தொலைதூர தொழிலாளர்கள் Remote based Workers


அமெரிக்காவில் பல தங்கும் விடுதிகளில் இப்பொழுது வரவேற்பாளர்களே கிடையாது.

விருந்தினர்கள் கேமரா முன்னால் நின்று தாங்களே செக்-இன் செய்து கொள்ள வேண்டும். கேமரா முன்னால் நீங்கள் நின்றவுடன் மறுமுனையில் ஒரு நபர் உங்களுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசி உங்கள் விபரங்களைச் சரி பார்த்து  செக்-இன் செய்ய உதவுவார்.

இப்படி மறுமுனையில் கேமரா மூலம் பேசும் நபர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து பேசும் தொலைதூர தொழிலாளர்கள் (remote based workers).

ஹவாயில் இப்படி ஒரு விடுதியில் சென்ற வாரம் ஒரு அமெரிக்கர் செக்-இன் செய்த போது மறுமுனையில் பேசியவர் இந்தியாவிலிருந்து வேலை செய்பவர். அவர் அதை அப்படியே வீடியோ எடுத்து -


"அமெரிக்கர்களின் பல வேலைகள் வெளிநாடுகளில் அவுட்சோர்ஸ் செய்யப்படுவதால் அமெரிக்கர்கள் வேலையை வெளிநாட்டினர் பறித்து விட்டார்கள். ஒரு கட்டத்தில் இது சட்ட விரோதம் என்று அறிவிக்கப் படவேண்டும். நீங்கள் அமெரிக்காவில் பணம் சம்பாதித்தால், நீங்கள் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்."

என்று அவருடைய X தளத்தில் வெளியிட அந்த வீடியோ படு வைரல் ஆனது. அமெரிக்கர்கள் பலர் இதை ஆமோதித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

வெகு விரைவில் இந்த வேலையை எல்லாம் AI என்னும் செயற்கை நுண்ணறிவு செய்ய ஆரம்பித்து விடும்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *