நிறம் மட்டுமே வேறு வேறாக கவர்ச்சியாக இருந்தது சுவை ஒன்று தான்


ஒரு நாட்டு மன்னன் தன் அரண்மனையில் நாட்டியம் ஆடவந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்பட்டான்.அப்பெண்ணோ "மன்னா...!!! நடனம் ஆடுவது எங்கள் குலதொழில். நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள். ஆதலால் இது வேண்டாமே" என்றாள். மன்னவனோ "ஆண்டவனும் அரசனும் ஒன்று தான். நீ என் இச்சைக்கு இணங்க வேண்டும். வா. நான் இந்த நாட்டிற்க்கே உன்னை அரசியாக்குகிறேன்" என்றான்.

அப்பெண் எவ்வளவோ வாதாடியும் விடவில்லை. மன்னனிடம் கடைசியில் ஒப்புக் கொண்டாள்.

"சரி மன்னா... நாளை தாங்கள் என் வீட்டிற்கு வாருங்கள் விருந்து வைக்கிறேன். அமுதுண்டு பிறகு சல்லாபிக்கலாம்" என்றாள். மன்னனும் சென்றான். அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலர் ஃபுல் இனிப்பு வழங்கினாள்.

மன்னன் சுவைத்தான். விருந்து முடிந்தது. மன்னனிடம் கேட்டாள்...

"மன்னா...!!! 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே. ஒவ்வொன்றின் சுவையும் எப்படி இருந்தது?"

"நிறம் மட்டுமே வேறு வேறாக கவர்ச்சியாக இருந்தது. ஆனால் சுவையெல்லாம் ஒன்று தான்" என்றான் மன்னன்.

"மன்னா பெண்கள் நாங்களும் அப்படிதான். நிறமும்-புறமும்தான் வேறு வேறு. சுவை ஒன்று தானே" என்றாள்.

உடனே மன்னன் அப்பெண்ணின் காலில் விழுந்து வணங்கி. "தாயே என் அறிவுக்கண் திறந்தவளே" என்றான்.

இது கதை அல்ல உண்மை நம் வீட்டிலும் பெண்கள் உண்டு. பிற பெண்களிடம் பழகும் போது நம் வீட்டு பெண்களாக நினைத்து சகோதரிகளிடம் பழகுவதாக பழகுங்கள்.

நட்பு வளர்க்கும் பிற பெண்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்!..

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *