86390 விட்டுவிட்டு 10 டாலர்களை பிடிக்க ஓடுவீர்களா?


ஒரு முறை ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம்  பின்வருமாறு ஒரு கேள்வி கேட்டார்:
உங்களிடம் 86,400 டாலர்கள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10 டாலர்களை பரித்துக்கொண்டு ஓடினால், உங்கள் கையில் இருக்கும் அந்த 86,390 டாலர்களை விட்டுவிட்டு அந்த 10 டாலர்களை பிடிக்க ஓடுவீர்களா? அல்லது பரவாயில்லை என்று உங்கள் பாட்டில் செல்வீர்களா?

அனைத்து மாணவர்களும் ஒரு மித்த குரலில் : நிச்சயமாக நாங்கள் 10 டாலர்களை விட்டுவிடுவோம். அந்த 86,390 டாலர்களையும்தான் பாதுகாப்போம் ' என்று பதிலளித்தனர்.

ஆசிரியர் சொன்னார்: உண்மையில், பெரும்பாலான மக்கள் இதற்கு நேர்மாறாகவே நடக்கின்றனர். அந்த 10 டாலர்களுக்காக அவர்கள் அந்த 86,390 டாலர்களையும் இழக்கின்றனர். 

அதற்கு மாணவர்கள் : யாராவது அப்படி செய்வார்களா?!  எப்படி அது? என்று கேட்டனர். 

அதற்கு ஆசிரியர்: உண்மையில் 86,400  என்பது ஒரு நாளில் உள்ள வினாடிகளின் எண்ணிக்கை. யாராவது ஒருவர் 10 வினாடிகள் உங்களை எரிச்சலூட்டினால் அல்லது மனதை துன்புறுத்தும் வார்த்தைகளை சொன்னால் அல்லது விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடந்தால் அதற்காக நாள் முழுதும் யோசித்து எஞ்சிய 86,390 வினாடிகளையும் நீங்கள் வீணாக்கி விடுவீர்கள். 

ஆதலால் எரிச்சலூட்டும் ஒரு  வார்த்தைக்காக, அல்லது எதிர்மறையான ஒரு நிகழ்வுக்காக உங்கள் ஆற்றல்களையும், சிந்தனைகளையும் எஞ்சிய நேரங்களையும் வீணாக்கி விடாதீர்கள்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *