வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.
1. போனது போய்விட்டது ஆனது ஆகிவிட்டது, இனி என்ன நடக்க வேண்டும்? அதைப் மட்டும் பேசு.
2. நல்ல வேளை இதோடு முடிந்ததென திருப்திப்படு.
3. உடைந்தால் என்ன? வேற வாங்கி விடலாம்.
4. பேரூந்து போய்விட்டால் என்ன? அடுத்த பேரூந்து வரும்.
5. பணம் தானே போனது. கை கால் இருக்கு. மனதில் தெம்பு இருக்கு, சம்பாதித்து விடலாம்.
6. செல்கிறவர்கள் ஆயிரம் சொல்வார்கள் எல்லாமே சரி என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
7. அவன் அப்படித்தான் இருப்பான், அப்படித்தான் பேசுவான்,
அதையெல்லாம் கண்டுகொள்ளலாமா? ஒதுங்கி விடு அப்போதுதான் உனக்கு நிம்மதி.
8. இதெல்லாம் சின்ன விஷயம். இதற்கு போய் கவலைப்படுவது.
9. கஷ்டம் தான், ஆனால் முடியும்.
10. நஷ்டம் தான், ஆனால் மீண்டு வந்துவிடலாம்.
11. இதில் விட்டதை அதில் எடுத்து விட மாட்டேனா?
12. விழுந்தால் என்ன? எழுந்திருக்க மாட்டேனா?
13. விழுந்தது விழுந்தது தான். எழுந்திருக்க வழியை தேடு.
14. உட்கார்ந்தே இருந்தால் என்ன அர்த்தம்? எழுந்திரு, நடக்க வேண்டியதைப் பார்.
15. இவன் இல்லையென்றால் என்ன வேற ஆளே இல்லையா?
16. இந்த வழி இல்லை என்றால் வேற வழி இல்லையா?
17. இப்போதும் முடியவில்லையா? சரி. இன்னொரு முறை முயற்சி செய்.
18. இது மிகவும் கஷ்டம், கொஞ்சம் யோசித்தால் வழி கிடைக்கும்.
19. முடியுமா? என்று நினைக்காதே. முடியும் என்று நினை.
20. கிடைக்கவில்லையா? விடு, காத்திரு இதை விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம் கதையைப் பார்.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிந்து போன கதை.
24. சும்மா யோசித்துக் கொண்டே இருக்காதே. குழப்பம் மட்டுமே மிஞ்சும், வேகமாக வேலையை ஆரம்பி.
25. ஆஹா இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யாரிடமும் நான்கு மடங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.
26. உலகத்தில் யார் அடிபடாதவன்? யார் ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
அவனவன் தலை தூக்காமலா இருக்கிறான்.
27. ஊரில் ஆயிரம் பிரச்சினை. என் பிரச்சினையை நான் தீர்த்தால் போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது அதன் வழியில். என் வேலை வேற வழியில்.
29. எப்போதுமே ஜெயிக்க முடியுமா? அப் அப்போது, தோற்றால் என்ன பெரிய தவறா?
30. அவனை ஜெயித்தால் தான் வெற்றியா? நான் தான் தினம் வளர்கிறேன, அதுவே வெற்றி இல்லையா?
31. அடடே, இதுவரை நன்றாக தூங்கி விட்டேன் பரவாயில்ல. இனிமேல் விழித்திருந்தால் போதும்.
32. நான்கு காசு பார்க்கும் நேரம். கண்ட பேசி காலத்தை கழிக்கலாமா?
ஆம், நண்பர்களே,
வீழ்வது கேவலமில்லை, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.
உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள். வெற்றி நமதே.
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.