கதை: வறுமையிலும் காதல் வாழ்க


ஊரில் ஒரு வயதான தம்பதிகள் ஒரு சாப்பாட்டுக் கடைக்குள் நுழைந்து ஒரு மூலையில் உள்ள மேசையின் முன் அமர்ந்தனர் கணவனுக்கு வயது 85க்கு மேலும், மனைவிக்கு 80க்கு மேலும் இருக்கும்.

இரண்டு இட்லி,ஒரு வடையுடன் இன்னொரு தட்டும் கொண்டு வரச் சொன்னார்கள்.

இட்லி வடையுடன் காலித்தட்டும் வந்தன.


கணவன் ஒரு இட்லியையும், வடையில் பாதியையும் காலித்தட்டில் வைத்து, சாம்பார், சட்னியிலும் பாதியை ஊற்றி,மனைவி முன் வைத்து விட்டுச் சாப்பிட சொன்னார்.

மனைவி சாப்பிடுவதைப் பார்த்து ரசித்தவாறே அவ்வப்போது தண்ணீரைக் குடித்தவாறு இருந்தார் அந்தப் பெரியவர்.

அந்த சாப்பாட்டுக் கடையில் இருந்த மற்றவர்கள், இவர்கள் ஏதோ வசதியற்றவர்கள், ஏழைகள் போல அதுதான் கொஞ்சமாக வாங்கிப் பகிர்ந்துகொள்கின்றனர் என எண்ணினார்கள்.

அப்போது இளைஞன் ஒருவன் அவர்களிடம் போய்,தான் இன்னொரு தட்டு இட்லி வடை வாங்கித் தருவதாகக் கூற அவர்கள் மறுத்து விட்டனர் , தாங்கள் எப்போதுமே பகிர்ந்து உண்பதே பழக்கம் எனக் கூறினார்கள்.

மனைவி சாப்பிட்டு முடித்தது கை கழுவப்போனார்.

இளைஞனுக்கோ மனம் கேட்கவில்லை மீண்டும் போய் அந்த வயதான பெரியவரிடம் கேட்டான் ”ஏன் நீங்கள் சாப்பிடவேயில்லை ஐயா?” என்று

அதற்கு அந்த ஐயா கூறினார் ”பல் செட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று 

மனுசன் சாப்பிட்ட தட்டில இலையில சாப்பிட்டது அந்தக்காலம் மனுசி கட்டின பல்லில மனுசன் சாப்பிடுறது அந்திம காலம்

வறுமையிலும் காதல் வாழ்க
அதிலும் மனைவியை சாப்பிட வைத்து காத்திருந்து உண்ட கணவரின் காதல் அருமை

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *