கதை: காரணகாரிய உறவுமுறை ஏதுமில்லை


ஒரு கோழி குஞ்சு தன் கூட்டின் மேல்  உட்கார்ந்து இருந்தது.. எந்த கவலையும் இல்லாமல் ,ஒரு புத்தனைப் போல உட்கார்ந்து இருந்தது. 
அப்போது திடீரென அங்கே ஒரு மனிதன் வந்தான். கோழி குஞ்சு பயந்துபோய் ஓடி ஒளிந்தது...திரும்பி வந்து பார்த்தபோது அவனை காணோம் .
ஆனால் கொஞ்சம் சோளம் சிந்திக் கிடந்தது ..கோழி குஞ்சு சிந்தனை வயப்பட்டது... விஞ்ஞான பூர்வமான ஆவல் ஒன்று தோன்றியது..
எங்கிருந்து வந்திருக்கும் இந்த சோளம் ?அடுத்த நாளும் அவன் வந்தான். கோழி குஞ்சு ஓடி ஒளிந்தது. திரும்பி வந்தது அவன் போய்விட்டிருந்தான். ஆனால் சோளம் கொஞ்சம் கொட்டிக்கிடந்தது. நிச்சயமாக அவனுக்கும் சோளத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் .என்றாலும் விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கிற யாரும் திடீரென ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது அல்லவா? 
அவசரப்பட்டு எந்த கொள்கையும் வகுக்க கோழிக் குஞ்சு தயாராக இருக்கவில்லை.. எனவே காத்திருந்து பார்க்க முடிவெடுத்தது..
சரியான விஞ்ஞான முறை தான்.. 
பொறுத்துப் பொறுத்துப் பார்ப்பது. தினமும் ஒரே கதை தான் திரும்ப திரும்பநடந்தது ..
இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக காரணம் காரியம் பற்றிய ஒரு கொள்கைக்கு அந்த கோழி குஞ்சு வந்தது.. அவன் வந்த போதெல்லாம் சோளமும் வந்தது.. தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது தடவை .
இனி எந்த சந்தேகமும் இல்லை.. 
காரணம் அவன் வந்தது... காரியம் சோளம் கிடந்தது.. தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது தடவை போதும் அல்லவா? காரணகாரியம் சரியாகத்தான் பொருந்தி வருகிறது என்ற முடிவுக்கு வந்தது... 
போதும் கவனித்து கவனித்து பார்த்து இருந்தது.. ஒரு முறை தவறாமல் நடந்து இருக்கிறது...எனவே இதை ஒரு விதியாக கொள்ளலாம்.. மகிழ்ச்சியாக அவன் வரக்காத்திருந்தது . 
ஆயிரமாவது தடவையாக அவன் வந்தான் ..அவனுக்கு நன்றி சொல்ல அவன் பக்கம் போனது. கழுத்து திருகி கொல்லப்பட்டது..
வாழ்க்கையும் இப்படித்தான். அதில் காரணகாரிய உறவுமுறை ஏதுமில்லை.
தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது தடவை ஒன்று நடந்தாலும் எந்த முடிவுக்கும் வந்து விடாதே... ஆயிரமாவது தடவை நடப்பது வேறாக இருக்கலாம்..

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *