நகைச்சுவைத் தென்றல் ஜூஹா நீதிபதியிடம் வந்த வழக்கு


எமது நகைச்சுவைத் தென்றல் ஜூஹா நீதிபதியாக இருந்த காலம் அது. அவரிடம் ஒரு வினோதமான வழக்குக் கேஸ் வந்தது.
இரண்டு பேர் அவரிடம் நீதி கேட்டு வந்தனர். ஜுஹா விசாரிக்க ஆரம்பித்தார்.

ஒருவர்:- கனம் நீதிபதி அவர்களே! நான் பார்பிக்யூ கடை வைத்திருக்கிறேன். வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு
கமகமக்கும் வாசனையோடு பார்பிக்யூ செய்து கொடுப்பது எனது வழக்கம். இந்த நபர் எனது கடைக்கு முன்னால் வந்து நின்றார். அவரது கையில் ரொட்டி இருந்தது. எனது கமகமக்கும் பார்பிக்யூ வாசனையில் அவரது ரொட்டியை அவர் தொட்டுத் தொட்டு திண்ணுவதை நான் கண்ணால் கண்டேன். பணம் கொடுக்காமல் போக முனைந்தார். அதுதான் உங்களிடம் நீதி கேட்டு வந்தேன். நீங்கள் நீதி தவராத நீதிபதியாக இருக்கிறீர்கள்! எனவே எனக்கு நியாயம் வேண்டும் ' என்றார்.

இது கேட்ட ஜுஹா மற்ற மனிதரிடம்:- நீ உண்மையில் அவரது கடை பார்பிக்யூ வாசனையில் உனது ரொட்டியை தொட்டுத் தொட்டு உண்டாயா?' என கேட்டார்.

அதற்கு அவர்:- ஆம் ' என்றார்.

அதற்கு ஜுஹா:- சரி, அப்படியானால் வாங்கிய பொருளுக்கு ஏற்ப கூலி கொடுக்கத்தான் வேண்டும்' என்று விட்டு, பார்பிக்யூ வாசனைக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கடைக்காரரிடம் கேட்டார்.
அதற்கு அவர்:- ஐந்து திர்ஹங்கள்' என்றார்.

ஜூஹா, அந்த மனிதரிடம் ஜந்து திர்ஹங்களை வாங்கி மேலே தூக்கி நிலத்தில் போட்டார். அந்த ஜந்து திர்ஹங்களில் இருந்தும் சலங் சலங் என சத்தம் வந்தது.

பின்னர் ஜுஹா அந்த பார்பிக்யூ கடைக்காரனிடம்:- நீ இப்பொது அந்த பணத்தின் சத்தத்தை கேட்டாயா? என்று கேட்டார். அதற்கு அவர்:- ஆம்' என்றார்.

உடனே ஜுஹா:- அதுதான் உனக்கான கூலி. அவன் உனது பார்பிக்யூவை மூக்கால் உண்டான். நீ அதற்காக அவனது பணத்தை காதால் எடுத்துவிட்டாய்!' என்று சொல்லி அனுப்பி வைத்தார்.



இப்படித்தான் நம் சமூகத்திலும் சில மனநோயாளிகள் உள்ளனர். அவர்கள் தொட்டதற்கெல்லாம் சண்டை பிடிக்க வந்துவிடுவார்கள். அற்பமான துரும்புகளைப் பிடித்துக் கொண்டு தொங்க வந்துவிடுவார்கள். சிறு சிறு விவகாரங்களுக்காக வம்புவளர்க்க கிளம்பி வந்துவிடுவார்கள். அவர்களை சமாளிக்கும் போது போதும் என்றாகிவிடும்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *