கதை: பதறாத காரியம் சிதறாது


தற்பாதுகாப்புக் கலையினைக் கற்றுக் கொள்ள விரும்பிய ஒரு மாணவன் குருவை அணுகி “இக் கலையினைக் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை”? எனக் கேட்டான்.

குரு “பத்து வருடங்கள்” எனப் பதில் அளித்தார்.

குருவின் பதிலால் மாணவன் பொறுமை இழந்து திருப்தியற்றவனானான். மீண்டும் குருவிடம் “பத்து வருடங்களைவிட விரைவாகக் கற்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வேன். தேவைப்பட்டால், பயிற்சிகளை 10 மடங்கு அதிகமாகவோ அல்லது அதிக மணித்தியாலங்களோ அதற்காக எடுத்துக் கொள்வேன். ஆகவே இதன்படி கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை”? என்றான்.

குரு பதிலாக “இருபது வருடங்கள்” என்றார்.

வேகத்தினால் கற்றுக் கொள்ள முடியாது. இலக்கு மீது உள்ள ஆர்வத்துடன் நிதானம், உறுதி என்பவற்றுடன் சேர்ந்து இருக்க வேண்டும். பதறாத காரியம் சிதறாது

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *