ஒரு வருசத்துக்கு ஜியோ ஃபைபர் ஃப்ரீ தீபாவளி ஆபர்


ஒரு வருசத்துக்கு ஜியோ ஃபைபர் ஃப்ரீ. தீபாவளி ஆபர்னு சொல்லி மெசேஜ் வந்துச்சு. கன்ஃபார்ம் பண்ண 198 கஸ்டமர் கேருக்கு போன் பண்ணா "ஆமாங்க சார்"னு சொல்லுச்சு அந்த பாப்பா. 

'ஏற்கெனவே ஜியோ ஃபைபர் வச்சிருக்கிற எனக்கும் ஆஃபர் உண்டா, அல்லது புதுசா வாங்கினாதானா?' என்று கேட்டதற்கு "எல்லாருக்கும்தான் சார்"னு சொல்லுச்சு. 

எப்படி ஆக்டிவேட் பண்ணுறதுன்னு கேட்டப்போ, 'ரிலையன்ஸ் டிஜிட்டல்ல 20000 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கினால் 12 கூப்பன் கொடுப்பாங்க சார். அத ஒவ்வொரு மாசமும் பயன்படுத்திக்கலாம்'. 

அருமையான ப்ளானா இருக்கே எப்படிப் பாத்தாலும் வருசத்துக்கு ஜியோ ஃபைபர் ரீசார்ஜ் மட்டும் 9000 வரும். எப்படிப் பாத்தாலும் லாபம்தான்னு நினச்சு 'ஓக்கே மேடம் வாங்கிடலாம்'னு சொல்லும்போது 

"இருங்க சார்... மாசத்துக்கு ஒரு கூப்பன் ஆக்டிவேட் ஆகும். அப்படி ஆக்டிவேட் ஆகணும்னா ஒவ்வொரு மாசமும் ரிலையன்ஸ் டிஜிட்டல்ல போய் 15000 ரூபாய்க்கு பர்ச்சேஸ் பண்ணனும். இப்படி 12 மாசமும் போய் வாங்கினாத்தான் 12 மாசக் கூப்பனும் ஆக்டிவேட் ஆகி ஃப்ரீயா ஜியோ ஃபைபர் யூஸ் பண்ண முடியும் சார்" னு சொல்லுச்சு. ரொம்ப சந்தோசம்மா... அம்பானி மாம்ஸ கேட்டேன்னு மட்டும் சொல்லுங்க.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *