சிறந்த வேடிக்கையான தமிழ் நகைச்சுவை தொகுப்பு


வந்ததுதான் வந்திங்க இதையும் படிச்சுட்டு போங்க

வேலு : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ?
பாபு : யரோ ஒரு பாராசூட் வீரர் விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. ..

கோபு : ஓட்டப்பந்தயத்துல தங்க மெடல் வாங்கினா "ஊக்க மருந்து"ன்னு சொல்லி தடை செஞ்சிடுறாங்க. சரி கடைசில வந்தவங்களையும் ஏன் செக் பண்றாங்க?
பாபு : இவங்க ஏதாவது "தூக்க மருந்து" சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.

கோபு : தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்
பாபு : ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?

நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.

பாபு : நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...
வேலு : நிஜமாவா?
பாபு : ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *