கடைசி விவசாயி: எல்லோரும் பார்க்க வேண்டிய படத்தின் கதை


கடைசி விவசாயி இந்த படத்தில் நடித்த ஐயா நடிகர் ( நல்லாண்டி) மாயாண்டி அவர்கள் இருந்தவரை இந்த படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால் அவர் இறந்த பிறகு இந்த படம் எல்லா மக்களிடமும் போய் சேர்ந்தது நிறைய அவார்டுகளை இந்த படம் வாங்கியது. அந்த அளவுக்கு இந்த படத்தில் ஐயா (நல்லாண்டி) மாயாண்டி உடைய நடிப்பு அப்படி என்றது மிகவும் அற்புதமாக இருந்தது. 

கண்டிப்பாக நாம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். படத்துடைய கதைய சொல்றேன் கேளுங்க

ஒரு சின்னதொரு கிராமம் அந்த கிராமத்துல ஒரு வயசான பெரியவர் இருக்கிறார்கள் அவர்தான் நம்ம மாயாண்டி. நம்ம மாயாண்டி தினசரி வேலை என்ன அப்படின்னா வீட்ல ரெண்டு மாடு இருக்கும் மாடு பிடிச்சுட்டு போயிட்டு கொல்லையில கட்டுவாரு திரும்பவும் சாயந்திரம் ஆயிடுச்சு மாடு பிடிச்சிட்டு வந்து வீட்ல கட்டி அதுக்கு பில்லு போட்டு அதுக்கப்புறம் சாப்பாடு செஞ்சு அவரும் சாப்பிட்டு தூங்குவாரு இதுதான் அவருடைய வாழ்க்கை. 

அவருக்கு ஒரு மகன் இருபாரு அவர் தான் நம்முடைய விஜய் சேதுபதி அவர் கொஞ்சம் மனநலம் சரியில்லாதது போல நடித்திருப்பார் .படத்துல அவர் அங்கங்க முருகன்கிட்ட போறேன் முருகன் கோயில் போறேன் பழனிக்கு போறேன்னு சொல்லிட்டு அவரு இந்த மாதிரி சுத்திகிட்டே இருப்பாரு. 

இப்படி இருக்கும்போது என்ன ஆச்சுன்னா ஊருல இடி இறங்கிடும். ஒரு பெரிய மரத்து மேல இடி இறங்கி மரம் கருகி போயிரும். அதனால ஊர் மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுப்பாங்க குலதெய்வத்தை நாம் யாருமே கும்பிடல அதை வழிபட்டு ரொம்ப நாள் ஆகுது.

 நம்ம எல்லாரும் சேர்ந்து வழிபட்டோம் அப்படின்னா நம்ம ஊருக்கு மழை வரும் எல்லாரும் விவசாயம் பண்ணலாம். நல்லா வாழலாம் இருக்கிற நிலம் எல்லாமே அழிஞ்சு போச்சு விவசாயம் தண்ணி இல்ல அப்படின்னு சொல்லி குலதெய்வத்தை வழிபாடு செய்ய எல்லாரும் முடிவு பண்ணுவாங்க. 

குலதெய்வத்தை வழிபாடு பண்ணனும் ..அப்படின்னா நம்ம ஊரு மண்ணுல விளைஞ்ச நெல் இருக்கணும். அதை தான் நம்ம வந்து பொங்க வைக்க முடியும் அப்படி வந்து யார் வீட்டிலாவது பொங்க வைக்க நெல் இருந்தா எடுத்துட்டு வாங்க அப்படின்னு சொல்லும் போது யார்கிட்டயும் நெல் இருக்காது. வேற வழியே இல்லாம எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவு பண்ணுவாங்க. யாரு வீட்டிலும் நெல்லு இல்ல அப்படின்றப்ப நம்மளை நம்ம நிலத்துல வந்து விளைய வைக்கலாம் .அப்படின்னு முடிவு பண்ணும் போது எங்கேயுமே தண்ணி இருக்காது எந்த கிணத்திலயுமே தண்ணீர் இருக்காது இப்படி இருக்கும்போது நம்ம மாயாண்டி அவரோட கிணத்துல மட்டும் கொஞ்சம் தண்ணி இருக்கும்.ஊர் பெரியவர்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து நம்ம பெரியவர் ஐயா மாயாண்டி கிட்ட கேட்பாங்க .

இந்த மாதிரி பொங்க வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்குயா தண்ணி இல்ல நம்ம கிணத்துல தான் தண்ணி இருக்கு கொஞ்சம் விளைய வைத்து கொடுங்கள். அப்படின்னு சொல்லிட்டு பெரியவர் அப்படி என்ற முறையில அவர்கிட்டயே கேக்குறாங்க. அவரும் நல்லதுக்கு கேக்குறீங்க நான் பண்ணி கொடுக்கிறேன்பா அப்படின்னு சொல்லிட்டு அவரும் ஒத்துக்கிறார். 

இப்படி இருக்க நம் ஐயா கொஞ்சம் விதைகளை வாங்கிட்டு வரலாம். அப்படின்னு சொல்லிட்டு சந்த பக்கம் போறாரு அப்படி போகும்போது ஒரு மருந்து கடையில் போயிட்டு இந்த மாதிரி மருந்து கேட்கிறார் அப்படி கேட்கும் போது பக்கத்துல புண்ணாக்கு இருக்கு புண்ணாக்கை எடுத்து வாயில போட்டு மென்னு பாக்குறாரு மென்னு பார்த்து சொல்றாரு என்னப்பா எண்ணபசையே இல்ல அப்படின்னு சொல்லி கேட்க. ஏம்பா அந்த காலத்துல செக்குல போட்டு ஆட்டுனீங்க இந்த காலத்துல மெஷின்ல ஆட்டுறாங்க அது எல்லாத்தையும் புளிஞ்சுதா கொடுக்கும். இப்படி புளிஞ்சு கொடுத்தா  தின்னும்போது அதுக்கு என்ன சத்து தான் வரப்போகுது ஒண்ணுமே இல்ல.

அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஐயா சொல்லுவாரு. அடுத்து விதையை கேட்க இந்த பழத்தில் விதை வருமா அப்படின்னு சொல்லி கேட்க இந்த பழத்துல விதை எல்லாம் வராது நீங்க மீண்டும் விதை வாங்கணும் அப்படின்னா என்கிட்ட தான் வரணும் அப்படின்னு சொல்லிட்டு கடைக்காரன் சொல்லுவான். 

ஏப்பா ஒரு பழத்துல விதை இல்லனா அது எப்படிப்பா நம்ம வந்து அடுத்து பயிர் பண்ண முடியும் அப்படின்னு சொல்லி கேட்க அதெல்லாம் அப்படித்தான் இதெல்லாம் டெக்னாலஜி அப்படின்னு சொல்லிட்டு கடைக்காரன் சொல்லுவான். 

உனக்கு ஒரு ஆம்பள பையன் பொறந்து அந்த ஆம்பள பையனுக்கு வெரைக்கொட்டை இல்ல அப்படின்னா உனக்கு அப்ப தெரியும் அப்படின்னு சொல்லிட்டு  கிராமத்து பாணியில நல்லாவே சிரிக்கிற மாறி ஒரு விஷயத்தை சொல்லிட்டு போவாரு.

அப்படியே வந்தோம் அப்படின்னா ஐயா வீட்டுக்கு முன்னாடி திருஷ்டிக்காக கட்ட கூடிய ஒரு மாலையை வாங்கிட்டு வருவாரு அந்த மாலையை பற்றி அங்க இருக்கக்கூடிய இளைஞர்கள் ஒரு சிலர் வந்து கேட்கும்போது அதுக்கு நம்ம ஐயா வந்து சொல்லுவாரு.

 இதுல வெள்ளை கலரில் இருக்கிறது படிக்கல் இது வந்து பாம்பு கடிச்சுச்சு அப்படின்னா அந்த இடத்துல வச்சோம் அப்படின்னா நல்லது விஷமுறிவுக்காக பயன்படும் இந்த கயிறு இருக்குல்ல இந்த கயிறு வந்து  பாம்பு கடிச்சிருக்கோ அந்த இடத்துல கட்டுறதுக்கு யூஸ் ஆகும்.

 ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு விவரிக்கும் போது நம்ம முன்னோர்கள் என்னென்ன விஷயத்தில் பண்ணிட்டு போய் இருக்காங்க. நம்ம அதை வந்து ஒரு கடமைக்காக ஒரு நடைமுறை வழக்கத்துக்காக பண்றோம். ஆனா ஒவ்வொன்றுக்கு பின்னாடியும் மருத்துவ குணங்கள், மருத்துவ விதங்கள் மருத்துவ பயன்பாடு நம்முடைய வழிபாடு எப்படின்னு சொல்லிட்டு எல்லாமே இருக்கு அப்படின்னு தான் நம்மளால புரிஞ்சுக்க முடிஞ்சது.. 

ஐயா வராரு தோட்டத்துல பயிர் இருக்கு அந்த பயிரை எடுத்து நிலத்துல நடனும் சோ அதுக்கு ஆட்களை வந்து தேடலாம் அப்படின்னு சொல்லி நம் அய்யா போறாரு போய் பார்த்தோம் அப்படின்னா ஊர்ல இருக்கக்கூடிய எல்லா கிழவிகளும் ஏறி வேலைக்கு போயிடறாங்க அந்த ஏரி வேலைக்கு போன இடத்துல நம்ம ஐயா போயிட்டு அந்த கிழவிகளை வந்து கூப்பிட நாங்களா யாரும் வரமாட்டோம் .அப்படின்னு சொல்லிட்டு உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்காங்க. அந்த இடத்துல ஒரே ஒரு கிழவி மட்டும் வந்து நான் வரேன் வா போல அப்படின்னு சொல்லிட்டு வரும் அந்த கிழவியும் வந்து ஒரு கட்டத்துக்கு மேல என்னால முடியாது சாமி அப்படின்னு சொல்லிட்டு ஓடி போய்டும். அதுக்கு அப்புறமா நம்ம ஐயாவே தனியாளா எல்லாத்தையும் நட்டு முடிச்சிடுவாரு.

இப்படி இருக்கும்போது என்ன ஆகும்னா தோட்டத்துல மூணு மயில் செத்து கிடக்கும் ரெண்டு ஆண் மயிலு ஒரு பெண் மயில் வந்து செத்து கிடக்கும் போது அந்த மயிலை எடுத்து புதைக்கிறதுக்காக மூன்று குழியை தோண்டி புதைக்க போவாரு .அப்படி புதைக்க போற அந்த ஒரு நேரத்துல அந்த வழியா ஒருத்தன் வருவான் ஒரு வேட்டைக்காரன் வருவான் அவன் வந்தவன் சும்மா இல்லாம அந்த மயில எங்கிட்ட குடு நான் எடுத்துட்டு போறேன் அப்படின்னு சொல்லிட்டு கேட்க அதுக்கு நம்ம ஐயா சொல்லுவாரு செத்த மயில வச்சு நீ என்ன பண்ண போற .அதுல ஒன்னும் தர மாட்டேன் அப்படி சொல்லிட்டு ஐயா  மண்ணை போட்டு மூடி பொதச்சிடுவாரு. 

இப்படி இருக்கும்போது அந்த வேட்டைக்காரன் போயிட்டு நேரா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவான். இந்த மாதிரி அந்த பெரியவர் அந்த மாயாண்டி மயில கொன்னு புதைத்ததை நான் பார்த்தேன் அப்படி சொல்லிட்டு ஒரு வழக்கு கொடுத்துடுவா. போலீசும் இதற்கு முன்னாடி இந்த மாதிரியான ஒரு சம்பவம் நடந்ததுனால இந்த ஊர்காரங்களுக்கு கொஞ்சம் நக்கல் ஜாஸ்திதான் உள்ள ஒரு ஆள உட்கார வச்சா தான் வேலைக்கு ஆகும்னு சொல்லிட்டு அந்த பெரியவர் மேல எஃப்ஐஆர் போட்டு விடுவாங்க. 

நம்ம அய்யாவ வந்து கைது பண்ணி கூட்டிட்டு போயிருவாங்க. அவருக்கு என்ன எதுவுமே தெரியாது எதோ சும்மாதான் கூப்பிடுறாங்க போல போயிட்டு மீண்டும் வந்து திரும்ப வந்துடலாம் அப்படின்னு சொல்லிட்டு அங்க போக அங்க போனாதான் தெரியும் இவர் மயில கொன்னுட்டாரு அதனாலதான் புடிச்சி வச்சிருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு அதுக்கு நம்ம ஐயா வந்து சொல்லுவாரு நான் மயில கொல்லல இல்ல செத்து கிடந்தது எடுத்து பொதச்சேன் அப்படின்னு சொல்ல அதெல்லாம் வந்து நீ கோர்ட்ல பார்த்துக்க நாங்க எப்பயாரு போட்டுட்டோம் .அப்படி சொல்லிட்டு போலீசு கோர்ட்டுக்கு தள்ளி விட்டுடுவாங்க. 

கோர்ட்டுக்கு போகும் வழக்கு அந்த இடத்துல ஜட்ஜ் வருவாங்க ஜட்ஜ் வந்து விசாரிக்கும் போது நம்ம பெரியவர் கிட்ட விசாரிக்கும் போது நான் மயில வந்து கொல பண்ணல முருகனுடைய வாகனம் முருகனுடைய வாகனத்தை யாராவது கொல்ல முடியுமா மயில் யாராவது கொல்ல முடியுமா அது முருகன் இல்லையா அது ஒரு உசுரு இல்லையா அதை போய் நான் எப்படி வந்து கொல்லுவேன் நாலா கொள்ளல அப்படின்னு சொல்லுவாரு

 அதுக்கப்புறம் அந்த வேட்டைக்காரன் கூப்பிட்டு விசாரிக்க அவர் கொன்னத நான் பாக்கல அவர் புதைச்சதை தான் நான் பார்த்தேன் அப்படி சொல்ல என்னங்க என்ன ஏதுன்னே தெரியாம மொத்தமா ஒரு பெரியவர ஒரு வழக்குல சேர்த்துடுவீங்களா அப்படின்னு சொல்லிட்டு போலீசை புடிச்சு ஜட்ஜமா ஏத்தி ஏத்தி ஏத்தி விட்டுருவாங்க. 

இப்படி பேசிட்டு இருக்க கூடிய அந்த ஒரு நேரத்துல பெரியவரோ நான் போறேன் தோட்டத்துல தண்ணி பாய்ச்சனு பயிர் எல்லாம் வாடி கிடக்கு மாட்டுக்கு தண்ணி காட்டணும்னு சொல்ல 

அதுக்கு ஜட்ஜ் அம்மா சொல்லுவாங்க அப்படி எல்லாம் நீங்க போக முடியாது நீங்க இங்க தான் இருகனும் உங்க மேல ரிமெண்ட் பண்ணி இருக்கிறதுனால 15 நாள் நீங்க வந்து சிறையில தான் இருந்து ஆகணும்.

 அப்படின்னு சொல்ல அதுவும் ஒரு உசுரு இல்லையா அது செத்துப் போகாதா நான் போய் தண்ணி பாச்சிட்டுதா ஆகணும் நான் போறேன் அப்படின்னு சொல்ல இவருதான் கொலையை செய்தார். நீங்க வந்து சொன்னீங்களா அப்படின்னு சொல்லிட்டு நம்ம எஜமா சொல்லும்போது நம்மளுக்கே ஒரு மாதிரி இருக்கும். 

15 நாள் சிறையில் இருக்கணும் சொல்லிட்டாங்க. சோ இப்படி இருக்கும் போது ஐயா வந்து கேட்பாரு என் பையருக்கு என்ன வழி அப்படின்னு சொல்லி கேட்க.

 நான் ஒரு போலீஸ் அனுப்புறேன் அவரு போயிட்டு தண்ணி பாய்ச்சி பாரு மாட்ட எல்லாம் பார்த்து பாரு உங்களை தப்பாக கோர்த்துவிட்டாங்கள்ள அவங்களே போய் பாக்கட்டும் அப்படின்னு சொல்ல ஒரு போலீஸ் போயிட்டு மாட பாத்துக்குவாரு தண்ணியும் காட்டுவாரு இப்படி இருக்கும் போது போலீசு அங்கு இருக்க இளைஞர்களும் மிரட்டுவாரு. ஒழுங்கா மாட்ட பார்த்துக்கோங்க தண்ணீர் காட்டுங்க அப்படின்னு சொல்ல உங்களுக்கு என்ன ரூல்ஸ் அதை பண்ணுங்க சார் அப்படின்னு சொல்லிட்டு இளைஞர்கள் ஓடிப் போயிடுவாங்க. ஒரு கட்டத்துல இளைஞர்களும் சரிங்க நாங்க மாட்ட பாத்துகிறோம் நீங்க தோட்டத்தை மட்டும் பார்த்துக்கோங்க அப்படின்னு சொல்லிட்டு மாட்டை மட்டும் பார்த்துப்பாங்க. அதுக்கப்புறமா ஒரு ரெண்டு நாள் கழிச்சி  இளைஞர்கள் வந்து நீங்க உங்க வீட்டுக்கு போங்க நீங்க ஸ்டேஷன் போங்க நாங்களே பாத்துக்கிறோம் உங்களுக்கு நாங்க தொந்தரவு கொடுக்க கூடாதுன்னு நினைக்கிறோ நாங்களே பார்த்துகிறோம் அப்படின்னு சொல்ல அப்போ அந்த போலீஸ் சொல்லுவாரு இங்க வரும்போது தாம்பா நானே நிம்மதியா இருக்க அங்க போனால் வேலை அந்த பிரஷர் இந்த பிரஷர் உயிரை வாங்கிருவானுங்க. இங்க இருக்கும் போது தான் சந்தோசமா இருக்கேன் நீங்க போங்கப்பா நான் பாத்துக்குறேன் அப்படின்னு சொல்லும்போது நம்மளுக்கு என்ன தோணும்னா 

நம்ம எல்லாருமே இந்த கால கட்டத்துல தொழிலு டெக்னாலஜி அப்படின்னு சொல்லிட்டு எங்கெங்கோ போறோம் ரோடு ரோடா சுத்துறோம் ஆனா விவசாயம் அப்படிங்கறது எந்த அளவுக்கு ஒரு மன நிறைவான ஒரு விஷயம் போறோம் விவசாய நிலத்தை பார்க்கிறோம் விவசாயம் பண்றோம் நிம்மதியா சாப்பிடுறோம் நிம்மதியா தூங்குறோம் யாருக்கும் கைகட்டி வேலை செய்யணும் யார்கிட்டயும் அடிமையா இருக்கணும் என்ற அவசியம் கிடையாது நிம்மதியா நம்ம தான் ராஜான்னு அப்படின்னு சொல்லிட்டு வாழலாம் சோ அந்த ஒரு விஷயத்தை நம்மளுக்கு புரிய வைக்கும். 

அடுத்த நாள் தோட்டத்துல பார்க்கும்போது பயிர் எல்லாம் மஞ்சள் நிறத்தில் நோய் புடிச்சி இருக்கும். பெரியவர் கிட்ட போய் கேப்பாங்க இது ஒரு விதமான நோய் இதுக்கு ஒரு மருந்து சொல்ற இதை போய் மருந்து கடையில் வாங்கிட்டு வந்து அடிங்கடா அப்படின்னு சொல்ல அவங்களும் போயிட்டு மருந்து கடையில மருந்து வாங்குவாங்க அந்த மருந்து எக்ஸ்பயரி ஆக்கிப் போனதா இருக்கும் மருந்து எல்லாம் பவர் குறையாது நீ போய் அடி அப்படின்னு சொல்லிட்டு கடைக்காரர் வியாபாரம் பண்ணிடுவான். 

எடுத்து அடிக்க பயிர் எல்லாமே செத்துப்போன மாதிரி ஆயிடும். இப்படி இருக்கும்போது கடைசி ஹியரிங் ஜட்ஜ் வராங்க தீர்ப்பு சொல்றதுக்கு ஐயாவை தேடும்போது ஐயா அங்க இருக்க மாட்டாரு தோட்டத்துக்கு வந்துட்டு பாரு இங்க வந்து பார்த்தா பயிர் எல்லாமே செத்து போன மாதிரி இருக்கும் மனசு நொந்து போய் நின்னுட்டு இருக்க கூடிய அந்த ஒரு நேரத்துல போலீஸ் வந்து மீண்டும் கூட்டிட்டு போய்விடுவார்கள் 

ஒரு வழியா ஐயா விடுதல பண்ணிடுவாங்க. அவரும் போய்ட்டு அங்க இருக்குற ஒரு தின்னையில படுத்துட்டு இருப்பாரு. எல்லாரும் வந்து எழுப்ப முயற்சி பண்ணுவாங்க. எழவே மாட்டாரு ஒரு கட்டத்தில் அவர் இறந்திருப்பாருன்னு சொல்லிட்டு நம்மளுக்கே ஒரு மாதிரி மனம் கலங்கி போய்விடும். இந்த படத்தை முதல் முறையா பார்க்கும் போது எனக்கே கண்ல தண்ணி வந்துருச்சு. ஐயோ எப்படி இந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு ஒரு பயிர் செத்ததுக்கு இப்படி இருக்கிறாரே. ரொம்ப சோகமா இருக்கிறார் இப்ப செத்துடாரோ அப்படின்னு ஒரு எண்ணம் பாத்தீங்கன்னா அப்படி உள்ளுக்குள்ள ஏற்பட்டுச்சு. ஒரு வழியா ஐயா கண்முளிச்சு பார்க்கும் போது தான் நமக்கே போன உசுரு வரும். 

என்னை ஏதுன்னு கேட்க அப்ப ஜட்ஜ் அம்மா கிட்ட பெரியவர் சொல்லுவாரு பயிர் எல்லாம் செத்துப் போச்சு அப்படின்னு சொல்ல அதுக்கு  நானும் வரேன் வாங்க போலாம்னு சொல்லிட்டு போலீசு வக்கீலு ஜட்ஜ் அம்மா அப்படின்னு சொல்லிட்டு எல்லாரும்  தோட்டத்துக்கு போயிடுவாங்க .

அங்க போய் பார்த்தா ஊரு பெரியவங்க  எல்லாரும் சேர்ந்து பயிர் அறுவடை பண்ணிட்டு இருப்பாங்க ஜட்ஜ் அம்மா சொல்லும் போலீஸ்கிட்ட எல்லாரும் போய் இறங்கி வருங்க ஹெல்ப் பண்ணுங்க அப்படின்னு சொல்லுவாங்க. 

ஒருவழியா பெரியவர் அறுவடை பண்ணி நெல்லை எடுத்துட்டு போய் சாமியும் கும்பிடுவாங்க. 


இந்த படம் மிகவும் ஒரு அற்புதமான ஒரு படைப்பு இந்த படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் விவசாயத்தை நேசிக்கக் கூடிய ஒருத்தனாலும் மட்டும் தான் இந்த அளவுக்கு ஒரு படத்தை எடுக்க முடியும் விவசாயிகள் அன்றாடம் என்னென்ன பண்ணுவாங்க எப்படி இருப்பாங்க அவங்களுடைய மனம் எந்த மாதிரி இருக்கும் அந்த காலத்தில் இருந்த பெரியவர்கள் மனநிலை எந்த அளவுக்கு சுத்தமானது பெரிய அளவிலான கல்வி அறிவு இல்லாம அவங்களுடைய அந்த கால கட்டத்துல அவங்க எந்த அளவுக்கு இயற்கை நேசிச்சாங்க எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தார்கள் அப்படி என்றுதான் இந்த படம் நம்மளுக்கு தெளிவாக புரிய வைக்கும். 

இந்த படத்துல அவங்க எல்லாரும் கும்பிட கூடிய அந்த சிலை கூட பாத்தீங்கன்னா முன்னோர்கள் வழிபாடா தான் இருக்கும் 

தரமான ஒரு வாழ்வியல் திரைப்படம்..

தோல்வியான படம்.. கண்டிப்பாக பாராட்ட வேண்டும்

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *