பொருள் என்னவோ

உம் ஊற்றில் பருகும் எனக்கென்றும்

இறப்பில்லையோ இருளில்லையோ தாகம் இல்லையோ

2. நானே உயிர் தரும் உணவு என்ற

வார்த்தையின் பொருள் என்னவோ

உம் உடலை உண்ணும் எனக்கென்றும்

பசியில்லையோ துயர் இல்லையோ துன்பமில்லையோ


வசந்த ராகம் பாடுவோம் இந்தப் புனிதமான விருந்தினில் - 2

ஆனந்த கீதங்கள் பாடிப் போற்றுவோம் ஆ...

1. விண்வெளி போற்றிப் பாடும் எந்தன் மன்னன் வருகையில்

காற்றும் இராகம் பாடும் எந்தன் இதயம் எழுகையில்

கடலலைகள் கவிபாடும் எந்தன் மீட்பர் புகழினை

அவரன்பு நம்மைக் காக்கும் அவரைப் போற்றுவோம் நாம்

2. தண்ணொளி வீசும் நிலவும் எந்தன் இனிய இயேசுவை

பாய்ந்து ஓடும் நதியும் தன்னைப் படைத்த இறைவனை

உறைபனியும் தென்றல் காற்றும் இங்கு இணைந்து பாடுதே

அவர் வரவால் உள்ளம் நிறைந்து அவரைப் போற்றுவோம் நாம்


வரவேண்டும் வரவேண்டும் இறை இயேசுவே - உன்

வரம் வேண்டும் வரம் வேண்டும் என் இயேசுவே

என் விழி மீது நீதானே ஒளியாகவே

என் வழி மீது நீதானே திசையாகவே

என் மொழி மீது நீதானே இசையாகவே - 2

இறைவா இறைவா இறைவா இறைவா - 2

1. பாறை என்றொரு சீடத்தின் மேலே

உன் திருப்பீடத்தை அமைத்தாயே

தண்டின் மீதொரு தீபத்தைப் போலே

எம்மை வெளிச்சத்தில் அணைத்தாயே

உன் அன்பான வேதம் என் இதயத்தின் தாகம்

உன் அன்பான வார்த்தை என் வாழ்விலே இறைவா...

2. கறைகள் சுமக்கும் மனிதனின் மேலே

உயர் மன்னிப்பை அளித்தாயே

விதைகள் சுமக்கும் நிலத்தின் மேலே

நல்ல விடியலைத் தெளித்தாயே உன்...


வருவீர் எமது நடுவிலே தருவீர் உமது வரங்களை

வருவீர் எமது நடுவிலே

கவலை மறந்து வாழவே கருணை முகிலே எழுந்து வா

1. உலகின் இருளே விலக்கவே வளமே இனிது நிலவவே

உலகின் ஒளியாய் உதித்தவா உளமே ஒளிர வருவீரே

2. பள்ளம் செல்லும் நீரைப் போல் உள்ளம் உம்மை நாடினால்

எல்லாம் உம்மில் சேருமே தொல்லை எல்லாம் தீருமே

3. உருவிழந்த அடியார்க்கு உருக்கொடுக்க வந்தாயோ

உயிரும் உடலும் போலவே ஒன்றி வாழ்வோம் அன்பிலே


வா வா வரமும் தா நாவில் வா எம் நாதனே - 2

1. விண்ணகம் நின்று இறங்கி வந்தவா

மண்ணோரை சாவில் மீட்டு நின்றவா - 2

தன்னிகரில்லா மன்னவனே தரணி போற்றும் விண்ணவனே

என்னரும் ஜோதியே எம்மில் வா

2. நற்கனி தந்திடும் நல்ல மரமும் போல்

பொற்கொடி மாமரி பூவில் உனைத் தந்தார் - 2

நீரே நல்ல கனியாக ஏவைக் கனியின் மருந்தாக

ஏழை எந்தன் விருந்தாக

3. உம்மில் நாங்கள் நிலைத்து நின்றதால்

எம்மில் நீவிர் நிலைத்து வாழ்கின்றீர் - 2

நீரே திராட்சைச் செடியென

நாங்கள் இணைந்தே கொடியென

நல்ல கனிகள் தந்திடுவோம்

4. நீவிர் எங்கள் நல்ல மேய்ப்பராம்

நாங்கள் உந்தன் மேய்ச்ச லாடுகளாம் - 2

நல்லாயன் ஒருவன் தன் மந்தைக்கு

தன் ஜீவன் முழுதும் தருதல் போல்

உன் ஜீவன் எமக்குத் ஈந்தாயே


வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் - 2

1. இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார் - 2

அன்பும் அருளும் பொழிகின்றார் - 2 ஆ...

என்னை முழுவதும் ஆள்கின்றார்

2. உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே - 2

யாழும் இசையும் போலவே - 2 ஆ...

வாழும் இறையில் ஒன்றிப்போம்

3. கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே - 2

கிறிஸ்து நம்முள் வாழவே - 2 ஆ...

நமக்கு பயமே இல்லையே


வாழ்வளிக்கும் வார்த்தையே எம்மை

வளப்படுத்தும் வார்த்தையே

தந்தையின் வார்த்தையே இயேசுவே

உம்மை நம்பி வந்தேன் இயேசுவே - 2

1. உருவில்லாத உலகுக்கு உருக்கொடுத்த வார்த்தையே

வார்த்தையே எம் இயேசுவே வாழ்வில் வந்து பேசுமே

உலகில் வாழும் யாவுமே உருவாக்கிய இறைவார்த்தையே

வார்த்தையே எம் இயேசுவே வாழ்வில் வந்து பேசுமே

உருக்குலைத்த மனித மாண்பை மீட்டுத்தந்த வார்த்தையே

அருள்கூர்ந்து பேசுமே நான் என்றும் வாழுவேன்

2. அடங்கிடா பெரும் காற்றையே அடக்கி வைத்த வார்த்தையே

வார்த்தையே எம் இயேசுவே....

விளங்கிடா கை கால்களை விளங்க வைத்த வார்த்தையே

வார்த்தையே எம் இயேசுவே....

கலங்கிடாதே என்று சொல்லி கண்திறந்த வார்த்தையே

நலன் காக்க பேசுவீர் நான் என்றும் வாழுவேன்


வாழ்வின் இனிமை வழங்கும் கனியே

வளமாய் எம்மில் தவழ்க - 2

1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்

இருளின் துயரம் விலக - 2

இறைவன் உவந்து வழங்கும் கனியாய்

அருளைப் பொழிந்தே வருக

2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்த்

துலங்கும் இறைவா வருக - 2

தேய்வு தொடராப் புதுமை நிலவாய்

திகழும் வாழ்வைத் தருக

3. தனிமை நலிந்து இனிமை பொழிந்து

புனித இதயம் பெறவே - 2

புனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய்

கனிவாய் எழுந்தே வருக


வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே

வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே - 2

1. ஏனோ இந்தப் பாசமே ஏழை என்னிடமே - 2

எண்ணில்லாத பாவமே புரிந்த பாவிமேல் - 2

2. உலகம் யாவும் வெறுமையே உனை யான் பெறும் போது - 2

உறவு என்று இல்லையே உன் உறவு வந்ததால்

3. தனிமை என்றே ஏங்கினேன் துணையாய் நீ வந்தாய் - 2

அமைதியின்றி ஏங்கினேன் அதுவும் நீ என்றாய் - 2

4. எந்த மன்னர் உம்மைப் போல் பொங்கும் அன்பினால் - 2

வந்து எமது நடுவிலே தங்கி மகிழுவார் - 2


வானக அப்பமே வரவேண்டும் - இவ்

வையக உணவே வரவேண்டும்

விண்ணக உறவைத் தரவேண்டும் - நான்

உன்னுடன் வாழும் வரம் வேண்டும் - 2

1. உள்ளத்தில் உனக்குக் கோவில் செய்தேன் - அதில்

உயர்ந்த கோபுரம் கட்டி வைத்தேன் - 2

அன்பெனும் விளக்கை ஏற்றி வைத்தேன் - 2 - அங்கு

வாழ்ந்திட மன்னவா வரவேண்டும் - 3

2. தந்தையின் உறவை நாடி நின்றேன் - என்றன்

தன்னலம் தவிர்க்க அன்பைக் கேட்டேன் - 2

தந்தையின் உறவின் பாலமாக - 2 - எந்தன்

சொந்தமாய் சுதன் நீ வரவேண்டும் - 3

3. பொன்னும் பொருளும் நிலமெல்லாம் - பெரும்

பெயரும் சீரும் சிறப்பெல்லாம் - 2

உன்னோடு உறவு இல்லையெனில் - 2 - அதைப்

பெற்றாலும் எனக்குப் பயன் என்ன - 3


வானவர் வாழ்த்தும் தூய நல் அமுதே

வாழ்வின் வழித்துணையே அமுதே - 2

1. தெய்வீகம் மறைத்து மனுவுருவெடுத்தீர்

தெய்வமாய் மாற்றிடவோ - எம்மை

மண்ணுயிர் மறைத்து உணவினில் வந்தீர்

விண்ணகம் சேர்த்திடவோ எம்மை - 2

2. அன்பு என்னும் அகல் விளக்கேற்றி

ஆவலாய்ச் சுடரானோம் உமக்காய் ஆவலாய்ச் சுடரானோம்

ஆவல் என்னும் வேட்கையைத் தணிக்கும்

அருட்கடல் நீராவாய் எமக்காய் - 2

3. கலங்கித் தவித்துக் கடலில் நின்றேன்

கலங்கரை விளக்கானாய் ஒளியாய்க் கலங்கரை விளக்கானாய்

துலங்கிடும் ஒளியில் வழியும் சென்றேன்

துணையைக் கண்டேன் அழியா - 2


வானின் அமுதே வளர் அருள் உறவே

வாழ்வின் வழியே எமை நடத்திடுவீர் - 2

1. மீட்பால் படைப்பால் உமக்கென அமைந்தோம்

மீண்டும் உறவைப் பெருக்கும் நற்கருணை

திராட்சை செடிநீர் கொடி எமை இணைத்தீர்

தேனின் இனிய உணவென அமைந்தீர்

2. தாழ்ச்சித் திரையில் உமை மறைத்ததும் ஏன்

தாழ்ந்த மனித குலம் உயர்த்திடவோ

வீழ்ந்த இயற்கை வியந்தும்மைப் புகழ

விண்ணே அதிர திருப்பெயர் புகழ்வோம்

3. பாரின் குருவே பகர்ந்திடும் அருளே

பாரோர் உமையே ஒளிவழி தொடர்வார்

சீரில் உயர்ந்த திருமறைப் பெரியோர்

தேடி வணங்க இருள்திரை கிழிப்பீர்


விண்ணோர் வீடும் போதாதே என்னே உனது தயை

மண்ணோர் உயர்ந்திடவே மறைந்தாய் அப்பமதில்

தேவ திரு அமுதே ஜீவ தருகனியே

பாவ வினையகற்றும் பரம போஜனமே

2. அன்னை தந்தை எவர்தானும் உம்மை போலுண்டோ

தன்னை பலியாக்கும் பெலிக்கான் ஆனீரே தேவ...

3. எம்பால் கொண்ட அன்பதுவே அரசே

நீருமது என்பும் தசை யாவும் ஈந்தீர் ஆண்டவரே தேவ...

4. நீவீர் என்னுள் எழுந்தருள ஏழை தகுதி அல்லேன்

சொல்வீர் ஓர் வார்த்தை நானே சுகம் பெறுவேன் தேவ...


விருந்துக்கு வாருங்கள்

நம் இறைவன் தரும் விருந்துக்கு வாருங்கள்

அன்பை உணர்த்தும் உறவை வளர்க்கும்

விருந்துக்கு வாருங்கள் - திரு - 2

1. மண்ணோரை நல் மனத்தோராய் மாற்றும் விருந்துக்கு வாருங்கள்

விண்ணோரை வாழ்வில் எந்நாளும் ஏற்கும் விருந்துக்கு...

தாழ்நிலை நீக்கி இறை உறவைத் தரும் விருந்துக்கு...

பாழ்நிலை சூழ்ச்சி சாத்தானை வெல்லும் விருந்துக்கு...

2. ஒற்றுமை உணர்வை நம்மிலே வளர்க்கும் விருந்துக்கு...

வேற்றுமைத் தீயை மனதினில் நீக்கும் விருந்துக்கு...

மன நோயகற்றி நிறை மகிழ்வளிக்கும் விருந்துக்கு...

மரணத்தை வென்று இறைவாழ்வளிக்கும் விருந்துக்கு...


வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா

விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா

வாழ்வு மலர்ந்திட வான்மழையென வா

வழி இருளினிலே வளர்மதி என வா - இங்கு

பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா

1. அலைகளில்லா கடல் நடுவே பயணமென என் வாழ்வு

அமைதி எங்கும் அமைதி என பயணமதை நான் தொடர - 2

இறைவா என் இறைவா இதயம் எழுவாய்

நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய்

எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா

2. இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும்

எனைப்பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே - 2

இறைவா என் இறைவா இதயம் எழுவாய்...


யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்

உம்மிடம் அன்றோ உள்ளன - இறைவா - 4

1. அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் - 2

அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய் - 2

2. மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதய்யா - 2

குணமதிலே மாறாட்டம் குவலயம்தான் இணைவதெப்போ - 2

3. வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப் போல் - 2

உலகிருக்கும் நிலை கண்டு உனது மனம் இரங்காதோ - 2

548. ஜீவன் தேடும் தெய்வம் இன்று என்னில் வருகின்றார்

கானம் பாடும் நேரம் எந்தன் உயிரில் இணைகின்றார்

தெய்வமே உன்னைத் தேடினேன் என்னில் உறைந்திட வா

ஆன்ம தாகம் உந்தன் வேதம் என்னைக் காத்திட வா - 2

1. பாதையெங்கும் தீபம் ஏற்றி நிழலாய் தொடர்கின்ற நேரம்

மௌனமொழியால் அன்பைச் சுமந்து முகிலாய் வருகின்ற காலம் - 2

இயேசுவே என் தெய்வமே புதுவாழ்வின் வசந்தமே ஆன்ம...

2. பூமியெங்கும் பூக்கள்தூவி புனிதம் காண்கின்ற இதயம்

பாசவிழியால் உன்னைத் தேடி உறவினில் வளர்கின்ற உதயம் - 2

இயேசுவே எம் மீட்பரே இருள் அகற்றும் தீபமே ஆன்ம...


ஜீவன் தேடும் தேவன் நீ நான் பாடும் ராகம் நீ

நாவிற் கீதம் உன் நாமம் சொல்லும்

நாளும் உன் தாளில் மலர்ந்திடும் என் எண்ணம் - 2

1. ஜீவ ராகங்கள் தேவ வார்த்தையில் ஒலிக்கும்

தேவ வார்த்தைகள் தேடும் வாழ்வினை கொடுக்கும் - 2

காலம் மலராதோ கனவு கலையாதோ

வாடும் ஜீவன்கள் பாடும் ராகங்கள் உலகில் கேட்காதோ

2. இதய சோகங்கள் இறையின் அருளில் மறையும்

உதய நெஞ்சங்கள் உலகில் எங்கும் பிறக்கும் - 2

புதுமை நிகழாதோ பழமை மறையாதோ

நேச உறவுகள் பாச மனதுகள் கண்டு மகிழாதோ


ஜெபிக்க ஜெபிக்க இறை உறவில் நானும் மலர்கின்றேன்

கொடுக்க கொடுக்கப் பிறர் உறவில் நானும் மகிழ்கின்றேன்

படிக்கப் படிக்க உம் வார்த்தையில் பாதை காண்கின்றேன் - 2

பரமனே இறைவனே பலமும் பெறுகின்றேன்

அருள் நலமும் அடைகின்றேன்

1. ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐயாயிரம் பேருக்கு

அற்புதமாய் நீ கொடுத்தாயே - 2

அப்படியே நாங்களும் பிறரின் தேவையில் - உம்

சொற்படியே உள்ளதைப் பகிர்ந்து வாழவே

அருள் தருவாய் குணம் தருவாய் அன்பின் தெய்வமே

2. அனைத்தும் படைத்து எமக்களித்து ஆண்டு ஆளும் அதிகாரம்

அன்புடனே நீ அளித்தாயே - 2

அகமகிழ்ந்து நாளுமே அன்புப் பணியிலே - சுய

நலம் துறந்து வாழ்விலே இன்பம் காணவே

அருள் தருவாய் குணம் தருவாய் அன்பின் தெய்வமே


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *