எம் டி யின் எதிர்பார்க்காத தேர்வு முறை


தேர்வு-- ஒரு நிமிடக்கதை.

"அலுவலக நிர்வாக மேனேஜர் வேலைக்கு விண்ணப்பித்தவர்களை பல கட்டங்களாக ஆய்வு செய்து, கடைசியா இருவரை நேர்முக தேர்வுக்கு அழைச்சிருக்கோம். சம தகுதியுள்ள இவங்கள்ல, ஒருத்தரை எலிமினேட் செய்வது கொஞ்சம் கஷ்டம்தான். நீங்க சொன்னபடி, ஒரு மூணு வயது குழந்தையையும், உங்க அறையில் சிறிய நாற்காலியில் உட்கார வச்சுட்டேன். ஆனால், அது எதுக்குன்னுதான் புரியலை...” என்றார் உதவியாளர், நிறுவனத்தின் எம்.டி.சுந்தரத்திடம்.
“அதை கடைசியில் புரிஞ்சுக்குவீங்க. இப்ப அந்த இருவரையும் ஒருத்தொருத்தரா, என் அறைக்கு அனுப்புங்க...” என்றார் எம்.டி.
முதல் நபர் உள்ளே நுழைந்தார். புதிய சூழ்நிலையில் குழந்தை அழ ஆரம்பித்தது. சுந்தரம் கேட்ட கேள்விகளும், வந்திருந்தவரின் பதில்களும் அந்த அழுகை சத்தத்தில் அழுந்தி மறைந்தன.
அடுத்தவர் அறையில் நுழைந்தவுடன், குழந்தை அழுதுகொண்டிருந்ததை கண்டு, அவர் தன்னுடைய பேனாவையும், ஒரு பேப்பரையும் அதன் கையில் கொடுத்து, 'இப்ப நீ இந்த பேனாவால, பூனை படம் வரையப்போறதானே...? என்றவுடன், அந்த குழந்தை அழுகையை நிறுத்தி, படம் வரைவதில் பிஸியாயிற்று. அந்த இடைவெளியில் தெளிவான சம்பாஷணையுடன், நேர்முக தேர்வு முடிந்தது.
“தினசரி அலுவலக நிர்வாகத்தில், ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும்போது, எதிர்பாராமல் இன்னொரு பிரச்னையையும் சமாளிக்கிற திறன் அவசியம். அந்த பிரச்னைகளில், எதை முதலில் தீர்வு செய்யணுங்கற பாகுபடுத்தும் பிரத்தியேக திறனும் தேவை. அழுது கொண்டிருந்த அந்த குழந்தைதான் நீங்க எதிர்பார்க்காத பிரச்னை.
யு ஆர் அப்பாயிண்டட்...” என்று அறிவித்த எம்.டி.யின் எதிர்பார்க்காத தேர்வு முறை உதவியாளருக்கு அப்போதுதான் புரிந்தது.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *