நண்பனை மூன்று வகையாக பிரிக்கின்றது ஒரு பழைய பாடல்


1. நல்ல மனைவியை தேர்ந்து எடுப்பது போலவே,  நல்ல நண்பனை தேர்ந்து எடுப்பதிலும்   எச்செரிக்கையாகவே இருக்க வேண்டும். 

 2. உன் எதிரியை சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால் நண்பர்களிலே நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமே  தெரியுமே தவிர சாதாரண அறிவினால்  கண்டு கொள்ள முடியாது.

  3. ஒருவனை நண்பனாக்கி கொள்ளும் முன் அவனை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். நண்பனாக்கி கொண்டு விட்டால், பிறகு அவன் மேல் சந்தேகப்படக்கூடாது. ( வள்ளுவன் வாக்கும் இதுவே)

  4. நண்பனை மூன்று வகையாக பிரிக்கின்றது ஒரு பழைய பாடல்.

   1) பனைமரம் போன்ற நண்பர்--நம்மிடம் எந்த உதவியும் எதிர்பாராமல், 
நண்பராக இருப்பவர்.
 ( தானாகவே முளைத்து, கிடைத்த தண்ணீரை குடித்து, தானாகவே வளர்ந்து,தன் உடம்பையும், ஓலையையும், நுங்கையும் உலகுக்கு தருகிறது. )
  
   2) தென்னைமரம் போன்ற நண்பர்--நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக் கொண்டு,  நண்பராக இருப்பவர்.
 ( நம்மால் நட்டு வைக்கப்படுகிறது, அடிக்கடி தண்ணீர் ஊற்றி  வளர்த்தால் தான் பலன் தருகிறது. )
  
 3) வாழைமரம் போன்ற நண்பர்--தினமும் நம்மிடம் உதவி பெற்றுக் கொண்டு 
 நண்பராக இருப்பவர்.
 ( நாம் தினமும் தண்ணீர் ஊற்றி கவனித்தால் தான் பலன் தருகிறது. )

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள  இந்துமதம் புத்தகத்திலிருந்து சில வரிகள்..

பனைமரம் போன்ற நண்பரையே தேர்ந்து எடுப்போம்!!!
பனைமரம் போன்ற நண்பராகவே இருப்போம்!!!

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *