வெகு நாட்களாக வெளியூரில் இருந்த தெனாலிராமன், தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான். அவன் ஊருக்குள் நுழையும்போது மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடி பேசுவதை கண்டான். காரணம் தெரியாமல் திகைத்தபடியே தன் இல்லத்துக்குள் நுழைந்தான். தெனாலிராமனின் வேலைக்காரர்கள் இருவரும் அடிக்கடி கூடி ஏதோ ஆலோசனை செய்துகொண்டிருந்தனர்.ஊருக்குள் வந்தபோது மக்கள் கூடிநின்று பேசுவதைப் பார்த்த தெனாலிராமன், தன் வேலைக்காரர்களும் அதேபோல் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என யோசித்தான். காரணம் கண்டு பிடிக்க முடியாததால் தன் வேலைக்காரர்களுள் ஒருவனை அழைத்தான்.
“டேய், உண்மையைச் சொல். என்ன காரணமாகக் கூடிக் கூடிப் பேசுகிறீர்கள்? ஏதேனும் திட்டம் தீட்டுகிறீர்களா?” என்று கேள்வி கேட்டான்.
வேலைக்காரன் பயந்து, “ஐயா, சாமி, நாங்க நம்ம ஊருக்கு வந்திருக்குற வடநாட்டு வியாபாரியைப் பற்றிப் பேசுறோம்,” என்றான்.
“அவரைப் பற்றி என்ன பேச்சு?” என்று தெனாலிராமன் கேட்டான்.
“அவரு ஒரு பொருள் வைத்திருக்கிறாராம். அதன் எடை என்னன்னு கண்டுபிடிச்சா எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம். அப்படி கண்டுபிடிக்க முடியலனா காலம் பூராவும் அவருக்கு அடிமையா அவருக்குப் பணிவிடை செய்து வாழணுமாம்,” என்றான் வேலைக்காரன்.
தெனாலிராமன் சிந்தித்து, அரசபைக்கு சென்று அந்த வியாபாரியைச் சந்தித்தான். மன்னர் கிருஷ்ணதேவராயரும் வியாபாரியின் இந்த சவாலை ஏற்கவும் முடியாமல், விட்டு விடவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார்.
தெனாலிராமன் சபைக்கு வந்ததும், மன்னர் அவரிடம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கேட்டார். ராமகிருஷ்ணனும் அதை ஏற்றுக்கொண்டு வியாபாரியிடம், “தாங்கள் எடை காணவேண்டும் என்று கூறும் பொருள் என்னவோ?” என்று கேட்டார்.
வியாபாரி மிகுந்த கர்வத்துடன், “நான் ஜெயித்தால் நீர் எமக்கு அடிமை. ஆனால் நீர் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவேன்,” என்றான்.
“உங்கள் நிபந்தனையை நான் ஒப்புக் கொள்கிறேன். நானும் ஒப்புக்கொள்கிறேன். எந்தப் பொருளுக்கு எடை சொல்ல வேண்டும்? சொல்லுங்கள்,” என்றான் ராமகிருஷ்ணன்.
வியாபாரி கள்ளச் சிரிப்புடன், “வீதியில் நிற்கும் என் யானையின் எடை என்ன என்று சொல்லவேண்டும்,” என்றான்.
சபையே அதிர்ந்தது. யானையை எப்படி எடை போடுவது? எந்தத் தராசில் நிற்க வைப்பது என்று அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர். மன்னரும் சிந்தனை வயப்பட்டார். தெனாலிராமன் மறுநாள் பதில் கூறுவதாகச் சொல்லி இல்லம் திரும்பினான்.
இரவு தன் மனைவியிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்குத் திடீரென்று யோசனை தோன்றியது. மறுநாள் பொழுது விடிந்ததும், வியாபாரியிடம் யானையின் எடையைக் கூறுவதாகக் கூறி அழைத்தான். மக்கள் ராமன் எப்படி யானையை எடை போடுகிறான் என்பதைப் பார்க்கக் கூடிவிட்டனர். மன்னரும் மக்களுடன் சேர்ந்து ஆவலுடன் பார்த்து நின்றார்.
ராமன் வடநாட்டு வியாபாரியை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான். அவனும் தன் யானையை நடத்திக்கொண்டு ராமனுடன் சென்றான். நதிக்கரையை அடைந்தவுடன், அங்கிருந்த ஒரு பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான் ராமன். யானையை ஏற்றியவுடன் படகு நீருக்குள் மிதக்கவிடச் சொன்னான். படகு நீருக்குள் அமிழ, நீரின் அளவை குறித்துக் கொண்டான். பின்னர் மரக்கட்டைகளை படகில் வைத்து நீருக்குள் விட்டான். படகு மீண்டும் அமிழ, நீர் மேலே வந்து நிற்கும் அளவை குறித்துக் கொண்டான்.
“அரசே, கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்,” என்றான் ராமன்.
மன்னர் கிருஷ்ணதேவராயர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். வியாபாரியைப் பார்த்து, “அய்யா, நீங்கள் கேட்ட கேள்விக்கு எங்கள் ராமன் சரியான விடை தந்து விட்டான். அவனிடம் சொன்னது போல் பரிசைத் தருவதுதான் நியாயம்,” என்று கூறியவுடன் வியாபாரி தலை குனிந்து ஒப்புக் கொண்டான்.
ஆனால் இடைமறித்த ராமன், “மகாராஜா, பொறுங்கள்,” என்றவன் வியாபாரியைப் பார்த்துக் கூறினான். “ஐயா வியாபாரியே! நான் வெற்றி பெற்றால் தாங்கள் என்ன தருவதாகக் கூறினீர்கள்?”
“எடைக்கு எடை பொன் தருவதாகக் கூறினேன்,” என்றான்.
“அது சரி. யாருடைய எடைக்கு எடை என்று நீங்கள் சரியாகச் சொல்லவில்லையே. எடையைப் பார்த்துச் சொன்னவரின் எடைக்கா அல்லது யானையின் எடைக்கா?” என்றான் ராமன்.
இது கேட்ட வியாபாரி மயங்கி சரிந்தான். யானையின் எடைக்கு எடை பொன்னுக்கு அவன் எங்கே போவான். எனவே அவனைச் சிறையில் அடைக்குமாறு மன்னர் கட்டளையிட்டார்.
பல நாடுகளில் மக்களை அடிமைப் படுத்தி சிறுமைப் படுத்திய வியாபாரிக்குச் சரியான தண்டனைதான் அது என்று மன்னர் தீர்ப்பளித்தார். ராமனுக்குப் பெரும் பொன்னைப் பரிசாகக் கொடுத்து வாழ்த்தினார். “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என்பதை நிரூபித்த தெனாலிராமனை மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
MORAL: யாரையும் துன்புறுத்தி மகிழ்தல் தவறு. வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதையும் புரிந்து கொண்டால்
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.