டிஜிட்டல் பரிவர்த்தனை பணத்தோட மதிப்பு


டிஜிட்டல் பணம்..

நேத்து காலையில் மொபைல் சார்ஜ் போட்டு இருந்தேன் போல.. கடைக்கு போகும் போது மொபைல எடுக்க மறந்துட்டு போய்ட்டேன்..
பால் பாக்கெட் 45 ரூபாய்க்கு வாங்கினேன்..
பாக்கெட் ல இருந்து பணமா  500ரூபாய்  கொடுத்து மீதி வாங்கினேன் அப்புறம் 
பூ கடையில் 50 ரூபாய்க்கு பூ.. டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஒரு 80 .. மெடிக்கல் ஷாப் ல
ஒரு 55 ..மொத்தம் 230 .. எல்லாம் பாக்கெட்ல இருந்து செலவு பண்ண பணம். வீட்டுக்கு கிளம்ப வண்டிய ஸ்டார்ட் பண்றதுக்கு முன் 
பாக்கெட் ல மீதி பணத்தை எடுத்து பாத்த போது மனசு கஷ்டமா இருந்துச்சு.. என்னடா இது  காலைலியே இவ்வளவு செலவு பண்ணிட்டோமா..
இன்னும் ஏதாவது குறைச்சு இருக்கலாமோ.?
அப்படின்னு 
நினைச்சுட்டு இருக்கும் போதே கன்னத்துல  பளார்னு ஒரு அறை.. ஏண்டா.. நேத்து பூரா 1200 செலவு பண்ண (அதெல்லாம் போன் மூலம் Gpay,) அதுக்கு ஒரு கணக்கும்  பாக்கல இப்ப ஏதோ 230 செலவு பண்ணிட்டு எந்த செலவை குறைக்கலாம் னு பட்ஜெட் போடற.. இதுக்கெல்லாம் காரணம் மொபைல மறந்தது.. இல்லைனா இந்த செலவு எல்லாம் Gpay மூலம் செலவாகி இருக்கும்..  Gpay ல செலவு பண்றது என்னவோ அடுத்தவன் பணம் மாதிரி.அதுவும் நம்ம பணம் தான் என்பது புரியாமலே..
பாக்கெட் ல இருந்து ரூபாயாக எடுத்து செலவு பண்றதுதான் நம்ம பணம்னு நினைப்பு இபலாம் எல்லோருக்கும்.
மனுஷன் மனதை எப்படி மாத்திடுச்சு பாருங்க..
 நாம எல்லோரும் இந்த டிஜிடல் பரிவர்த்தனை வந்த பிறகு பணத்தோட மதிப்பையே மறந்துட்டோமோன்னு
வருத்தமா இருக்கு...
உங்கள் அனுபவம் எப்படின்னு
தெரியலை ஆனாலும் இதுதான் இன்றைய  உண்மை நிலை

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *