தோல்விகள் சூழ்ந்தாலும் அன்பு உலகை ஆளும்


படிப்பினைக்காக..!

கணவனுக்கு வீட்டில் டீ ஊற்றிக் கொடுத்தாள் மனைவி.. டீயில் ஓர் எறும்பு இருந்தது. அதைக்கண்ட கணவன் டீயை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான். டீயை வீசிவிட?  சண்டை..!
சந்தோசமானவீடு மூன்று நாள் துக்கவீடாக மாறிவிட்டது...

இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் டீயில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான்.
அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். "உன் டீக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் டீக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே."
மனைவி சிரித்தாள். தன் தவறை உணர்ந்தாள். அதன்பிறகு, அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப் பாதுகாத்தாள். அதனால் டீ யில் எறும்பும் சாகவில்லை. அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை..!!

வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும் சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பது மட்டுமே தீர்மானிக்கிறது.
நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்; நாம் தவறே செய்யமாட்டோம் எனவும் நாம் நினைக்கக் கூடாது..
தவறுகளை நகைச்சுவையாகவோ, அன்பாகவோ சொல்லிப்பாருங்கள்.. அந்தத் தவறு மறுபடி நடக்காது..
ஆனால், காட்டுக்கத்தல் கத்தியோ, அதிகாரமாகவோ தவறுகளை சுட்டிக் காட்டினீர்கள் என்றால்; அதை விட அதிகமான தவறுகள் நடக்கும் என்பதை மறவாதீர்கள்..!

சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது.
“உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும், ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால், நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே..! அதெப்படி..?"
அதற்கு சாவி, "நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்..!
      ஆனால், 
நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்" என்றதாம்..!

அன்பு உலகை ஆளும்

பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை..!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல; உங்கள் இலக்கினை அடையும் வரை..!

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *