கவிதை: தாய் மொழியை முழுதும் கொன்றோம்


மனைவியை ஒய்ஃப் என்றோம்.
வாழ்க்கையை லைஃப் என்றோம்.
கத்தியை நைஃப் என்றோம்.
புத்தியை புதைத்தே நின்றோம் !

அத்தையை ஆன்ட்டி என்றோம்.
அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.
கடமையை டுயூட்டி என்றோம்.
காதலியை பியூட்டி என்றோம்!

காதலை லவ்வென்றோம்.
பசுவை கவ்வென்றோம்.
ரசிப்பதை வாவ் என்றோம்.
இதைதானே தமிழாய் சொன்னோம்!

முத்தத்தை கிஸ் என்றோம். பேருந்தை பஸ் என்றோம்.
அளவை சைஸ் என்றோம்.
அழகை நைஸ் என்றோம் !

மன்னிப்பை சாரி என்றோம்.
புடவையை சேரி என்றோம்.
ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம்.
தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!

மடையனை லூசு என்றோம்.
வாய்ப்பை சான்சு என்றோம்.
மோகத்தை ரொமான்ஸ் என்றோம்.
தமிழை அறவே மறந்தோம்!

அமைதியை சைலன்ஸ் என்றோம்.
சண்டையை வயலன்ஸ் என்றோம்.
தரத்தை ஒரிஜினல் என்றோம்.
தாய் மொழியை முழுதும் கொன்றோம்..!

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *