தமிழ் ஜோக்ஸ்


என்னங்க பெரிய பணம் வேண்டிய அளவுக்கு எல்லாம் பாத்தாச்சு,

என்ன வேலை பாக்குறீங்க

Finance Company-ல Cashier-அ இருக்கேன்

அவசரமா பெட்ரோல் அடிக்க போனா... பெட்ரோல் பங்குல நமக்கு முன்னாடி இருக்கிறவன் டேங் மூடி திறக்க முடியாம தடுமாறிட்டு இருப்பான் ..

ஏடிஎம்ல பணம் எடுக்கப் போனா 
அங்க ஒருத்தன் ரொம்ப நேரம் நின்னு நோண்டிட்டு இருப்பான்.

சிக்னல் விழுந்தவுடனே எல்லாருமே போனாலும், நமக்கு முன்னாடி இருக்கிறவன் வண்டிய ஆப் பண்ணிட்டு, ஸ்டார்ட் பண்ணிட்டு இருப்பான் ..

ஹெல்மெட் போடாம மறந்துட்டு வந்த டைம்ல தப்பிச்சு போயிடலாம்னு பார்த்தா, நமக்கு முன்னாடி போறவன் பிரேக் அடிச்சு, நம்மள நிறுத்தி போலீஸ்கிட்ட புடிச்சி கொடுத்துட்டு போவான்.

டோல் கேட்ல எல்லா லைனுமே போகும். நமக்கு முன்னாடி வந்தவன் காசு தராம எதாவது ஒரு கார்டை காட்டி சண்டை பண்ணிட்டு இருப்பான் ...

ஆம்லேட் ஆர்டர் பண்ணி அரைமணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருப்போம். சப்ளையர் ஆள் தெரியாம பக்கத்துல இருக்கிறவனுக்கு வச்சிட்டு, சார் ஆம்லேட் கேட்டீங்களே, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்ப போட்றலாம்னு சொல்லுவான் ..

 பேங்க் மேனேஜர பார்க்கப் போனா, ஒருத்தன் உட்கார்ந்து ஊர் கத பேசிட்டு இருப்பான்..

பஸ்ல நமக்கு பின்னாடி வந்தவன், அடுத்த ஸ்டாப்ல இறங்க வேண்டியவன் சீட்ட புடிச்சி உட்கார்ந்துக்குவான். 

 டீக்கடை மாஸ்டர் தூள் மாத்தி பத்து டீக்கு அப்புறம்தான் நமக்கு டீ குடுப்பான்..

சூடா வடை இருக்குன்னு பார்த்தா... 
நமக்கு முன்னடி ஒருத்தன் விருந்தாளி வந்திருக்காங்கன்னு அம்பது வடையை பார்சல் வாங்குவான். 

பந்தியில எழுந்திருக்கட்டும் உட்காருவோம்னு வெயிட் பண்ணா... மாப்ள இங்க வா நான் எந்திருக்க போறேன்னு இன்னொருத்தரை கூப்பிட்டு உட்கார வச்சிட்டு போவான்...

FBல நாம positive ஆக ஒரு பதிவு போட்டால், அதை negative ஆக புரிந்து கொண்டு கமெண்ட் பண்ணுவாங்க.

இதெல்லாம் எதேச்சையா நடக்குதா..
இல்ல ராசி நட்சத்திரம் பிரச்சனையா..?

என்னான்னு சொல்லிட்டுப் போங்க.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *